Tuesday, September 5, 2006

ச்சிரிப்பு வருது...ச்சிரிப்பு வருது...

சர்தார்ஜி ஜோக்குகளைப் பத்தி நம்மள்ல பலரும் கேள்வி பட்டிருப்போம். சர்தார்ஜிகளோட "அறிவுத் திறமையைப்" பாராட்டி நெறைய ஜோக்குங்க இண்டர்நெட்லயும், மின்னஞ்சல்ல பார்வர்டுகளாவும் நாம படிச்சிருப்போம். அப்படி பட்ட சில சர்தார்ஜி ஜோக்குகள் உங்கள் பார்வைக்கு...

சந்தா சிங் என்கிற சர்தார்ஜி. தன் வாழ்க்கையில முதல் முறையா விமானத்துல ஏறுறாரு. விமானத்துல ஏறுனதும் விமானப் பணிப்பெண் சொல்றாங்க இந்த விமானம் ஒரு போயிங் விமானம்னு. முதல்முறையா விமானத்தைப் பாத்த சந்தோஷத்துல சந்தாசிங் "போயிங்! போயிங்! போயிங்!"னு கத்தி குதிச்சு ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிக்கிறாரு. இவுரு கத்துற கத்து விமானம் ஓட்டிட்டு இருக்குற பைலட் காது வரைக்கும் போயிடுது. அவரு கோவமா வெளியே வந்து "பீ சைலண்ட்" அப்படிங்குறாரு. ஒடனே சர்தார்ஜி கத்துறாரு "ஓயிங்! ஓயிங்! ஓயிங்!"

ஒரு சர்தார்ஜி ஒரு நாளேடு ஆசிரியரா வேலை செஞ்சிட்டு இருக்காரு. ஒரு முறை, ரயில்வே துறையில் என்னென்ன மேம்பாடுகள் செய்யலாம்ங்கிற தலைப்புல ஆலோசனைகள் சொல்றதுக்காக, ரயில்ல மும்பை போயிட்டிருக்காரு. அவரோட பெட்டி ரயில்வண்டியின் கடைசிப் பெட்டி. கடைசிப் பெட்டிங்கிறதுனால ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கு...அதோட தூக்கி தூக்கி போடுது. ரொம்ப கடுப்பாகிப் போன சர்தார்ஜி மும்பை போனதும் ரயில்வே துறையினருக்கு கொடுத்த ஒரே ஆலோசனை "எந்த ஒரு ரயில் வண்டியிலயும் கடைசி பெட்டியே இருக்கக் கூடாது"

சர்தார்ஜி ஒரு பார்ட்டிக்குப் போறாரு. அங்க அவரோட நண்பர் ஒருத்தர், நம்ம பார்த்திபன் மாதிரி போட்டு வாங்குற டைப்பு. "எல்லாரும் உங்களை முட்டாள்னு சொல்றாங்களே, நீங்க முட்டாளா இல்லையான்னு தெரிஞ்சிக்க ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு நீங்க சரியான பதில் சொல்லனும்" அப்படிங்கறாரு. சர்தார்ஜியும் "கேள்வி எல்லாம் எனக்கு தண்ணி பட்ட பாடு...கேளுப்பா" அப்படிங்கிறாரு. ஒடனே நம்ம பார்த்திப நண்பரும்"வெறும் வயித்துல ஒங்களால எத்தனை சப்பாத்தி சாப்புட முடியும்?"அப்படின்னு ஒரு கேள்வி கேக்கறாரு. சர்தார்ஜி சொல்றாரு "ஏழு"ன்னு. இதை கேட்ட அவரோட ஃபிரண்டு சொல்றாராம் "ஏம்ப்பா மொத சப்பாத்தியைச் சாப்புட்டதும் உங்க வயிறு எப்படி வெறும் வயிறா இருக்க முடியும்? வெறும் வயித்துல ஒங்களால எப்படிப்பா ஏழு சப்பாத்தி சாப்புட முடியும்?"னு கேள்வி கேட்டு கலாய்க்கிறாரு. பல்பு வாங்குனாலும், சர்தார்ஜி "சே! பாயிண்டா தாம்யா சொல்லிருக்கான். இது நமக்குத் தோணாமப் போச்சே?. பரவால்லை... நாமளும் இதே மாதிரி யாரையாச்சும் கேள்வி கேட்டு கலாய்க்கனும்"னு முடிவு பண்ணறாரு. வீட்டுக்குப் போன முதல் வேலையா சர்தார்ஜி அவர் மனைவி கிட்ட அதே கேள்வியைக் கேக்குறாரு "உன்னால வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்புட முடியும்?" அதுக்கு அந்தம்மா சொல்லுது "அஞ்சு". இதை கேட்ட சர்தார்ஜி "சே...ஜஸ்ட் மிஸ்ஸு! நீ மட்டும் ஏழுன்னு பதில் சொல்லிருந்தேன்னு வை உன்னை செமத்தியா கலாய்ச்சிருப்பேன்" அப்படின்னாராம்.

