Monday, February 2, 2009

சங்கம் பிலிம்ஸ்: பாவனா-வின் பிளாக்-காயணம் Part 2

ந.நா = நகைச்சுவை நாகேஷ்! குணச்சித்திரத் திலகமான மறைந்த நாகேஷ்-க்கு சங்கத்தின் சார்பாக நினைவஞ்சலி! சிரிப்பஞ்சலியும் கூட!
பிளாக்-காயணம் - Part 1, மாதவிப் பந்தலில் துவங்கியது! இனி வரும் பகுதிகள், வ.வா. சங்கத்தில் தொடரும்! இதோ Part-2!


ஆப்பிளை, அண்ணலும் நோக்கினான்....அவளும் நோக்கினாள்!
பாவனா என்ற ஆப்பிளைக் கண்ட மாத்திரத்தில், நம்ம இலங்கை மன்னன் காதல் மன்னன் ஆயிட்டான்-டா! கொடுங்கோலன் மனத்தில் செங்கோலி புகுந்துட்டா டா, புகுந்துட்டா!

இராவணப் பிரபாவின் வாயில் இருந்து, காதல் ரசம் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுது! இன்னிக்கு பெண்களூர் மாநகரத்தில் நாம பாக்குறோமே...பரந்து விரிந்த ஜொள்சூர் ஏரி! அது தோன்றக் காரணமானவன் இந்த இராவணப் பிரபா என்பது தல புராணம்!

அன்று பாவனா கடித்த ஆப்பிளின் விதை, பெரிய மரமா முளைச்சி நிப்பதை, இன்னிக்கும் ஜொள்சூர் ஏரியில் பார்க்கலாம்!
இந்த மரத்தில் அவிங்கவங்க பேரை வெள்ளியில் பொறிச்சி வைச்சா, உடனே காதல் கை கூடும்! அடுத்த தபா ஜொள்சூர் ஏரிக்குப் போனீங்கனா, பிரபா பேரைச் சொல்லிப் பொறிச்சிட்டு வாங்க மக்கா! :)

அண்ணலுக்குப் பாவனாவைப் புடிச்சிப் போச்சு! ஆனால் அவளுக்கு?
பிரபாவின் இதழோரமாக இருக்கும் ஒரு பெரிய மச்சத்தைப் பாத்துட்டா பாவனா! - மச்சம் பெண்களுக்கு இருந்தா அழகு! ஆனால் ஆண்களுக்கு இருந்தா பல தாரம் உண்டாமே? காம வெறி புடிச்சி அலைவாங்களாமே?
பாவனா பயப்படுகிறாள் - ஓக்கே சொல்லலாமா? வேணாமா? கன்ஃப்யூஷன்ஸ் ஆஃப் கானா பிரபா!


பிரபாவுடன் வந்த விபீஷ்-ஜிராவும் பாவனாவை லுக்குகிறார்! அண்ணன் இராவணப் பிரபாவின் மேல் முதல் முறையாகக் கோபம், பொறாமை எல்லாம் ஒன்னா வருது அவருக்கு! கறுவுகிறார்! பாவனாவின் வாய் தவறி வந்த ஆப்பிளை, "பேக்-பேக்கில் போட்டுக்கட்டுமா-ண்ணே?"-ன்னு, நைசாக லபக்கிக் கொள்கிறார் விபீஷ்-ஜீரா!


சபையில் இராமபிரான்-கேஆரெஸ்ஸும், இலக்குவ-சீவியாரும் அமர்ந்து இருக்கிறார்கள்! இருவருக்கும் மனசுக்குள் மத்தாப்பூ! அதே சமயம் சந்தேக சித்தாப்பூ!

கேஆரெஸ்: "டேய் தம்பி, லட்சுமணா! நீ அவளை பாத்தியா?"

சீவீஆர்: "டேய் அண்ணா, இராமா! நீ அவளைப் பாக்கலீயே?"

கேஆரெஸ்: "இல்லடா தம்பி! நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை! நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை!"

சீவீஆர்: "மரியாதை கெட்டுரும்! எந்த யுகத்துப் பாட்டை எப்போ பாடிக்கிட்டு இருக்கே? உன்னை நம்பித் தான்-டா அவ கிட்ட என்னை இழந்துட்டேன்! ஒழுங்கா அந்த பிளாக்கர் வில்லை வளைக்கப் பாரு! இல்லை.....
சிம்ப்ளி சீவீ-ஆரு, காம்ப்ளெக்ஸ் நம்பீ-ஆரா மாறிடுவேன்! ஆமா!"

கேஆரெஸ்: "சரிடா! சரிடா! கோச்சிக்காதே! கேர்ள்ஸ் ஆஃப் மிதிலா நமக்கே! இதோ எழுந்து போகிறேன்!"
(விஸ்வாமித்ர-கொத்தனார், தோளைப் பிடித்து அழுத்துகிறார்! உட்கார வைக்கறார்! "டேய், கேஆரெஸ், வேணாம்! வெயிட் மாடி!" )

கேஆரெஸ்: "ஏன் மகரிஷி?"

கொத்தனார்: "வெண்ணை! கேள்வி கேக்காதே! ஜஸ்ட் வெயிட்! இலவசம் சொன்னா ஈசனே சொன்னாப் போல!"

அங்கே.....பிளாக்கர் வில்லை வளைத்து வளைத்துக் களைத்து விட்டார்கள் பிளாக் தேச அரசர்கள்!
உம்ம்ம்.....ஒருவரும் பின்னூட்ட நாணை ஏத்தக் கூட முடியலை!
போலி ஆப்ஷன், அனானி ஆப்ஷன், ஓப்பன் ஐடி ஆப்ஷன்...ஹூஹூம்! ஒன்னும் வேலைக்கு ஆவலை!

இராவணப் பிரபா வருகிறார்! - பராக்! பராக்!! ஓபாமா!!!



யாருமே எடுக்க முடியாத பிளாக்கர் வில்லைக் கையில் எடுத்து விட்டார் தல! ஆகா! ஆகா! சபை வாய் பிளக்கிறது!

கேஆரெஸ் மெர்சல் ஆகிறார்! கொத்தன ரிஷியை கொன்னா தான் ஆத்திரம் அடங்கும் என்று துடிக்கிறான் சீவீயாரு!
இதோ...இலங்கை வேந்தன் பிரபா பின்னூட்ட நாண் ஏத்தறாரு! ஏத்தறாரு! இழுத்து ஏத்தறாரு!

விபீஷ்-ஜீரா: "அண்ணே, மண்டூ-அண்ணியை மனசுல நினைச்சிக்கிட்டு, நல்லா வளைச்சி இழுங்கண்ணே!"

