மக்கா! இந்த சினிமா படம் எல்லாம் பாப்பீங்க இல்ல? நாங்களும் பாப்போம். சில படங்களைப் பாக்கும் போது, தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்துக்கு நவுத்த வேண்டிய இந்த படம் மயிரிழையில் அந்த வாய்ப்பை தவற விட்டுருச்சேன்னு வருத்தமா இருக்கும். சனிப்பெயர்ச்சியும் குருப்பெயர்ச்சியும் நம்ம கையில இல்லாட்டின்னாலும் ஒரு படத்தோட க்ளைமாக்ஸை மாத்தி ஒரு கட்டத்துலேருந்து இன்னொரு கட்டத்துக்கு நகர்த்தற சக்தி மட்டும் நம்ம கையில இருந்தா...
தமிழ் சினிமாவுல கதை சொல்லிருக்கற விதத்தைப் பாத்தீங்கன்னா, பெரும்பாலும் நல்லவன் வாழ்வான் கெட்டவன் சாவான் அப்படிங்கற மாதிரியாவோ, இல்லை எல்லாம் சுபமேன்னு முடியற மாதிரியாவோ இருக்கும். ஆனா நிஜ வாழ்க்கையில பாத்தீங்கன்னா, அப்படி இருக்கறதில்லை. மேல சொன்ன இந்த இரண்டு விஷயமும் இல்லாம போறதுனால தான் தமிழ் படங்கள் அடுத்த கட்டத்துக்குப் போக முடியாம தத்தளிக்குது. படத்தோட க்ளைமாக்ஸ் இப்படி இல்லாம இந்த மாதிரி இருந்துச்சுன்னா எப்படி இருந்துருக்கும்னு ஏங்கியிருக்கோம்ல? அந்த ஏக்கத்தை ஆக்கமா மாத்தா முடிஞ்சிச்சுன்னா...மாத்திப் பாப்போமா?
படம் 1 : குஷி
ஜெனி(ஜோதிகா), சிவா சாரி ஷிவா(விஜய்) இவங்க ரெண்டு பேரும் காதலைச் சொல்லிக்காம காலேஜ் முடிஞ்சு போகும் போது ஒருத்தரை நெனச்சி ஒருத்தரு ஃபீல் பண்ண ஆரம்பிக்கிறாங்க. பிரியறதுக்கு முன்னாடி காதலைச் சொல்லிடலாமேன்னு எக்மோர் டேசனுக்கும் செண்ட்ரல் டேஷனுக்கும் போவாங்க. அங்கே ரெண்டு பேரும் ஒவ்வொரு லெட்டரை எழுதி வச்சிட்டு அங்கே இருக்கற ரெண்டு பேரு கிட்ட கொடுத்துட்டு கெளம்பிடுவாங்க. அதுக்கப்பால ரெண்டு பேரும் லெட்டரைப் படிச்சிட்டு ஒருத்தரு மனசை ஒருத்தரு புரிஞ்சுக்கிட்டு கடைசியா ஒன்னு சேர்ந்துருவாங்க...இது ஒரிஜினல் கதை.
இப்போ லெட்டர் குடுத்த எடத்துலேருந்து க்ளைமாக்ஸை மாத்தி படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி பாப்போம்.
டாக்டர்.ஷிவாவுக்காக ஜெனி ஒரு பையன் கிட்ட லெட்டர் குடுத்துட்டுப் போறாங்க. அந்த பையனுக்கு, ட்ரெயின் கெளம்புறதுக்கு முன்னாடி ஒரு தம் போட்டா நல்லாருக்குமேன்னு தோனுது. உடனே அவனும் ப்ளாட்ஃபாரத்துல எறங்கி ஒரு தம் போடலாம்னு நெனச்சி எறங்குறான். அந்த நேரம் அந்த இரெயில் பெட்டியில, ஒரு அம்மா, அப்பா கைக்குழந்தையோட ஏறுறாங்க. குழந்தை அந்த நேரம் பாத்து ஆய் போயிடுது. "ஐயய்யோ! துடைச்சி விடறதுக்கு ஒரு பேப்பர் கூட இல்லையே"ன்னு அந்தம்மா பதறுறாங்க. "இரும்மா...இங்க எதோ பேப்பர் இருக்கு என்னன்னு பாப்போம்"னு பிரிச்சு படிக்கிறாரு குழந்தையோட அப்பா. படிச்சிட்டு "ஏதோ காதல் கடிதம் மாதிரி இருக்கும்மா" அப்படிங்கறாரு. "ஆங்...கக்கா போன குழந்தைக்கு துடைச்சி விட காயிதம் இல்லாம நாம அல்லாடிட்டு இருக்கும் போது, கருவாப்பயலுக்குக் காதல் ஒன்னு தான் கேடா, கொண்டாங்க இப்படி"ன்னு புடுங்கித் துடைச்சித் தூக்கிப் போட்டுடறாங்க.