ஒரு சர்தார்ஜி ஓட்டலுக்கு சாப்புட போனாராம். சாப்புட்டு முடிச்சிட்டு கை கழுவுற எடத்துல கையைக் கழுவாம வாஷ் பேசினைக் கழுவ ஆரம்பிச்சிட்டாராம். ஓட்டல் முதலாளி ஓடி வந்து "சர்தார்ஜி! சர்தார்ஜி! எதுக்குங்க வாஷ் பேசினைக் கழுவிட்டு இருக்கீங்க" அப்படின்னு கேட்டாராம். அதுக்கு சர்தார்ஜி பதில் சொன்னாராம் "என்னை என்ன கேணைன்னு நெனச்சியா...நீ தானேய்யா இந்த எடத்துல "வாஷ் பேசின்"னு எழுதி போர்டு மாட்டி வச்சிருக்கே?" அப்படின்னாராம்.

ரெண்டு சர்தார்ஜிகள் ஒரு பரிசோதனைக் கூடத்து வாசல்ல உக்காந்திருக்காங்க. அதுல ஒரு சர்தார்ஜி அழுதுட்டு இருக்காராம். ரெண்டாவது சர்தார்ஜி அதப் பாத்து "ஏம்பா அழுவுறே" அப்படின்னாராம். அதுக்கு முதல் சர்தார்ஜி சொன்னாராம் "நான் பிள்ட் டெஸ்டுக்காக வந்தேன். ரத்தம் எடுக்கறதுக்காக விரல் நுனியை லேசாக் கீறுனாங்க. பயங்கரமா வலிக்குது அதான் அழுவுறேன்" அப்படின்னாராம். இதை கேட்ட ரெண்டாவது சர்தார்ஜி "ஓ"ன்னு சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிட்டாராம். முதலாமவரு கேக்கறாரு"நீ ஏம்பா இப்பிடி அழுவுறே?" அதுக்கு ரெண்டாவது சர்தார்ஜி "நீயாச்சும் பிளட் டெஸ்டுக்குத் தான் வந்தே...நான் யூரின் டெஸ்டுக்கு வந்துருக்கேன்பா"ன்னாராம்.

ஒரு சர்தார்ஜி உப்பு வித்துட்டு இருக்காரு. உப்பு வாங்க வந்த ஒருத்தரு "ஏங்க சர்தார்ஜி! ஆயிரக் கணக்குல உப்பு மூட்டை அடுக்கி வச்சிருக்கு. இத்தனையையும் நீங்க ஒரு மாசத்துல வித்துருவீங்களா?"அப்படின்னு ஒரு சந்தேகத்துல கேட்டாராம். அதுக்கு சர்தார்ஜி சொன்னாரம் "அட போப்பா! ஒரு மாசத்துல ரெண்டு மூட்டை தாம்பா விப்பேன். நான் ஒன்னும் அவ்வளவு நல்ல வியாபாரி இல்ல". இதுக்கு வந்தவரும் கொழப்பமாகி "அப்புறம் எதுக்குங்க இத்தனை மூட்டை குமிச்சி வச்சிருக்கீங்க"ன்னாராம். அதுக்கு சர்தார்ஜி சொன்னாராம் "என்னப்பா பண்றது? எனக்கு விக்கிறவன் ஒரு நல்ல வியாபாரியாச்சே?"