இராவண-பிரபாவுக்கு "அண்ணி"-ன்னு பேரைக் கேட்ட மாத்திரத்தில் தூக்கி வாரிப் போடுது! தூக்கிய வில்லு தொளதொளக்குது! தோளு குளுகுளுக்குது!
"ஐயோ அவளா? கட்டாந் தரையில கப்பல் ஓட்டுவாளே! பாறாங் கல்லுல பரிசல் ஓட்டுவாளே! பரிசல்காரீ!" - பரிசல் பேரைக் கேட்ட மாத்திரத்தில் பிரபா, பேயடிச்சாப் போல ஆயிட்டாரு! :)

அந்தச் சமயம் பாத்து, அப்பா-ஆஆஆ-ன்னு ஓடி வருகிறது ஒரு சின்னக் கொழந்தை! - இந்திர சித்து என்னும் ரிஷான் ஷெரீப்! நாளைக்குப் பொறக்கப் போகும் குழந்தையைக் கூட இது "அங்க்கிள்"-ன்னு தான் கூப்பிடும்!

போன ஜென்மத்தில் இந்த ரிஷான்-சித்து ஒரு அங்க்கிளானந்தா! பூவுலக ரம்பையான சில்க் ஸ்மிதா, இவரைப் பார்த்து "அங்க்கிள்"-ன்னு கூப்பிட்டாங்களா? அதிலிருந்து மனமொடிந்து போய், கர்மா தீராமல்...இப்படிப் பாக்குறவங்களை எல்லாம் அங்க்கிள் அங்க்கிள் என்று அழைக்கும் பூர்வ ஜென்ம வாசனை! :)

ரிஷான்-சித்து: "டாடி, மாடத்தில் இருக்கும் நாலு பேர்ல, யாரை நான் சித்தீதீதீ-ன்னு கூப்பிடணும்?"

அம்பி-ஜனகன்: "வாட்? பிரபா? உங்களுக்கு ஏற்கனவே கண்ணாலம் ஆயிருச்சா? சொல்லவே இல்ல?"

இராவணப் பிரபா, கோபத்துடன் ஒரு முறை முறைக்கிறார்! ச்சே...கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாமப் போச்சே! தலை கவிழ்ந்து போய் 108.3 FM-இல் உட்காருகிறார்!


விஸ்வா கொத்தனார்: "சபாஷ்! இது தான் சரியான நேரம்! கேஆரெஸ்! வெற்றி உனதே! போய் பிளாக்கர் வில்லை வளை!"

கேஆரெஸ்: "தங்கள் ஆணை குருதேவா!"

எடுத்தது கண்டார்! இற்றது கேட்டார்!
பிளாக்கர் வில்லை இதற்கு முன்பே பல பேர்கள் வளைத்து வளைத்து அதை லூசாக்கி விட்டார்கள்! போதாக்குறைக்கு இராவணப் பிரபா வேற பின்னூட்ட நாணை நல்லா ஏத்திட்டான்! கேஆரெஸ் தொட்ட மாத்திரத்தில் வில் வளைந்து பொடிப் பொடி ஆகிறது!

ஜய விஜயீ பவ! ஜய விஜயீ பவ! வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே!

விஸ்வா கொத்தனார்: "சபாஷ்! இது தான்டா பி.க! பின்னூட்ட கயமைத்தனம்!
எப்படி....இந்தக் கொத்தன ரிஷியின் திட்டம்? ஆன்மீகப் பதிவு போட்டா மட்டும் போறாது கேஆரெஸ்! அப்பப்ப மொக்கையும் போட்டாத் தான் வில்லு மொக்கையாகும் அறிஞ்சிக்கோ! தெரிஞ்சிக்கோ! புரிஞ்சிக்கோ!"

தமன்னா உடன் வர....பாவனா....மாடிப்படிகளில் இருந்து ஓடோடி வருகிறாள்! கைகளில் மலர்மாலை! பூமாரி பொழிகிறது! அ...த்...தா...ன்!

எதிர்ப்புக் குரல்: "நில்லு தங்கச்சி, நில்லு! "
எக்கோ: "நில்லு தங்கச்சி, நில்லு!"

சீவீஆர்: நான்சென்ஸ்! பூமாரி பொழியும் வேளையில் சோமாரி? யார் அவன்?

அங்கே......பாவனா சிஸ்டர்ஸ்-இன் பாசமிகு உடன் பிறப்புக்கள், போர்வாள் தேவ் & ராயல் ராம்!

கேஆரெஸ்: "எதுக்கு பாவனா நிக்கணும்? அவள் எனக்கு மாலையிட்ட மங்கை!"

ராயல்: "எங்களுக்கு தண்ணியிட்ட தங்கை!"
தேவ்: "ப்ளாக் லேபில் இட்ட சிங்கை!"

ராயல்: "மாலையிடும் முன் சில கண்டிஷன்ஸ் இருக்கு! சொல்றோம் கேளு இராமச்சந்திரா!"

தேவ்: "கண்டிஷன் நம்பர்#1 - தங்கச்சி பாவனா இப்போ மாலை மட்டுமே இடுவாள்! ஆறு மாசம் லிவிங் டுகெதர்! அப்பறம் பிடிச்சிருந்தா தான் கல்யாணம்!"

கேஆரெஸ்: "ஓ மை காட்! வாட் யூ கைஸ் ஆர் டாக்கிங்?"

ராயல்: "இந்தப் பீட்டர் எல்லாம் பிட்ஸ்பர்க்கோட வச்சிக்கோ! இது கன்னட நாடு! கொத்தில்லா?"
தேவ்: "ஆமாம்! கொத்திறலாம்! கொத்திறலாம்! கொத்தன ரிஷி-ன்னு ஒருத்தனைக் கூடவே கூட்டியாந்து இருக்காங்களே! கொத்தில்லாம், கொத்தில்லாம்"

ராயல்: "கண்டிஷன் நம்பர்#2 - இன்னிக்கே நீங்க நாலு சகோதரர்களும், தாய்லாந்து காடுகளுக்கு வனவாச ஹனிமூன் போகணும்! ஆனா, கூட நாங்களும் வருவோம்!
ஏன்னா, ஏன்னா....எனக்கு தாய்லாந்து போக ரொம்ப நாள் ஆசை! அங்கே பல விஷயம் பண்ணனும்-ன்னு எனக்கு ரெம்ப நாளா ஆசை!" :)

கேஆரெஸ்: "அடப்பாவிங்களா, நீங்க எல்லாம் வந்தா அது ஹனிமூன் இல்லடா! மெனி மூன்!"

