Monday, May 12, 2008

பித்தாஸ்ரமம் - பித்தானந்தா - பக்தைகள் !

வெள்ளிக்கிழமை இரவு பூசைக்காக பித்தாஸ்ரமத்தில் பக்தைகளுக்கு நடுவே அமர்ந்திருக்கிறார் பித்தானந்தா,

கண்ணை மூடியபடி... மொதுவாக,

பித்தானந்தா : ஓம், கிரீம். க்ளீம்....கிரீம்....கிரீம்....கிரீம்....கிரீம்....கிரீம் .... என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

பக்தை ஒருவர்,

பக்தை : சுவமிஜி, என்ன இது கிரீம் கிரீம் என்று பலமுறை சொல்கிறீர்கள்

பித்தானந்தா : குழந்தாய், நம் பக்தர் ஒருவருக்கு 'ஏஜீஎஸ் ரிங்சோலின்' போட்டும் அரிப்புத் தீரவில்லையாம், என்னிடம் என்ன செய்வது ....குழப்பமாக இருக்கிறது என்று கேட்டார், அவருக்காகத்தான், கண்ணை மூடிக் கொண்டு வேறு எதாவது நான் பயன்படுத்திய நல்ல கிரீம் பெயர் நினைவுக்கு வருகிறதா என்று கிரீம்... கிரீம்... என்று சொல்லிப் பார்த்து நல்ல அரிப்பு நிவாரணி களிம்பின் பெயர்களை நினைத்துப் பார்க்கிறேன்.

எல்லா பக்தைகளும், குருவே சரணம்....குருவே சரணம்... என்று சொல்ல மற்றொரு,

பக்தை : சாமி தும்மினாலும் கூட அதற்கு பொருள் இருக்கிறது, ம் சாதாரணவர்களுக்கு எங்கே இதெல்லாம் புரியப் போகிறது.

சிறிது மூக்குப் பொடியைப் போட்டுவிட்டு, அப்போது பித்தானந்தா பலமாகவே தும்மினார்.

பித்தானந்தா : அச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

பக்தை : சுவாமிஜி, என்ன ஆயிற்று ? ஏன் இந்த பலமான தும்மல் ?

பித்தானந்தா : குழந்தாய், உலகம் கெட்டுக்கிடக்கிறது, நான் போட்ட பட்டணம் பொடியிலும், கெட்டப்பயல்கள் கலப்படம் செய்து விற்கிறார்கள், நாசியில் தூசி படிந்தது போல் ஒரே நெடி.

பக்தை : சுவாமிஜிக்கு மோப்ப சக்தி அதிகம், முகர்ந்து பார்த்தே கலப்படத்தைச் சொல்லிவிடுகிறாரே, சுவாமி இது தெய்வீகத் தன்மை தான்

அனைவரும் உடனே கன்னத்தில் போட்டுக் கொண்டு,

பக்தைகள் : பித்தானந்த பகவானே.....பித்தானந்த பகவானே

மற்றொரு பக்தை, சுவாமிஜியிடம்

பக்தை : சுவாமிஜி தவறாக நினைக்கக் கூடாது. ஒண்ணு கேட்கனும்

பித்தானந்தா : குழந்தாய், நான் தவறாக நினைப்பேன் என்று நீ தான் தவறாக நினைக்கிறாய், முக்காலமும் உணர்ந்த எனக்கு எல்லாம் சரியாகாவே தெரியும். ம் சொல்லு.....

பக்தை : வெளியே 'புகை உடலுக்கு பகை' என்று பதாகையில் எழுதி தொங்கவிட்டிருக்கிறீர்கள், இங்கே வெண்குழல் வத்தியை 10 நிமிடத்திற்கு ஒரு முறை பற்ற வைக்கிறீர்களே, இது சரியா சுவாமிஜி ?

பித்தானந்தா பலமாக சிரிக்கிறார்......

பித்தானந்தா : குழந்தாய்.... உடல் என்றால் இந்த தேகம்.....புகை என்றால் அதனுள் உள்ள ஆவி....ஆன்மா

பக்தை : சுவாமிஜி புரியவில்லை. தேகமும் ஆன்மாவும் ஏன் ஒன்றுக்கொன்று பகை ?

பித்தானந்தா : இந்த பூவுலகில் உயிரும், உடலும் சேர்ந்திருப்பதால் தானே வாழ்கையே, ஆனால் இந்த வாழ்கையை உண்மை, நிரந்தரம் என்று எண்ணி, மனிதர்கள் அடுத்தவர்களையெல்லாம் ஏமாற்றி சொத்து சேர்க்கிறார்கள். என்றோ ஒரு நாள் உடல் - ஆன்மா பகை ஏற்பட்டு இரண்டும் நிரந்தரமாக பிரிந்துவிடும். இது தெரியாமல் மனிதர்களுக்கிடையே பகை.....பேராசை .......நிம்மதி இழந்து வாழ்கிறார்கள்.


