Monday, December 4, 2006

வ(லி)ழி தெரியாத வாலிபன்


உதய்: யப்பா... அந்த ஃபேனை போடுங்கப்பா. இப்போத்தான் தமிழ்மணம், தேன்கூடு எல்லாம் சுத்திட்டு வந்திருக்கேன். எந்த சந்துல இருந்து யாரு அடிப்பாங்கன்னே தெரியல. தாகமாவும் இருக்கு, கொஞ்சம் ஐஸ் வாட்டர் இருந்தா குடுங்க.

வெட்டிப்பயல்: சங்கத்து சிங்கங்களே, நம்ம அட்லாஸ் வாலிபர் வந்திருக்காரு. விசிறியும், பானைத் தண்ணியும் கொண்டு வாங்க.

உதய்:என்னது அட்லஸா ? அதெல்லாம் ஸ்கூல் படிச்சப்போ பார்த்ததோட சரி. என்னைய வைச்சு காமெடி பண்ணறேன்னு தெரியுது. அதென்ன விசிறியும், பானைத் தண்ணியும்? கரண்ட் இல்லையா?

வெட்டிப்பயல்: சங்கமே கடன்லதான் போவுதுன்னு தெரியாதா உங்களுக்கு? தலை கைப்பு கட்ட வேண்டிய 10 அபராதம் பாக்கி இருக்கு. இதுல சித்தூர்கட் செலவு, அப்புறம் பஸ்ல கண்டக்டர்ன்னு சொல்லிட்டு ஓசி ட்ரிப் வேற அடிச்சிருக்காரு, அதுக்கு எவ்வளவு கேப்பாங்கன்னு தெரியலை.... அட விடுங்க, அதெல்லாம்கூட எதிர்பார்த்ததுதான்...

இந்த தேவ் இருக்காப்புல இல்ல, வல்லவன் படம் பார்த்துட்டு விமர்சனம் எல்லாம் எழுதராரு. அதை பாக்காலாம் வாங்கடா கூட்டிட்டு போன ரெண்டு பேரு தூக்குல தொங்கிட்டாங்க. அதுக்கு பாடி எடுக்கறது சம்பந்தமா பஞ்சாயத்து பண்ணத்தான் தலயும் போயிருக்கறாரு. அங்க என்ன ரணகளம் ஆயிட்டு இருக்குன்னு தெரியலை. தல எப்படியும் பத்து சட்டை மாத்த வேண்டியிருக்கும்.

உதய்: பஞ்சாயத்துக்குதானே போயிருக்காங்க, அதுக்கு எதுக்கு பத்து சட்டை?

வெட்டிப்பயல்: சும்மா விளையாடாதீங்க... அடி வாங்கி சட்டை கிழிஞ்சு போனா தல திரும்ப புது சட்டை போட்டுட்டுத்தான் அடிக்க விடுவாரு.

உதய்: சங்கத்து சிங்கங்களேன்னு கூப்பிட்டு ரொம்ப நேரம் ஆகுது, யாரையும் வரக் காணோம். சரி வா, நாமளே போயி விசிறியும் பானையும் எடுத்து வந்துரலாம்.

வெட்டிப்பயல்: அய்யோ உதய், விசிறியும் காணோம்,பானையும் காணோம். ஒரு நிமிசம் இருங்க...இப்போத்தான் சுவாமி பித்தானந்தா கெட்டப்புக்கு விசிறி இருந்தா நல்லா இருக்கும்னு சிபி சொல்லிட்டு இருந்த மாதிரி இருந்தது. அதை அவரு எடுத்துட்டு போயிட்டாரு போல இருக்கு.

உதய்: அதான் சிம்புவுக்கும் நயன் தாராவுக்கும் லடாய்ன்னு வந்துடுச்சுல்ல, அப்புறம் எதுக்கு இன்னமும் அந்த வேஷம்? கோர்ட் ஜெயிலில் எல்லாம் அவங்கள மாதிரி 420 ஆளுகளாக நிறைஞ்சு இருக்காங்கன்னு ஈ படத்துல ஜீவா சொன்னாரு. இவரு சாமியாரா கோர்ட்டுக்கு போயி அவங்க மனக்குறைய தீர்த்து வைக்கட்டும். அப்புறம் அந்த பானை என்ன ஆச்சு? அதையும் அடகு வைக்க கொண்டு போயிட்டிங்களா? சேட்டு செவுள்ளையே அறைவான்.