ரெண்டு சர்தார்ஜி மாணவர்கள் அமெரிக்க விண்வெளி வீரர்களைப் பத்திப் பேசிட்டு இருந்தாங்களாம். ஒருத்தரு சொன்னாராம்"என்னய்யா நெலாவுல எறங்குறது என்ன பெரிய விஷயமா...அமெரிக்கா காரன் பெருசா என்னத்த சாதிச்சிட்டான்? நாம சர்தார்ஜிக்கள். நாம நேரடியா சூரியன்ல போய் எறங்குவோம்"அப்படின்னாராம். அதுக்கு ரெண்டாவது சர்தார்ஜி சொன்னாராம்"சூரியன்லேருந்து 13மில்லியன் மைல் தொலைவுல இருக்கும் போதே நாம பொசுங்கிடுவோம்"அப்படின்னாராம். அதுக்கு மொதல் சர்தார்ஜி "இருந்துட்டு போவுது...அதுக்கென்ன? நாம ராத்திரில போவோம்"அப்படின்னாராம்.

குர்பசன் சிங் அப்படிங்கிற சர்தார்ஜி பல்கலைக்கழகத் தேர்வு எழுதிட்டு இருந்தாராம். கேள்விகள் எல்லாமே ஆம்/இல்லைன்னு பதில் சொல்ற ரகம். பரிட்சை கூடத்துல நம்மாளு போய் ஒக்காருறாரு, அஞ்சு நிமிஷம் கேள்வித் தாளைப் பாக்குறாரு. அதுக்கப்புறம் ஒரு வேகம் வந்தவரா, தன்னோட பேண்ட் பாக்கெட்லருந்து ஒரு காசு எடுத்து சுண்டி போட்டு தலை விழுந்துதுன்னா ஆம்ன்னு பூ விழுந்ததுன்னா இல்லைன்னும் பதில் எழுத ஆரம்பிக்கிறாரு. அரை மணி நேரத்துல இந்த மாதிரி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி முடிச்சிடறாரு. அதுக்கப்புறம் பாத்தா திடீர்னு டென்சன் ஆகிடறாரு. வேர்த்து விறுவிறுத்து போயிடறாரு. பரிட்சை ஹால்ல இருந்த வாத்தியாரு சர்தார்ஜி கிட்ட வந்து "என்னப்பா என்னாச்சு? ஏன் டென்சனா இருக்கே?"ன்னு கேட்டாராம். அதுக்கு சர்தார்ஜி சொல்றாராம்" சார்! நான் முதல் அரை மணி நேரத்துலயே பதில் எல்லாம் எழுதி முடிச்சிட்டேன்... ஆனா இப்ப எழுதுன பதில் எல்லாம் சரியான்னு அதே மாதிரி காசை சுண்டி போட்டு சரி பாத்துட்டு இருக்கேன்"

