Tuesday, December 26, 2006

புத்தம் புதுசாய்....

"ஆப்புகள் ஆயிரம் கோடி வாங்கி... வேட்டிகளை வெளிநாடுகள் என்றும் பாராமல் பறக்க விட்டு... குப்புற விழுந்து கொமாட்டுல்ல கும்மாங்குத்து வாங்கி... இடுப்பிலே இடியை விட பலமான மிதிகளை வாங்கி...மூஞ்சி மொகரையில் புயல் வேகத்தில் லெப்ட் ரைட் என அறை வாங்கி அஞ்சாறு ஊருக்கு கேட்கிறமாதிரி மைக் இல்லாமலே அலறல் விட்டு... ஓடம்புல்ல ஒரு லட்சம இடத்துல்ல டிசைன் டிசைனா அடியை வாங்கி...டப்பா டான்ஸ் ஆடுற அளவுக்கு அல்லோலப்பட்டு.. டன் கணக்கல்ல டின் கட்டப்பட்டு... அங்கிட்டு இங்கிட்டு என எங்கிட்டும் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு கெத்து குலையாம எங்க தல கட்டுன வீர விவசாயப் பூமி எங்க சங்கம்...

அதே பிளாக்ல பீடாப் போட்டோம்.. பதிவுலே வெத்தலப் போட்டோம்... அப்படின்னு விளக்கம் சொன்னா.. விட்டுருவோமாய்யா.. வீதிக்கு வீதி விளம்பரப் படுத்தி வித்தைக் காட்டி எங்க தல பவர் என்னன்னு ப்ருவ் பண்ண மாட்டோம் நாங்க..."

"ஏலேய், போர்வாளு நிப்பாட்டு! என்ன உன்னோட பிரச்சினை எதுக்கு இப்போ சந்தையிலே வித்தை காட்டுறவன் மாதிரி சவுண்ட் விட்டுக்கிருக்கே...??"

"தல! சங்கம் பீட்டா, பாட்டா'ன்னு என்னோமோ ஆகிப்போச்சு! அதுதான் இப்பிடி சவுண்ட் விட்டேன்!"

"என்னாலே சொல்லுறே? பீட்டா'வா?"

"ஆமா நம்மளை கூடி கும்மியடிக்கிறே கோஷ்டிகளுக்கு பூராப் பேத்துக்கும் வெத்தலை பாக்கு வைச்சு கூப்பிட்டு பீட்டாவுக்கு மாத்த சொல்லிறாங்க!"

"சரிதான் இழுந்து வைச்சு கலகம் பண்ணுறாய்ங்களா??? சரி விட்டுதள்ளு! தானமா கிடைச்ச மாட்டே எதுக்கு பல்லை பிடிச்சு பார்க்கணும்???"

"சரி தல! நானு என்னோட அறிவிப்பை தொடர்ந்துக்கிறேன்..!"மக்களே,

மேலே இருக்கிறமாதிரி அட்டவணை போட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கும் போது நமக்குன்னு ஒரு ரிலாக்ஸ் செஞ்சுக்கிற இடமா இருந்த சங்கம் இப்போ சின்ன பிரச்சினைலே இருக்கு.

ஆமாம் நம் தலையின் இனிய எதிரிகள் கட்டதுரையும், பார்த்திபனும் இணைந்து நம்முடைய வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை கந்தகோலம் ஆக்கிவிட்டனர். அதுக்கா நாம் அசரப்போகிறோம்...

இந்தா மறுபடியும் எங்க சிங்கத்தைச் சீவி சிங்காரிச்சி கூட்டிட்டு வந்துருக்கோம்ய்யா.. கூடவே தலக்கு சப்போர்ட்டா அண்ணன் பஞ்ச் பாலாவும் வந்து இருக்காகாக...விரைவில் சங்கம் முற்றிலும் புதுப் பொலிவுடன் புத்தம் புதுசாய் மலர இருக்கிறது!!!

லோக்கல் ஆப்பு ரிஜக்டட்.. கலக்கல் ஆப்பு அக்சப்ட்ட...

அப்புறம் என்ன தாரைத் தப்பட்டைகள் எல்லாம் கிழிந்துத் தொங்க வேண்டாமா.. கிளப்புங்கள் பீதியை...

வழக்கம்போல் உங்களை சிரிக்கவைக்க இதோ கிளம்பிட்டோம்... மக்கா கிளம்பிட்டோம்மய்யா.....

2 comments:

Anonymous said...

வெகு சிக்கிரத்திலே பழைய பதிவுகளுடன் மீண்டும் வ.வா.சங்கம் மலர இருக்கிறது... அதுக்கான முன்னோட்ட பதிவுதான் இது.

சில குறைகளை விரைவில் தீர்க்க முயல்கிறோம்

தம்பி said...

இந்த சதியை கட்டவிழ்த்து விட்டது கட்டத்துரைதான் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால்.

கட்டத்துரைக்கு எதிராக அண்ணன் கைப்பு தன்னந்தனியாக காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்வார்.