வெட்டிப்பயல்: எங்க ஆளுக அதெல்லாம் ஏற்கனவே சேட்டுகிட்ட வாங்கிட்டாங்க. நம்ம இளா இல்ல, ஊரெல்லாம் நல்ல மழை, ஆர்யம் நல்லா விளைஞ்சிருக்கு, அதை போட்டு வைக்க பானை வாங்கனும்ன்னு சொல்லிட்டு இருந்தாரு. இங்க இருந்தே ஆட்டையை போட்டுட்டாரு போல இருக்கு.

(யாரோ சங்கத்து முன்னால் நின்று சுந்தர தெலுங்கில் சத்தமாக ஏதோ சொல்லுகிறார்கள்)

உதய்: லகலகலக... எவருதி? சங்கத்து வாசல்ல சாணி தெளிக்கிறது...

வெட்டிப்பயல்: அய்யோ உதய், பேசாம உக்காருங்க. அவன் பாட்டுக்கு கத்திட்டு போயிடுவான். அப்புறம் நாம வெளிய போலாம். இதுதான் சாக்குன்னு ஜோதிகா மாதிரியே குடுத்த காசுக்கு மேலயே நடிக்கறீங்க.

உதய்: ஹிஹிஹி...அவன் மொத்த பரம்பரையவே திட்டுனா மாதிரி இருந்தது, அதான் கொஞ்சம் உணர்ச்சிவசபட்டுட்டேன்.

வெட்டிப்பயல்: சங்கத்து வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணம். தெலுங்கு பட விமர்சனம் எழுதலாம்ன்னு 3 டிவிடி வாங்கிட்டு வந்தேன். சார்மி, இலியானா, ஜெனிலியாவையெல்லாம் பார்த்ததுக்கு அப்புறம் டிவிடி ரிட்ட்ர்ன் பண்ண மனசு வரலை. இன்னமும் 1 மாசத்துல குடுத்துருவேன். அதுக்கபுறம் அவன் வர மாட்டான்.

உதய்: என்ன நடக்குது இங்க? கொல்ட்டி கதை, பட விமர்சனம், அப்புறம் தெலுங்கு மக்களோட சுந்தர தெலுங்கில் மாட்லாடறது... அம்மாயி தெலுகா? நாக்கு தெலுசுந்தி...

வெட்டிப்பயல்: பேசறதுக்கு எவ்வளவு மேட்டர் இருக்கு? அதைவிட்டுட்டு எதையோ நோண்டிட்டு இருக்கீங்க. ஜொள்ளுப்பாண்டியும் நீங்களும் எதோ ஆராய்ச்சிக் கட்டுரை எழுதறதா ஒரு பேச்சு இருந்துச்சே என்ன ஆச்சு?

உதய்: எனக்கு கைடா இருக்கறதுக்கு முதல்ல ஒத்துக்கிட்டாரு. இப்போத்தான் அடிபட்டு ICU வில இருந்து வெளிய வந்திருக்காரு. காயம் எல்லாம் ஆறட்டும்னு பார்க்கிறேன். பின்னாடி பட்ட காலிலே படும்னு பழமொழி எல்லாம் சொல்லக் கூடாதுல்ல... சரி வரட்டா? நான் வேறெங்காவது போயி தண்ணி குடிச்சிக்கிறேன்.

என்னது, வேறெங்காவது போயா? இன்னும் ஒரு மாசத்துக்கு இங்கதான். எல்லோருக்கும் சொல்லி விட்டாச்சு. சங்கு, சேவுண்டி கூட ரெடி அட்லாஸ் வாலிபரே!!! என கோரஸாக சொல்லியபடி சங்கத்து சிங்கங்கள் கைப்பு தலைமையில் உள்ளே வருகிறார்கள்.

உதய்: மக்கா, நீங்க எல்லோரும் இங்கதான் இருக்கீங்களா??? சொல்லவே இல்லை. இப்ப வரைக்கும் நாங்க ஒன்னுமே பேசவே இல்லை. யாரோ டப்பிங் குடுத்துருக்காங்கா, டப்பிங். சினிமால குடுக்கற மாதிரியே, ஆமாம்... ஒன்னும் மனசுல வைச்சுக்காதீங்க...வரட்டா????

