Thursday, November 15, 2007

மணப்பயலே வெட்டிப்பயலே, வா வா!

நவம்பர் 15, 2007.....காலை 9:00-10:30.....
மண்டபத்துக்குள்ள கல்யாண மாப்பிள்ளை ரொம்பவே கூச்சப்பட்டு என்ட்ரி கொடுத்துக்கினு இருந்தாரு! முகமெல்லாம் பவுடரும் மேக்கப்பும் போட்டு, பச்சைத் தமிழனை வெள்ளைத் தமிழன் ஆக்கி வெச்சிருந்தாங்க, சிவாஜி ஸ்டைலில்!

பட்டு வேட்டி, பட்டுச் சொக்கா பரபரக்க,
மல்லிப்பூ மாலையும் கழுத்துமாய், கைகளிலும் மல்லிப்பூ சுத்தி.
வெட்டிப்பயல், மைனர் பயல் ரேஞ்சுக்கு இருந்தாரு!!

வாழைமரம், பந்தல் எல்லாம் எங்கூரு வாழைப்பந்தல்-ல இருந்து போச்சுதாம்முல்ல!
மாப்பு முன்னரே சொல்லி வச்சிருந்தபடி, லவுட் ஸ்பீக்கரில் தெலுங்கு படக் குத்துப்பாட்டு மட்டுமே ஓட்டிக் கொண்டிருந்தார்கள்!
ரா, ரா...வெட்டி பெள்ளிக்கு ரா ரா!ன்னு தலைவர் ரஜினியே பாடி வரவேற்றுக் கொண்டிருந்தார்!

கள்ளக்குறிச்சியில கள்ளழகர் எறங்குன கதையா, VAS கல்யாண மண்டபத்துக்குள்ள நுழைஞ்சாரு நம்ம மாப்பு!
மணமகனே வெட்டிமகனே வா வா!
வலதுகாலை எடுத்துவச்சி வா வா!
குணமகனே கொல்ட்டி மகனே வா வா!
தமிழ்ப்பதிவு வாசல் தொறந்து வச்சோம் வா வா!
-ன்னு தாய்க்குலங்கள் எல்லாம் கோரஸ் பாட,
கூடவே ஏக பில்டப்பு கொடுத்துக்குனு, சங்கத்துச் சிங்கங்கள் புடை சூழ, சிரிச்சி சிரிச்சி வந்தாரு மாப்பு!

மாப்பிள்ளை மண்டபத்துல தனியா உட்காரந்திருந்தாரு! பொண்ணுக்கு இன்னும் அலங்காரம் முடியலையாம்! - வெட்டீஸ் நீ வெயிட்டீஸ்!
ச்சே......இந்த வேஷ்டி வேற இடுப்புல சரியா நிக்க மாட்டங்குது! மாப்புக்கு செம டென்சன்! இருக்காதா பின்ன? மானப் பிரச்னையாச்சே! :-)

வெட்டிக்கு எதுக்குடா வேட்டி? அதான் பேர்-லயே வெட்டி-ன்னு இருக்கே!
அத கால் வாங்கி, வேட்டி ஆக்கிடுன்னு நம்ம ராயல் ராமு வச்சாரு பாருங்க மொத மொய்யை! - அதக் கேட்டு தூறல் எழுதனவரு ஒரு தூறு தூறினாரு!
அவ்ளோ தான்! மாப்புள்ள முறுக்கு-ன்னு சும்மாவா?

