Friday, February 13, 2009

கவிமெழுகுவத்தி தாராபுரம் தகரநிலவன் கவிதைகள்

என்கிட்ட இருக்கு பிளாக்பெர்ரி - உன்
கண்ணு ரெண்டும் இனிக்கும் ஸ்ட்ராபெர்ரி!

**************காலங்கார்த்தால விடியல் - அப்ப
உன்னைப் பார்த்தாலோ டரியல்!

*************நைட்டானா வருது ஸ்டாரு - நான்
டைட்டானா குடிப்பேன் பீரு
சைட்டுன்னா அதுக்கு உன் பேரு - நீ
வெயிட்டுன்னா காலம்பூரா காத்திருப்பேன் பாரு!

**********************


படிக்காதவன் ஹீரோயின் தமன்னா!
நீ என்னை காக்க வந்த சூப்பர்வுமன்னா?

**************அவளைப் பார்த்ததும் அடிச்சேன் பிகிலு!
அவ அடிச்சதுல கிழிஞ்சது என் செவுலு!

******************************
ரோட்டுல ஓடுது காரு!
சரக்கடிக்க டாஸ்மாக் பாரு!!
குட்டிக்கதைக்கு சாரு!!!
நீதானே என் லைஃப்புக்கு வேரு!!!!

******************

டே(ய்) கவிதை

ஜனவரி ஒன்னு நியூ இயர் டே
மே ஒன்னு லேபர்ஸ் டே
நவம்பர் பதினாலு சில்ரன்ஸ் டே
பிப்ரவரி பதினாலு வாலண்டைன்ஸ் டே
நவம்பர்ல வரும் தாங்க்ஸ் கிவிங் டே
நீ ஓகே சொல்ற நாள் எனக்கு லைஃப் கிவிங் டே

********

தீர்ப்பு சொல்றதுக்கு வேணும் சொம்பு
டார்ச்சர் பண்றதுக்குன்னே பொறந்தவன் சிம்பு
நீ லுக்கு விட்டா என்னை தாக்குதடி அம்பு
என் வாழ்நாள் பூராவும் வேணுமடி உன் அன்பு

*********காமெடி கிங் கவுண்டமணி!
சிவாஜி நடிச்சது ஆலயமணி!
மூன்றாம்பிறை நாய் சுப்ரமணி!
நான் ஆகனும் உன்னோட ரங்கமணி!

******************************
இஸிகோல்ட்டு கவிதை


கிஸ்ஸடிக்கும் காதலியும்
ஆப்படிக்கும் மேனேஜரும்
ஒன்றுதான்
இருவருமே
நேரம் பார்த்து
கழுத்தறுப்பார்கள்!


*****************************
? கவிதை

உன் தந்தை பிநவாதியா?
நீ அவர் எழுதிய புனைவா?
உன் அன்னை வலைப்பதிவரா?
நீ அவர் எழுதிய மொக்கையா?
உன் குடும்பம் கூட்டுப்பதிவா?
நீ வாய் திறந்தாலே கும்மியா?

************************


'இப்ப இன்னாங்கற நீ' கவிதைகள்

நீ வரும்போதெல்லம்
உன்னைப் பார்த்து
ஏன் சிரிக்கிறேன் என்கிறாய்
'இடுக்கண் வருங்கால் நகுக'
மறந்துவிட்டாயா கண்ணே!

**

நீ வாங்கிய தங்க வளையல்
நன்றாக இருக்கிறதா
என்கிறாய்
என் கிரெடிட் கார்டில் இப்படி
வரைமுறையின்றி தீட்டுவது
நன்றாகவா இருக்கிறது?

**

பாண்டியன் எக்ஸ்பிரஸில்
டிக்கெட் கிடைக்கவில்லை என்கிறாய்
போன மாதமே
ரிசர்வேஷன் செய்யாதது
உன் தவறென்று
எப்படி சொல்வேன் பெண்ணே?

**

- தகரநிலவனின் 'டரியல் காதல்' கவிதை தொகுப்பிலிருந்து

42 comments:

வெட்டிப்பயல் said...