தேவ்: "டேய் கேஆரெஸ்! இந்தச் சொல்லின் செல்வர் எல்லாம் பந்தலோட வச்சிக்கோ! கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டா மாலை! இல்லீன்னா சங்கு! எது வேணும் உனக்கு?"

கேஆரெஸ் இராமன் அரை மனதாகச் சம்மதிக்க......, பாவனா லிவிங் வைபோகமே! கேஆரெஸ் லிவிங் வைபோகமே!
மற்ற தம்பிகள் எல்லாம் மின்னல் வேகத்தில் அரச மீனவன் (கிங் பிஷ்ஷர்) விமானத்தில் வந்து சேர...

"நிறுத்துங்கள் கல்யாணத்தை!"


தேவ்: "எவ அவ?"

பரசுராமன்-அபி அப்பா: "நான் தான்டா! மாய வரம் கொடுக்கும் மாயவர முனிவன்! இந்த கேஆரெஸ் ராமனுக்கும் முன்பே நான் ஒரு மூத்த ஆன்மீகப் பதிவன்! பேரு பரசுராமன்!"

ராயல்: "இவனுங்கள யாருப்பா உள்ள விட்டது? லஞ்ச் டைம் ஆனாப் போதுமே! பெர்மிஷன் போட்டுட்டு, கல்யாண மண்டபம் மண்டபமாச் சுத்துவாங்களே!"

அபி அப்பா: "மூடு வாயை! பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக பிளாக்கரை வளைத்தவன் நான் தான்! மொத்தம் 9999 பின்னூட்டம்! 999 ஃபாலோயர்ஸ்! பாவனா எனக்கே!

தேவ்: "அடங் கொய்யால! அந்தப் பொண்ணுக்கு நீ பெரியப்பா மாதிரி! உனக்கு பாவனா கேக்குதா? குஷ்பூ ஆன்ட்டி கூட உனக்குச் சரிப்பட மாட்டாங்க! கெட் அவுட்!"

அபி அப்பா: "இராமச்சந்திரா! நீ தர்மம் தெரிந்தவன்! நீ கெட்-அவுட் சொல்! நான் போகிறேன்!"

கேஆரெஸ்: "அட, பரசுராமா! இது வெறும் லிவிங் டுகெதர் தான்! கண்ணாலம் இப்போ இல்ல! நீங்க கல்யாணத்தின் போது தான் வம்பு இழுக்கணும்! எதையுமே அரைகுறையாக் கேட்டு, அரைகுறையாப் பண்ணுறதே பொழைப்பா போச்சு உமக்கு! சரி, இது லிவிங் டுகெதர்-ன்னு நம்ம ஊர் முழுக்கப் போய்ச் சொல்லி வைக்காதீங்க! இது பரம ரகசியம்! சரியா?"

அபி அப்பா: "சரி, கேஆரெஸ்! தங்கள் சித்தம், என் சிதம்பரம்!"
(ஜி-டாக்கில் லாகின் பண்ணி, முதலில் மாட்டிய நண்பரிடம்: "லிவிங் டுகெதர்-ன்னு யார் கிட்டயும் சொல்லிறாதப்பா! சரியா? ஹிஹி! இந்த அபி அப்பா வாயில் இருந்து ஒருத்தனும் ஒரு வார்த்தையைக் கூட வாங்க முடியாது! தெரிஞ்சிக்கோங்க!" :))


ஆகா...என்ன அற்புதக் கல்யாணக் காட்சி! மொய் எழுதுங்க மக்கா.....மொய் எழுதுங்க! :)
* ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே! ரவி-ராமன் மணமகன் ஆனானே! பாவனா மணமகள் ஆனாளே!
* வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்! பதிவருக்கும் திரட்டிக்கும் ஆனந்தம்!!

* சத்ருக்கன-கப்பி பய வித் சுருதகீர்த்தி-தமன்னா
* இலக்குவ-சீவீஆர் வித் ஊர்மிளா-இலியானா
* பரத-வெட்டிப்பயல் வித் மாண்டவி-சமீரா ரெட்டி
(உனக்கு மட்டும் எப்படிடா இதுல கூட...."ரெட்டியே" செட் ஆவுது? :)
* இராமபிரான்-கேஆரெஸ் வித் சீதா-பாவனா....

சீவிஆர்: வாங்க, வாங்க! போட்டோ செஷன் ப்ளீஸ்! ஆல் ஆப்ஜக்ட்ஸ், ப்ளீஸ் அலைன் யுவர்செல்ப்! அக்கார்டிங் டு Rule-Of-Thirds!
கப்பி: அடப்பாவி சீவீஆரு! நீ இன்னும் இலியானாவுக்கு மாலையே போடலையா??? மவனே! மாலையைப் போடுறா மாங்கா! :)

இலியானா குனிந்த தலை நிமிராமல்...இராமனை நோக்கி வர...
கேஆரெஸ்: "ஆங்ங்....எனக்கில்லைமா...தம்பி காமிராவும் கையுமா அங்கிட்டு நிக்குறான் பாரு! சாரி! எனக்கு எப்பமே ஒரு இல்! ஒரு வில்! ஒரு ஜொள்!" :)


தம்பதிகள் அன்றே தாய்லாந்த் காடுகளில்.....மிகவும் எளிமையான ஹனிமூன் குடிசைகளில்.....ஆனால், பூஜை வேளையில் கரடிகளாக இந்த மாமா-மச்சான் கூட்டணி, தேவ்-ராயல் கூட்டணி!

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வா வா! முதலிரவுக்கு........எல்லா அலங்காரங்களும் ஏற்பாடாக....

ஆனா அப்போன்னு பாத்து....ஒரு ரூமில் இருந்து மட்டும்...குவா....குவா....குவா....

ராயல்: ஆகா...என்ன இது குழந்தை அழுவுற சத்தம்? இன்னும் முதலிரவே துவங்கலயே?
தேவ்: என்ன சத்தம் இந்த நேரம்? குவா-வா? குவா-வா?

"கொஞ்சம் மூடறியா?"-ன்னு ராயல், தேவ்-ஐ ஒரு முறை முறைக்க...
எந்த ரூமில் இருந்து சத்தம் வருது-ன்னு எல்லாரும் ஓடியே வந்து பார்க்க....
குவா குவா சத்தம் இஸ் கமிங் ஃபரம் வெட்டி-பரதன்ஸ் ரூம்...* www.vettipayal.com *

(தொடரும்.....)

77 comments:

இராம்/Raam said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... பாவனா'வுக்கு நான் அண்ணனா???? என்ன கொடுமை சார் இது... :((

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இராம்/Raam said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... பாவனா'வுக்கு நான் அண்ணனா???? என்ன கொடுமை சார் இது... :((
//

வாங்க தெய்வ மச்சான்! :)

சின்னப் பையன் said...

