Friday, September 29, 2006

வ. வா. ஆட்டோகிராப்!!!

இது ஒரு வருத்தப்படாத வாலிபனின் வாழ்வில் நடந்த பல துன்பியல் சம்பவங்களின் தொகுப்பு.

சேரனோட ஆட்டோகிராப் பாத்ததுல இருந்து நமக்கும் அந்த மாதிரி நம்ம ஆட்டோகிராஃப மக்கள்ட கொண்டு போய் சேக்கனும்னு ஒரு ஆர்வம். ஆனா அப்ப அதுக்கு வழியில்லாம போச்சு. (நம்ம ஆட்டோகிராஃப்ல கோபிகா, ஸ்னேகா எல்லாம் எதிர்பாக்க கூடாது. ஆமாம் சொல்லிட்டேன்... அதுல வர ஒரு பொண்ணு 75 வயசான எங்க அப்பத்தாதான் ;) )

நான் ஏன் நாத்திகனானேன், நான் ஏன் மதம் மாறினேன் மாதிரி தலைப்பை பார்த்தவுடன், அது தூங்கிகிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடுச்சு. முதல்ல தோனது "நான் ஏன் இஞ்சினியர் ஆனேன்?". ஆனா இத எங்க அப்பா பாத்தாருனா "ஏன்டா நாயே!!! நான் பணம் கட்டனேன் நீ இஞ்சினியர் ஆயிட்ட. இத பத்தி பெருமையா தொடர் வேற எழுதறயா?"னு பாஸ்டனுக்கு பஸ் பிடிச்சு வந்து அடிப்பாருனு அந்த தலைப்பை விட்டுட்டு "வருத்தப்படாத வாலிபனின் ஆட்டோகிராப்"னு எழுத ஆரம்பிச்சிட்டேன்...

சரி கதைக்கு போவோம்... சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னால்....

கள்ளக்குறிச்சில காட்டுத்தனமா படிச்சி எல்லா பரிட்சையிலும் 35 மார்க் மேல எடுத்து க்ளாஸ்லயே பெரிய ரேங் எடுத்து சிங்கம் மாதிரி சுத்திக்கிட்டு இருந்த என்னயத்தூக்கி கடலூர்ல ஹாஸ்டல்ல அடச்சி வெக்க எங்க அப்பா முடிவு பண்ணாரு.

எங்க அப்பத்தா அதெல்லாம் வேணாம்னு சொன்னப்ப எங்க அப்பா கேக்கல. கடலூர்ல அந்த ஸ்கூல்தான் பசங்களுக்கு ஒழுக்கமா வளர சொல்லி கொடுப்பாங்க. இவன் இங்க இருந்தானா பம்பரம், கோலி, கில்லினு விளையாடிகிட்டே உருப்புடாம போயிடுவான்னு எங்க அப்பா ஒரே முடிவுல இருந்தாரு.

சரின்னு அந்த ஸ்கூல்ல சேரதுக்கு எண்ட்ரஸ் பரிட்சை வெச்சாங்க. எப்பவும் பரிட்சைனா கில்லி மாதிரி பட்டைய கெளப்பிடுவேன். கடைசி மார்க்கா இருந்தாலும் வாத்தியார்ட சண்டை போட்டு, கெஞ்சி கூத்தாடி பாஸ் மார்க் வாங்கிடுவேன். ஆனா இந்த முறை நான் வாங்குன மார்க்கு எனக்கே ஆச்சரியமாயிடுச்சு. ஆனா எங்க அப்பா கொஞ்சம் ஃபீலிங்க இருந்தாரு. நம்ம புத்திசாலியா இருக்கறது அவருக்கு பொறாமையா இருக்குனு நானும் விட்டுட்டேன்.