கைப்பு: எனக்கேவா, இல்லை எனக்கேவான்னு கேக்கறேன். சட்டையெல்லாம் கிழிஞ்சு குத்துயிரும் குலை உயிருமா நின்னாக் கூடா பத்து பேர அடிச்சா சட்டை கிழியத்தான் செய்யும்ன்னு சொன்ன எனக்கேவா??? ஒரு மாசத்துக்கு அந்த பக்கம் இந்த பக்கம் நகரக் கூடாது. உக்கார்ந்த இடத்துலயே உனக்கு எல்லோரும் ஆப்பு வெப்பாங்க. சத்தமே வரப்படாது, சரியா?

தேவ்: செம ஆப்புல்ல...தோ பாரும்மா இப்பெல்லாம் யாரும் யாருக்கு ஆப்பு வைக்கிறதே இல்லை. எல்லா ஆப்பும் அங்க அங்கதான் இருக்கு. நாமதான் அதை தேடி ஓடி போயி சும்மா ஜம்ப் பண்ணி உக்கார்றோம்.

உதய்: நானும் வல்லவன் படம் பார்த்தேன். அதுக்காக இப்படியா டைமிங் வச்சு ஜோக் அடிக்கறது. தண்னி குடிக்க உள்ள வந்தவனை தலை தனியா, கால் தனியா பிரிக்கணும்னு முடிவு பண்ணீட்டீங்க, இதெல்லாம் வேண்டாம்ன்னா விடவா போறீங்க. யப்பா ராயல் ராம், திண்டுக்கல் தலைப்பா கட்டு பிரியாணியும் உங்கூரு ஜிகர்தண்டாவும் வாங்கிட்டு வாப்பா... அப்படியே சூடான் புலியை பாத்தீங்கன்னா ஏதாவது புதுசா அயிட்டம் சுட்டு பழகிட்டு இருப்பாரு, அதையும் ஒரு எட்டு பார்த்து வாங்கிட்டு வந்துடுங்க.

தெம்பா இருக்கணும்ல, என்ன நான் சொல்லறது???

26 comments:

நாமக்கல் சிபி said...

அட்லாஸ் வாலிபரை வருக வருக என வரவேற்கிறோம்!!!

பொன்ஸ்~~Poorna said...

:)))))) உதய், ஆரம்பமே அசத்தல்.. தொடரவும் :)

ஜி said...

ஆரம்பிச்சுட்டானுங்கையா... ஆரம்பிச்சுட்டானுங்க!

அனுசுயா said...

அட்லாஸ் வாலிபர் ஆப்பு வாங்கவாருனு பாத்தா. சங்கத்து ஆளுங்களுக்கே ஆப்பு குடுக்கிறாறே. நல்லா விடரீங்கப்பா சவுண்ட். :)

கைப்புள்ள said...

ஆரம்பமே கலக்கல் உதய். சங்கத்து சிங்கங்கள் மூவ்மெண்ட் ஒன்னொன்னுத்தையும் உன்னிப்பா நோட் பண்ணிருக்கீங்கன்னு தெரியுது.

ஒரு மாசமும் நல்லா அடிச்சி ஆடுங்க. நாங்களும் ஒரு குத்து குத்தி ரொம்ப நாளாச்சு.
:)

Udhayakumar said...

வரற்வேற்புக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

வெட்டி, 3 நன்றி சொல்லிருக்கேன். அப்பரண்டிஸ் சிங்கங்கள் கிட்ட சொல்லி இதை ஒரு வாரத்துக்கு கொறைச்சுக்க கூடாது :-)

Udhayakumar said...

//ஒரு மாசமும் நல்லா அடிச்சி ஆடுங்க. நாங்களும் ஒரு குத்து குத்தி ரொம்ப நாளாச்சு.//

தல, குத்து குத்தின்னு சொன்னது சரி. ஆனா யாரைன்னு சொல்லல??? யப்பா, எனக்கு இப்பவே அடி வயிறு கலங்குதே...

தேவ் | Dev said...

வெட்டி உதய் தம்பி நல்லா சவுண்ட் விடுமாம் இல்ல.. எவ்வளவ்ய் டெசிபல்ன்னு அளந்துப் பாத்துருவோமா.. ம் அந்த வல்லவடு டி.வி.டியக் கொடுங்கப்பா...

