Tuesday, December 19, 2006

சங்கம் ஸ்டார் நைட்

தல மூக்குலே மூணு அங்குல நீளத்துக்கு வெளிநாட்டு மருந்துக் கம்பெனிகாரன் விளம்பரத்துக்குக் கொடுத்த பேண்டேஜ் போட்டு உக்காந்து இருக்க.. சுத்திலும் சங்கத்துச் செல்லங்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

பாண்டி பக்காவா ஜீன்ஸ் போட்டு ரேபான் கிளாஸ் அப்புறம் டிக் மார்க் போட்ட டீ ஷர்ட் எல்லாம் போட்டுகிட்டு சங்கத்துக்குள்ளே நுழைந்தான்.

சங்கத்து வாசல்லே சீசனுக்கு ஏத்தாப்புல்ல ஸ்டார் கட்டித் தொங்கவிட்டுகிட்டு இருந்த வெட்டி டக்கென்னு பாண்டியப் பார்த்து ஷாக் ஆகி நின்னான். பாண்டி கையிலிருந்த கௌபாய் ஹேட் எடுத்து படு ஸ்டைலா சுழற்றி தலையில் மாட்டவும் ராயல்,பாண்டி புதுசா எதோ கரகம் ஆடப் போறான்னு அடுத்தப் பதிவுப் போட கையிலே நோட் பேட் எல்லாம் எடுத்து வச்சிகிட்டான்.

"ஹாய் கைஸ்.. என்னது இது நியூ இயர் ரவுண்ட் த கார்னர்.. இப்படி சோகமா உக்காந்து சுவத்தைப் பாத்துகிட்டு இருக்கீங்க...பாண்டி பாதி இங்கிலீஸ்ல்லயும் மீதி எத்திராஜ் காலேஜ் பொண்ணுங்கப் பேசும் தமிழிலும் கேட்க..

சங்கத்துச் செல்லங்கள்.. லைட்டாக் கண்கலங்கி விட்டனர். ரேபான் கிளாஸைத் தல கைப்புள்ளயின் மூக்குக்கு நேராச் சுழட்டி மீண்டும் மாட்டிய பாண்டி
"ஆர் மேன் இது பெக்கர் பெல்லோ தல சீட்லே உக்காந்து இருக்கான்..."அப்படின்னு ஒரு நக்கல் கேள்வி கேட்க....

தலயின் கோபம் உச்சிக்குச் சென்று மூக்கு வழியாகக் கொப்பளித்த கொப்பளிப்பில் பேண்டேஜ் சங்கத்துக் கூரையைப் பிச்சிகிட்டு எங்கியோ போய் விழுந்துச்சு...

"ஏலேஏஏஏஏஏஏஏய் பாண்டி.... நானாடா பெக்கர் பாய்... படுக்க பாய் இல்லன்னு நீ வந்தப்ப... எதிர்த்த வீட்டு ஆயாகிட்ட எவர்சில்வர் கரண்டியால அடி வாங்கிட்டு ஆயா படுத்திருந்தப் பாயை உருவுகிட்டு ஓடி வந்து கொடுத்த இந்தக் கைப்புள்ளயை உனக்குத் தெரியல்லயா....
பேகி பேண்ட் போட்டாத் தான் நாலு பிகராவது என்னையப் பாக்கும் தலன்னு நீ பிலீங் விட்டப்போ.. நம்ம தெரு மளிகைக் கடை சாக்குத் துணி களவாண்டு உனக்குப் பேகி போட்டு அழகு பார்த்த இந்த அண்ணன் கைப்புள்ளய உனக்குத் தெரியல்லயா?"

"ஏய் நிப்பாட்டு.. இப்படி வாய்ஸ் மாடுலேஷன் பண்ணி உன் பாடி லேங்குவஜைக் கண்ட படி யூஸ் பண்ணி இந்த யூத்தை இன்னும் எத்தனை நாளைக்கு கன்ப்யூஸ் பண்ண முடியுமின்னு நினைக்குற கைப்புள்ள?"