பள்ளிகூடத்துல சேர்ந்து முதல் நாள் போகும் போது தான் தெரிஞ்சிது என்ன மறுபடியும் ஆறாம் க்ளாஸ்ல சேத்துருக்காங்கனு. ஏற்கனவே நான் எங்க ஊர்ல ஆறாவது ஒரு தடவ படிச்சு பாஸாயிட்டேன். இருந்தாலும் நம்மல சதி பண்ணி ஃபெயில் பண்ணிட்டாங்கனு அப்பதான் புரிஞ்சிது.

க்ளாஸ்ல முதல்ல நுழைஞ்சவுடனே எங்கப்பத்தா சொன்னது நியாபகம் வந்துச்சு. "கண்ணு முன்னாடி பென்ச்ல உக்காந்து படம் பாத்தா கண்ணு கெட்டுடும். அதனால எப்பவுமே கடைசிலதான் உக்காந்து பாக்கனும்". சரினு கடைசி பென்ச்ல போயி உக்காந்துகிட்டேன்.

முதல் ஒரு வாரம் வாத்தியார் கேட்ட கேள்விக்கெல்லாம் ஃபர்ஸ்ட் பதில் சொன்னேன். வாத்தியாருக்கோ கள்ளக்குறிச்சில இருந்து வந்து கடைசி பெஞ்ச்ல உக்காந்தாலும் பையன் பயங்கர புத்திசாலினு ஒரு நம்பிக்கை வந்துச்சு.

ஒரு நாள் அவர்கிட்ட அடுத்த பாடத்தல இருந்து கேள்வி கேட்டேன்... அவருக்கா "நம்ம சொல்லி கொடுக்காதெதெல்லாம் தெரிஞ்சிவெச்சிருக்கான்... இவன் ரொம்ப புத்திசாலி"னு நெனச்சிகிட்டு "தம்பி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்"னு கேட்டாரு. நான் "போன வருஷமே படிச்சிட்டேன் சார்"னு அப்பாவியா சொன்னேன். அப்பதான் நம்ம வண்டவாளம் தண்டவாளாம் ஏறிடுச்சு.

(தொடரும்...)

27 comments:

இராம்/Raam said...

//க்ளாஸ்ல முதல்ல நுழைஞ்சவுடனே எங்கப்பத்தா சொன்னது நியாபகம் வந்துச்சு. "கண்ணு முன்னாடி பென்ச்ல உக்காந்து படம் பாத்தா கண்ணு கெட்டுடும். அதனால எப்பவுமே கடைசிலதான் உக்காந்து பாக்கனும்". சரினு கடைசி பென்ச்ல போயி உக்காந்துகிட்டேன்.//

ஆகா நம்ம மாப்ளே பெஞ்சு...

நாமக்கல் சிபி said...

//ஆகா நம்ம மாப்ளே பெஞ்சு... //
ராம்,
அதேதான்... ஆனா அப்ப விவரம் தெரியாமலே போய் உக்காந்துகிட்டேன் ;)

கப்பி | Kappi said...

//ஒரு நாள் அவர்கிட்ட அடுத்த பாடத்தல இருந்து கேள்வி கேட்டேன்... அவருக்கா "நம்ம சொல்லி கொடுக்காதெதெல்லாம் தெரிஞ்சிவெச்சிருக்கான்... இவன் ரொம்ப புத்திசாலி"னு நெனச்சிகிட்டு "தம்பி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்"னு கேட்டாரு. நான் "போன வருஷமே படிச்சிட்டேன் சார்"னு அப்பாவியா சொன்னேன். அப்பதான் நம்ம வண்டவாளம் தண்டவாளாம் ஏறிடுச்சு.
//

ஆறாங்கிளாசை ரெண்டு தடவை படிக்க விட்டுட்டாங்களேன்னு பீல் பண்ணாத வெட்டி...

நீயாவது ரெண்டு வருஷம் தான் படிச்ச...அந்த வாத்தியார் வருஷாவருஷம் அதையே தான் படிச்சுட்டு இருக்காரு :)))

நாமக்கல் சிபி said...

நிர்மல்,
மிக்க நன்றி!!!