வாங்க உதய் இன்னிக்குப் பூரா இந்தப் படத்தைப் போட்டுப் பாருங்க.. நாளைக்குத் தல இதுல்ல குவிஜ் வைப்பார் செயிச்சுட்டீங்கன்னா குச்சி முட்டாயும் குருவி உருண்டையும் வாங்கித் தருவார்...

வெட்டி ஸ்டார் வல்லவடு.....

உதய் நாங்கப் போயிட்டோம்ன்னு ஆப் பண்ணிறக் கூடாது ரணகளம் ஆயிரும் ஆமா...

அடுத்து வீராச்சாமிடு டி.வி.டி வருது அதுல்ல இளா குவிஜ் வைப்பார் இப்போ நான் வர்றேன்..

Udhayakumar said...

//வெட்டி உதய் தம்பி நல்லா சவுண்ட் விடுமாம் இல்ல.. எவ்வளவ்ய் டெசிபல்ன்னு அளந்துப் பாத்துருவோமா.. ம் அந்த வல்லவடு டி.வி.டியக் கொடுங்கப்பா...

வாங்க உதய் இன்னிக்குப் பூரா இந்தப் படத்தைப் போட்டுப் பாருங்க.. நாளைக்குத் தல இதுல்ல குவிஜ் வைப்பார் செயிச்சுட்டீங்கன்னா குச்சி முட்டாயும் குருவி உருண்டையும் வாங்கித் தருவார்...

வெட்டி ஸ்டார் வல்லவடு.....

உதய் நாங்கப் போயிட்டோம்ன்னு ஆப் பண்ணிறக் கூடாது ரணகளம் ஆயிரும் ஆமா...

அடுத்து வீராச்சாமிடு டி.வி.டி வருது அதுல்ல இளா குவிஜ் வைப்பார் இப்போ நான் வர்றேன்..//

தேவ், இப்போத்தான் நீங்க 2 பேரை போட்டுத்தள்ளின கதைய பெருமையா சொல்லிருக்கேன், அடுத்தது நானா???

Udhayakumar said...

//உதய் நாங்கப் போயிட்டோம்ன்னு ஆப் பண்ணிறக் கூடாது ரணகளம் ஆயிரும் ஆமா...
//

தேவ், ஆப் பண்ணலைன்னாலும் ரண களம் தான். என்கிட்ட தூக்கு போட அரணா கயிறு கூட இல்லையே.

Udhayakumar said...

//:)))))) உதய், ஆரம்பமே அசத்தல்.. தொடரவும் :) //

பொன்ஸ், இப்படி ஏத்தி விட்டுத்தானே என்னைய உங்க கொண்டு வந்து உக்கார வெச்சிருகீங்க... உயிரோட இருந்தா மீட் பண்ணரேன். இப்பொதைக்கு வரேன்...

Udhayakumar said...

//ஆரம்பிச்சுட்டானுங்கையா... ஆரம்பிச்சுட்டானுங்க! //

ஜி, வாங்க வாங்க... இவங்க எப்பவுமே இப்படித்தான். நீங்க கண்டுக்காதீங்க.

தேவ் | Dev said...

இயக்குனர் நடிகர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் புகழை இன்னொருவருக்குச் சூட்ட முயலும் உங்களின் இந்த ஸ்டேண்ட்மென்டினை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்....

:)))))

அது சரி தெலுங்குல்ல வல்லவடு எப்படின்னு பார்த்துட்டு விமர்சனம் போடுங்க.. நான் படிக்க ரெடி.. ப்ளிஸ்

:))))

நாமக்கல் சிபி said...

//அதான் சிம்புவுக்கும் நயன் தாராவுக்கும் லடாய்ன்னு வந்துடுச்சுல்ல, அப்புறம் எதுக்கு இன்னமும் அந்த வேஷம்? //


நல்ல அப்ஜெர்வேஷன் உதய்!

Udhayakumar said...

//அட்லாஸ் வாலிபர் ஆப்பு வாங்கவாருனு பாத்தா. சங்கத்து ஆளுங்களுக்கே ஆப்பு குடுக்கிறாறே. நல்லா விடரீங்கப்பா சவுண்ட். :) //

அனு, முதல்ல எல்லோருக்கும் குடுத்து பார்த்துட்டு அப்புறந்தான் நாங்க வாங்குவோம்...

Udhayakumar said...

//நல்ல அப்ஜெர்வேஷன் உதய்! //

சிபி, பயந்துட்டேதான் எழுதினேன். காப்பாத்தீட்டீங்க, ரொம்ப நன்றி!!!!