கப்பி,
கவிதை எல்லாம் டாப் க்ளாஸு

ஸ்ரீதர்கண்ணன் said...

கிஸ்ஸடிக்கும் காதலியும்
ஆப்படிக்கும் மேனேஜரும்
ஒன்றுதான்
இருவருமே
நேரம் பார்த்து
கழுத்தறுப்பார்கள்!

அருமை :)

தமிழன்-கறுப்பி... said...

:))

கைப்புள்ள said...

//பாண்டியன் எக்ஸ்பிரஸில்
டிக்கெட் கிடைக்கவில்லை என்கிறாய்
போன மாதமே
ரிசர்வேஷன் செய்யாதது
உன் தவறென்று
எப்படி சொல்வேன் பெண்ணே?//

என் உன் காதல் எதுவும் கை கூட மாட்டேங்குதுன்னு இப்ப தான் தெரியுது.
:)

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல் பாஸ்...

தமிழன்-கறுப்பி... said...

இதெல்லாம் படிக்கறப்போ நீங்க யூத்துண்ணே நம்பிடலாம் அண்ணே ;)

வெட்டிப்பயல் said...

//என் உன் காதல் எதுவும் கை கூட மாட்டேங்குதுன்னு இப்ப தான் தெரியுது.
:)//

தல,
இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏதாவது இருக்கா?

இராம்/Raam said...

//வெட்டிப்பயல் said...

//என் உன் காதல் எதுவும் கை கூட மாட்டேங்குதுன்னு இப்ப தான் தெரியுது.
:)//

தல,
இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏதாவது இருக்கா?//

ROTFL

கைப்புள்ள said...

//தல,
இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏதாவது இருக்கா?//

இதுல சந்தேகம் வேற? "ஏ" "எ" ஆயிட்டுதுன்னு உனக்கு மெய்யாலுமே புரியலியா?

கைப்புள்ள said...

//தல,
இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏதாவது இருக்கா?//

ROTFL//

எலேய் ராயல்...என்ன இது பொது ஜனம் கூடுற எடத்துல வந்து கெக்கேபுக்கேன்னு சிரிப்பு? பிச்சிப்புடுவேன் பிச்சி.

கோபிநாத் said...

சூப்பர் டரியல் ;))

சென்ஷி said...

//? கவிதை

உன் தந்தை பிநவாதியா?
நீ அவர் எழுதிய புனைவா?
உன் அன்னை வலைப்பதிவரா?
நீ அவர் எழுதிய மொக்கையா?
உன் குடும்பம் கூட்டுப்பதிவா?
நீ வாய் திறந்தாலே கும்மியா?/

தலைவா நீ எங்கயோ போயிட்ட :-)

சூப்பர்

சுபாஷினி said...

சிரிப்பு தாங்க முடியல :):):)

அதிஷா said...

கப்பி கலக்கல்கவிதைகள்...

சூப்பரப்பு

ramachandranusha(உஷா) said...

சூப்பர் :-) எதுக்கும் காப்பி ரைட்டுன்னு போட்டு வை. இருக்கிற இருப்புல சுட்டுட போறாங்க :-)

Anonymous said...

Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Namakkal Shibi said...

//சூப்பர் :-) எதுக்கும் காப்பி ரைட்டுன்னு போட்டு வை. இருக்கிற இருப்புல சுட்டுட போறாங்க :-)//

கப்பிரைட்டுன்னெல்ல போடணும்!

Namakkal Shibi said...

//Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்//

ஏம்பா! இவங்களுக்கு யாராச்சும் தனியா ஒரு போஸ்ட் போட்டு விட்டுடுங்கப்பா!

Namakkal Shibi said...

