Tuesday, December 19, 2006

சேட்டன்



சேட்டன் அப்படின்னா எதோ வயசானா டீக்கடை நாயர் இல்லைங்க. என்ன மாதிரி இளவட்டந்தான் (சைடுல நின்னு இளவட்டத்துக்கு அர்த்தம் தெரியுமான்னு கேக்கறது எனக்கு கேக்கலை, புரிஞ்சுதா?). தமிழராயிருந்தாலும் பாலக்காட்டில் பிறந்து வளர்ந்தவர். என்ட கடவுள் குருவாயுரப்பன், என்ட சீப் மினிஸ்டர் ஈ.கே.நாயனார், என்ட நாதம் தண்டை, என்ட நடனம் கதகளி, என்ட பீடி மலபார் பீடி, என்ட சாப்பாடு மீன் கறி, என்ட தேவி ஷகீலான்னு ஒரு குருப்பையே சொல்ல வைச்சவரு. அவரு இருந்தா அந்த இடமே கலகலன்னு இருக்கும்.

அவரோட பார்வையே கொஞ்ச வித்தியாசமானது. ஃபிகர் கரெக்ட் பண்ணனும்னா யமஹாவிலயோ பல்சாரிலோ வீலிங் பண்ணின பசங்களை பார்த்திருப்பீங்க. ஆனா, அரை மூடி தேங்காயை மளிகை கடையிருந்து ஆட்டைய போட்டுடு வந்து பக்கது சந்து முக்கு மாரியம்மன் கோவிலில் சுவத்தில் இருக்கும் திருநீறு, குங்குமத்தை எடுத்து தேய்ச்சுட்டு ஆன்ட்டி இன்னைக்கு சஷ்டி, கந்த கோட்டம் போயிட்டு வந்தேன். இந்தாங்க பிரசாதம் அப்படின்னு பதவிசா நீட்டுனார். அப்புறமென்ன எந்த ஃபிகருக்காக குட்டிக் கரணம் போட்டுட்டு இருந்தீங்களோ அதே பொண்ணு அம்மா குடுத்தாங்கன்னு வடை கொண்டு வருவதும், இல்லாத காய்ச்சலுக்கு கசாயம் வைச்சுக் குடுத்த அளும்பும் நடந்தது.

சேட்டா, எப்படி இந்த மாதிரி எல்லாம் உங்களால யோசிக்க முடிங்சதுன்னு கேட்டா எப்பவுமே கண்ணு காதெல்லாம் தொறந்து வைச்சு உஷாரா இருக்கணும். ஒரு வாரம் அவங்க என்ன பேசறாங்கன்னு கேட்டா அவங்களுக்கு என்ன புடிக்கும்ன்னு தெரிஞ்சுடும். உங்களுக்கெல்லாம் அதெலாம் வாரதுடா என அவிழாத வேட்டியை முட்டிக்கு மேல் மடித்துக் கட்டுவார். இவ்வளவு தெளிவா இருந்த நீங்க அப்புறம் ஏன் ஆறு அரியர் கிளியர் பண்ண ரெண்டு வருஷம் ஆச்சுன்னு கேட்டா அதுக்கும் ஒரு கதை ரெடியா வச்சிருந்தாரு.

காலேஜ் முதல் வருஷத்துல இஞ்ஜினியரிங் டிராயிங்ல சிவில் டிராயிங்கும் சேர்ந்து இருந்திருக்கு. தலைவர் ஷகீலா மேல் இருந்த ஆர்வத்துல மதியம் இருந்த சிவில் டிராயிங் கிளாஸ் ஒன்னு கூட போகலை. செமெஸ்டர்க்கு முத நாள் வீட்டு படம் போடறது எப்படின்னு ஒருத்தன் கிட்ட கேட்டுருக்காரு. அவனுக்கு என்ன கோவமோ தெரியலை அதெல்லாம் ஒன்னும் இல்லை, சாதாரணமான மேட்டர். உங்க வீட்டை மனசுல வைச்சுட்டு வரைஞ்சுடுன்னு சொல்லிட்டு போயிட்டான். இவங்க வீட்டுக்கு பின்னாடி ரெண்டு தென்னை மரமும், சைடுல ஒரு வாழை மரமும் இருந்துதாம். அதெல்லாம் வரைஞ்சுட்டு காக்கா ரெண்டு மூணு பறந்தா நல்லா இருக்கும்ன்னு அதையும் போட்டாராம். சிவில் புரபொசர் கூப்பிட்டு சொன்னாராம் நீ 7 வருஷத்துக்கு முன்னாடி இஞ்சினியரிங் முடிச்சா என் பேரை மாத்திக்கறேன்னு சொன்னாராம். அதுக்கப்புறம் எவனையும் நம்பற மாதிரி இல்லை என் வழி தனி வழின்னாரு.