அந்த பக்கம் செண்ட்ரல் டேஷன்ல ஜெனிக்காக ஷிவா ஒரு பொண்ணு கிட்ட லெட்டர் குடுத்துட்டு போறாரு. அங்கே பாருங்க...அந்த பொண்ணு காலைலேருந்து கொலை பசி. சரி எதாச்சும் பப்ஸ் சமோசா வந்தா வாங்கி சாப்பிடலாம்னு பார்க்கறாங்க. அந்த நேரம் பாத்து ஒருத்தன் ப்ளாட்ஃபாரத்துல சாம்பார் சாதம் வித்துக்கிட்டு போறான். கோக் பிஸ்ஸா இல்லாம சாப்பிடறது கஷ்டம் தான்னாலும் ஆபத்துக்குப் பாவமில்லன்னு சாம்பார் சாதத்தை வாங்கி அபுக்கு அபுக்குன்னு முழுங்கிடறாங்க. பசி அடங்குனதுக்கப்புறம் தான் ஸ்பூன் இல்லாம கையால சாப்பிட்டுட்டோம்னு உணருறாங்க. கையைக் கழுவலாம்னு வாஷ் பேசின் போயிப் பாக்கறாங்க...தண்ணியே வரலையாம். திரும்பி சீட்டுக்கு வந்து என்ன செய்யலாம்னு யோசிக்கிறாங்க. காதல் கடிதத்துல கை தொடைச்சு தூக்கிப் போட்டுடறாங்க. ஜெனிக்கும், ஷிவாவுக்கும் ஒருத்தரு மனசுல ஒருத்தருக்காக என்ன ஃபீலிங்க்ஸ் வச்சிருக்காங்கன்னு தெரியாமலே போயிடுது.
இங்கே...இந்த இடத்துல படத்தை டைரக்டர் தன்னோட டச்சைக் காட்டறாரு. "இளம் காதலர்களே! உங்களுக்கு காதல் வந்துச்சுன்னா நேரங்காலத்தோட சொல்லிடுங்க. இல்லைன்னா உங்க காதலுக்கு ஒரு சின்ன குழந்தையும், சாம்பார் சாதமும் கூட எதிரியாகக் கூடும் - நேசத்துடன் எஸ்.ஜே.சூரியா" அப்படின்னு முடிக்கிறாரு.
படம் 2 : காதலுக்கு மரியாதை
ஜீவா(டாக்டர் இளையதளபதி) மற்றும் மினி(ஷாலினி) ரெண்டு பேரும் காதலுக்கு ரெஸ்பெட்ட்டு குடுக்கறதுக்காக மீனவர் குப்பத்துல பிரிஞ்சிடறாங்க. அதுக்கப்புறம் க்ளைமாக்ஸ் காட்சியில ஜீவா எதுக்காகவோ தன்னோட மணிப்பர்ஸை நோண்டும் போது, மினியோட செயின் அவருக்கு கெடைக்குது. அந்த செயினைக் குடுக்கறதுக்காக குடும்பத்தோட மினி வீட்டுக்குப் போவாங்க. அங்கே ஜீவாவோட அம்மா குடுத்துடுங்கங்கறதும், மினியோட அம்மா எடுத்துக்கங்கங்கறதும் அந்த சமயத்துல இளையராஜாவோட புல்லாங்குழல் பிஜிஎம்மும் ஒலிக்க எல்லாம் சுபமா படம் முடியும். படமும் நல்லாத் தான் ஓடுச்சு.
ஆனா எங்களை பொறுத்த வரை "காதலுக்கு மரியாதை" ஒரு தொலைநோக்கு பார்வை இல்லாம எடுக்கப்பட்ட ஒரு படம். இப்ப இந்த படத்தையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி பார்க்கலாமே...