நாலு சர்தார்ஜிக்கள் ரயில்வே பிளாட்பாரத்துல "பஞ்சாப் மெயில்"ங்கிற வண்டிக்காகக் காத்துட்டிருகாங்க. அப்ப ரயில் காலதாமதமா ஓடிட்டு இருக்கு அது வர்ற இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்னு ஒரு அறிவிப்பு பண்ணறாங்க. அதான் இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே? வெளியிலே போய் எங்கேயாச்சும் சுத்திட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம்னு நாலு பேரும் கெளம்பி வெளியே போயிடறாங்க. அவங்க சுத்திட்டு திரும்பவும் ஸ்டேசனுக்கு வந்து பாத்தா பஞ்சாப் மெயில் வேகம் எடுத்து கெளம்பி போயிட்டு இருக்கு. நாலு பேருல ஒருத்தரு ஓடிப் போய் ஒரு பெட்டியில ஏறிக்கிறாரு. இன்னொருத்தரும் அதே மாதிரி தலை தெறிக்க ஓடி கடைசி பெட்டியில ஏறிக்கிறாரு. மத்த ரெண்டு பேரும் ஏற முடியாம நின்னுடறாங்க. குடுகுடுன்னு ஓடிப் போய் ஏறுன அந்த ரெண்டு பேரும் ரயில்வண்டிக்குள்ளேயே சந்திச்சிக்கிறாங்க. ஒருத்தரை ஒருத்தர் பாத்ததும் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிடறாங்க. அப்ப அங்க பக்கத்துல இருந்தவரு"ஏங்க என்னாச்சு? ஏன் இப்படி சிரிக்கிறீங்க"ன்னு கேட்டாராம். அதுக்கு ஒரு சர்தார்ஜி சொன்ன பதில்"வழியனுப்ப வந்த நாங்க ரெண்டு பேருமே ஏறிட்டோம்...பஞ்சாப் மெயில் ஏறி ஊருக்குப் போக வேண்டிய ரெண்டு பேரும் கீழேயே நிக்கிறானுங்க"


கல்லூரியின் பெண்கள் அறையை மேம்படுத்த ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன என்ற அறிவிப்பை, அறிவிப்பு பலகையில பாத்துட்டு சர்தார்ஜி பயங்கரமா யோசிச்சு கொடுத்த ஒரு ஆலோசனை"ஆண்களுக்கும் உள்ளே வர அனுமதி கொடுக்கலாம்"

சந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள். சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு. ஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது. இது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம். சந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு தொங்குதாம். அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல "நல்லா ஏமாந்தியா? ஹா ஹாஹ்ஹா"ன்னு எழுதி இருந்துச்சாம். இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் "நான் இங்கே வரவே இல்லியே!"

கடைசியா சமீபத்துல டிவியில பாத்த ஒரு காமெடி (witty answer). ஜானி லீவர்னு ஒரு இந்தி திரைப்பட நடிகர். செமத்தியான காமெடியன். முட்டைக் கண்ணை உருட்டி உருட்டி நடிக்கிறதும் பேசறதும் அவரு மிமிக்ரி பண்ணறதையும் பாத்தா பயங்கர காமெடியா இருக்கும். அவரோட "ஜானி ஆலா ரே"ங்கிற நிகழ்ச்சி ஒரு பிரபல இந்தி சேனல்ல வருது.


அந்த நிகழ்ச்சியில ஜானியை ஒரு பொண்ணு கேள்வி கேக்குது "ஏன் ஜானி சார்! உங்க காமெடியால பயங்கரமா மக்களை சிரிக்க வைக்கிறீங்க, உங்களைப் பாத்தாலே மக்கள் சந்தோஷமாயிடுறாங்க. நல்லா மிமிக்ரியும் பண்ணறீங்க. எப்படிங்க இப்பிடியெல்லாம்? எப்பிடி பண்ணறீங்க?" அதுக்கு முகத்தை அப்பாவியா வச்சிக்கிட்டு ஜானி சொன்ன பதில்"என்னம்மா பண்ணறது. எனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கு. ரெண்டு சின்ன குழந்தைங்க இருக்காங்க. அவுங்களுக்கு ரெண்டு வேளை கஞ்சி ஊத்தனும்னா(ரொட்டி) இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ணினா தான் உண்டு"

23 comments:

Unknown said...