கப்பி,
//ஆறாங்கிளாசை ரெண்டு தடவை படிக்க விட்டுட்டாங்களேன்னு பீல் பண்ணாத வெட்டி...//
நம்ம எல்லாம் ஃபீல் பண்ற ஃபேமிலியா???

எங்க தல... ஒன்னாங்கிளாஸே 4 வருஷம் படிச்சுது...

இதெல்லாம் எங்களுக்கு சாதாரணமப்பா :-)

கதிர் said...

ஊர் மானத்த காப்பாத்துப்பா வெட்டி!

G.Ragavan said...

கடைசி பெஞ்சா..........ஐயோ..பயங்கர டேஞ்சர் பெஞ்சு...எல்லா வாத்தியாரும் அது மேல ஒரு கண்ணா இருப்பாங்க. மொத பெஞ்சுதான் சேப்டி. யாரும் கண்டுக்க மாட்டாங்க.

ஆனாலும் இப்பிடி ரெண்டு வாட்டி ஆறாப்பு படிக்க வெச்சிருக்கக் கூடாது. ஒங்க வீட்டுக்குப் போன் போட்டு ஞாயம் கேட்டுருவோம்.

ரிஷி (கடைசி பக்கம்) said...

ஹாய்!

உங்கள் எழுத்து நடை மிக நன்றாக உள்ளது.

பட்டைய கெளப்புறீங்க!

ம்ம்ம்ம்

:-))

Boston Bala said...

:)))

நாமக்கல் சிபி said...

//தம்பி said...
ஊர் மானத்த காப்பாத்துப்பா வெட்டி!
//
தம்பி,
நம்ம ஊர் மானத்த எப்படி காப்பாத்தனன்னு போக போக பாரு ;)

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...
கடைசி பெஞ்சா..........ஐயோ..பயங்கர டேஞ்சர் பெஞ்சு...எல்லா வாத்தியாரும் அது மேல ஒரு கண்ணா இருப்பாங்க. மொத பெஞ்சுதான் சேப்டி. யாரும் கண்டுக்க மாட்டாங்க.
//
இதை பற்றி அடுத்த பாகத்தில் வரும்... நான் போட்ட சபதமும் அதில் வரும் ;)

//
ஆனாலும் இப்பிடி ரெண்டு வாட்டி ஆறாப்பு படிக்க வெச்சிருக்கக் கூடாது. ஒங்க வீட்டுக்குப் போன் போட்டு ஞாயம் கேட்டுருவோம்.
//
வீட்டு நம்பர் அனுப்பி வெக்கறன் போன் பண்ணி கேளுங்க... ஒரு திறமைசாலிய அதிக வருஷம் பள்ளி கூடத்துல வெச்சிக்கனும்னு நடந்த உள்நாட்டு சதி ;)

நாமக்கல் சிபி said...

//கடைசி பக்கம் said...
ஹாய்!

உங்கள் எழுத்து நடை மிக நன்றாக உள்ளது.

பட்டைய கெளப்புறீங்க!

ம்ம்ம்ம்

:-))
//
மிக்க நன்றிங்க...

எல்லாம் உங்கள மாதிரி ஆளுங்க கொடுக்கற நம்பிக்கைதான் ;)

கைப்புள்ள said...

//ஒரு நாள் அவர்கிட்ட அடுத்த பாடத்தல இருந்து கேள்வி கேட்டேன்... அவருக்கா "நம்ம சொல்லி கொடுக்காதெதெல்லாம் தெரிஞ்சிவெச்சிருக்கான்... இவன் ரொம்ப புத்திசாலி"னு நெனச்சிகிட்டு "தம்பி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்"னு கேட்டாரு. நான் "போன வருஷமே படிச்சிட்டேன் சார்"னு அப்பாவியா சொன்னேன். அப்பதான் நம்ம வண்டவாளம் தண்டவாளாம் ஏறிடுச்சு.//

வெட்டி,
இப்படி தான் ஒவ்வொருத்தரும் அஸ்திவாரம் ஷ்ட்ராங்கா போட்டு படிக்கோணும். குட் பாய். வரப் போற சந்ததிகளுக்கு நம்ம ஆட்டோகிராஃப் ஒரு பாடமா இருக்கட்டும். இதப் பாத்தாவது அதுக பொழச்சிக்கிடட்டும்.