பித்தனந்தாவின் 'புகை உடலுக்கு பகை' விளக்கம் கேட்டு, ஒட்டுமொத்தமாக பக்தைகள் அனைவரும், பரவசத்துடன்

பக்தைகள் : "பித்தானந்தா சுவாமிஜி உங்களால் பேறு பெற்றோம்.......பெரும் பேறு பெற்றோம்"

பித்தானந்தா : சத்தமாக சொல்லாதீர்கள், பெரும் பேறு பெற்றோம் என்பதை....குழந்தை பெறும் பேறு பெற்றோம் என்று யாரும் புரிந்து கொண்டு என்னை பிரேமானந்தாவுக்கு பக்கத்து செல்லில் போட்டுவிடப் போகிறார்கள்.

13 comments:

ILA (a) இளா said...

:))

SP.VR. SUBBIAH said...

////பக்தை : வெளியே 'புகை உடலுக்கு பகை' என்று பதாகையில் எழுதி தொங்கவிட்டிருக்கிறீர்கள், இங்கே வெண்குழல் வத்தியை 10 நிமிடத்திற்கு ஒரு முறை பற்ற வைக்கிறீர்களே, இது சரியா சுவாமிஜி ?////

இது எப்போதிருந்து?
சாமியார் மலேசியா போனதிலிருந்தா? இல்லை அதுக்கு முன்பிருந்தா?

சின்னப் பையன் said...

:-)))))))))))))

ஜெகதீசன் said...

:)))

துளசி கோபால் said...

//என்னை பிரேமானந்தாவுக்கு பக்கத்து செல்லில் போட்டுவிடப் போகிறார்கள்.//

பக்கத்து பெட்லேதான் போடணும்.
பிரேமானந்தா தீவிர சிகிச்சைப்பிரிவில் அட்மிட்டாம்.

ஆமாம் அது என்ன தேவரீர் 'மொதுவா' பேசறீர்? :-))))

கோவி.கண்ணன் said...

//LA said...
:))
//

நன்னி !

கோவி.கண்ணன் said...

//SP.VR. SUBBIAH said...

இது எப்போதிருந்து?
சாமியார் மலேசியா போனதிலிருந்தா? இல்லை அதுக்கு முன்பிருந்தா?

Mon May 12, 07:06:00 AM IST
//

தேவரீர், தேவ ரகசியமெல்லாம் கேட்கப்படாது !
:)

கோவி.கண்ணன் said...

// ச்சின்னப் பையன் said...
:-)))))))))))))

Mon May 12, 07:08:00 AM IST
//

நன்றி !

கோவி.கண்ணன் said...

//ஜெகதீசன் said...
:)))

Mon May 12, 07:11:00 AM IST
//

சாமியாருக்கு சீடர் வேண்டுமாம் !
:)

கோவி.கண்ணன் said...

//துளசி கோபால் said...


பக்கத்து பெட்லேதான் போடணும்.
பிரேமானந்தா தீவிர சிகிச்சைப்பிரிவில் அட்மிட்டாம்.

ஆமாம் அது என்ன தேவரீர் 'மொதுவா' பேசறீர்? :-))))

Mon May 12, 08:24:00 AM IST
//

:)

துளசி அம்மா,

பிரேமனந்தா ஹார்ட் அட்டாக் - தீவிர சிகிச்சை படித்தேன். லிங்கம் தொண்டையில் சிக்கி இருக்கும்.

பிரேமனந்தா விரைவில் குணமடைய வாழ்த்துகிறோன்.

சாமிகள் மவுனம் கலைப்பதே பெரிய விசயம். மெதுவாகப் பேசுவதைப் பற்றி கவலைப்படலாமா !
:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்ன இருந்தாலும் எங்க சிங்கம் சிபி அண்ணாவை இப்படித் தப்பாப் பேசி அவரு சங்கத்துலயே நொங்கிப் பதிவு போட்ட கோவியானந்தாவை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உடல் என்றால் இந்த தேகம்.....
புகை என்றால் அதனுள் உள்ள ஆவி//

அப்போ தீப்பெட்டி, லைட்டர் இதெல்லாம் என்னாது கோவியானந்தா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அப்படியே ஆஷ் ட்ரே என்னான்னும் சொல்லிருங்க!

பாத்தீங்களா, சாமியார் வேலைன்னா சும்மா இல்லை! இப்படி எல்லாம் மடக்கப்படுவீர்கள்! :-)))))))