மாப்புள்ள, கைப்புள்ள ன்னு அத்தினி பேரும் ஒரு மொறை மொறைக்க, எங்கிருந்தோ வந்தது, மயில்கண் பார்டர் போட்ட ஒரு பட்டு ஜீன்சு!
மாப்பிள்ளை வொயிட் ஜீன்சுக்குத் தாவி,
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் ஜீன்ஸு
ன்னு தன் மானத்தைக் காப்பாத்திக்கிட்டாரு! :-)

ஆகா...இப்போ எதுக்கு இத்தினி பொண்ணுங்க ஓடியாறாங்க?
ஓ நலங்கா?...
அட என்னங்க மாப்பு, இம்புட்டு நெளி நெளியறீங்க?
எத்தனை பேரைக் கேள்வி கேட்டே நெளிய வச்சிருப்பீங்க! லவ்ஸ்டோரி லபக்குதாஸ்-ன்ன்னு பேரு வாங்கிட்டு, இப்படி நெளியலாமா?

அது இல்லீங்க தலைவா...இந்தச் சின்னப் பொண்ணுங்க நலங்கு வைக்கறேன் பேர்வழி-ன்னு, சந்தனம் எல்லாம் என் கன்னத்துல பூசுதுங்க!
ஒரே டச்சிங்! டச்சிங்!! - ஐ டோண்ட் லைக் தட்! யூ சீ!
என் orkut profile-ல்லயே நான் "committed" ன்னு ஸ்டேடஸ் சேஞ்ச் பண்ணிட்டேன் மேன்!

அடங் கொக்க மக்கா! - இது நம்ம கப்பி!
தலைவா, அப்ப நான் வேணும்னா ஒங்களுக்குப் பதில் நலங்கு வச்சிக்கவா? அண்ணனுக்கு வச்சா என்ன? தம்பிக்கு வச்சா என்ன? - இது அன்புத் தம்பி சீவீஆரு!

டேய் ஓவர் சூடு, ஒடம்புக்கு ஆவாது! - இது தேவ்
மவனே, இங்கயுமா அடங்க மாட்டங்கறே, இந்தாப் பாரு கலப்பை, மண் "வெட்டி" - இது விவசாயி

அண்ணா- வேர் இஸ் மை வைர நெக்லேஸ்- யூ ப்ராமிஸ்ட் னா? - இது துர்கா
இவ்வளவு சந்தடியிலும், கல்யாணத்துக்கு வந்த பிகர்களுக்கு மட்டும், சாக்லேட் காபி கொடுத்துக் கொண்டிருந்த தம்பி அண்ணா!
காபிய இப்படியா ஆற வச்சுக் கொடுப்பாங்க? சூடாக் கொடுறா சுள்ளா - இது சூடான் புலி!

கல்யாணத்துல மணமக்களுக்குத் திருக்குறள் ஒன்னு சொல்லுங்கப்பா!
ஜொள்ளுக ஜொள்ளை பிறிதோர் ஜொள் - அஜ்ஜொள்ளை
வெல்லுஞ்ஜொள் இன்மை அறிந்து

- இது ஜொள்ளுப்பாண்டி!

தல கைப்புவும், தளபதி சிபியும் மட்டும் கருமமே கண்ணாக....கடமையைச் செய்து கொண்டிருந்தார்கள் - காலை டிபன் பந்தியில் மொத சீட்!
ஒரு மெதுவடைக்கு ஒரு பக்கெட் சாம்பார் காலி ஆயிருச்சு! :-))




திடீர்னு....ஒரே சத்தம்!
வெட்டி மேளம்! வெட்டி மேளம்!! - சாரி
கெட்டி மேளம்! கெட்டி மேளம்!!

டம, டம, டம, டம, டும், டும், டும்!
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்

- இது, யாரு சொன்னாங்கன்னு ஒங்களுக்கே தெரியும் :-)
அப்படியும் தெரியலீன்னா, இருக்கவே இருக்கு பின்னூட்டத்துல கேட்டுக்கோங்கோவ்!

வெட்டி கல்யாண வைபோகமே!

பின்னூட்ட அட்சதையத் தூவி,

வாழ்த்துங்க மக்கா!


டும், டும், டும், டும், டும், டும், டும், டும், டும்!