நான் மேக்கப்லாம் போட்டுட்டு ரெடியா இருக்கேன்... ஆனா என்னோட பார்ட் ரொம்ப நாள் கழிச்சுதான் வரும்போல இருக்கு.... :-(((((

சின்னப் பையன் said...

//கேஆரெஸ்: "எதுக்கு பாவனா நிக்கணும்? அவள் எனக்கு மாலையிட்ட மங்கை!"

ராயல்: "எங்களுக்கு தண்ணியிட்ட தங்கை!"
தேவ்: "ப்ளாக் லேபில் இட்ட சிங்கை!"//

தலைவா... பிச்சி உதர்றீங்க.. நீங்க பெரிய கை... :-)))

சின்னப் பையன் said...

// கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டா மாலை! இல்லீன்னா சங்கு! எது வேணும் உனக்கு?"
//

ஒத்துக்கிட்டா மாலே... இல்லேன்னா போலே.... :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ச்சின்னப் பையன் said...
நான் மேக்கப்லாம் போட்டுட்டு ரெடியா இருக்கேன்... ஆனா என்னோட பார்ட் ரொம்ப நாள் கழிச்சுதான் வரும்போல இருக்கு.... :-(((((
//

அட...ச்ச்சின்னப் பையா!
அந்தக் குவா குவா சத்தம் யாருது-ன்னு நினைச்சீங்க? :)))
வெகு விரைவில் லவ-குசா!

ambi said...

இராயலு, நீயாவது அண்ணா, என்னை அப்பவாக்கிட்டாங்க பா.

ஆனா இதுல காமடி என்னனா நயன் தாரா உனக்கு அம்மா. :))

சரி, சரி, ஒழுங்கா மொய் பணத்தை என் அக்கவுண்டுல ஏத்துங்க. இல்லாட்டி ஹனிமூன் கேன்சல். :))

நானும் நயன் தாராவும் செகண்ட் ஹனி மூன் போகனும். :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// ச்சின்னப் பையன் said...
தலைவா... பிச்சி உதர்றீங்க.. நீங்க பெரிய கை... :-)))//

ஆகா! வேற ஏதோ ஒரு கை-ன்னு சொல்லாம விட்டீங்களே! :))
தெய்வ மச்சான் நம்ம மேல ஒரே கோவமா இருக்காரு! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// ச்சின்னப் பையன் said...
ஒத்துக்கிட்டா மாலே... இல்லேன்னா போலே.... :-)))//

பஞ்ச் டயலாக்! வசனம் ச்சின்னப் பையன்-ன்னு போட்டிருக்கணுமோ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ambi said...
இராயலு, நீயாவது அண்ணா, என்னை அப்பவாக்கிட்டாங்க பா//

அலோ! தெய்வ மச்சானுக்கு இன்டர்நேசனல் ஜோடி ரெடியாகிக்கிட்டு இருக்கு!

//ஆனா இதுல காமடி என்னனா நயன் தாரா உனக்கு அம்மா. :))//

அடிங்க! மனோரமா தானே ஒங்க ஒஃயிப்? மனோரமா தான் தெய்வ மச்சானுக்கு அம்மா! எங்கள் நால்வருக்கும் மாமியார்! :)

//சரி, சரி, ஒழுங்கா மொய் பணத்தை என் அக்கவுண்டுல ஏத்துங்க. இல்லாட்டி ஹனிமூன் கேன்சல். :))//

சரியான பணத்தாசை பிடிச்ச மாமாவா இருக்கீங்களே! சொந்தப் பொண்ணுங்க ஹனிமூனை யாராச்சும் கேன்சல் பண்ணுவாங்களா? :(

மொய்ப் பணம் மச்சானுக்குத் தான்!

//நானும் நயன் தாராவும் செகண்ட் ஹனி மூன் போகனும். :))//

நயன்ஸ் பாவனாவுக்கு இளம் பாட்டு டீச்சர்! Gotcha?
நீங்க மனோரமா கூட மாயவரம் போயிட்டு வாங்க! :)

ஷைலஜா said...

அந்தச் சமயம் பாத்து, அப்பா-ஆஆஆ-ன்னு ஓடி வருகிறது ஒரு சின்னக் கொழந்தை! - இந்திர சித்து என்னும் ரிஷான் ஷெரீப்! நாளைக்குப் பொறக்கப் போகும் குழந்தையைக் கூட இது "அங்க்கிள்"-ன்னு தான் கூப்பிடும்!

போன ஜென்மத்தில் இந்த ரிஷான்-சித்து ஒரு அங்க்கிளானந்தா! பூவுலக ரம்பையான சில்க் ஸ்மிதா, இவரைப் பார்த்து "அங்க்கிள்"-ன்னு கூப்பிட்டாங்களா? அதிலிருந்து மனமொடிந்து போய், கர்மா தீராமல்...இப்படிப் பாக்குறவங்களை எல்லாம் அங்க்கிள் அங்க்கிள் என்று அழைக்கும் பூர்வ ஜென்ம வாசனை! :)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>:):):)

சிரிச்சி சிரிச்சி வாயெல்லாம் வலி!!!!

gils said...

//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... பாவனா'வுக்கு நான் அண்ணனா???? என்ன கொடுமை சார் இது... :((/

ROTFL :D :D: D Royalaray tenaliyaar aakiputele :D :D chancela...semma ravusu

MSATHIA said...

\\//இராம்/Raam said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... பாவனா'வுக்கு நான் அண்ணனா???? என்ன கொடுமை சார் இது... :((
//

\\வாங்க தெய்வ மச்சான்! :)\\


\கேஆரெஸ்: "அடப்பாவிங்களா, நீங்க எல்லாம் வந்தா அது ஹனிமூன் இல்லடா! மெனி மூன்!\\

ROTFL

கானா பிரபா said...

பலே பலே அப்படித்தான் இருக்கணும் இன்னும் அதிகப்படியா வில்லத்தனத்தைப் போட்டுக்கோங்க பாஸ், ராவணப்பிரபாவா கொக்கா ;)

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
பலே பலே அப்படித்தான் இருக்கணும் இன்னும் அதிகப்படியா வில்லத்தனத்தைப் போட்டுக்கோங்க பாஸ்,
//
இன்னும் டெரரர் தனத்தை டெவல்பபண்ணுங்க பாஸ் :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கானா பிரபா said...
பலே பலே அப்படித்தான் இருக்கணும் இன்னும் அதிகப்படியா வில்லத்தனத்தைப் போட்டுக்கோங்க பாஸ், ராவணப்பிரபாவா கொக்கா ;)//

என்ன கா.பி.அண்ணாச்சி இப்படி கொக்கு போல சாஃப்டா பேசறீக? கழுகு போல பேசினாத் தானே வில்லன்? :)

ஆமா...இது என்ன மச்சம் மேட்டர்? சொல்லவே இல்ல? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//gils said...
ROTFL :D :D: D Royalaray tenaliyaar aakiputele :D :D chancela...semma ravusu//

ராயல் ராம் தெனாலி ராம் ஆனாரோ? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆயில்யன் said...
இன்னும் டெரரர் தனத்தை டெவல்பபண்ணுங்க பாஸ் :)))//

ஹிஹி!
வாங்க ஆயில்ஸ், அனுமான் அண்ணாச்சி! பறக்க ரெடியா இருக்கீயல்ல? :)

நாகை சிவா said...