சொல்லி அடிப்பார்... சொல்லி சொல்லி அடிப்பார்... அப்படின்னு சங்கக் கூரை எல்லாம் அதிர பேக் கிரவுண்ட் மியூசிக் ஒலிக்க...

ரிபோக் ஷூ, சவுண்ட் கேக்க.. கையிலே 5 பவுன் பிரெஸ்லட் டாலடிக்க... லீ வைஸ் ஜீன் தோய்ச்சு வருச கணக்கான எபெக்ட் கொடுக்க...வலை பனியனும் அதுக்கு மேல புல் ஓவரும் போட்டுகிட்டு செம ஸ்டைலா கைப்புள்ளயை நோக்கி அந்த ஆள் வந்தான்.

வந்து நின்னு கைப்பு மூக்க ஒரு உரசு உரச... சட்டுன்னு புடிச்ச தீயை அப்படியே நாக்குல்ல வச்சு....

தீ டா.... என்னப் பார்த்தா ஊருக்கே பீதீடா...ன்னு சொல்ல.... பாண்டி பலமாக் கையத் தட்டுகிறான்.

பின்னாடியே ராயலும் வெட்டியும் சேர்ந்து விசிலடிச்சு பே'தனமா சவுண்டே கிளப்புறாங்க....

ண்ணா சூப்பர்ங்கண்ணா... அப்படின்னு கூரைக் கேப்பல்லருந்து கட்டத்துரை அன்ட் பார்த்தி குரூப் கொரலு விடுது...

மூக்கு மீண்டும் காயப்பட்ட நிலையில் கைப்பு கோவமாய் பாண்டி, வெட்டி, ராயலை முறைக்க... மூவரும் புது ஆள் பின்னாடி பதுங்குறாங்க...

"ஆமா நீ யார்?.. ஓனக்கு ஏன் இந்தக் கொலைவெறி.. வேணும்ன்னா வந்து நாலு அப்பு அப்பிட்டுப் போயிகிட்டே இரு..அத விட்டுபுட்டு மூக்குல்ல முக்காடு போடற மாதிரி சின்னப்பிள்ள தனமா விளையாட்டு எல்லாம் வேணாம்...".

"நான் யார்ங்கறது அப்புறம் இருக்கட்டும்... இக்கடச் சூடு.... விஸ்க்க்...விஸ்க்க்ன்னு அந்த ஆள் கையைச் சுழற்ற... புது கார்கோ பேண்டுகளும்.. லேட்டஸ்ட் பேஷன் ஆடை ஆபரணஙக்ளும் சங்கத்து மக்கள் மீது வந்து சேருகிறது..."

"ஆத்தாடி... சரியான பொரளி வித்தக்காரனா இருப்பான் போலிருக்கு.... உசார் ஆயிரணும்..." "எங்களுக்கும் இந்த மாதிரி வித்தை எல்லாம் தெரியும்.. நாங்களும் காட்டுவோம் இல்ல..." என்று கண்ணை மூடி ம்ம்ம்ம்னு மந்திரம் ஜெபிக்கிறார் கைப்பு...

கண்ணைத் திறந்துப் பார்த்தால்... எதிரே அந்த ஆள் அப்பிடியே சிரிச்சிகிட்டு நிக்குறான்.. சங்கத்துச் சிங்கங்களில் புதிதாய் புலிக்குட்டியும் இணைந்திருந்தான்.. அவனும் அதே கார்கோ ஸ்டைல் டிரேசில்..

"என்னது நம்ம மந்திரம் வேலைச் செய்யல்ல போலிருக்கேன்னு" கைப்புள்ள தனக்குள் கலங்கிக் கொண்டிருக்க....

"என்ன தல வித்தக் காட்டுறேன்னுச் சொல்லிட்டு வித் அவுட்ல்லே நிக்குறீங்கன்னு" ராயல் பழைய பாசத்தில் பதற...