க்ளைமாக்ஸ் சீன்ல டாக்டர் மணிபர்சிலேருந்து மினியோட சங்கிலியை எடுத்து பாத்து எக்கச்சக்கமா ஃபீல் பண்ணிட்டு இருப்பாரு. தன்னோட அம்மா கிட்ட "அம்மா! இது மினியோட சங்கிலி. இது என்கிட்ட இருக்கக் கூடாது. இதை அவங்க கிட்டவே திருப்பிக் குடுத்துடணும்" அப்படீம்பாரு. உடனே அவங்க அம்மா அதை கையில வாங்கி பாத்துட்டு "இண்டர்வெலுக்கு முன்னாடி வச்ச சங்கிலியை, க்ளைமாக்ஸ் சீன்ல எடுத்துப் பார்க்கச் சொல்லி உனக்கு ஐடியா குடுத்தது யாருடா? சொல்லு...படத்தோட ப்ரொட்யூசர் சங்கிலி முருகன் தானே? டேய்! நீ இந்த சங்கிலியை பாத்து ஃபீல் பண்ணதுக்கு கூட நான் வருத்தப் படலைடா...ஆனா கல்யாணி கவரிங்ல வாங்குன இந்த ஐம்பது ரூபா சங்கிலியைத் திருப்பிக் குடுக்க குடும்பத்தோட க்வாலிஸ் கார் வச்சிக்கிட்டு அவங்க வீட்டுக்குப் போகனும்னு சொல்றியே...அதை தான் என்னாலே ஜீரணிக்கவே முடியலை" அப்படீம்பாங்க.
மனைவி பேசிக்கிட்டு இருக்கறதை பார்த்த ஜீவாவோட அப்பாவும் சீனுக்குள்ளே இப்போ எண்ட்ரீ குடுக்கறாரு. இப்போ ஸ்க்ரீன்ல ஆடியன்சை நோக்கிப் பாக்கறாரு "தம்பீகளா! படிக்கிற வயசுல இந்த மாதிரி காதல் கத்திரிக்கான்னு சுத்துனா வாழ்க்கையில எந்த நாளும் முன்னேறவே முடியாது. இப்போ என்னையே எடுத்துக்கங்க...அப்படின்னு "டைரி 1946-1975" லெவலுக்குப் பேச ஆரம்பிக்கிறாரு. "ஐயயோ! இப்படியே இவரு பேசிட்டு இருந்தா அது ஈரோட்டுல பந்தல் கட்டி மைக் போட்டு பேசுனா மாதிரி ஆயிடுமே...படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாதுன்னு" ஜீவா ரூமுக்குள்ளே போய் கதவை பூட்டிக்கிறாரு. சங்கிலியை மினி கிட்ட குடுக்க முடியலையேங்கிற ஏக்கத்துல அதே சங்கிலியாலே தூக்கு போட்டுக்க முயற்சி பண்ணறாரு. ஆனா பாருங்க...சங்கிலி யாருமே எதிர்பாராவிதமா அறுந்து போயிடுது. ஜீவா தொபுக்கடீர்னு தரையில் விழறாரு...தலையில பலத்த அடிபடறதுனால திடீர்னு லூசாயிடுறாரு...
இந்த இடத்துல டைரக்டர் ஒரு பயங்கரமான பிஜிஎம் போடறாரு "இவன் வாழ்க்கையில் வசந்தம் வீசுமா?..." அப்படின்னு படத்தை முடிக்கிறாரு.
நில்லுங்க. தொலைநோக்கு பார்வைன்னு சொன்னேன் இல்லை. அதையும் வெளக்கிடறேன்...உலகத் தரத்துக்கு ஏற்ப தமிழ் சினிமாவில் சங்கிலியால் தூக்கு போட முயற்சித்த ஜீவா லூசாயிடறாரு. லூசான ஜீவா வாழ்க்கையில் வசந்தம் வீசுச்சா இல்லையான்னு சொல்லற படம் தான் "கண்ணுக்குள் நிலவு". இதுவும் ஒரு மிகமிக எதார்த்தமான ஒரு காதல் படம். ஜீவா தன்னுடைய லூசுத்தனங்களையும் மீறி எப்படி மினி மாதிரியே இருக்கற இன்னொரு ஷாலினியோட ஒன்னு சேருறாருங்கிறது தான் கதை.
