Thursday, December 14, 2006

ஸ்கீயிங் ஸ்கீயிங் ஸ்கீயிங்...


ESPN , Star sports -ல எல்லாம் சும்மா சர்சர்ன்னு சறுக்கிட்டு வருவாங்களே அதே மாதிரி ஒரு நாள் நானும் சறுக்கனும்ன்னு நினைச்சுட்டே இருந்தது போன வாரம் நடந்தே நடந்துருச்சு.

பொறுப்பா ஒரு பெரியவர் பாடம் சொல்லிக் குடுத்தார். அதெயெல்லாம் பார்த்து தெரிஞ்சுக்காமா பொட்டு, பொடுசு, ஜிகிடி, ஜாங்கிரின்னு சும்மா பறந்து பறந்து வந்ததை பார்த்துட்டே நின்னுட்டு இருந்தேன். எங்க சறுக்கு பார்க்கலாம்ன்னு அந்த பெரியவர் சொல்லிட்டு இருந்தபோது நான் ராசுக்குட்டி பாக்யராஜ் மாதிரி இந்த பக்கம், அந்த பக்கம்ன்னு சாய்ஞ்சு சாய்ஞ்சு போட்டோ எடுக்க சொல்லிட்டு இருந்தேன். அப்பவே எனக்கு ஸ்கீயிங் போன திருப்தி வந்துடுச்சு.

மலை மேல போறதுக்கு கயிறை மெசின் மூலமா சுத்த விட்டுருந்தாங்க. மாடு தாம்புக்கயிறை அத்துட்டு ஓடுனா எப்படி கயிறை புடிச்சு நிறுத்துவுமோ அதே மாதிரி கயித்தை புடிச்சுட்டு மேல போயாச்சு. காலை எடுத்து அப்படியே சரிவுல வைச்சவுடனே புடிங்க, புடிங்கன்னு கத்தறேன் ஒரு பய உதவிக்கு இல்லை. மேல போன வேகத்துல கீழே வந்தாச்சு. மேல போனப்பா ஸ்கீ மேல நான் நின்னுட்டு இருந்தேன். கீழே ரிட்ட்ர்ன் வந்தப்போ ஸ்கீ ரெண்டும் என் மேல இருந்தது.

இதுக்கெல்லாம் பயந்தா ஆகிறதான்னு திரும்பவும் மேல போயி கீழ வந்து மேல போயி கீழ வந்து ரெண்டு சைடும் கொஞ்சம் கொஞ்சமா வீங்க ஆரம்பிடுச்சு (மீசைல மண் ஒட்டக்கூடாதுன்னு விழுகறப்போ எல்லாம் சைடு வாக்குல விழுந்தேன், ஹிஹிஹி...). ஒவ்வொரு தடவையும் ஸ்கீ, கண்ணாடின்னு எல்லாத்தையும் தேடி புடிச்சிதான் கண்டுபுடிக்க வேண்டி இருந்தது.

கடைசியா ஒரு தடவையாது முழுசா மேல இருந்து கிழே வரணும்னு மேல போனதுக்கு அப்புறம் கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு. அதையெல்லாம் வெளிய காட்டிக்காம சும்மா ஸ்கீ ரெண்டையும் நேராத்தான் வைச்சேன். அந்த பெரியவர் டைனமிக்ஸ், பிசிக்ஸ்ன்னு சொன்னப்ப வேடிக்கை பார்த்ததுக்கு நல்லா அனுபவிச்சேன். எனக்கு 15 அடிக்கு கீழே 4 பேரு உக்காந்து வம்பு பேசிட்டு இருந்தாங்க. சறுக்கறதுக்குன்னு வந்துட்டு என்ன வெட்டி பேச்சுன்னு நேரா அவங்க மேல என்னை பார்க் பண்ண முயற்சி பண்ணினேன். என் பலம் தாங்க முடியாமா திசைக்கு ஒருத்தரா தெரிச்சுட்டாங்க.

அதுல ஒரு பொண்ணு கீழ போயிடுவியா? இல்லை லிப்ட் வேணுமான்னு கேட்டாங்க. ஆத்தா, நீங்க நல்லா இருப்பீங்க. அப்படியே உங்க டிக்கில என்னை கட்டி கீழ இழுத்துட்டு போயிடுன்ங்கன்னு கதறினேன். அப்படியெல்லாம் போக முடியாது, நான் பின் பக்கமா சறுக்கிட்டு கீழ வரேன், என் கையை புடுச்சிட்டு அப்படியே நீயும் என் பின்னாடி கீழே வந்துடுன்னு சொல்லிட்டு ஸ்கீயோட பிசிக்ஸ், டைனமிக்ஸ் எல்லாம் சொல்லிக் குடுத்தா அப்படியே மண்டைல கும்மு கும்முன்னு ஏறுது. பத்து பதினைஞ்சு நிமிஷம் அப்படியே என் கையை புடிச்சு சொல்லிக் குடுத்துதல கீழ வந்ததே தெரியலை.