அவரு கண்ணாடி ஒடைஞ்சு மூணு நாள் ஆச்சு. மாத்துங்க சேட்டா, ஏதாவது ஏடாகூடமா ஆயிடப் போகுதுன்னு சொன்னா, இப்போத்தான் நான் அஜீத் மாதிரி இருக்கேன். உங்களுக்கெல்லாம் பொறாமைன்னு சொல்லிட்டே திரிஞ்சுட்டு இருந்தார். வெள்ளிக் கிழமை நைட் ரொம்ப நேரம் ஆகியும் காணோம், ஒரு கை குறையுதேன்னு எல்லாம் வெளிய உக்கார்ந்துட்டு இருந்தோம். சேட்டனை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருப்பாதாக தகவல் வர அடிச்சு புடிச்சு போய் சேர்ந்தோம். முதல்ல வெளிய நிக்கறவர் கிட்ட 3000 ரூபாய் குடுத்து அனுப்புங்கன்னு சொன்னார்.

யாரையோ ICU ல சேர்க்கற அளவுக்கு அடிச்சு நொறுக்கிட்டு வெறும் 3000 ரூபாயில படுத்துட்டே முடிச்சுட்டாரேன்னு நினைச்சுட்டு பணத்தை குடுத்தா "அவருக்கு நல்லா கண்ணாடியா வாங்கி குடுங்க. நடு ரோட்டுல படுத்திருந்த எருமை மேல வண்டி ஏத்தி கொன்னுட்டாரு. எனக்கு இன்னும் 3 எருமை இருக்கு. தினமும் அந்த ஏரியாவுலதான் மேயும்"ன்னு சொல்லிட்டு நகர்ந்தாரு எருமையோட ஓனர். "நான் என்ன பண்னறது? ஸ்பீட் பிரேக்ன்னு நினைச்சுட்டு மேல விட்டுட்டேன். அந்த எருமைக்கு ஆயுசு அவ்வளவுதான்" காலை ஆட்டிட்டே சொன்னார்.

7 comments:

Unknown said...

ஈ பச்ச மண்ணு எவ்விட உண்டு.. நம்ம தலக்கு கேரளால்ல இப்படி ஒரு டுவின் பிரதரா?

ஆனந்தமாயிட்டு உண்டு.. அவ்விட பிராஞ்ச் ஓப்பன் செய்யு மதியோ....

வருத்தம் களைந்த இ சேட்டனுக்கு ஞான் வல்லியதாயிட்டு ஒரு'ஓ' போடும் கேட்டோ

Anonymous said...

iyyo, iyooo...ennalae siruppu thanga mudiyala..

Anonymous said...

//இவங்க வீட்டுக்கு பின்னாடி ரெண்டு தென்னை மரமும், சைடுல ஒரு வாழை மரமும் இருந்துதாம். அதெல்லாம் வரைஞ்சுட்டு காக்கா ரெண்டு மூணு பறந்தா நல்லா இருக்கும்ன்னு அதையும் போட்டாராம். //

ROFTL...

கைப்புள்ள said...

//இவங்க வீட்டுக்கு பின்னாடி ரெண்டு தென்னை மரமும், சைடுல ஒரு வாழை மரமும் இருந்துதாம். அதெல்லாம் வரைஞ்சுட்டு காக்கா ரெண்டு மூணு பறந்தா நல்லா இருக்கும்ன்னு அதையும் போட்டாராம்//

ஹி...ஹி...பலாமரத்தை விட்டுட்டாரேப்பா! அதுக்குத் தான் சிவில் புரொபசருக்குக் கோபம் வந்துருக்கு...
:))

நாமக்கல் சிபி said...

//"அவருக்கு நல்லா கண்ணாடியா வாங்கி குடுங்க. நடு ரோட்டுல படுத்திருந்த எருமை மேல வண்டி ஏத்தி கொன்னுட்டாரு. எனக்கு இன்னும் 3 எருமை இருக்கு. தினமும் அந்த ஏரியாவுலதான் மேயும்"ன்னு சொல்லிட்டு நகர்ந்தாரு எருமையோட ஓனர். "நான் என்ன பண்னறது? ஸ்பீட் பிரேக்ன்னு நினைச்சுட்டு மேல விட்டுட்டேன். அந்த எருமைக்கு ஆயுசு அவ்வளவுதான்" காலை ஆட்டிட்டே சொன்னார்.//

அல்டிமேட்...

நாமக்கல் சிபி said...

//என்ட கடவுள் குருவாயுரப்பன், என்ட சீப் மினிஸ்டர் ஈ.கே.நாயனார், என்ட நாதம் தண்டை, என்ட நடனம் கதகளி, என்ட பீடி மலபார் பீடி, என்ட சாப்பாடு மீன் கறி, என்ட தேவி ஷகீலான்னு ஒரு குருப்பையே சொல்ல வைச்சவரு.//

அந்த குருப் கோ.ப.ச நீங்க தானே :-)

Divya said...

\"இவங்க வீட்டுக்கு பின்னாடி ரெண்டு தென்னை மரமும், சைடுல ஒரு வாழை மரமும் இருந்துதாம். அதெல்லாம் வரைஞ்சுட்டு காக்கா ரெண்டு மூணு பறந்தா நல்லா இருக்கும்ன்னு அதையும் போட்டாராம்\"

உதய் சேட்டா......சூப்பரா கிச்சு கிச்சு மூட்டியிருக்கிறீங்க,
இந்த சிவில் ட்ராயிங் சூப்பர் காமடி!!