ஜப்பான் படம், ஸ்பானிஷ் படம், கிழக்காப்பிரிக்கா பஞ்சாயத்து யூனியன் படம் - இதையெல்லாம் பாத்து காப்பியடிச்சு தான் நம்ம தமிழ் படங்களை நகர்த்தனும் அப்படீங்கறது பலரோட மனசுல இருக்கற தப்பான அபிப்பிராயம். சிம்பிளான ஒரு கதை, எதார்த்தமான காட்சியமைப்புகள், அதை விட நிஜவாழ்க்கையில நம்ம எல்லோராலயும் பார்த்து ஏத்துக்கக் கூடிய க்ளைமாக்ஸ் காட்சிகள் இதெல்லாம் இருந்தா நம்ம தமிழ் படங்களையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும். அதுனால "சங்கம் பிலிம்ஸ்" நிர்வாகக் குழு தீவிர ஆலோசனையில் இறங்கி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பல ஏற்பாடுகளை எடுத்துக்கிட்டு இருக்காங்க. அதையெல்லாம் வரும் நாட்கள்லே நீங்களே பாப்பீங்க.
சரி அது என்ன "நாங்களும் கடவுள்"? கவிஞர் கண்ணதாசன் ஒரு பாட்டுல சொல்லிருப்பாரு -"நான் படை(கெடு)ப்பதனால் என் பேர் இறைவன்". இப்போ சொல்லுங்க நாங்களும் கடவுள் தானே?
வாங்க கடவுள்களே வாங்க! நீங்களும் வந்து உங்க திறமைகளை எல்லாம் காட்டுங்க!
49 comments:
காலை காட்டுங்க தல! (புடிச்சி வாரத்தான்) எங்கயோ போயிட்டீங்க!
இதுக்கு தான் இனிமே ஒரே டிவிடில காதலுக்கு மரியாதை, குஷி, கண்ணுக்குள் நிலவு இதை 3ம் சேர்த்து போடாதன்னு அந்த திருட்டு டிவிடி காரன் கிட்ட சொல்லனும்! பாருங்க இப்ப அநியாயத்துக்கு ஒரு வயித்து வலி போஸ்ட் போட்டுட்டார் தல! இது ஆபீஸ் அய்யா ஆபீஸ்! வாய் விட்டு சிரிச்சா இப்ப இருக்குற நிலமைல பத்திவிட்டுடுவானுங்க:-))
//காலை காட்டுங்க தல! (புடிச்சி வாரத்தான்) எங்கயோ போயிட்டீங்க!//
காலை வார்ற அளவுக்கு நான் என்ன பாவம் செஞ்சேன் நயினாஜி?
தல! அவனவன் பிங் ஜட்டி இல்லாம அல்லாடறான்! அதிலே இருக்கும் போட்டோவிலே பிங் ஜட்டி இருக்குதே உருவிடலாமா?
//இதுக்கு தான் இனிமே ஒரே டிவிடில காதலுக்கு மரியாதை, குஷி, கண்ணுக்குள் நிலவு இதை 3ம் சேர்த்து போடாதன்னு அந்த திருட்டு டிவிடி காரன் கிட்ட சொல்லனும்! பாருங்க இப்ப அநியாயத்துக்கு ஒரு வயித்து வலி போஸ்ட் போட்டுட்டார் தல! இது ஆபீஸ் அய்யா ஆபீஸ்! வாய் விட்டு சிரிச்சா இப்ப இருக்குற நிலமைல பத்திவிட்டுடுவானுங்க:-))//
டிவிடிக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லீங்க தொல்ஸ். இந்த மூனு படத்துக்கும் பொதுவா ஒரு விஷயம் இருக்கு - அது அடுத்த கட்டத்துக்குப் போகறதை ஒரு மில்லிமீட்டர் அளவு வித்தியாசத்துல தவற விட்ட படங்கள். அந்த ஆதங்கம் தான் இந்த போஸ்ட். நீங்க கண்ணு, காது, மூக்கு வச்சி சீவி முடிச்சி சிங்காரிச்சிடாதீங்க.
