சென்னைப் போன்ற பெரிய நகரங்களில் ... எல்லாம் தினப்படி சரியாக பழக்கத்தில் வைத்திருக்காமல் இருந்து... திடிரென்று திணறடிக்கும் அடிவயிற்றின் அவசரத்திற்கு, கட்டண கழிப்பிடம் கிடைப்பதே பெரிய விசயம் தான், அங்கு மூக்கைப் பிடித்துக் கொண்டு உள்ளே (வெளியே) சென்று வருபவர்களுக்கு எப்போதும் நரக(ல்) வேதனைதான்.
ஒன்றாக தங்கி இருக்கும் இரு நண்பர்கள் பேசிக் 'கொல்வதை' கிழே கவனியுங்கள்,
*********
"ஏண்டா அடிவயித்தை முட்டுவது போல மூஞ்ச வச்சிருக்கே....வயுத்த வலிச்சா போய்டு வர வேண்டியதுதானே"
"போய்டு வந்ததால் தான் அந்த கொடுமையே நடந்து போச்சு"
"வயிறு கடுப்பா ? கடுக்கா தண்ணி குடிச்சா சரியாப் போய்டுன்னுவாங்க "
"அட அதில்லடா....ஒன்னுமில்ல நீ சும்மா இரு" அவன் தீவிரமாக அன்றாட கணக்கு வழக்குகளை எழுதிக் கொண்டு இருந்தான்,
முதலாமவன் எட்டிப்பார்த்து,
"என்னடா இது, டாய்லெட் சென்று வந்த செலவு ரூ 25.70 ன்னு எழுதி வைச்சிருக்கே"
"ஆமாம், வீன் விரயம் ஆனாலும் செலவு செலவு தானே"
"அப்படி என்ன விரயமாச்சு, கழுவ பன்னீரையா வாங்கிப் போனே ?"
"ஐயோ......., வீட்டுக்கு திரும்பி வரும்போது பயங்கர வயுத்து வலி, கட்டண கழிவறைக்குச் போனேன், அவசரத்தில் குனிந்த போது, சட்டை பாக்கெட்டில் இருந்த 23.70 காசு டாய்லெட்டில் கொட்டிவிட்டது, நான்கு ஐந்துரூபாய் காய்ன், அப்பறம் சில்லைரைகள்
மொத்தம் 23.70 வைத்திருந்தேன், அத்தனையும் கொட்டிட்டு...போனது போனது தானே..."
"அடப்பாவி... டாய்லெட் கட்டணம் 2 ரூபாய் சேர்த்து மொத்தம் 25.70 ஆன கணக்கு இப்பதான் புரியுது...வெவரமானவன் தான் நீ..."
இது எப்போதோ ஜூவி டயலாக் பகுதியில் யாரோ எழுதி சின்னதாக வந்த டயலாக்,
கொஞ்சம் விரித்து எழுதி இருக்கிறேன்.
பிகு : இது வவாச "இரண்டு" போட்டிக்காக எழுதியது இல்லை. :)
7 comments:
நல்ல ஜோக்...
கண்ணன் சார்... எதையும் விட்டு வைக்க மாட்டீங்கறீங்களே? சார்.
ச்சீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
//கழுவ பன்னீரையா வாங்கிப் போனே ?"
//
:)))
:))
ஒரு முறை கோவில்பட்டி போன போது , பஸ் ஸ்டாண்ட்ல டாய்லெட் கன்றாவியா இருந்தது. ரொம்ப அவசரம் , வேற வழியில்லாம ஒரு லாட்ஜுல ரூம் போட்டு போனேன். ( ரூம் போட்ட காரணம் : பிஸினஸ் னு எழுதினதாய் நினைவு ) கிட்டத்தட்ட அய்ம்பது ரூபாய் செலவாச்சு .
சென்னையில வேலை பார்க்கும் போது நிறைய தடவை ஆட்டோ புடிச்சி ரூமுக்கு வந்திருக்கேன்.
அன்புடன்
கே ஆர் பி
ஹா ஹா ஹா ஹா
Post a Comment