"ஆகா... கழட்டிட்டான்ய்யா... கழட்டிட்டான்ய்யா... வித்த வில்லங்கமா ஒர்க் அவுட் ஆகி வித் அவுட் ஆகிறுச்சேன்னு தல கதற.." பாண்டி பழைய பிலீங்க்கில் தன் தொப்பியைத் தானம் கொடுத்து தலயின் மானம் காக்கிறான்.

"எங்கேடா என் தளபதி..? போர் வாள்...?அப்புறம் என் பாசக் கண்மணி விவசாயி...? எங்கேடாப் போயீட்டீங்க...?? ஓங்க தலயின் அவல நிலையை தட்டிக் கேக்க கிளம்பி வாங்கப்பா"

"ஏய் கைப்பு...! மூடு உன் மவுத் பைப்பு...." டக்கென்ன்று அந்த ஆள் கையை நீட்ட கைப்பு வாயிலும் பிலாஸ்டர் ஓட்டுகிறது...

"தளபதி..... அவர் தசாவதாரம் படத்துல்ல கமலுக்கு இன்னும் அஞ்சு ஆறு கெட்டப் போட ஐடியா கொடுக்க அமெரிக்காப் போறதா ஏர்போர்ட்ல்ல வெயிட்டிங்கல்ல இருக்கார்... கமலை எப்படியாவது ரஜினி வேஷத்துல்ல நடிக்க வச்சி கலாய்ச்சுட்டுத் தான் தாய் நாடு திரும்புவேன்னு பூமி ஆத்தா மேல சவுண்டு விட்டு சரியா நயன் 10க்கு சத்தியம் பண்ணியிருக்கார்"

"போர்வாள் மொட்டைப் போட்ட ரஜினி படத்தை மட்டும் பார்த்தே விசில் அடிச்சு வாய் வலிச்சுப் போய் கச்சேரி கிரவுண்ட்ல்ல உக்காந்து இருக்கார்.. அவரும் வர மாட்டார்..."

"விவசாயி... ஆகா.. ஆகா.. அவர் வருவார்.. ஆனா வர மாட்டார்.. வந்தாலும் எதுவும் செய்ய மாட்டார்.. செஞ்சாலும் சொல்ல மாட்டார்.. சொன்னாலும் உனக்குப் புரியாது... ஏன்னா அவர் இப்போ லீவுல்ல... ஹாங்காக் போய் ஹாலிடேவை ஜாலி டேவாக் கொண்டாடிகிட்டு இருக்கார்..."

பிலாஸ்டரை பிச்சுகிட்டு பிளிறினார் தல...

"ஆய்யோகோ என்னடா கொடுமை இது.. ஒரு எட்டு பத்து மாசமா உங்களுக்காக எல்லாம் பக்கம் பக்கமா பிளாக் போட்டு.. கண்டபடி படமெல்லாம் புடிச்சு.. காடு மேடுன்னு பாக்காம... எந்தப் பாஷயா இருந்தாலும் புரிஞ்சமாதிரியே நடிச்சு.... உங்களுக்காக... உங்க நலம் மட்டுமே என் நலன்... என வாழ்ந்த வாழும் உங்கள் நண்பன்.. உங்கள் அன்பன் உங்க தல கைப்புள்ளய இப்படி பாடா படுத்துறாங்களே என்னிய காப்பாத்த ஆஆஆருமே இல்லயா.......... நான் இப்படியே நோபடியாக நொந்துத் தான் போகணுமாஆஆஆஆஆ...."

"ஏஏஏய் என்ன மேன் ஓவராப் பேசுற?"

கைப்பு டக்குன்னு ஆப் ஆகிறார்.

"என்னது இவங்களுக்காக உழைச்சியா... போன வருசம் இவிங்களுக்குப் புது வருசத்துக்கு என்ன வாங்கிக் கொடுத்த?"