முத்தலிக்குக்கு பிங் ஜட்டி அனுப்ப சொன்னா இந்த பித்தலிக்குக்கு யாரோ அவசரப்பட்டு அனுப்பிட்டாங்களே:-))
//தல! அவனவன் பிங் ஜட்டி இல்லாம அல்லாடறான்! அதிலே இருக்கும் போட்டோவிலே பிங் ஜட்டி இருக்குதே உருவிடலாமா?//
என்ன இது சின்னப்பில்லத் தனமா? எப்படி இப்படியெல்லாம் :)))
அப்பாடா இந்த பதிவை அடுத்த கட்டத்துக்கு நகத்திட்டேன் ஒத்த ஆளா! வர்ரேன் சாமீ:-))
//முத்தலிக்குக்கு பிங் ஜட்டி அனுப்ப சொன்னா இந்த பித்தலிக்குக்கு யாரோ அவசரப்பட்டு அனுப்பிட்டாங்களே:-))//
அது இந்தப் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த டைரக்டர் பாலா வாங்கி குடுத்தது.
:)
//அப்பாடா இந்த பதிவை அடுத்த கட்டத்துக்கு நகத்திட்டேன் ஒத்த ஆளா! வர்ரேன் சாமீ:-))//
அப்போ நீங்களும் கடவுள் தான். உங்களையும் பிங்க் சட்டி போட வச்சி தலைகீழே ஆசனம் செய்ய வைக்கலாம்.
//அப்போ நீங்களும் கடவுள் தான். உங்களையும் பிங்க் சட்டி போட வச்சி தலைகீழே ஆசனம் செய்ய வைக்கலாம்.//
செய்யலாம் ஆனா அதிலே ஒரு "சட்டை" சிக்கல் இருக்கு
அந்த பிங் சட்டி மேல நான் கால் சட்டை போட்டுப்பனே:-))
//செய்யலாம் ஆனா அதிலே ஒரு "சட்டை" சிக்கல் இருக்கு
அந்த பிங் சட்டி மேல நான் கால் சட்டை போட்டுப்பனே:-))//
"சட்டை" சிக்கல்களை எல்லாம் அசட்டை செய்யும் கும்பலும் ஒன்னு ரெடியா நிக்குது உங்களுக்காக
//"சட்டை" சிக்கல்களை எல்லாம் அசட்டை செய்யும் கும்பலும் ஒன்னு ரெடியா நிக்குது உங்களுக்காக//
நான் இந்த "சட்டை" ஆட்டைக்கு வரல! பெர்மிசன் போட்டுட்டு போறேன்!:-))
கலக்கிட்டேள் போங்கோ!
//கலக்கிட்டேள் போங்கோ!//
வாங்க ஆதவரே!
ரொம்ப நன்னீங்கங்கோ.
//அபி அப்பா said...
//"சட்டை" சிக்கல்களை எல்லாம் அசட்டை செய்யும் கும்பலும் ஒன்னு ரெடியா நிக்குது உங்களுக்காக//
நான் இந்த "சட்டை" ஆட்டைக்கு வரல! பெர்மிசன் போட்டுட்டு போறேன்!:-))
//
repeateeeyyyyy
எப்போ ரீலிஸ் தல!? ;))
//ஆயில்யன் said...
//அபி அப்பா said...
//"சட்டை" சிக்கல்களை எல்லாம் அசட்டை செய்யும் கும்பலும் ஒன்னு ரெடியா நிக்குது உங்களுக்காக//
நான் இந்த "சட்டை" ஆட்டைக்கு வரல! பெர்மிசன் போட்டுட்டு போறேன்!:-))
//
repeateeeyyyyy
//
அபியப்பாவோட இளஞ்சிவப்பு சட்டி அவதாரத்தை வச்சி கும்மி அடிப்பீங்கன்னு பாத்தா இப்படி ஒத்தை வார்த்தையில் ரிப்பீட்டேய் போட்டுட்டு போறீங்களே? இது நியாயமா? தர்மமா? அடுக்குமா?