//ஏம்பா! இவங்களுக்கு யாராச்சும் தனியா ஒரு போஸ்ட் போட்டு விட்டுடுங்கப்பா!//

http://kalaaythal.blogspot.com/2009/02/blog-post_13.html

நானே போட்டுட்டேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//என்கிட்ட இருக்கு பிளாக்பெர்ரி - உன்
கண்ணு ரெண்டும் இனிக்கும் ஸ்ட்ராபெர்ரி!//

கப்பி - அடுக்குமா?
யாரை நினைச்சிக்கிட்டு இந்தக் கவுஜைய எழுதின? :)

//படிக்காதவன் ஹீரோயின் தமன்னா!//

தமன்னா-வை உனக்குத் தானே பிளாக்கயணத்தில் :))

//குட்டிக்கதைக்கு சாரு!!!//

அப்போ வெட்டி? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உன் அன்னை வலைப்பதிவரா?
நீ அவர் எழுதிய மொக்கையா?
உன் குடும்பம் கூட்டுப்பதிவா?
நீ வாய் திறந்தாலே கும்மியா?//

இதைப் படிச்சிட்டுமா அந்த கும்மி கேங் சும்மா இருக்குது? OMG!! :)

// Namakkal Shibi said...
//சூப்பர் :-) எதுக்கும் காப்பி ரைட்டுன்னு போட்டு வை. இருக்கிற இருப்புல சுட்டுட போறாங்க :-)//

கப்பிரைட்டுன்னெல்ல போடணும்!//

எங்க கப்பிக்கு பரந்த பறந்த மனசு! :)))
கவி மெழுகுவத்தி கப்பி வாழ்க வாழ்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தல எனக்கு ஒரு ஜந்தேகம்!
தாராபுரம் தகரநிலவன், காஞ்சிபுரம் கப்பி நிலவன் - இவிங்க ரெண்டு பேரும் ஒன்னா? இல்லாக்காட்டி ஆறு வித்தியாசம் இருக்கா? :)

கப்பி | Kappi said...

வெட்டி

டாங்கிஸ் :))

ஸ்ரீதர் கண்ணன்

அனுபவிச்சு அருமை சொல்றதை பார்த்தா டேமேஜ் ஜாஸ்தி போல :))


தமிழன் - கறுப்பி

//நீங்க யூத்துண்ணே நம்பிடலாம் அண்ணே ;)//

என்னாதிது சின்னபுள்ளத்தனமா...நாங்க இப்பவும் எப்பவும் யூத்துதாண்ணே! :))

கப்பி | Kappi said...

கைப்பு

நாம் நடக்கும்போது கால் தவறி விழுந்தாலே குழி தோண்டி புதைக்க புல்லுருவிகள் சூழ்ந்திருக்கும்போது இப்படியா கை தவறி ஸ்பெல்லிங்கு மிஷ்டேக்கு செய்வது? :))


ராம்

நோ மிஸ்டர் காலிங் :))

கப்பி | Kappi said...

கோபிநாத்

நன்னி வாக்கர் :))

சென்ஷி

//தலைவா நீ எங்கயோ போயிட்ட :-)//

எங்கயாவது போலாம்னு தான் பாக்கறேன்..ஒன்னும் வேலைக்காவல :))


சுபாஷினி

மொக்கை தாங்க முடியலன்னு சொல்றீங்களோ? நன்றி!! :))

கப்பி | Kappi said...

அதிஷா

நன்றி தல! :))


ராமசந்திரன் உஷா

//இருக்கிற இருப்புல சுட்டுட போறாங்க//

ரீஜண்டா சூடு பட்ட எஃபெக்ட்? ;)

நன்றி! :))

வெண்பூ said...

கப்பி, சான்ஸே இல்லை.. செம நக்கல் கவிதைகள்.. அதிலயும் "இஸிகோல்டு கவிதை" தலைப்பே சூப்பர்.. இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் (வாய் சுளுக்கிடுச்சி..)

கப்பி | Kappi said...

வலைப்பூக்கள்

தள சிபி போஸ்ட்டை சேருங்கப்பா :))


சிபி

ஹி ஹி

கப்பி | Kappi said...