Unknown said...

ஏலேய் சிவா.. உங்க ஐ.நா சபையிலே சொல்லி நம்ம வெட்டியின் இந்த வீர வரலாற்றை அகில உலக வாலிபர்களும் படிச்சுத் தெரிஞ்சு தெளிவாகும் வண்ணம் உலகப் பாடத்திட்டத்திலே சேக்கச் சொல்லு.. உடனே செய்யனோம்.. இல்லன்னா பர்கூர் முதல் பாஸ்டன் வரை அனைத்து பாஸ்ட் புட் கடைகளிலும் போராட்டம் வெடிக்கும்ன்னு சொல்லு..

வெட்டி உன் கதையைப் படிச்சு கண்கல்ங்கி கதறிட்டேன் ராசா.. எம்புட்டு கஸ்ட்டப்பட்டு இருக்க நீயு..
உங்க அப்பத்தாவுக்கும் உனக்கும் இருந்த அந்தப் பாசப்பிணைப்பு படிச்சுக் கிராஸ் அரிச்சிப் போயிட்டேன்ப்பா

கன்டினியூ பண்ணுப்பா

மனதின் ஓசை said...

//ஆனா எங்க அப்பா கொஞ்சம் ஃபீலிங்க இருந்தாரு. நம்ம புத்திசாலியா இருக்கறது அவருக்கு பொறாமையா இருக்குனு நானும் விட்டுட்டேன்.
//
:-)

ம்ம்.. தொடரா.. நடத்து ராசா.நடத்து

ஆமா, .. நம்ம ஊர் ஆளாப்பா நீ? கள்ளகுறிச்சியில எந்த பள்ளிகூடத்துல படிச்ச?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<-----நீயாவது ரெண்டு வருஷம் தான் படிச்ச...அந்த வாத்தியார் வருஷாவருஷம் அதையே தான் படிச்சுட்டு இருக்காரு :)))---->

----))))))))

Santhosh said...

//"கண்ணு முன்னாடி பென்ச்ல உக்காந்து படம் பாத்தா கண்ணு கெட்டுடும். அதனால எப்பவுமே கடைசிலதான் உக்காந்து பாக்கனும்". //
ஆகா வெட்டி நீயும் நம்மாளு தானா? இதையே தான் எங்க பாட்டியும் பள்ளிகூடத்துக்கு போகும் பொழுது சொல்லி அனுப்பிச்சி(அவங்க படிக்கவும் சொன்னாங்க நாங்க செய்யலை இல்ல.)

வடுவூர் குமார் said...

"அப்பாத்த ஃபீலிங்"-உங்க மார்க்கை பார்த்தா?
எங்கப்பாவுக்கு ஃபீலிங் வந்தா??
வேண்டாம் விடுங்க, அது வேற கதை!!

ஜொள்ளுப்பாண்டி said...

வாங்க வெட்டி :))) நீங்களும் நம்மளை மாதிரியே மாப்பிளை பெஞ்சுதானா :)))) அப்போ நம்ம சங்கத்து ஆளுக எல்லாம் கடைசி பெஞ்சுதானா? மாப்பிளைகளா சொல்லுங்க மக்கா !!

ஒரு க்ளாஸ்ல கடைசி பெஞ்சு இருக்கலாம்
ஆனா கடைசி பெஞ்சே க்ளாசா இருந்ந்துசுன்னா??

வெட்டி சும்ம பூந்து வெளையாடுறீங்க., கெளப்புங்கண்ணா:)))

நாமக்கல் சிபி said...