சார் லேட்டா வந்துட்டீங்களா! பரவாயில்லை வாங்க. அட அங்கிட்டு எங்க போறீக?
Newly Weds - Dont Disturb-ங்கிற போர்டை, அமெரிக்காவுல இருந்து இதுக்குன்னே ஸ்பெசலா வாங்கினு வந்துருக்காராம், மாப்பிள்ளை!

கல்யாணம் முடிஞ்ச கையோட, அந்த ஐயரைக் கூட, புராணத்துல கங்கைக்குப் புருசன் யாருன்னு, எடுக்கு மடக்கா கேள்வி கேட்டு, விரட்டிப்புட்டாராமுல்ல?
நாம வாங்க பந்திக்குப் போகலாம்! பந்தி மாஸ்டர் ஜிராகவன் மெசேஜ் அனுப்பிச்சிருக்காரு!

முந்திரிப் பக்கோடாவும், தயிர் வடையும், பூசணி அல்வாவும் அப்படியே மிதக்குதாம்!

கைய நனைச்சிட்டுப் போங்க-ன்னு பதிவுல வெட்டியாச் சொல்லி இருப்பாரு, கமெண்ட் பாக்ஸுல! - ஆனாப் பாருங்க, அப்பல்லாம் கைய நனைக்க ஒன்னுமே தரல!
ஆனா இப்ப...வாங்க!

நெசமாலுமே கைய நனைச்சிட்டுப் போவோம்! - அலோ, சாருக்கு ரெண்டு முந்திரி பக்கோடா எக்ஸ்ட்ரா வைங்கப்பா!

கல்யாண சமையல் சாதம்!
காய் கறிகளும் பிரமாதம்!!
இது வெட்டி வரப் பிரசாதம்!!!
இதுவே பதிவுக்குப் போதும்!!!!
ஹா ஹாஹ்ஹ ஹாஹ்ஹ ஹாஹ்ஹா! ஹா ஹாஹ்ஹ ஹாஹ்ஹ ஹா!

பதிவு: KRS

32 comments:

குமரன் (Kumaran) said...

//வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்
- இது, யாரு சொன்னாங்கன்னு ஒங்களுக்கே தெரியும் :-)
//

எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். நானே தான் நானே தான்!

ILA (a) இளா said...

வாழ்க வெட்டி & co

Baby Pavan said...

ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய். வாழ்த்துக்கள் மாமா....சிக்கிரம் எங்க சங்கத்துக்கு ஒரு ஜுனியர் ரெடி பண்ணிஅனுப்புங்க....

கோபிநாத் said...

கல்யாணத்துக்கே போயி பார்த்த எபெக்ட்டு...பின்னிட்டிங்க அண்ணே ;)

\\பட்டு வேட்டி, பட்டுச் சொக்கா பரபரக்க,\\

மாப்பிள்ளை பட்டு வேட்டியும், சொக்காவும் கூட சிகப்பு, மஞ்சள், பச்சை கலருல வோணும்ன்னு சொன்னதாக செய்தி வந்ததே...!! ;)

கோபிநாத் said...

\\நாம வாங்க பந்திக்குப் போகலாம்! பந்தி மாஸ்டர் ஜிராகவன் மெசேஜ் அனுப்பிச்சிருக்காரு!\\

சரியான ஆளைதான் போட்டுயிருக்கிங்க ;))

CVR said...

மணமக்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்!! :-)

சீமாச்சு.. said...

வெட்டிப்பயலுக்கும் மணமகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்..

அன்புடன்,
சீமாச்சு...

Anonymous said...

திருமண வாழ்த்துக்கள் வெட்டி.

துளசி கோபால் said...

ஹை பட்டு ஜீன்ஸா? நான் பார்க்கலையே.....

வாழ்த்து(க்)கள் நம்ம வெட்டி(காரு0வுக்கு.

நல்லா இருக்கட்டும் மணமக்கள்.

ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப் :-))))

Anonymous said...

வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய திருமண வாழ்த்துக்கள் திருமதி & திரு. பாலாஜி!
(ஒரு முறையாச்சும் மரியாதை போட்டுக் கூப்பிடச் சொன்னீங்கல்ல - போதுமா திரு.பாலாஜி? :-)))

அன்பும் அறனும் தழைத்து, வாழ்வாங்கு வாழ, திருவேங்கடமுடையான் திருவருள் புரியட்டும்!
மணமக்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்!! :-)

இலவசக்கொத்தனார் said...

நல்லா எழுதி இருக்கீங்க. ஆமாம், வெட்டிக்கு யாரும் டெவில் ஷோ நடத்தலையா? இனிமே டெய்லி அதானேன்னு சமாதானப் படுத்திக்கலாமேன்னு நினைச்சா உடனே ஆண் ஈயம், பெண் பித்தளைன்னு சவுண்டு விடறாங்க.
சரி நான் கம்முன்னு இருக்கேன்.

ஆனா ஒண்ணு. ஜொள்ளு பாண்டியை நம்ம வெண்பா கிளாசுக்கு அனுப்புங்க. சொல்லி இருக்கிற குறளில் தளை தட்டுது!

வெட்டிக்கு வாழ்த்துக்கள்.

dubukudisciple said...

vaazhthukal vetti

நாகை சிவா said...

நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

மணமக்கள் எல்லா வளமும் பெற்று இன்று போல் என்றும் வாழ்க

Divya said...

வாழ்த்துக்கள் பாலாஜி!

இராம்/Raam said...

புதுமண தம்பதிகளுக்கு இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... :)

Anonymous said...

வாழ்த்துக்கள் பாலாஜி அண்ணா & சரண்யா அண்ணி :D

//அண்ணா- வேர் இஸ் மை வைர நெக்லேஸ்- யூ ப்ராமிஸ்ட் னா? - இது துர்கா//

நான் அவள் இல்லை :))

மெளலி (மதுரையம்பதி) said...

//புதுமண தம்பதிகளுக்கு இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... //

ரீப்பீட்டே....

G3 said...

புதுமண தம்பதிகளுக்கு இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... :)

உண்மை said...

வாழ்த்துக்கள் வெட்டி.

மணமக்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துர்கா|thurgah said...
//அண்ணா- வேர் இஸ் மை வைர நெக்லேஸ்- யூ ப்ராமிஸ்ட் னா? - இது துர்கா//
நான் அவள் இல்லை :))//

நீ அவளே தான்! :-)))

அண்ணி...யாரை வேணும்னாலும் நம்புங்க! துர்காவை மட்டும் ....!

கப்பி | Kappi said...

புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :)

சிறில் அலெக்ஸ் said...

வாழ்க! வளர்க!
இனிமே வெட்டி பதிவு போட கொஞ்ச காலம் ஆகலாம்.
அதான் 'வெட்டி' ஒட்டிட்டாங்களே.

:)

ரசிகன் said...

// லவ்ஸ்டோரி லபக்குதாஸ்-ன்ன்னு பேரு வாங்கிட்டு, இப்படி நெளியலாமா?//

ஆஹா.. அப்ப லவ் மேரேஜிதானா?.. நம்ம வெட்டியாருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

G.Ragavan said...

வெட்டிக்கும் அவர்தம் துணைவியாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

பந்தியில் நடந்தது. அஞ்சாயிரம் பேருக்குச் சமைச்சேன். சங்கத்தாளுங்கன்னு ஏழெட்டு பேரு நொழைஞ்சாங்க....அஞ்சாயிரம் சாப்பாடு மூவாயிரமாயிருச்சு. அப்புறம் யாரோ கேயாரெஸ்சாம். அவரு நுழைஞ்சாரு. மூவாயிரமும் காலி. இவங்களையெல்லாம் ஏய்யா உள்ள விடுறீங்க? :))))))))))))))

cheena (சீனா) said...