//ந.நா = நகைச்சுவை நாகேஷ்! குணச்சித்திரத் திலகமான மறைந்த நாகேஷ்-க்கு சங்கத்தின் சார்பாக நினைவஞ்சலி! சிரிப்பஞ்சலியும் கூட!//

வழிமொழிகிறேன்

நாகை சிவா said...

//சிம்ப்ளி சீவீ-ஆரு, காம்ப்ளெக்ஸ் நம்பீ-ஆரா மாறிடுவேன்! ஆமா!"//

அட்ரா சக்கை

//விஸ்வா கொத்தனார்: "சபாஷ்! இது தான்டா பி.க! பின்னூட்ட கயமைத்தனம்!
எப்படி..//

அட்ரா சக்கை அட்ரா சக்கை

//* பரத-வெட்டிப்பயல் வித் மாண்டவி-சமீரா ரெட்டி (உனக்கு மட்டும் எப்படிடா இதுல கூட...."ரெட்டியே" செட் ஆவுது? :)//

அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை

Anonymous said...

hehe.nice one :)raam anna character thaan romba paavama irruku :P

Anonymous said...

//நான் மேக்கப்லாம் போட்டுட்டு ரெடியா இருக்கேன்... ஆனா என்னோட பார்ட் ரொம்ப நாள் கழிச்சுதான் வரும்போல இருக்கு.//

neega mattum illai.naanumtthaan :Peppo en part varum?

Anonymous said...

கானா பிரபா said...

பலே பலே அப்படித்தான் இருக்கணும் இன்னும் அதிகப்படியா வில்லத்தனத்தைப் போட்டுக்கோங்க பாஸ், ராவணப்பிரபாவா கொக்கா ;)//


ithuve ungaluku toooo much prabu anna ;)
becz neega romba nallavaruuuu

Anonymous said...

//
ராயல் ராம் தெனாலி ராம் ஆனாரோ? :)//

mmm paavamathaan irruku.oru hero range ku illama comedian range ku aagitaar :D

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
சிரிச்சி சிரிச்சி வாயெல்லாம் வலி!!!!//

ஹிஹி!
ரிஷான் வாசகம் தானே-க்கா? உங்களுக்கு வாய் வலி உண்டாக்கிய ரிஷான் கிட்ட ஆயிரம் டாலர் செலவுக்கு வாங்கிக்குங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Sathia said...
\கேஆரெஸ்: "அடப்பாவிங்களா, நீங்க எல்லாம் வந்தா அது ஹனிமூன் இல்லடா! மெனி மூன்!\\

ROTFL//

ROTFL = அப்படின்னா என்னாங்க சத்யா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாகை சிவா said...
//ந.நா = நகைச்சுவை நாகேஷ்! குணச்சித்திரத் திலகமான மறைந்த நாகேஷ்-க்கு சங்கத்தின் சார்பாக நினைவஞ்சலி! சிரிப்பஞ்சலியும் கூட!//

வழிமொழிகிறேன்//

நன்றி புலி!
நாகேஷ் பற்றிய தனிப் பதிவு ஒன்னு சங்கத்தில் அப்பாலிக்கா இடணும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//* பரத-வெட்டிப்பயல் வித் மாண்டவி-சமீரா ரெட்டி (உனக்கு மட்டும் எப்படிடா இதுல கூட...."ரெட்டியே" செட் ஆவுது? :)//

அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை//

ஹிஹி!
புலி ஃபுல் ஃபார்ம்-ல இருக்கீய போல! இத்தனை அட்ரா சக்கை-யா? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//υnĸnown вlogger™ said...
hehe.nice one :)raam anna character thaan romba paavama irruku :P//

அலோ தெய்வ மச்சானுக்கு என்ன கொறைச்சல்? தாய்லாந்து வந்திருக்காரு! அடுத்த பகுதியில் பெல்லாவைப் பிக்-அப் பண்ணப் போறாரு! அவர் ரேஞ்சே தனி!

என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க! ஆனா என் மச்சானைச் சொன்னீங்க.....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//υnĸnown вlogger™ said...
neega mattum illai.naanumtthaan :Peppo en part varum?//

உங்க பார்ட்-ஆ?
உங்களுக்கு பார்ட்டே இல்லை! அப்பாவிச் சிறுமிக்குத் தான் பார்ட்! υnĸnown вlogger™-க்கு பார்ட் ஒன்னும் நான் சொல்லலையே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//υnĸnown вlogger™ said...
ithuve ungaluku toooo much prabu anna ;)
becz neega romba nallavaruuuu//

பிரபா எப்போ பிரபு ஆனாரு ஜிஸ்டர்? :)

கா.பி.அண்ணாச்சி! தங்கச்சி சொன்னதை டைரியில் குறிச்சிக்கோங்க! நாளைக்கு வேற மாதிரி சொன்னா, இந்த "நல்லவரு" டயலாக்கு நமக்கு உதவியா இருக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//υnĸnown вlogger™ said...
//
ராயல் ராம் தெனாலி ராம் ஆனாரோ? :)//

hero range ku illama comedian range ku aagitaar :D//

தெனாலி-ல தெனாலி ராம் தான் ஹீரோ!
பஞ்ச தந்திரத்தில் கூட ஹே ராம் தான் ஹீரோ! :)

கோபிநாத் said...

அய்யோ..அய்யோ அனியாத்துக்கு கலக்கலாக இருக்கே !!! ;))

கோபிநாத் said...

\அந்தச் சமயம் பாத்து, அப்பா-ஆஆஆ-ன்னு ஓடி வருகிறது ஒரு சின்னக் கொழந்தை! - இந்திர சித்து என்னும் ரிஷான் ஷெரீப்! நாளைக்குப் பொறக்கப் போகும் குழந்தையைக் கூட இது "அங்க்கிள்"-ன்னு தான் கூப்பிடும்!
\\

ரிஷானை மேல உள்ள கொலைவெறிஐ தீர்த்துட்டிங்க ;))

கோபிநாத் said...