//வெட்டி,
இப்படி தான் ஒவ்வொருத்தரும் அஸ்திவாரம் ஷ்ட்ராங்கா போட்டு படிக்கோணும். குட் பாய். வரப் போற சந்ததிகளுக்கு நம்ம ஆட்டோகிராஃப் ஒரு பாடமா இருக்கட்டும். இதப் பாத்தாவது அதுக பொழச்சிக்கிடட்டும். //

தல அப்படியே இந்த பாடத்த ஆறாங்கிளாஸ் தமிழ்புக்ல சேர்க்க சொல்லிடு!!! நம்மல மாதிரி ஏமாற தேவையில்ல இல்ல ;)

நாமக்கல் சிபி said...

dev said...
//வெட்டி உன் கதையைப் படிச்சு கண்கல்ங்கி கதறிட்டேன் ராசா.. எம்புட்டு கஸ்ட்டப்பட்டு இருக்க நீயு..
உங்க அப்பத்தாவுக்கும் உனக்கும் இருந்த அந்தப் பாசப்பிணைப்பு படிச்சுக் கிராஸ் அரிச்சிப் போயிட்டேன்ப்பா

கன்டினியூ பண்ணுப்பா //
இந்த மேட்டர் எங்க அப்பாவுக்கு புரியலையே!!!

இன்னும் இருக்கு ;)

நாமக்கல் சிபி said...

//மனதின் ஓசை said...
//ஆனா எங்க அப்பா கொஞ்சம் ஃபீலிங்க இருந்தாரு. நம்ம புத்திசாலியா இருக்கறது அவருக்கு பொறாமையா இருக்குனு நானும் விட்டுட்டேன்.
//
:-)

ம்ம்.. தொடரா.. நடத்து ராசா.நடத்து

ஆமா, .. நம்ம ஊர் ஆளாப்பா நீ? கள்ளகுறிச்சியில எந்த பள்ளிகூடத்துல படிச்ச?
//
ஆமாம்... நான் பாரதி ஸ்கூலு... நீங்களும் கள்ளக்குறிச்சியா???

ஆஹா... இந்த விசயத்த எல்லாம் ஊருல சொல்லிடாதீங்க அப்பு!!! அப்பறம் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும் ;)

நாமக்கல் சிபி said...

//சந்தோஷ் said...
//"கண்ணு முன்னாடி பென்ச்ல உக்காந்து படம் பாத்தா கண்ணு கெட்டுடும். அதனால எப்பவுமே கடைசிலதான் உக்காந்து பாக்கனும்". //
ஆகா வெட்டி நீயும் நம்மாளு தானா? இதையே தான் எங்க பாட்டியும் பள்ளிகூடத்துக்கு போகும் பொழுது சொல்லி அனுப்பிச்சி(அவங்க படிக்கவும் சொன்னாங்க நாங்க செய்யலை இல்ல.)
//
ஆஹா... பாட்டிங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கப்பா... என்ன எங்க பாட்டி எப்பவும் பெரிய ரேங்தான் எடுக்க சொல்லும் நானும் எப்பவும் பெரிய ரேங் எடுத்துடுவேன்... அவ்வளவுதான் ;-)

நாமக்கல் சிபி said...

//ஜொள்ளுப்பாண்டி said...
வாங்க வெட்டி :))) நீங்களும் நம்மளை மாதிரியே மாப்பிளை பெஞ்சுதானா :)))) அப்போ நம்ம சங்கத்து ஆளுக எல்லாம் கடைசி பெஞ்சுதானா? மாப்பிளைகளா சொல்லுங்க மக்கா !!

ஒரு க்ளாஸ்ல கடைசி பெஞ்சு இருக்கலாம்
ஆனா கடைசி பெஞ்சே க்ளாசா இருந்ந்துசுன்னா??
//
சங்கத்து பேஸிக் குவாலிபிகேஷனே அதுதானே!!!

