Tuesday, November 20, 2007

சீண்டிப்பார்க்கும் ப.ம.க'விற்கு சிங்கங்களின் முன்னெச்சரிக்கை...

நாங்க பாட்டுக்கு சிவனேனு இண்டர்காலாக்டிக் பாலிடிக்ஸ் பண்ணிகிட்டிருக்கோம். எங்கள ஏன் தேவையில்லாம சீண்டி பாக்குற தேவு?

நிலாத்தேர்தல்ல வாங்கினது பத்தாதா?

சிங்கங்கள் என்று அறியப்படும் உங்கள் சிறு'மட'ற்குழு எங்கள் பேரியக்கத்தை மேலும் சீண்ட முற்பட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

புண்குறிப்பு: புலியும் கூடச் சேர்ந்து பம்முவது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

சிங்கம் புலிகளுக்கான குருபெயர்ச்சி பலன்:

பெரிய இடத்து பகைமையைத் தவிர்க்க சூட்டை குறைத்துக்கொண்டு உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும்.

நீங்கள் செய்யவேண்டிய பரிகாரம்: இருபது ஆடுகளுடன் உடனடியாக கும்பகோணம் போகவும்.

இப்படிக்கு,
இரம்நாதன்
கொபசெ
உருசிய மாவட்டம்
பமக


ருஷ்ய மாவட்ட பழுதுபட்ட ம.க. (ப.ம.க) வில் இருந்து இப்படி ஒரு கடிதம். அறியாதச் சிறுவன் அவசரத்தில் ஆத்திரத்தில் எழுதியதாய் தான் இந்தக் கடிதத்தைப் பார்க்க வேண்டி உள்ளது..


ருஷ்ய மாவட்டம் பமக... மா வாட்டம் கண்டிருப்பதற்கு முக்கியக் காரணமாய் வரலாறு புவியியல், அறிவியல் எல்லாம் ஒரு சேரச் சுட்டுவது உம்மைத் தான்.. .கட்சி பணி ஆற்றாமல் மக்களுக்கு குரல் கொடுக்கும் சங்கப் பணிக்கு பங்கப் பணி ஆற்ற படைத் திரட்டும் உம்மைப் பார்த்தால் எமக்கு மட்டுமல்ல பமகவின் தலைமையில் இருந்து கடைசித் தொண்டன் வரைக்கும் சிப்பு சிப்பாக வருகிறதாம்..உலகின் ஒவ்வொரு மூலையிலும் சங்கத்தின் அங்கமாய் வருத்தப்படாத வாலிபச் சிங்கங்கள் உள்ளன..தமிழ் தேசத்து வாலிபனின் உரிமைக்கு உதார் விடும் வேலைகள் எங்கு நடந்தாலும் அங்கெல்லாம் சிங்கங்கள் சிங்கிளாகவும், டபுளாகவும், கும்பலாகவும் களத்தில் இறங்கியது தமிழகம் மறுத்தறியாத வரலாறு என்பது அரசியலில் அ என்ற எழுத்தையே இன்னும் கற்று முடியாத உமக்குத் தெரிய வாய்ப்பில்லைய்யா


ம்ம்ம் நிலாத் தேர்தல்... அது நாங்கள் நில்லாத் தேர்தல்...


சிறுமடற் குழு அல்ல,....திருத்திக் கொள்ளும் சீறும் மடற் குழு... பேரியக்கமாம் .. ஆகா என்றோ பெயர்ந்துப் போன இயக்கம் என்று சொல்லும் பொருத்தமாக இருக்கும்


புண் குறிப்பு... அது நிச்சயம் உமக்கு குறிக்கப்படும்


குரு பெயர்ச்சி பலன்கள்.... யாரிடம் இந்த பம்மாத்து வேலைகள்...


ருஷ்ய மாவாட்ட மருத்துவரே.. மன்னிப்பு நாங்கள் கேட்பதா.. மன்னிப்புங்கற மேட்டரை மொத்த மண்டிப் போட்டுக் கேக்கறவங்களுக்கு 'இலவசமாக்" கொடுத்துகிட்டு இருக்கோம்ய்யா...உங்களுக்கு வேணும்ன்னா கேளுங்க... எவ்வளவு மன்னிப்பு வேணும்ன்னாலும் கொடுக்கிறோம்..வாங்கிக்கங்க...


தேவ கவுடா மாதிரி இல்லீங்க, ஆதரவு தரேன்னு ஆசை காட்டி மோசம் பண்ண. போர்வாள் ஒரு முறை சொன்னா நூறு முறை சொன்னா மாதிரி.

மொதல்ல பின்னூட்டத்துல உங்க பதிவா நிப்பாட்ட சொன்னோம், கேக்கல.
தனிமடல் போட்டோம், நிப்பாட்டல, பதிவு போட்டோம், ஏறலை.

அதுவும் எதிர் பதிவு போட்டு அரசியலே வேணாம்னு இருக்கிற எங்க மூக்க சிந்தி,,,, சே சே எங்களை சீண்டி பார்க்கிறீங்களே.


ரங்கமணிகளின் ரகசியத்தை ரகசியமா வெச்சுக்கனும். சிதம்பர ரகசியத்து மாதிரி எல்லாத்தையும் பொதுவுல வெச்சா எங்க அம்மணிங்க ஆட்டத்தை யாரு நிப்பாட்டுறது. எங்களுக்கு எப்பவுமே வாலிப வயசு. அதுக்கு இருக்கவே இருக்காரு ஸ்பெஷல் வாத்தியாரே ஜொள்ளு பாண்டிதான்.

wifeology ஸ்டார்ட் பண்ணினதே சங்கம் தான், அதுவும் நீங்க இங்க அட்லாஸ்சா இருக்கும் போதுதான். அதை அங்கே மானே தேனே பொன்மானே போட்டு எழுதிட்டாஆ...