\\ சத்ருக்கன-கப்பி பய வித் சுருதகீர்த்தி-தமன்னா
* இலக்குவ-சீவீஆர் வித் ஊர்மிளா-இலியானா
* பரத-வெட்டிப்பயல் வித் மாண்டவி-சமீரா ரெட்டி (உனக்கு மட்டும் எப்படிடா இதுல கூட...."ரெட்டியே" செட் ஆவுது? :)
* இராமபிரான்-கேஆரெஸ் வித் சீதா-பாவனா....\\

இப்படி ஒரேயாடியாக நாலு கல்யாணம் வச்ச எப்படி தல நான் மொய் எழுதுவேன் இன்னும் சம்பளம் கூட வரல ;))

கோபிநாத் said...

\சீவிஆர்: வாங்க, வாங்க! போட்டோ செஷன் ப்ளீஸ்! ஆல் ஆப்ஜக்ட்ஸ், ப்ளீஸ் அலைன் யுவர்செல்ப்! அக்கார்டிங் டு Rule-Of-Thirds!
கப்பி: அடப்பாவி சீவீஆரு! நீ இன்னும் இலியானாவுக்கு மாலையே போடலையா??? மவனே! மாலையைப் போடுறா மாங்கா! :)
\\\

;))))))))))))))) சூப்பரு மாங்கா ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோபிநாத் said...
அய்யோ..அய்யோ அனியாத்துக்கு கலக்கலாக இருக்கே !!! ;))//

என்ன மாப்பி அனியாத்துக்கு-ன்னு சொல்லிட்ட? நியாயமாத் தானே சொல்லி இருக்கேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோபிநாத் said...
ரிஷானை மேல உள்ள கொலைவெறிஐ தீர்த்துட்டிங்க ;))//

ஹா ஹா ஹா!
சேச்சே! ரிஷான் ரொம்ப இனியவரு! ஃபோன்-லயே அனானி கால் போட்டு ரொம்ப மோசமா பாசமா பேசுவாரு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோபிநாத் said...
;))))))))))))))) சூப்பரு மாங்கா ;)//

அச்சச்சோ! தம்பியை ஜாஸ்தியா ஓட்டிட்டேனோ? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோபிநாத் said...
இப்படி ஒரேயாடியாக நாலு கல்யாணம் வச்ச எப்படி தல நான் மொய் எழுதுவேன் இன்னும் சம்பளம் கூட வரல ;))//

கப்பிக்கும், சீவீஆருக்கும் மொய் வச்சா, எனக்கு வச்சா போலத் தான்! எங்க மூனு பேருக்கும் ஒரே மொய்யே போதும் மாப்பி! :)

கைப்புள்ள said...

ஜோடி தர மாட்டீங்க...பரவால்லை...ஒரு அடி வாங்கற வேஷம் கூடவா நமக்கு குடுக்கக் கூடாது?

ஐயகோ :(

Anonymous said...

@ravi anna :)
ungala ellarume krs nu sollurappo silar paasama ravi nu sollurathu illaiya.athu mathiri kana praba annava chellama prabunu kuda solluvanga ;)hehehe

Anonymous said...

famous unknown bloggerku part illaiya?ravi anna neega thaniya veliye vaanga,aalu vaichu adikiren :))

அபி அப்பா said...

அய்யோ கேயாரெஸ் ராமா! உங்க அண்ணன் பல(?)ராமர் என் வாயை கிழ்ழிஞ்ச வாய்ன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக என் தம்பிகள் எல்லாம் பெரும் "படை"யுடன் வருகிறார்கள் என்பதை தாழ்மையுடன் உங்கள் கழுத்தில் "வாள்" வைத்து தெரிவித்து "கொல்"கிறேன்! தயவு செய்து பிரனாப் ஜாத்மலா வைத்து எதிர் நோக்கவும்:-)))

அபி அப்பா said...

ஆனா தம்பி ராமா ஒரு சந்தோஷம்! ராயல் ராமை பாவனாவுக்கு அண்ணனாக்கியதுக்கு சந்தோஷம் மகிழ்ச்சி!:-))

அபி அப்பா said...

அதை விட அம்ப்பி நிலமையை நினைச்சா எனக்கு அழுக்காச்ச்சி வருவது அடுத்த விஷயம் ஆனா கீதாம்மா நீங்க எண்ணெய் சட்டியில் போட்டு வறுவல் செய்ததை கூட மறந்து சந்தோஷ பட்டுகிட்டு இருக்காங்கப்பா:-))

அபி அப்பா said...

நல்ல வேளை பிளாக்காயனத்திலே நாரதர் இல்லை! இருந்தா கண்டிப்பா அந்த ரோல் கொத்ஸ்க்கு போய்யீருக்கும் சாமீ:-))

அபி அப்பா said...

ஆனா வெட்டிக்கு ஒரு ரெட்டிய சேர்த்து விட்டது உங்க குசும்புக்கு ஓர் எல்லை இல்லாம போனதை காட்டுது, அட ராமா ராமா:-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கைப்புள்ள said...
ஜோடி தர மாட்டீங்க...பரவால்லை...//

Dank u Thala! :)

//ஒரு அடி வாங்கற வேஷம் கூடவா நமக்கு குடுக்கக் கூடாது?//

நோ! நோ!
எங்க தல மேல ஒருத்தன் கை வைக்கறதா? அதை நாங்க பாத்துக்கிட்டு இருக்கிறதா? வெட்கம்! :)
கைகேய நாட்டின் குலச்செல்வமே! உமக்கு ஒரு அழுத்தமான பாத்திரம் காத்துக்கிட்டு இருக்கு! இருக்கு! இருக்கு! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//υnĸnown вlogger™ said...
@ravi anna :)
ungala ellarume krs nu sollurappo silar paasama ravi nu sollurathu illaiya.//

ஆகா! செல்லமா ரவியா? யாரும்மா அந்தப் பாசக்கார உடன்பிறப்பு? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//υnĸnown вlogger™ said...
famous unknown bloggerku part illaiya?ravi anna neega thaniya veliye vaanga,aalu vaichu adikiren :))//

என்ன கொடுமை ராயலு!
பார்ட்டு கொடுத்தாலும் அடிக்கறாங்க! கொடுக்கலைன்னாலும் அடிக்கறாங்க! இவங்க அடிக்கன்னே பொறந்த ஜிஸ்டரோ? பக்கத்தில் இருக்கும் உன்னை நினைச்சாத் தாம்பா பாவமா இருக்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அபி அப்பா said...
அய்யோ கேயாரெஸ் ராமா! உங்க அண்ணன் பல(?)ராமர்//