"குச்சி முட்டாயும் குருவி உருண்டையும்" மெல்ல முணுமுணுக்கிறார்.

"ஆமாங்க.. அதுல்ல கூட ஆப்பிரிக்கால்ல இருக்க அவரு கேர்ள் பிரண்டுக்கும் அந்தப் பொண்ணு அம்மாவுக்கும் கொடுக்கணுமின்னு சென்டிமென்டாப் பேசி எனக்குக் கொடுத்ததைத் திருப்பி வாங்கிட்டார்ங்க"பாண்டி கோபத்தில் கொதிக்க..

"அது மட்டுமா... விவசாயிக்குப் போன புது வருசத்துக்கு கொடுத்த நாலு கடலையையும் கெஞ்சிக் கதறி திருப்பி வாங்கியாட்டியாமே.. போர்வாள்க்கு கொடுத்த தேன் மிட்டாயை கூட அவர் அசந்த நேரம் அடிச்சிட்டுப் போய் பாண்டி பிகருக்குக் கொடுத்து சைட்ல்ல டிராக் ஓட்டியிருக்கே நீ.. உன்னியப் பத்தி ஊருக்குள்ளே... ஊருக்கு வெளியே எல்லாம் விசாரிச்சிட்டுத் தான் வந்துருக்கேன் "
புது ஆள் தன் லேப் டாப்ல்ல இருந்து புள்ளி விவரஙக்ளை எடுத்துச் சொல்ல.. கைப்பு மெல்ல அம்ம்ம்மா சவுண்ட் கொடுக்குறார்.

"ஒரு குரூப்ப்பாத் தான் கிளம்பியிருக்கான்வ போல... இனி குனிய வச்சு கும்மி அடிச்சு குத்த வச்சு குல தெயவத்துக்கு நம்மளைப் பொங்கிப் போட்டுட்டுத் தான் விடுவாயங்கப் போலிருக்கே"

"அது போன வருசமின்னு சொல்லி நீ தப்பிக்க நினைப்பே... அதுனாலக் கேக்குறேன் இந்த வருசம்.. இந்தப் புள்ளங்களுக்கு என்னத் தர்ற போறதா உன் திட்டம்"

"அது வந்து கேப்பக் கஞ்சியும் குழாபுட்டும்.." கைப்பு சொல்லி முடிக்கவும்...

"கைப்பு இந்த பச்சிளம் பாலகன் பாண்டி முகத்தைப் பார்... பீர் விட்டு கழுவி அழகு பாக்க வேண்டிய மொகத்துக்கு குழாபுட்டுன்னு குண்டு போடுறீயே.. அவ மனசு என்ன பாடு படும்..

இங்கிட்டு பார்.. ரம்மியமா இருக்க இந்த ராயல் முகத்தைப் பார்... ரம் கொடுத்து கம் சொல்ல வேண்டிய இந்த புள்ளக்கு கேப்பக் கஞ்சியா.. என்ன கொடுமை இது சரவணா..."

"பச்சிளம் பாலகனா.. பாண்டியா.. ரம்மியமான புள்ள ராயலா.. விட்டா தவழும் தம்பி தளபதி.. மழலை மொட்டு போர்வாள்.. தத்தும் மழலை விவசாயி..ன்னு வில்லங்கமாவே எபெக்ட் கொடுத்தேப் பேசுறானே அய்யோ நான் என்னப் பண்ணுவேன்.. இருக்க ஒரு ட்ரை சைக்கிளுக்கும் லாக் போட்டுட்டு போயிருவான் போலிருக்கே.... பரிதாபமாக கைப்பு கதற...

பதிலுக்கு சங்கத்தினர் கோபப் பார்வை பொங்க அனலாய் சவுண்டை அள்ளிவிட...
என்ன இம்புட்டு சவுண்டு'ன்னு கைப்பு மிரள...

"லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலமா இங்கே நடக்குறது மொத்தத்ததையும் லைவ் ரிலேவா பிசாபர்கர் டெலிவிசன் உலகம் முழுக்க காட்டிட்டு இருக்கு கைப்பு"
அதுக்காக நம்ம உதய் வேற டால்பி டிஜிட்டல் சவுண்ட் ஏற்பாடு பண்ணி கொடுத்த விசயம் தனிக் கதை...

"ஏன்டா எடுபட்ட பயலுவேளா வித் அவுட்ல்ல என்னிய வீடியோ எடுத்து ஓலகம் முழுக்கவாடா காட்டுறீங்க விளங்குமாடா? ஓனக்கு நான் என்னடா துரோகம் பண்ணேன்.. நான் பாட்டுக்கு ஒரு ரூட் போட்டு அதுல்ல குதூகாலமாத் தானேப் போயிகிட்டு இருந்தேன் இப்படி வீதிக்கு இழுத்து விட்டு என் கதைக்கு இன்டர்வெல் விடுறியே நீ யார் ராசா.....நீ யார் அய்யா... சொல்லிருப்பு.. முடியல்ல மூக்கு முட்டுது.. கண்ணு கட்டுது...

பயங்கர சிரிப்பு.. பின்னால் லைட்டைப் பாண்டி ஆப் பண்ணி ஆன் பண்ணி எபெக்ட் கொடுக்க..

விஸ்க் விஸ்க்ன்னு உதய் வால்யூம் ஏத்தி பில் டப்பு கொடுக்க...

"நேனேரா... உர்ரேஏஏஏஏஎ ஸ்டீவ் வாக்கு... இப்புடு தெலுசா... ஸ்வைங் இன் த ரெயின் பாட்டுலு பாடிலு நா லைப்ப்ல்லு கில்லி ப்ளே ச்சேசுன்ன வாடு நீயே ரா.... உன்னியே ரேப் சூடுதானுவுறா...

"ரேப்பா அது வேறய்யா.. அய்யா வேணாம்.. ஆம்பளை ஆம்பளைய டிச் பண்ணலாம் கண்டபடி டச் பண்ண்பிடாது தப்பு" கைப்பு அழ ஆரம்பிக்க..

"ச்சீ நாஸ்ட்டி பெல்லோ.. ரேப்ன்னா தெலுங்குல்ல நாளைக்குன்னு அர்த்தம்.. உன்ன நாளைக்குப் பார்த்துக்குறேன்னு சொன்னேன் மேன்.."

இப்போதைக்கு என் பேரை மட்டும் சொல்லுறேன் வாயைப் பொளக்காமக் கேளூ


பா....லா.....PUNCH பாலா.... என் ட்ரெஸ்க்கு நான் போட மாட்டேன் உஜாலா....

அவனாஆஆ நீயி...... கைப்பு அலற.... சங்கத்தில் கரண்ட் கட் ஆகிறது..!


அப்படியே எல்லோர் பார்வையும் வெட்டிப்பயல் இருக்கும் பக்கம் திரும்புகிறது..

பின்னே டைட்டில் சங்கம் நட்சத்திர இரவுன்னு வச்சாச்சு.. அதுக்கு காரணம் வேண்டாமா..

அதான் சங்கம்... பாலாஜி...(இந்த வார ஸ்டார்) இரவுன்னு முடிச்சாசு...

3 comments:

Anonymous said...

Test

Anonymous said...

ஆமா இதென்னக் கலாட்டா.. கைப்புங்கற இரும்பு இருக்க இடத்துல்ல இவருக்கென்ன வேலை...
சங்கம் கொஞ்சம் நாளாப் பூட்டிக்கிடந்ததுக்கு இவர் தான் காரணமா?

ILA (a) இளா said...

வாங்க அனானி. சங்கம் பூட்டிக்கிடந்ததுக்கு காரணம் வெளிநாட்டு சதியே. அதாங்க பிலாகர். அவருதான் சதி செஞ்சுபுட்டாருங்க