ஒரு சர்தார்ஜி தற்கொலை பன்னிக்க தண்டவாளத்துல படுத்து கிடந்தார் அப்ப ப்ளாட்பாரத்தில இருந்த சர்தார்ஜி கும்பல் திடீர்னு தண்டவாளத்தில இறங்கி வந்த ரயில்ல அடிபட்டு செத்துப்போச்சி ஆனா தண்டவாளத்தில இருந்த சர்தார் ப்ளாட்பாரத்துக்கு தாவி பொழச்சிகிட்டார் காரணம்? ஒரே ஒரு அறிவிப்பு:
"பஞ்சாப் செல்லும் விரைவு வண்டி இப்போது 5ம் ப்ளாட்பாரத்தில் வந்துகொண்டிருக்கிறது "

கைப்புள்ள said...

//"பஞ்சாப் செல்லும் விரைவு வண்டி இப்போது 5ம் ப்ளாட்பாரத்தில் வந்துகொண்டிருக்கிறது "//

:))
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பல்லவ பேரரசே!

கதிர் said...

ஒரு ராஜா சர்தார்ஜி அந்த ஊர் சர்தார்ஜிக்கெல்லாம் பால் கறக்கற ஒரு போட்டி வச்சாராம் அதில பத்து சர்தார்ஜி கலந்துகிட்டாங்க. அதாவது எந்த சர்தார்ஜி அதிகமா பால் கறக்கறாரோ அவர்தான் வெற்றி பெற்றவர். போட்டி ஆரம்பமாச்சி எல்லா சர்தார்ஜியும் வேக வேகமா கறக்க ஆரம்பிச்சாங்க. போட்டி நேரம் முடிஞ்சதும் அவங்கவங்க எவ்ளோ கறந்தாங்கன்னு பார்வையிட்டாராம் ராஜா. ஒரு குடம் பால் சேகரித்த ஒரு சர்தார்ஜிய பாராட்டிட்டு அடுத்த ஆள பாத்தாரு அடுத்தவர் அதை விட அதிகமா கறந்துருக்கார் ஆச்சரியப்பட்டு போனார் ராஜா நம்ம மக்கள் நல்ல திறமையோடதான் இருக்காங்கன்னு. கடைசியா ஒருத்தன் மட்டும் ஒரு சின்ன சொம்புல கொஞ்சூண்டு வச்சிருந்தானாம். ஏம்பா கொஞ்சமா இருக்குன்னு கேட்டாராம். எல்லாருக்கும் பசுமாடு கொடுத்திங்க எனக்கு மட்டும் காளை மாடு கொடுத்திட்டிங்களே ராஜா அப்படின்னாராம்.

மஞ்சூர் ராசா said...

சில சிரிப்பு துணுக்குகளைப் படித்திருந்தாலும், மொத்தமாக தொகுத்து அளித்தது நன்றாக சிரிக்க வைத்தது.

நன்றி.

Unknown said...

நம்ம சர்தார்ஜி ஒரு வெண்ட்ரிகுலரிஸ்ட் ஷோவுக்கு போனார் அங்க அந்த ஆள் ஒரு பொம்மைய கைல வச்சிகிட்டு சர்தார்ஜி ஜோக் சொல்லி கிண்டல் அடிச்சாரு நம்ம சர்தார் எந்திரிச்சி

" எப்பவுமே ஏன் எங்களை கிண்டல் பன்னி முட்டாள் மாதிரி காட்டறே? உனக்கு யார் இந்த உரிமை குடுத்ததுன்னு சத்தம் போட்டார்"
நம்ம ஆசாமி.

ஷோ நடத்துரவர் ஒடனே

" மன்னிக்கனும் இனிமே இப்படி செய்யமாட்டேன் நீங்க கத்தாதீங்கன்னு சொன்னார்...

அதுக்கு சர்தார் சொன்னாரு...

." நீ வாய மூடு நான் ஒன் மடில இருக்குற ஆள்கிட்ட பேசிக்கிட்டிருக்கேன்னார் "

கைப்புள்ள said...