//வெட்டி சும்ம பூந்து வெளையாடுறீங்க., கெளப்புங்கண்ணா:)))
//
ஜொள்ளுத்தம்பி இன்னொரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டேன்... இந்த மாதிரி நமக்கு எதிரா நடந்த பல அநீதில முக்கியமானதே இதுதான்...

நம்மல கோ-எட்ல இருந்து பசங்க மட்டும் படிக்கிற பள்ளிகூடத்துல சேத்தது இந்த சமயத்துலதான் :-(

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு வெட்டி!
தொடரா.. தொடர்ந்து கலக்குங்க!!
அனேகமா இது நம்ப ஊர்ல எல்லா பசங்களுக்கும் நடக்குற கொடுமைனு நினைக்கிறேன்.. சரியா விவரம் தெரிய ஆரம்பிக்கும் ஆறாங்கிளாஸ்ல ஏதாவது பசங்க மட்டும் படிக்கிற இஸ்கூல்ல சேர்த்து விட்டுறாங்க!! கடைசியில காலேஜ் முடியிற வரைக்கும் பசங்க கூடவே சுத்தி நம்ம வாழ்க்கை முடிந்சிடுது!!

-விநய்*

நாமக்கல் சிபி said...

விநய்,
மிக்க நன்றி!!!

ஆமாம் அந்த கொடுமைய பத்தி அப்ப எனக்கு சரியா தெரியல...

இனிமே பசங்க மட்டும் படிக்கிற மாதிரி ஸ்கூலே இருக்க கூடாதுனு ரூல்ஸ் வரனும்...

பொன்ஸ்~~Poorna said...

வெட்டி,
இந்தத் தொடரை இப்போத் தான் படிச்சேன்.. சூப்பரா இருக்கு..

நான் கூட பெண்கள் பக்கத்தின் கடைசி பெஞ்ச் தான்.. டீச்சர் போர்டில் எழுதுறதை எல்லாம் கமெண்ட் அடிச்சி பக்கத்துல இருக்கிறவங்களைக் சிரிக்க வச்சி நான் மட்டும் கமுக்கமா இருந்திடுவேன்.. நல்லா ஜாலியா இருக்கும். அப்படியும் காலேஜ் வந்து ஒரு நாள் நல்லா மாட்டினேன், கமெண்ட் பாஸ் பண்ணும்போதே பிடிச்சிட்டாங்க!

அப்புறத்திலேர்ந்து ரெண்டாவது பெஞ்சு, அங்க மட்டும் சுருட்டி வச்சி உட்கார சின்ன வாலா இருந்திச்சு! :))

நாமக்கல் சிபி said...

//வெட்டி,
இந்தத் தொடரை இப்போத் தான் படிச்சேன்.. சூப்பரா இருக்கு..
//
பொன்ஸக்கா, மிக்க நன்றி

//
நான் கூட பெண்கள் பக்கத்தின் கடைசி பெஞ்ச் தான்.. டீச்சர் போர்டில் எழுதுறதை எல்லாம் கமெண்ட் அடிச்சி பக்கத்துல இருக்கிறவங்களைக் சிரிக்க வச்சி நான் மட்டும் கமுக்கமா இருந்திடுவேன்.. நல்லா ஜாலியா இருக்கும். அப்படியும் காலேஜ் வந்து ஒரு நாள் நல்லா மாட்டினேன், கமெண்ட் பாஸ் பண்ணும்போதே பிடிச்சிட்டாங்க!

அப்புறத்திலேர்ந்து ரெண்டாவது பெஞ்சு, அங்க மட்டும் சுருட்டி வச்சி உட்கார சின்ன வாலா இருந்திச்சு! :))//
அதே அதே!!!
என்னுமோ பெஞ்ச மாத்தனா நாம மாறிடுவோம்னு நினைக்கிறாங்க பாருங்க...
அவுங்கள சொல்லி என்ன பண்ண ;)