ஒரு வார்த்தை தான், அசிங்கம்னும் படிக்கலாம், அஞ்சாத சிங்கம்னும் படிக்கலாம்..

9 comments:

Kutties said...

யாருப்பாது சிங்கத்த சீண்டரது...நாங்க பாத்துட்டு சும்மா இருக்க மாட்டோம். குட்டி சிங்கம்ஸ்

தேவ் | Dev said...

சங்கத்தின் இளம் சிங்கங்களே களம் காண நீங்கள் துடிப்பது புரிகிறது.. ஆனா கொஞ்சம் வெயிட்டீஸ்...

ம்ம் பாருங்கய்யா எங்க JUNIOR WINGai அடக்கி வைக்க வேண்டியிருக்கு சோ சீண்டாதீங்க சொல்லிட்டோம்

செந்தழல் ரவி said...

சீறும் சிங்கங்களே...சிதறி ஓடாமல் ஓடி வாருங்கள்...

பின்னூட்டத்திலே பினாத்தலை பிங்குவோம்...!!!

கூடங்குளம் அணு ஆயுத ஒப்பத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாம் அவர்...

ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஒரு 'டமால்' என்று அறியாதவர் போலும்...

வெள்ளந்திகளும் வெட்டருவாக்களும் வேடிக்கை பார்ப்பதோடு நின்றுவிடாமல் பின்னூட்டங்களை அள்ளித்தெளிப்பீர்...

Baby Pavan said...

தேவ் | Dev said...
சங்கத்தின் இளம் சிங்கங்களே களம் காண நீங்கள் துடிப்பது புரிகிறது.. ஆனா கொஞ்சம் வெயிட்டீஸ்...

ம்ம் பாருங்கய்யா எங்க JUNIOR WINGai அடக்கி வைக்க வேண்டியிருக்கு சோ சீண்டாதீங்க சொல்லிட்டோம்

ஆமாப்பா நாங்க இம்சைய குடுக்க ஆரம்பிச்சா அவ்ளோதான்...குட்டி சிங்கம்

கப்பி பய said...

சிங்கங்களின் தலையை சீப்பால் சீவ நினைக்கும் பமகவினரையும் போர்வாள் தேவ்வின் அன்பான வேண்டுகோளையும் மீறி ரங்கமணிகளின் ரகசியங்களை தங்கமணிகளுக்கு அம்பலப்படுத்தும் பினாத்தலாரின் அராஜக் போக்கையும் கண்டித்து தீவுத்திடலில் மாபெரும் பொதுக்கூட்டமும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடாத்த ஏற்பாடு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில்....

கப்பி பய said...

இந்த ஏகாதிபத்திய மனப்பாங்கு தொடருமேயானால் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டத்திலும், ஒவ்வொரு முக்கு சந்திலும் நாடு தழுவிய போராட்டம் நடாத்த சிங்கங்கள் தயாராக இருக்கிறார்கள் என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ளும் வேளையிலே...

கப்பி பய said...

துடிக்குது புஜம்!!
ஜெயிப்பது நிஜம்!!

என்று கோடானுகோடி சிங்கங்கள் சங்கத்தின் கொள்கைக்காகவும் ரங்கமணிகளின் கண்ணீரைத் துடைப்பதற்காகவும் எழுச்சி கொண்டு தீக்குளிக்கவும் தயாராகவுள்ளார்கள் என்று சொல்லிக்கொள்வதே பெருமையடைகிறேன் மகிழ்ச்சியடைகிறேன் உவகையடைகிறேன் பேரானந்தம் அடைகிறேன்!!!

நாகை சிவா said...

பெனாத்தாலாரின் தேன் தடவிய வார்த்தைகளும், கொத்தனாரின் அனுசரணையான கடிதங்களை கண்டு பொங்கிய மனங்களை எல்லாம் ஒரளவு கட்டுக்குள் கொண்டு வந்து தங்கமணிகளை சமாளிக்க மாற்று வழிகளை கண்டுபிடிக்க ஆலோசனை நடத்த இருந்த நேரத்தில் நம் நெஞ்சங்களை எல்லாம் எகிற செய்யும் விதமாக ரம்நாதனின் அறிக்கை அமைந்து உள்ளது.

சிங்கத்தை சீண்டி பாப்பதே தப்பு, இதில் அவர் இரவில் ஏற்றிய ரம்மின் துணையுடன் சிங்கங்களை சுரண்டி பார்த்து உள்ளார். கூடவே புலியை பிராண்டியும் பார்த்து உள்ளார். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள் என்று போர்வாள் தேவ் அணைக் கட்டிய போதிலும் அணையை மீறிய வெள்ளமாக பாடம் பயின்ற பாசறையை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டில் இன்று சங்கம் வந்ததுக்கு காலம் செய்த கோலம் தான் காரணம்.

நாகை சிவா said...

//புண்குறிப்பு: புலியும் கூடச் சேர்ந்து பம்முவது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.//
நீங்கள் செய்யவேண்டிய பரிகாரம்: இருபது ஆடுகளுடன் உடனடியாக கும்பகோணம் போகவும்.//

புண்குறிப்பு கொடுத்து தன் வைத்திய திமிரை காட்டும் ரம்நாதா,

பரிகாரமாக 20 ஆடுகளுடன் வர வேண்டுமா.. அய்யா நீங்கள் தான் மொத்தமாக அத்தனை ரங்கமணிகளையும் பலி ஆடாக ஆக்கி வீட்டீர்களே, இன்னும் 20 ஆடுகளை வைத்து என்ன பண்ண போறீங்க.