//எப்போ ரீலிஸ் தல!? ;))//
ஆல்ரெடி ரிலீஸ்ட். அடுத்த கட்டமா, உலக சினிமாவில் முதல் முறையா இப்ப வந்து ஒரு வாரமா ஓடிட்டு இருக்கற ஒரு படத்தை ரீமேக் பண்ணற முயற்சியில சங்கம் பிலிம்ஸ் இறங்கியிருக்கு. இதுக்கான பேச்சுவார்த்தையில நம்ம டாக்டர்.இளையதளபதி கூட நம்ம போர்வாள் தேவ், சின்ன குத்தூசி கப்பி ஈடுபட்டிருக்காங்க.
இளையதளபதி நடிச்சி ரீமேக் பண்ணப் போற அந்த படம் - நான் கடவுள்.
//நாங்களும் கடவுள் தான்//
அதுல யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது. அப்படியே இருந்தாலும் இந்த மூணு படத்தை நாம் பாத்து இருக்கோம் என்று தெரிந்தால் சந்தேகம் சூரியனை கண்ட பனி போல் விலகி விடும் :)
தல!
ஆபிஸ்ல ரொம்பவே வெட்டியா இருக்கீங்க போல டாக்டர் விஜய் படமா பார்த்து யோசிச்சு இருக்கீங்களே அதுனால் கேட்டேன்.
குஷி! படத்தில் கிளைமாக்ஸை தான் மாத்தனும். மும்ஸ் வந்தப்பவே படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்கலாம். அந்த ஆங்கிள் ல யோசிங்க.
அதே சமயம் மும்ஸ் சை பற்றி ஒரு வார்த்தை கூட கூறாத உம் கயமைத்தனத்தை கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்.
//தல! அவனவன் பிங் ஜட்டி இல்லாம அல்லாடறான்! அதிலே இருக்கும் போட்டோவிலே பிங் ஜட்டி இருக்குதே உருவிடலாமா?//
லங்கோடு கட்டுற சாமி இதை உருவி என்ன பண்ண போகுது?
//இல்லைன்னா உங்க காதலுக்கு ஒரு சின்ன குழந்தையும், சாம்பார் சாதமும் கூட எதிரியாகக் கூடும் - நேசத்துடன் எஸ்.ஜே.சூரியா//
I strongly condemn this!
I strongly condemn this!
I strongly condemn this!
:)))
//டாக்டர்.ஷிவாவுக்காக ஜெனி ஒரு பையன் கிட்ட லெட்டர் குடுத்துட்டுப் போறாங்க// = கைப்புள்ள
//அந்த பக்கம் செண்ட்ரல் டேஷன்ல ஜெனிக்காக ஷிவா ஒரு "பையன்" கிட்ட லெட்டர் குடுத்துட்டு போறாரு// = அபி அப்பா
முதல் பத்து பின்னூட்டங்களைப் படிக்கும் போது, கற்பனை இப்படித் தான் போகுது! :)
//சங்கிலியை மினி கிட்ட குடுக்க முடியலையேங்கிற ஏக்கத்துல அதே சங்கிலியாலே தூக்கு போட்டுக்க முயற்சி பண்ணறாரு//
Chain Dog Billionaire ???
அடுத்த கட்டத்துக்கு எப்படி எல்லாம் ஒத்தை ஆளா நகர்த்துறீங்க தல! அவ்வ்வ்வ்வ்!
//அதே சமயம் மும்ஸ் சை பற்றி ஒரு வார்த்தை கூட கூறாத உம் கயமைத்தனத்தை கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்.//
இதை அடியேன் கண்மூடித்தனமாக ரிப்பீட்டறேன்! :)
//அதே சமயம் மும்ஸ் சை பற்றி ஒரு வார்த்தை கூட கூறாத உம் கயமைத்தனத்தை கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்.//
இதை அடியேன் கண்மூடித்தனமாக ரிப்பீட்டறேன்! :)
//டாக்டர்.ஷிவாவுக்காக//
இதான் கைப்பு டச்சு. :))
ரொம்ப நாளைக்கு அப்புறம் புல் பார்முக்கு வந்து இருக்கீங்க போல. ரெம்ப சந்தோசமா இருக்கு. :)
//இல்லைன்னா உங்க காதலுக்கு ஒரு சின்ன குழந்தையும், சாம்பார் சாதமும் கூட எதிரியாகக் கூடும் - நேசத்துடன் எஸ்.ஜே.சூரியா//
சின்ன குழந்தை எப்படி எதிரியாச்சு? இங்க தான் நீங்க ஒரு இளம் தந்தையா, அர்ச்சனா அப்பாவா யோசிக்கனும். :))
ஒரு டயப்பர் கட்டி விட்ருந்தா இப்படி ஆயிருக்குமா?