//எல்லாருக்கும் பசுமாடு கொடுத்திங்க எனக்கு மட்டும் காளை மாடு கொடுத்திட்டிங்களே ராஜா அப்படின்னாராம்.//

தம்பி! இது நெஜமாலே விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிற ஜோக். இங்கே பகிர்ந்து கொண்டதற்கு
நன்றி
:))))

கைப்புள்ள said...

//சில சிரிப்பு துணுக்குகளைப் படித்திருந்தாலும், மொத்தமாக தொகுத்து அளித்தது நன்றாக சிரிக்க வைத்தது.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மஞ்சூர் அவர்களே!

அழகான ராட்சசி said...

ரயிலில் ஒரு சர்தார்ஜி எறுரார்.அப்ப டி.டி.ஆர். வர்றாரு.
டி.டி.ஆர்.-டிக்கட் காட்டுங்க
சர்தார்ஜி;இதோ பாருங்க.
டி.டி.ஆர்-இது பழைய டிக்கட் கன்னு.
சர்தார்ஜி;ரயில் மட்டும் என்ன புதுசா.
டி.டி.ஆர்;?:??

கைப்புள்ள said...

//." நீ வாய மூடு நான் ஒன் மடில இருக்குற ஆள்கிட்ட பேசிக்கிட்டிருக்கேன்னார் " //

மகேந்திரரே! ஏதேது நெறைய சரக்கு வச்சிருபீங்க போல? நல்ல ஜோக்.
நன்றி.
:))

கைப்புள்ள said...

//டி.டி.ஆர்-இது பழைய டிக்கட் கன்னு.
சர்தார்ஜி;ரயில் மட்டும் என்ன புதுசா.
டி.டி.ஆர்;?:?? //

வாங்க அழகான ராட்சசி,
சங்கத்துப் பக்கம் முதல் முறையா வரீங்கன்னு நெனக்கிறேன். ஜோக்குக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்க

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

எல்லாம் எங்கோ படித்தது போல இருந்தாலும் படித்து சிரித்தேன். எல்லாரும் அவரவர் பங்குக்கு ஒரு ஜோக் சொல்லுவதால் நானும் ஒரு ஜோக்.

சர்தார்ஜீக்கள் எல்லாரும் சேர்ந்து அவர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டி ஒரு பெரிய திடலில் ஒரு அறிஞரை கூப்பிட்டு இருப்பதிலேயே புத்திசாலியான சர்தார்ஜீயை மேடைக்கு அனுப்பி வைத்தார்கள். அறிஞரும் ஆரம்பத்தில் கஷ்டமான கேள்விகள் வேண்டாம் என்று மிக சுலபமான கேள்விகளில் ஆரம்பிக்கிறார்.

3 x 3 எவ்வளவு என்று கேட்கிறார். தேர்தெடுக்கப் பட்ட சர்தார்ஜீயும் 8 என்று சொல்கிறார் உடனே எல்லா சர்தார்ஜீக்களும் இன்னொரு சான்ஸ் கொடுங்க இன்னொரு சான்ஸ் கொடுங்க என்று சத்தம் போட ஆரம்பிக்கிறார்கள்.

உடனே அறிஞரும் 3 x 2 என்ன என்று கேட்கிறார். தேர்தெடுக்கப் பட்ட சர்தார்ஜீயும் 7 என்று சொல்கிறார். உடனே எல்லா சர்தார்ஜீக்களும் இன்னொரு சான்ஸ் கொடுங்க இன்னொரு சான்ஸ் கொடுங்க என்று சத்தம் போட ஆரம்பிக்கிறார்கள்.

உடனே அறிஞரும் 2 x 2 என்ன என்று கேட்கிறார். தேர்தெடுக்கப் பட்ட சர்தார்ஜீயும் 4 என்று சொல்கிறார். அதற்கு உடனே எல்லா சர்தார்ஜீக்களும்


இன்னொரு சான்ஸ் கொடுங்க இன்னொரு சான்ஸ் கொடுங்க என்று சத்தம் போட ஆரம்பிக்கிறார்கள்.