Udhayakumar said...

//இயக்குனர் நடிகர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் புகழை இன்னொருவருக்குச் சூட்ட முயலும் உங்களின் இந்த ஸ்டேண்ட்மென்டினை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்....

:)))))

//

தள தேவின் பெருந்தன்மையை நிருபிக்க இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது... மொத்த பெருமையையும் சிம்புவுக்கே குடுத்த நல்ல மனசை பாருங்கள்...

//அது சரி தெலுங்குல்ல வல்லவடு எப்படின்னு பார்த்துட்டு விமர்சனம் போடுங்க.. நான் படிக்க ரெடி.. ப்ளிஸ்

:)))) //

தேவ், வெட்டிப்பயல் கிட்ட கேட்க வேண்டியதை எங்கிட்ட கேக்கறீங்க? எனக்கு தெரிஞ்ச தெலுங்கு லகலகலக தான்....

இராம் said...

//தெம்பா இருக்கணும்ல, என்ன நான் சொல்லறது???//

என்னாது... தெம்பா.. அப்பிடின்னா???!!! நம்ம தலயே பாருங்கய்யா.. மொத சந்திலே அடி வாங்குனாலும், அடுத்த சந்திலே போய் அதே தெம்பிலே சவுண்ட்விடுவாரு...

ஒரு நாளுக்குள்ளே சோர்ந்து போயிரதீங்க அ.வா. இன்னும் இருக்கு எங்களோட "ஆப்ரேசன் ஆப் அட்லாஸ்".

;-)

கப்பி பய said...

:))))

//தெம்பா இருக்கணும்ல, என்ன நான் சொல்லறது???
//

கரெக்ட்தான்..தெம்பா இருந்தாதானே வாங்குற ஆப்பெல்லாம் தெரியும்...மயக்கத்துல இருந்தாலும் தெளிய வச்சு அடிக்கறதுதானே நம்ம வழக்கம் ;))

செந்தழல் ரவி said...

கலக்குங்க...அருமையா ஆரம்பிச்சிருக்கீங்க !!!!

தம்பி said...

அப்படி போடு சித்தப்பு!

நல்லா அடிச்சி எறக்க வேணாமா?

தம்பி said...

அப்படி போடு சித்தப்பு!

நல்லா அடிச்சி எறக்க வேணாமா?

நாமக்கல் சிபி said...

//அந்த ஃபேனை போடுங்கப்பா. இப்போத்தான் தமிழ்மணம், தேன்கூடு எல்லாம் சுத்திட்டு வந்திருக்கேன். எந்த சந்துல இருந்து யாரு அடிப்பாங்கன்னே தெரியல//

பின்ன குண்டக்க மண்டக்க ஆராய்ச்சி பண்ணா அடிக்காம என்ன பண்ணுவாங்க? எல்லாரும் நம்ம ஜொள்ளு மாதிரி நல்லவங்களா இருப்பாங்களா என்ன?

நாமக்கல் சிபி said...

//உயிரோட இருந்தா மீட் பண்ணரேன்//

உயிருக்கெல்லாம் எந்த பிரச்சனையும் வராது... வாழ்க்க முழுக்க ஆப்பு வாங்கர எங்க கைப்ஸ்க்கே எதுவும் ஆகலை.. கவலப்படாதீங்க ;)

நாமக்கல் சிபி said...

//கைப்பு: எனக்கேவா, இல்லை எனக்கேவான்னு கேக்கறேன். சட்டையெல்லாம் கிழிஞ்சு குத்துயிரும் குலை உயிருமா நின்னாக் கூடா பத்து பேர அடிச்சா சட்டை கிழியத்தான் செய்யும்ன்னு சொன்ன எனக்கேவா??//

தலயோட இந்த திறமைதான் எங்க எல்லாரையும் மெய்சிலிர்க்க வைக்குது :-)

நாமக்கல் சிபி said...

// கொல்ட்டி கதை, பட விமர்சனம், அப்புறம் தெலுங்கு மக்களோட சுந்தர தெலுங்கில் மாட்லாடறது... அம்மாயி தெலுகா? நாக்கு தெலுசுந்தி...//

நான் பேசரது சுந்தர தெலுகா? இத மாட்டும் ஆந்திரா மக்கள் கேட்ட மில்வாக்கி வந்து உங்கள நொங்கிட்டு போவாங்க ;)