அப்புறம்... அப்படினு நான் சொன்னத்துக்கு அப்புறம் நான் சொன்ன விசயங்களும் அவங்க சொன்னதும் சந்தூர் சோப்பு விளம்பரத்துல 10 வருஷத்துக்கு முன்னாடியே காட்டிட்டாங்க. எனக்கு விதிச்சது அவ்வளவுதான். சும்மா சொல்லக் கூடாதூங்க, ஸ்கீயிங் சூப்பருங்கோவ்...

21 comments:

சேதுக்கரசி said...

//சும்மா சொல்லக் கூடாதூங்க, ஸ்கீயிங் சூப்பருங்கோவ்...//

அம்மணி வந்து காப்பாத்தினதும் அந்தர்பல்டியா?

Unknown said...

யப்பா உதய் இன்னிக்குத் தான் சவுண்ட் பார்ட்டின்னு சக்கையாப் புருப் பண்ணியிருக்க.. பின்னே ஒவ்வொரு தடவை விழும் போதும் சக்கை சவுண்டி விட்டுருக்கில்ல... ம்ம்ம் கன்டின்னியூ....

Udhayakumar said...

//அம்மணி வந்து காப்பாத்தினதும் அந்தர்பல்டியா?
//

சேதுக்கரசி, அம்மணி வர்றதுக்கு முன்னாடிதான் அந்தர் பல்டி. அதுக்கப்புறந்தான் நான் ஸ்கீயிங் எக்ஸ்பர்ட் ஆயிட்டன்ல...

அனுசுயா said...

//ராசுக்குட்டி பாக்யராஜ் மாதிரி இந்த பக்கம், அந்த பக்கம்ன்னு சாய்ஞ்சு சாய்ஞ்சு போட்டோ எடுக்க சொல்லிட்டு இருந்தேன். அப்பவே எனக்கு ஸ்கீயிங் போன திருப்தி வந்துடுச்சு//

சவுண்ட் சூப்பருங்கோவ் :)))

Anonymous said...

santhoor soap advertisement la "Neenga entha college" nu keppangale atha solreengala udhay ;) keep it up ------ ammu

Udhayakumar said...

//யப்பா உதய் இன்னிக்குத் தான் சவுண்ட் பார்ட்டின்னு சக்கையாப் புருப் பண்ணியிருக்க.. பின்னே ஒவ்வொரு தடவை விழும் போதும் சக்கை சவுண்டி விட்டுருக்கில்ல... ம்ம்ம் கன்டின்னியூ.... //

நான் விடும் சவுண்ட்ல தள தேவ் வந்து காப்பாத்துவார்ன்னு நினைச்சேன், வீணாப் போச்சே...

Udhayakumar said...

//சவுண்ட் சூப்பருங்கோவ் :))) //

அனு, வருகைக்கு நன்றிங்கோ...

Udhayakumar said...

//santhoor soap advertisement la "Neenga entha college" nu keppangale atha solreengala udhay ;) keep it up ------ ammu //

அம்மு, என்னவொரு கெட்ட எண்ணம். அடுத்த தடவையாவது செட்டாக வாழ்த்துக்கள்ன்னு சொல்லாம திரும்ப சந்தூர் சோப்புல அந்த பொண்ணு சொன்னதை நான் திரும்ப கேக்கணுமா?

Divya said...

\"(மீசைல மண் ஒட்டக்கூடாதுன்னு விழுகறப்போ எல்லாம் சைடு வாக்குல விழுந்தேன், ஹிஹிஹி...). \"

உதய், மீசையில மண்ணுதான் ஒட்ட கூடாது.........Snow ஒட்டலாம், சும்மா ஜமாய்ங்க !!

செம காமடியா எழுதியிருக்கிறீங்க ,உங்கள் ஸ்கீயிங் அனுபவத்தை கற்பனை பண்ணி பார்த்து, ரசிச்சு சிரிச்சேன் , சூப்பரா சவுண்ட் விட்டுருக்கிறார் அட்லாஸ் வாலிபர்!!!!

கப்பி | Kappi said...

//இந்த பக்கம், அந்த பக்கம்ன்னு சாய்ஞ்சு சாய்ஞ்சு போட்டோ எடுக்க சொல்லிட்டு இருந்தேன். அப்பவே எனக்கு ஸ்கீயிங் போன திருப்தி வந்துடுச்சு//

எம்புட்டு நேரம் தான் ஸ்கீயிங் போன மாதிரியே நடிக்கறது :)))


//அப்புறம் நான் சொன்ன விசயங்களும் அவங்க சொன்னதும் சந்தூர் சோப்பு விளம்பரத்துல 10 வருஷத்துக்கு முன்னாடியே காட்டிட்டாங்க. எனக்கு விதிச்சது அவ்வளவுதான்.//

வொய் பீலிங்க்ஸ் ஆப் ஸ்கீயிங்க்?? இதெல்லாம் நமக்கு என்ன புதுசா??? :))

இராம்/Raam said...