ஆரம்பமே தகறாரா அண்ணாச்சி?
ராமனுக்கு அண்ணன் பலராமன் இல்ல! கண்ணனுக்கு அண்ணன் தான் பலராமன்! அடியேன் கொலராமன்! :))

//என் வாயை கிழ்ழிஞ்ச வாய்ன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக என் தம்பிகள் எல்லாம் பெரும் "படை"யுடன் வருகிறார்கள்//

வரட்டும், வரட்டும்!
ஒரு இலியானாவை பார்த்த அடுத்த நிமிஷம் உங்க அத்தனை தம்பிகளும் எந்தக் கட்சின்னு பாக்கத் தானே போறீக! :))

//தயவு செய்து பிரனாப் ஜாத்மலா வைத்து எதிர் நோக்கவும்:-)))//

பேரு நல்லா இருக்கே! ஜாத்மாலா-வுக்கு பொண்ணுங்க இருக்காங்களா? சுயம்வரம் நடக்குமா? இல்லை என் சிஷ்யர்கள் சென்ஷி, கோப்பி-க்கெல்லாம் யூஸ் ஆகுமே-ன்னு ஒரு அக்கறை! வேற ஒன்னும் இல்ல! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அபி அப்பா said...
ராயல் ராமை பாவனாவுக்கு அண்ணனாக்கியதுக்கு சந்தோஷம் மகிழ்ச்சி!:-))//

அடா! அடா! அடா!
என்ன ஒரு சந்தோஷம்!

வெயிட் மாடிண்ணே! எங்கத் தங்கக் கம்பி ராயலுக்கு தாய்லாந்து இளநி போல குளுகுளு-ன்னு ஒருத்தி வரப் போறா! அப்போ தெரியும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அபி அப்பா said...
அதை விட அம்ப்பி நிலமையை நினைச்சா எனக்கு அழுக்காச்ச்சி வருவது//

ஹிஹி!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! :)

//கீதாம்மா நீங்க எண்ணெய் சட்டியில் போட்டு வறுவல் செய்ததை கூட மறந்து சந்தோஷ பட்டுகிட்டு இருக்காங்கப்பா:-))//

அம்பிக்கு ஒரு நல்லது நடந்தா, அதில் கீதாம்மா தானே மொத மொய் வைப்பாங்க! அதான்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அபி அப்பா said...
நல்ல வேளை பிளாக்காயனத்திலே நாரதர் இல்லை! இருந்தா கண்டிப்பா அந்த ரோல் கொத்ஸ்க்கு போய்யீருக்கும் சாமீ:-))//

கொத்ஸ்! உங்களை என்ன சொல்றாரு பாருங்க நம்ம அபி அப்பா! கொத்ஸாமித்ரா, கொடு சாபம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அபி அப்பா said...
ஆனா வெட்டிக்கு ஒரு ரெட்டிய சேர்த்து விட்டது உங்க குசும்புக்கு ஓர் எல்லை இல்லாம போனதை காட்டுது//

வெட்டின்னாலே ஒரு தனி பாசம் இல்லையா? அதான்! :)
கொல்ட்டி கொடுத்த கை-க்கு ஒரு சமீரா "ரெட்டி"யைக் கூடக் கொடுக்கலைன்னா எப்படி? :)

அபி அப்பா said...

அட ராமா! கிருஷ்ணருக்கு அண்ணாத்த தான் பலராமர் என்பது எனக்கு தெரியும்.(ஆனா நானே அப்படி சொல்வதில் ஒரு சட்ட சிக்கல் இருக்கின்றது ராமா, அதை கீதாம்மா வந்து நாகைசிவா போட்டு விளக்குவார்கள், அது வேற விஷயம்):-))))))))

அபி அப்பா said...

தற்போது மன்மோஹன் லீவில் இருப்பதால் தம்பிமார் படைக்கு மன்மோஹன் ஜாத்மலாவுக்கு பதில் பிரனாப் ஜாத்மலா வோடு தயாராய் இரும்வே! வருவாங்க எல்லாம் புல் 'அரிச்சு' போய் என் பின்னூட்டம் பார்த்து:-))

M.Rishan Shareef said...

//அந்தச் சமயம் பாத்து, அப்பா-ஆஆஆ-ன்னு ஓடி வருகிறது ஒரு சின்னக் கொழந்தை! - இந்திர சித்து என்னும் ரிஷான் ஷெரீப்! நாளைக்குப் பொறக்கப் போகும் குழந்தையைக் கூட இது "அங்க்கிள்"-ன்னு தான் கூப்பிடும்!//

கிர்ர்ர்ர்ர்...தப்புத்தப்பா சொல்றீங்க கேயாரெஸ் அங்கிள்..கேட்க ஆளில்லன்னு நெனச்சுட்டீங்களா?
நாளைக்குப் பொறக்கப் போகும் அந்தக் குழந்தை பெண்ணா இருந்தா 'ஆன்ட்டி'ன்னு கூடக் கூப்டுவேன் :P

M.Rishan Shareef said...

//போன ஜென்மத்தில் இந்த ரிஷான்-சித்து ஒரு அங்க்கிளானந்தா! பூவுலக ரம்பையான சில்க் ஸ்மிதா, இவரைப் பார்த்து "அங்க்கிள்"-ன்னு கூப்பிட்டாங்களா? அதிலிருந்து மனமொடிந்து போய், கர்மா தீராமல்...இப்படிப் பாக்குறவங்களை எல்லாம் அங்க்கிள் அங்க்கிள் என்று அழைக்கும் பூர்வ ஜென்ம வாசனை! :)//

அவ்வ்வ்வ்வ்வ்
அப்ப வாழ்நாள் முழுக்க நான் குழந்தையாவே இருக்கணுமா? :(

M.Rishan Shareef said...

//ரிஷான்-சித்து: "டாடி, மாடத்தில் இருக்கும் நாலு பேர்ல, யாரை நான் சித்தீதீதீ-ன்னு கூப்பிடணும்?"//

இவ்ளோ நீள வசனமா? ரொம்பக் கஷ்டமா இருக்கு..சின்ன வசனமாக் கொடுங்க கேயாரெஸ் அங்கிள்.. நான் பேசிட்டிருக்கும் போது இராணுவப் பிரபா டாடி , அவரோட வசனம் ஞாபகத்துக்கு வராமத் திணர்றாரு பாருங்க.. :P

M.Rishan Shareef said...