Unknown said...

ஒரு சர்தார்ஜி 20 ரூபாய்க்கு லாட்டரி டிக்கட் வாங்கி 20 கோடி ஜெயிச்சார்... ஏஜன்ட் 9 கோடி வரி பிடிச்சது போக மீதம் 11 கோடி குடுத்தான் சர்தாருக்கு வந்ததே கோபம்

" ஒழுங்கா 20 கோடி பரிசு குடு இல்லைன்னா என்னோட 20 ரூபாய திருப்பிக் கொடு"

Unknown said...

ஒரு ஆணியை சுவற்றில் இருந்து பிடுங்க எத்தனை சர்தார்ஜி வேணும்?

விடை : 100 பேர் "ஏன்னா ஒருத்தர் ஆணியை பிடிக்க 99 பேர் சுவற்றை பின்னால் தள்ளுவாங்க"

SP.VR. SUBBIAH said...

சந்தா சிங் ஒரு முறை ரயிலில் நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டார்.

ஒவ்வொரு முறை ரயில் நிற்கும் போதும், மேல் பர்த்திலிருந்து கீழே குதித்துக் கீழ் பர்த்திற்கு அடியில் தான் வைத்திருக்கும் சாமான்களையெல்லாம் சரி பார்த்து விட்டு மீண்டும் மேல் பர்த்திற்குப் போய் விடுவார்.

இது ரயில் நிற்கும் ஒவ்வொரு முறையும் நடந்தது.

எரிச்சலடைந்த சக பயணி , "ஏனய்யா ரயில் நிற்கும் ஒவ்வொரு முறையும், எங்கள் தலை அதிரும்படியாக இப்படிக் குதிக்கிறாய்?" என்று கேட்க

அவர் உடனே பதிலுரைத்தார்

"என்னை என்ன கேனையன் என்று நினைத்தாயா? அந்தப் போர்டைப் பார்த்துவிட்டுப் பேசு" , என்று ஒரு அறிவிப்புப் பலகையைக் காட்டினார்

அதில் இப்படி எழுதியிருந்தது.

ஓடும் ரயிலில் இருந்து குதிக்காதீர்கள்!
( Do not jump from the running train)

வேந்தன் said...

பாண்டா சிங் பில் கேட்ஸ்க்கு லெட்டர் எழுதினார் இப்படி,
உங்க விண்டோஸ் சரியா வேலை செய்யலை.Find tool பயன்படுத்தி தொலைந்து போன என் வீட்டு சாவியை கண்டுபிடிக்க முடியவில்லை

Unknown said...

நம்ம சர்தார் யுனிவர்சிட்டி எக்ஸாம் எழுத போனார் எல்லாமே ஆம் /இல்லை மாதிரி பதில்கள் நம்மாள் என்ன பன்னாரு ஒரு காச எடுத்து சுண்டிப் போட்டு பூவா தலையா பாத்தார் பூவுண்னா இல்லை பதில், தலை விழுந்தா ஆம் பதில் பரிட்சையை ஒரு அரைமணிக்குள்ள முடிச்சிட்டு சும்மா இருந்தார் அப்புறமா நேரம் முடியும்போது நம்ம ஆசிரியர் வந்து என்ன பன்றே காசு துக்கி போடுன்னு கேட்டார் நம்மாள் பரிச்ட்சை யெல்லாம் அரை மணியிலே எழுதிட்டேன்ன்னார் " சரி எதுக்கு காச தூக்கி போட்டு பாக்கறேன்னார் வாத்தியார் அதுக்கு நம்மாள் சொன்னாரு
" இப்ப நான் எழுதுன பதிலெல்லாம் சரியான்னு திரும்ப ஒருதடவை டெஸ்ட் பன்னி பாக்கறேன்னு சொன்னார் "

G.Ragavan said...