சவுண்ட் சூப்பரு... இந்தமாதிரி விஷயங்கள் எல்லாம் நம்ம வாழ்க்கையிலே நடக்கிறதுதானே....

:-)))

Anonymous said...

இதையெல்லாம் வெக்கமில்லாம வெளில சொல்ல முடியுமான்னு ரோசிச்சிட்டு பம்மிட்டேன் நான்!!! :)

"அப்படியே பறக்கற உணர்வு வந்தது" "கால் தரைல பாவாம மிதந்தேன்"ன்லாம் கதைல காதலனோட உணர்வுகளை வர்ணனை செய்வாங்க. இங்கிட்டு பிடிமானம் இல்லாம நம்ம ஒரு பக்கம் போக நெனச்சா அது நம்மளை எங்கிட்டோ கொண்டுபோய் தள்ற கொடுமைய எங்கன போய் சொல்றது? கால் ரெண்டயும் நேர வச்சிருந்தாலும் பப்பரப்பேன்னு பரத்தி விழுந்து... ஸ்கீ இவ்ளோ நீளமா இல்லாம சின்னதா இருக்கக் கூடாதான்னு தோணினது. விழுந்தா தானா எந்திரிக்கவும் முடியாம - இயலாமையோட உச்சக்கட்ட கஷ்டத்த அனுபவிச்ச நாளை நினைவு படுத்திட்டீங்க. ஆனா அந்த சர்..சர்..குட்டீஸ்? சே. சான்ஸே இல்லை!

அருமையான பதிவு. பாராட்டுகள்.

கதிர் said...

தலயின் தொண்டர்களான நீங்கல்லாம் ஸ்கீயிங் ஸ்டிக் இல்லாமலே சறுக்கியிருக்கணும். தல பஸ்ஸுல கம்பிய பிடிக்காமலே வீரன் மாதிரி நின்னாரே அது மாதிரி.

சரி சரி யாரும் பாக்கலல்ல பரவால்ல. ஊரே பாத்துடுச்சே. போனா போகுது அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கோங்க...

சூனா... பானா...

நாமக்கல் சிபி said...

உதய்,
உங்க ஸ்கேட்டிங் அனுபவம் சூப்பர்...

//எங்க சறுக்கு பார்க்கலாம்ன்னு அந்த பெரியவர் சொல்லிட்டு இருந்தபோது நான் ராசுக்குட்டி பாக்யராஜ் மாதிரி இந்த பக்கம், அந்த பக்கம்ன்னு சாய்ஞ்சு சாய்ஞ்சு போட்டோ எடுக்க சொல்லிட்டு இருந்தேன். அப்பவே எனக்கு ஸ்கீயிங் போன திருப்தி வந்துடுச்சு.//
இது டாப்பு ;)

நாங்களும் ஜனவரில போவோம்...
அப்பறம் ஒரு பதிவ போடறோம் ;)

Syam said...

பிகருகிட்ட ட்ரெயினிங் எடுத்தா எல்லாமே சூப்பரா வரும் :-)

Chellamuthu Kuppusamy said...

:-) உள்ளூரா இல்லை ஆல்ஃப்ஸ் மலையா?

Arunkumar said...

உதய்,
கலக்கிட்ட போ... செம காமெடியா எழுதீர்க்க... பாக்யராஜ் மேட்டர் சூப்பரோ சூப்பர் :)

Anonymous said...

Sound party enga ski pannuniga I also wanted to do it for a long time. Sonniga na nangalum pannvoum la

Udhayakumar said...

Aravind, I went to Sunburst Ski Area - Kewaskum, WI, 53040-9478 (35 miles north of Milwaukee).

You can try the one in 76th street aso (if you are a beginner)

கைப்புள்ள said...

//அப்புறம்... அப்படினு நான் சொன்னத்துக்கு அப்புறம் நான் சொன்ன விசயங்களும் அவங்க சொன்னதும் சந்தூர் சோப்பு விளம்பரத்துல 10 வருஷத்துக்கு முன்னாடியே காட்டிட்டாங்க. எனக்கு விதிச்சது அவ்வளவுதான். சும்மா சொல்லக் கூடாதூங்க, ஸ்கீயிங் சூப்பருங்கோவ்...//

ஏம்ப்பா சவுண்டு,
பெரியவரு கிட்ட ஒழுங்கா ஸ்கீயிங் படிச்சிட்டிருந்தா, பின்னால பாப்பாவோட தேன்நிலவு ஜெமினி கணேசன் மாதிரி "ஓஹோ எந்தன் பேபி"ன்னு ஸ்கீயிலேயே டபுள்ஸ் ஓட்டிருக்கலாம்ல? மிஸ் பண்ணிட்டியேப்பா?
:(

கப்பி | Kappi said...

//if you are a beginner//

இப்ப என்ன சொல்ல வரீங்க?? நீங்க ஸ்கீயிங் எக்ஸ்பர்ட் ஆயிட்டீங்களா? ;))))