ரிஷான் ரசிகர்கள் -'பிளாக்காயணத்தில்' எங்கள் தளபதிக்குக் குழந்தை வேடம் கொடுத்து, அவரைச் சின்னப் புள்ளயாக்கி அழ வைப்பதற்கு கேயாரெஸ்க்கு எதிராக எங்கள் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். நாடு தழுவிய போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதங்களும் தொடருமென எச்சரித்துக் கொள்கிறோம்..!

ரிஷான் - அதெல்லாம் வேணாங்க..நம்ம கேயாரெஸ் அங்கிள்..நல்லவரு..வல்லவரு..நாலும் தெரிஞ்சவரு.. குழந்தை வேஷம் கொடுத்தா என்ன? குழந்தை கூடச் சேர்ந்து சொப்பு வச்சு வெளாட பூஜா,மீரா ஜாஸ்மின்,சரண்யா மோகன்,ஸ்வாதியயும், தாலாட்டுப் பாடித் தூங்க வைக்க, ஷாப்பிங் கூட்டிட்டுப் போகன்னு நதியா,ரம்யா கிருஷ்ணன், அமலா, ஷோபனான்னு ஆன்ட்டீஸ்களயும் போட்டிருக்காரு பாருங்க :)

M.Rishan Shareef said...

//சிரிச்சி சிரிச்சி வாயெல்லாம் வலி!!!!//

ஷை அக்கா..நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

M.Rishan Shareef said...

//ரிஷானை மேல உள்ள கொலைவெறிஐ தீர்த்துட்டிங்க ;))//

அதான் ..அதான்.. அதேதான் கோபிநாத் அங்கிள் :))

M.Rishan Shareef said...

//சேச்சே! ரிஷான் ரொம்ப இனியவரு! ஃபோன்-லயே அனானி கால் போட்டு ரொம்ப மோசமா பாசமா பேசுவாரு! :)//

ஹி ஹி ஹி
கண்டுபிடிச்சிட்டீங்களா கேயாரெஸ் அங்கிள்? :)
நான் அவனில்லை :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அபி அப்பா said...
ஆனா நானே அப்படி சொல்வதில் ஒரு சட்ட சிக்கல் இருக்கின்றது ராமா//

என்னங்கண்ணா என்னைப் போயி வரிக்கு வரி ராமா ராமா-ன்னு கூப்புடறீங்க! பயமா இருக்கு! :)

//அதை கீதாம்மா வந்து நாகைசிவா போட்டு விளக்குவார்கள், அது வேற விஷயம்):-))))))))//

ஹா ஹா ஹா!
கீதாம்மா வந்து விளக்கினாங்கான்னா நான் கம்முனு ஆயிட மாட்டேன்? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அபி அப்பா said...
பிரனாப் ஜாத்மலா வோடு தயாராய் இரும்வே!//

பிரனாப் வேஸ்ட்டு! ட்ரிப் அடிப்பாரு! ஆனா வேலைக்காவாது!:(

//வருவாங்க எல்லாம் புல் 'அரிச்சு' போய் என் பின்னூட்டம் பார்த்து:-))//

ஹிஹி! புல்-லா? ஃபுல்லா? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...//

அகோ, வாரும் பிள்ளாய்! இந்தப் பதிவின் நாயகனே நீ தான்! :)

//நாளைக்குப் பொறக்கப் போகும் அந்தக் குழந்தை பெண்ணா இருந்தா 'ஆன்ட்டி'ன்னு கூடக் கூப்டுவேன் :P//

அடப் பாவி! இது உனக்கே அடுக்குமா ரிஷானு?
சரி, த்ரிஷாவை மட்டும் ஏன் ’ஆன்ட்டி’-ன்னு கூப்பிட மாட்டேங்குற?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
அவ்வ்வ்வ்வ்வ்
அப்ப வாழ்நாள் முழுக்க நான் குழந்தையாவே இருக்கணுமா? :(//

ஆமா! ஆமா!
டயாப்பர் கூட போட்டுக்கணும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
நான் பேசிட்டிருக்கும் போது இராணுவப் பிரபா டாடி//

கொழந்த...
அது இராணுவப் பிரபா இல்ல!
இராவணப் பிரபா!
:)

உம்ம்ம்
சாரி...தற்போதைய சூழலில், இராணுவம்-ன்னா என்ன ஞாபகம் வரும்-ன்னு தெரியுது ரிஷான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
ரிஷான் ரசிகர்கள் -'பிளாக்காயணத்தில்' எங்கள் தளபதிக்குக் குழந்தை வேடம் கொடுத்து, அவரைச் சின்னப் புள்ளயாக்கி அழ வைப்பதற்கு கேயாரெஸ்க்கு எதிராக எங்கள் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்//

ஹா ஹா ஹா!
ரிஷான் ரசிகர்கள்? or ரிஷான் ரசிகைகள்? - கரெக்டாச் சொல்லுங்க!

//ரிஷான் - அதெல்லாம் வேணாங்க..நம்ம கேயாரெஸ் அங்கிள்..நல்லவரு..//

நன்றி ரிஷான்! உங்களுக்கு "ஆன்ட்டி"-பயாடிக் மருந்து நல்லா வேலை செய்யும்-ன்னு எனக்குத் தெரியும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
அதான் ..அதான்.. அதேதான் கோபிநாத் அங்கிள் :))//

அடப்பாவி! மாப்பி கோப்பியும் ஒனக்கு அங்கிளா?
இனி அவனுக்கும் உன் மேல கொலைவெறி தான்டோய்! :)

//ஷை அக்கா..நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்//

ஷைல்ஸ் அக்கா நல்லவங்க! தங்கமானவங்க! :)

கோபிநாத் said...

\\\எம்.ரிஷான் ஷெரீப் said...
//ரிஷானை மேல உள்ள கொலைவெறிஐ தீர்த்துட்டிங்க ;))//

அதான் ..அதான்.. அதேதான் கோபிநாத் அங்கிள் :))
\\\

ஏன்ய்யா ஏன்...ஏன் இந்த கொலைவெறி.! ;))

உனக்கு போயி சப்போட் பண்ணேன் பாரு எனக்கு வேணும்...அவ்வ்வ்வ்வ்வ்வவ்

கோபிநாத் said...

\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//எம்.ரிஷான் ஷெரீப் said...
அதான் ..அதான்.. அதேதான் கோபிநாத் அங்கிள் :))//

அடப்பாவி! மாப்பி கோப்பியும் ஒனக்கு அங்கிளா?
இனி அவனுக்கும் உன் மேல கொலைவெறி தான்டோய்! :)
\\

ரீப்பிட்டே!!!

Anonymous said...

dai sivakarthikeya super padamda edhir neechal ippadiye maintain panra

Anonymous said...

kamala haasan oru kedu ketta naai porambokku naai.paithiyakkara naai.america naai.

Anonymous said...

v