எனவே பெற்றோர்களே ஒழுங்கா உங்க குழந்தைகளுக்கு டயப்பர் மாத்துங்க!
இப்படிக்கு டயப்பருடன்
- அம்பி.
இது எப்படி இருக்கு? :))
அல்டிமேட்டூ :)))
தல ஃபுல் பார்ம்ல புகுந்து விளையாடியிருக்கீங்க ...டாக்டர் மாதிரியே பல பேரு திரியறாங்க...ஒவ்வொருத்தரையா கட்டம் கட்டி அடுத்த கட்டத்துக்கு நவுத்துங்க :))
//தல ஃபுல் பார்ம்ல புகுந்து விளையாடியிருக்கீங்க ...டாக்டர் மாதிரியே பல பேரு திரியறாங்க...ஒவ்வொருத்தரையா கட்டம் கட்டி அடுத்த கட்டத்துக்கு நவுத்துங்க :))//
மிஸ்ட்டர்ர் கப்பியஜித் ரே! இதை நான் மூர்க்கத்தனமாக மறுக்கிறேன். எதோ நான் டாக்டர் மேல இருக்கற காழ்ப்புணர்ச்சியாலே இப்படி எழுதுனாப்புல சுத்த நான்சென்ஸ் மாதிரி பேசறீங்க. உங்களை மாதிரி நானும் ஒரு சினிமா ரசிகன் தான்...என்ன நீங்க ஏற்கனவே அடுத்த கட்டத்துல இருக்கற ஸ்பானிஷ் படமா பாக்கறீங்க...நான் நம்ம தமிழ் படத்தை பாத்து அடுத்த கட்டத்துக்கு நகர்த்தணும்னு ஆசை படறேன்.
இதுக்கும் டாக்டருக்கும் முடிச்சி போடறது கொஞ்சம் கூட நல்லாலை.
//கப்பி | Kappi said...
அல்டிமேட்டூ :)))
தல ஃபுல் பார்ம்ல புகுந்து விளையாடியிருக்கீங்க ...டாக்டர் மாதிரியே பல பேரு திரியறாங்க...ஒவ்வொருத்தரையா கட்டம் கட்டி அடுத்த கட்டத்துக்கு நவுத்துங்க :))//
ரிப்பீட்டே!!!
தல,
அடுத்து நம்ம தலயையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துங்க :)
//அதே சமயம் மும்ஸ் சை பற்றி ஒரு வார்த்தை கூட கூறாத உம் கயமைத்தனத்தை கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்.//
அப்போ நீங்க ஒரு பதிவெழுதி மும்ஸைப் பிரதானமா வச்சி ஒரு முழு நீள க்ளைமாக்ஸ் உருவாக்குங்கோ... நீங்களும் கடவுளாகுங்கோ.
:)
//தீர்ப்பு சொல்றதுக்கு வேணும் சொம்பு
டார்ச்சர் பண்றதுக்குன்னே பொறந்தவன் சிம்பு
நீ லுக்கு விட்டா என்னை தாக்குதடி அம்பு
என் வாழ்நாள் பூராவும் வேணுமடி உன் அன்பு//
காதல் சொட்டுது
:)
//முதல் பத்து பின்னூட்டங்களைப் படிக்கும் போது, கற்பனை இப்படித் தான் போகுது! :)//
போகும்...போகும்...ஏன் போகாது? உங்களையும் அபியப்பா மாதிரி பிங்க் சட்டியோட தலைகீழ் ஆசனம் போட வச்சா தெரியும்.
//Chain Dog Billionaire ???
//
ஹி...ஹி...ஆமா :)
//இதை அடியேன் கண்மூடித்தனமாக ரிப்பீட்டறேன்! :)//
இதுல கேயாரெசும் மங்கை சிவாவும் பார்ட்னர்ஷிப் வேறே?