நல்லாவே சங்கத்து மெம்பர்ஸ் எல்லாம் கல்யாணத்துக்குப் போய் கலாச்சிட்டு அதெ ஒரு பதிவா வேற போட்டுட்டீங்க. பாராட்டுகள். தளை தட்டினாலும் ஜொள்ளின் ஜொள் கவுஜ பேஷ் பேஷ்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிறில் அலெக்ஸ் said...
வாழ்க! வளர்க!
இனிமே வெட்டி பதிவு போட கொஞ்ச காலம் ஆகலாம்//

சிறில்
என்னங்க இது! இப்படி "கொஞ்ச காலம்"-னு இலை மறை காய் மறையாச் சொன்னா எப்பிடி? :-))

"எத்தினி மாசம்"-னு கரெக்டாச் சொல்லுங்க! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
பந்தியில் நடந்தது. அஞ்சாயிரம் பேருக்குச் சமைச்சேன். //

வாருமய்யா பந்தி மாஸ்டரே!
நீரு சமைச்சீரா? பொய் சொல்லாதீரு!
நீரு மாஸ்டர் தானேய்யா!
சமைச்சது குக்-ஆக்கும்! கிராமமும் குக்கு; அவரும் குக்கு!

//அப்புறம் யாரோ கேயாரெஸ்சாம். அவரு நுழைஞ்சாரு. மூவாயிரமும் காலி.//

நான் நுழையற வரைக்கும் மூவாயிரம் பேருக்குச் சாப்பாடு போடாம அலைக்கழிச்சி இருக்கீரு!
நான் வந்தப்பறம் தான், அந்த மூவாயிரம் பேரும் திருப்தியாச் சாப்பிட்டு காலி ஆச்சா? ஆகா!
உம்மைப் போயி பந்தி மாஸ்டரா போட்டேன் பாரு!

//இவங்களையெல்லாம் ஏய்யா உள்ள விடுறீங்க? :))))))))))))))//

அலோ, எங்கண்ணன் கல்யாணத்துல தம்பி நான் இல்லாமலா?

சவுண்டு வுட்டதெல்லாம் போதும்!
மொதல்ல சமையல் ஜாமான் சரக்குக்கு எல்லாம் கணக்கு காட்டுங்க! நைசா எஸ்கேப்பு ஆகலாம்னு பாத்தீரா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
நல்லா எழுதி இருக்கீங்க.//

நன்றி தல!

//ஆனா ஒண்ணு. ஜொள்ளு பாண்டியை நம்ம வெண்பா கிளாசுக்கு அனுப்புங்க. சொல்லி இருக்கிற குறளில் தளை தட்டுது!//

ஆமாய்யா!
இங்க தாம்பாளத் தட்டைத் தேடிக்கிட்டு இருக்கோம்!
தளை தட்டுதாம்! மொதல்ல தாம்பாளத் தட்டு எங்கே? அதச் சொல்லுங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
ஹை பட்டு ஜீன்ஸா? நான் பார்க்கலையே.....
//

டீச்சர்,
முன்னமேயே ஒங்க பதிவுல ஒரு பின்னூட்டத்துல சொல்லி இருக்கேனே!
பட்டு ஜீன்ஸ் பத்தி!

ஃபோட்டோ அனுப்பி வைக்கிறேன்! தெரிஞ்சவங்க கல்யாணத்துல பாத்து நானே மலைச்சுப் போயிட்டேன்!
specially designed ன்னு சொன்னாங்க! Not Bad!!
ரூவா எவ்ளோ ஆச்சுன்னு எல்லாம் கேட்டுக்குல! :-)

M.Rishan Shareef said...

நிஜமாவே கல்யாணம் ஆயிடுச்சா? இவ்வளவு சின்ன வயசிலேயே ?

அவிங்க சொன்னப்போ நம்பலப்பா.
வாழ்த்துக்கள் அண்ணாச்சி..!