ஒரு போட்டி....யாரால 100 ஜோக் கேட்டும் சிரிக்காம இருக்க முடியும்னு...தமிழன், மலையாளி, தெலுங்கன், கன்னடன், இந்தி, பெங்காலி, சர்தார்ஜி, அசாமி, ஒரியான்னு பலர் கலந்துக்கிட்டாங்க.

மொதல்ல ஒரு பாட்டி ஜோக் சொன்னாங்க. அசாமிக்காரர் சிரிச்சுட்டார். அவுட். அடுத்து ஒரு ஆடு பத்துன ஜோக். அதுக்கு ஆந்திராகாரர். அடுத்தது ரயில் பத்துன ஜோக். அதுக்கு தமிழன். அடுத்து கோழி...அதுக்கு கன்னடன். இப்படி எல்லாரும் தோத்துட்டாங்க. 99 ஜோக் சொல்லும் போது சர்தார்ஜி மட்டுந்தான் மேடைல இருந்தார். சரியா 100வது ஜோக் சொல்லப் போகும் போது சர்தார் சிரிச்சுட்டார். மத்த சர்தார்களுக்குக் கோவம். ஏய்யா ஒரு ஜோக்குக்குச் சிரிக்காம இருக்க முடியாதான்னு....அப்ப சர்தார்ஜி சொன்னாராம்....."மொதல்ல சொன்ன பாட்டி ஜோக் ரொம்ப சூப்பர்".

இலவசக்கொத்தனார் said...

கொஞ்சம் பழசா இருந்தாலும் நம்ம ஆளு சொன்னதாச்சேன்னு சிரிச்சி வைக்கறேன்.

:-D

கதிர் said...

கைப்ஸ்,

உங்க வீட்டு பக்கமா நாலு சர்தார்ஜி ஆட்டோல போறத பாத்தேன். எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.

ஜொள்ளுப்பாண்டி said...

ஏப்ரல் 1 ம்தேதி ஒரு சர்தார்ஜி டவுன் பஸ்ஸில் ஏறினார். கண்டக்டர் வந்து டிக்கெட் எடுக்கச் சொன்னதும் 10 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு சொன்னாரு " ஹைய் ஏப்ரல் பூல்! நல்ல ஏமாந்தியா என்கிட்டே பஸ் பாஸ் இருக்கே !!"

ILA (a) இளா said...

சந்தா சிங்: புலி வால் புடிச்சு இழுத்து, சிங்கத்து பிடறியை சீவிவிட்டு, யானை தும்பிக்கைய கிள்ளி வெச்சு, கரடிக்கு பின்னாடி விட்டேன் ஒரு உதை

பந்தா சிங்: அப்புறம்?

சந்தா சிங்: இதையெல்லாம் பார்த்த அந்த பொம்மை கடைக்காரர் என்னை வெளியே துரத்திப்புட்டார்.

நாகை சிவா said...

//" இப்ப நான் எழுதுன பதிலெல்லாம் சரியான்னு திரும்ப ஒருதடவை டெஸ்ட் பன்னி பாக்கறேன்னு சொன்னார் " //

என்னய்யா மகேந்! பதிவுல உள்ள சிரிப்பு துணுக்கை எடுத்து பின்னூட்டமா போட்டாச்சா?

களவாணி said...

ரெண்டு சர்தார் ஜி-க்களை நாசா நிலாவுக்கு ஆராய்ச்சி பண்ண அனுப்புறாங்க. ராக்கெட் போன பாதி தூரத்திலேயே ரெண்டு சர்தார்ஜியும் 'யூ' டர்ன் போட்டு திரும்பி வந்து நாசாக் காரங்களைப் பார்த்து திட்டுறாங்க.

"மிஷன் ஃபெயில்ட். ஏன்னா இன்னிக்கு அமாவாசை".

நல்ல ஜோக்ஸ் எல்லாமே ரசிக்கும் படியா இருந்தன.