:)
//இதான் கைப்பு டச்சு. :))
ரொம்ப நாளைக்கு அப்புறம் புல் பார்முக்கு வந்து இருக்கீங்க போல. ரெம்ப சந்தோசமா இருக்கு. :)//
வளர நன்னி அம்பி :)
//தல,
அடுத்து நம்ம தலயையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துங்க :)//
இதை செய்யுமாறு திருவாளர் கப்பியஜித் ரே அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
//சின்ன குழந்தை எப்படி எதிரியாச்சு? இங்க தான் நீங்க ஒரு இளம் தந்தையா, அர்ச்சனா அப்பாவா யோசிக்கனும். :))
ஒரு டயப்பர் கட்டி விட்ருந்தா இப்படி ஆயிருக்குமா?
எனவே பெற்றோர்களே ஒழுங்கா உங்க குழந்தைகளுக்கு டயப்பர் மாத்துங்க!
இப்படிக்கு டயப்பருடன்
- அம்பி.
இது எப்படி இருக்கு? :))//
சூப்பர். குஷி பட டைரக்டரா அம்பி இருந்தா நீங்க மேலே சொன்னா மாதிரியே போட்டு படத்தை முடிக்கலாம்.
:)
//மங்கை சிவாவும்//
haa haa haa
siva eppo mangai aanaaru? :))
singapore-ai singai nu churukkalaam!
aanaa mangalore-ai mangalore-nu thaan churukkanum thala! :)
"ஆங்...கக்கா போன குழந்தைக்கு துடைச்சி விட காயிதம் இல்லாம நாம அல்லாடிட்டு இருக்கும் போது, கருவாப்பயலுக்குக் காதல் ஒன்னு தான் கேடா, கொண்டாங்க இப்படி"
LOL!! :D
விஜய நீங்க அறிமுகப் படுத்தும் போது, 'டாக்டர்' அப்படீங்கறீங்களே!!! அங்க விழுந்து சிரிச்சவந்தாங்க....
என்னா நக்கலு!!!! ரூம்போட்டு யோசிப்பாய்ங்களோ?
ம்ம்.... நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு!!!! நடத்துங்க நடத்துங்க...
//singapore-ai singai nu churukkalaam!
aanaa mangalore-ai mangalore-nu thaan churukkanum thala! :)//
என்னண்ணே இப்படி கேட்டுப்புட்டீங்க? அரசியல் சட்டத் திருத்தம் செஞ்சு பெங்களூர் பெங்கை ஆகி ரொம்ப நாளாச்சு. அடுத்தது மங்களூர் மங்கை ஆவுது. இதுக்கடுத்த கட்டமா அட்லாண்டா -அட்லை, பிலடெல்பியா - பிடலை. பென்சில்வேனியா - பென்னை, நியூ ஜெர்சி, நியூ யார்க் - புதுவை(கிழக்கு), புதுவை(மேற்கு)ன்னு ஆக்கப் போறாங்களாம். தெரியாதா உங்களுக்கு.
:)
//CVR said...
"ஆங்...கக்கா போன குழந்தைக்கு துடைச்சி விட காயிதம் இல்லாம நாம அல்லாடிட்டு இருக்கும் போது, கருவாப்பயலுக்குக் காதல் ஒன்னு தான் கேடா, கொண்டாங்க இப்படி"
LOL!! :D
//
லொள்ளோட சிரிச்சதுக்கு நன்றிங்க ஒளி ஓவியரே!
:)
//விஜய நீங்க அறிமுகப் படுத்தும் போது, 'டாக்டர்' அப்படீங்கறீங்களே!!! அங்க விழுந்து சிரிச்சவந்தாங்க....
என்னா நக்கலு!!!! ரூம்போட்டு யோசிப்பாய்ங்களோ?
ம்ம்.... நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு!!!! நடத்துங்க நடத்துங்க...//
வருகைக்கும் வந்து சிரிச்சதுக்கும் நன்றிங்க ஆதவரே!
Boss,கலக்கிடீங்க Boss.
//ஆங்...கக்கா போன குழந்தைக்கு துடைச்சி விட காயிதம் இல்லாம நாம அல்லாடிட்டு இருக்கும் போது, கருவாப்பயலுக்குக் காதல் ஒன்னு தான் கேடா, கொண்டாங்க இப்படி"ன்னு புடுங்கித் துடைச்சித் தூக்கிப் போட்டுடறாங்க.//
விழுந்து விழுந்து சிரிச்சேன். Continue பண்ணுங்க Bossu.
Post a Comment