கேஆரெஸ்

//யாரை நினைச்சிக்கிட்டு இந்தக் கவுஜைய எழுதின? :)//

ஓவர் ஃபீலிங்கா கவுஜயா எழுதற கவிஞர்களை நினைச்சிக்கிட்டுதான் :))

//தமன்னா-வை உனக்குத் தானே பிளாக்கயணத்தில் :))//

அவ்வ்வ்..இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன் :)))

//அப்போ வெட்டி//

லெட்டர் அனுப்பறதுக்கு :))

//இவிங்க ரெண்டு பேரும் ஒன்னா? இல்லாக்காட்டி ஆறு வித்தியாசம் இருக்கா? //
ஆறென்ன நூறு வித்தியாசம் இருக்குது..அதெல்லாம் கண்டுக்கப்பிடாது :))


வெண்பூ

நன்றி தல! :)

ஸ்ரீதர்கண்ணன் said...

கேஆரெஸ்

//யாரை நினைச்சிக்கிட்டு இந்தக் கவுஜைய எழுதின? :)//

ஓவர் ஃபீலிங்கா கவுஜயா எழுதற கவிஞர்களை நினைச்சிக்கிட்டுதான் :))


இது ஸுபெரு

ஜி said...

மாப்பி... செம கலக்கல்... ரொம்ப நாளைக்கு அப்புறம் பேக் டூ த நக்கல் ஃபார்ம்.. நான் கூட ஏதோ பெரிய கவுஜனோட புக்க தலகுப்புற நின்னு படிச்சு விமர்சனம் போடுறியோன்னு நெனச்சிப் புட்டேன்.. :))

நாகை சிவா said...

தலைப்பே ஆயிரம் கவுஜு படிக்குதே!

நாகை சிவா said...

//ரோட்டுல ஓடுது காரு!
சரக்கடிக்க டாஸ்மாக் பாரு!!
குட்டிக்கதைக்கு சாரு!!!
நீதானே என் லைஃப்புக்கு வேரு!!!!//

வேரு க்கு பேரு கயல் விழியா?

ஜொள்ளுப்பாண்டி said...

//"கவிமெழுகுவத்தி தாராபுரம் தகரநிலவன் கவிதைகள்" //

தலைப்பே டெரெர்ரா இருக்குதே கப்பிஸ்....
கலக்குங்கப்பூ... :))))

ஜொள்ளுப்பாண்டி said...

//காலங்கார்த்தால விடியல் - அப்ப
உன்னைப் பார்த்தாலோ டரியல்! //

அடடடடடடடாடாடா.... உண்மையா அப்படியே புட்டு புட்டு வைக்குதே... !! :)))

ஜொள்ளுப்பாண்டி said...

//நைட்டானா வருது ஸ்டாரு - நான்
டைட்டானா குடிப்பேன் பீரு
சைட்டுன்னா அதுக்கு உன் பேரு - நீ
வெயிட்டுன்னா காலம்பூரா காத்திருப்பேன் பாரு! //

//நான்
டைட்டானா குடிப்பேன் பீரு//


ஏதோ பொருட்குற்றம் இருக்கறமாதிரி தெரியுதே கப்பி...!!!
பீர் அடிச்சாதானே டைட் ஆக முடியும்..?? இது எப்படி டைட்
ஆனதுக்கபுறம் பீர் அடிக்க முடியும்..?? ஹையகோ
ஆராச்சும் வந்து என் சந்தேகத்தை 'விம்' போட்டு வெளக்க
வாங்களேன்...!!! ;)))))))))))

Ur Attention Plz Sibi !! ;))))

dinesh said...

http://apdineshkumar.blogspot.com/

dinesh said...

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் nanu sarallama

palani said...

கிஸ்ஸடிக்கும் காதலியும்
ஆப்படிக்கும் மேனேஜரும்
ஒன்றுதான்
இருவருமே
நேரம் பார்த்து
கழுத்தறுப்பார்கள்!

naan rasitha kavithai

sindhu said...

koluthunga................. valthukkal

sindhu said...

nalla irukungo..................

sindhu said...

nalla irukungo..................