Monday, December 15, 2008

ஊழல் பதிவர் தேவ் - சில பகிரங்கக் கேள்விகள்!

ஜங்கத்தின் ஜிங்கம், சங்கப் போர்வெல்...ச்சே போர்வாள், அண்ணன் தேவ்-க்கு சில பகிரங்கக் கேள்விகள்!

1. எப்போ வருவார், எப்படி வருவார்-ன்னு தெரியாத தலைவர் கூட எந்திரன் பட ஷூட்டிங்கைத் தொடங்கிட்டாரு! ஆனால் பல படங்களுக்குப் பூஜை போட்டு, பேமன்ட்டை மட்டும் லம்ப்பா வாங்கிய நீங்க, இப்போ "தலைமறைவா" என்ன செஞ்சிக்கிட்டு இருக்கீங்க?

2. அத்தனை படத்தின் கதாநாயகிகளையும் அவர்கள் அம்மாக்களையும் அப்பவே புக் பண்ண நீங்க, ஏன் இன்னும் கதாநாயகர்களையும் அவர்கள் அப்பாக்களையும் புக் பண்ணாம இருக்கீங்க?

3. போன மாசம் அந்தக் கதாநாயகிகளில் இரண்டு பேர், தங்கள் சீமந்தப் பத்திரிகையவே சங்கத்துக்கு அனுப்பி இருக்காங்க!
இதைப் பார்த்துட்டு மனமொடிந்து போன தளபதி சிபி, சங்கத்தின் 22ஆம் மாடியில் இருந்து தற்கொலை செஞ்சுக்கப் பாத்தாரு!
ஆனா ஆஸ்பத்திரியில் இருந்த சிபிக்கு, ஒரு சாத்துக்குடிப் பழம் கூட நீங்க அனுப்பி வைக்காததன் காரணம் என்ன?

4.
* விசாவதாரம்,
* பாபாகன்,
* ஷூ லேசு,ப்ரெளன் சாக்சு,
* அஞ்சரைக்குள்ள வண்டியிலே ராம்
* வெள்ளை மாளிகை 305-இல் கேஆரெஸ்,
* பதிவர் ஜிராவின் அவனோட ராவுகள்,
- இது போன்ற ஒலகத் தரம் வாய்ந்த படங்களுக்கு போட்ட ஒப்பந்தத்தின் கதி என்ன ஆச்சு?

5. சங்கத்தின் என்றும் பதினாறான எங்கள் ராயலை இந்தியாவில் இருந்து இந்தோனிஷியாவுக்கு ஏன் நாடு கடத்தினீங்க? அவன் செய்த குற்றம் தான் என்ன?

6. நீங்க வேலூர் ஜெயிலில் இருந்த போது, உங்க சார்பா பதிவு போட்ட CHINNA BOSS, உங்க வாரிசா? பினாமியா? போலியா?

7. சுட்டி விகடனில் வந்த உங்க "ஜொள்ளுப் பேட்டை"க்கு, சென்சாரில் முறையான அனுமதி வாங்கினீங்களா?

8. கோவியின் நாடக சபா-ன்னு நீங்க பதிவு போட்ட ஒரே காரணத்தால், பதிவர் கோவி.கண்ணன் இன்று விளிம்பு நிலைப் பதிவர் ஆகி விட்டார்!
கண்ட விவசாயிகளும் அவருக்கு Blog-O-Graphy போட்டு Mammo-graphy செய்யறாங்க!

விளிம்பு நிலைப் பதிவர், கோவி. கண்ணனின் மறு வாழ்வுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

9. முன்னாள் அட்லாஸ் சிங்கங்களான
* ரிஷான் ஷெரீப்,
* இச்-சின்னப்பையன்,
* ஆயில்யன்,
* கானா பிரபா
என்ற நால்வர் கூட்டணி, உங்க கிட்ட சங்கத்தை விலை பேசறாங்களாமே? அது உண்மையா?

10. சங்கத்தின் ரெண்டு போட்டியை, எதுக்கு மூன்றில் நடத்துனீங்க?
நீங்க "அதுல" மட்டும் தானே வீக்கு? கணக்குலயுமா வீக்கு?


மேற்கண்ட ஒவ்வொரு கேள்விக்கும் தேவ் அண்ணாத்த மட்டுமே பதில் சொல்லணும்-னு அவசியம் இல்லை! அவர் சார்பா யார் வேணும்னாலும் பதில் சொல்லலாம்!
குறிப்பா, அனானி பதில்களுக்கு அதிக மதிப்பெண்கள் உண்டு-ன்னு சொல்லிக்க கடமைப்பட்டுள்ளேன்! :)

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத தேவ், இங்கு வரும் தவறான பதில்களைத் திருத்தலாம்! தன் தரப்பு பதிலைத் தாராளமாகச் சொல்லலாம்! அதற்கான முழு உரிமையும் அவருக்கு கொடுக்கிறோம்!

தேவ் அண்ணனின் ஊழலை எதிர்த்து, தமிழ்ப் பதிவர்கள் தங்கள் தார்மீகக் கடமையாத்தணும்-ன்னு சங்கத்துச் சிங்கங்களின் சார்பாக கர்ஜித்து அமைகிறேன்!
2009-இல் சங்கம் மந்திரிசபையின் விஸ்தரிப்புக்கு இதெல்லாம் உதவும்!

தேவ் "நாமம்" வாழ்க!
நன்றி! வணக்கம்!
(மற்ற சிங்கங்களின் மேலும் கேள்விகள்/வேள்விகள் தொடரும்...
இப்படிக்கு ஆண்மீகப் பதிவர், கேஆரெஸ்)

41 comments:

நாகை சிவா said...

:)))

"ஆண்"மிகப் பதிவர் கே.ஆர்.எஸ். சை என் கட்சிக்காரர் "போர்"வாள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

என் கட்சிக்காரர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் விளக்கம் அளிக்கும் முன்னாலே ஊழல் பதிவர் என கட்சிக்காரர் மேல் பழி சுமத்தி விட்டார். இதற்காகவே அவர் மேல் மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டும் என எச்சரிக்கை செய்கிறேன்.

நாகை சிவா said...

1, ஆபிசர், கோடு அடிச்சுக்கிட்டு இருக்குற மாதிரி பாவ்லா பண்ணிக்கிட்டு இருக்கார்.

2, லூசாய்யா நீ... பாலகனாகவே இருந்தா எப்படி? ஏன் கேள்வி கேட்டப்தை விட்டுட்டு யோசி பதில் கிடைக்கும்.

3,பொறாமை ஒரு கொடிய நோய். அந்த நோயை ஊக்கப்படுத்த வேண்டாம் என்ற காரணத்தில் தான் சிபியை சந்திப்பதை தவிர்த்தேன்

நாகை சிவா said...

4, வானரம் ஆயிரம், கன்னிவெடி கப்பிராஜ், தெனாவெட்டி,ஜொள்ளு விட போறோம் போன்ற படங்களை அந்த பட்டியலில் சேர்க்க வில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சேர்க்க மறுத்தால் வன்மையாக கண்டிக்கவும் கடமைப்பட்டு இருக்கிறேன்.

5, ராயல் செய்த குற்றத்தை சபையில் சொல்ல எனக்கு கூச்சமாக இருக்கு. அதனால் அதை ராயலே வந்து இங்கு கூறுவார்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாகை சிவா said...
"ஆண்"மிகப் பதிவர் கே.ஆர்.எஸ். சை என் கட்சிக்காரர் "போர்"வாள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்//

நன்றி புலி! :)

//என் கட்சிக்காரர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு//

உங்க கட்சிக்காரரா?
அப்போ நீங்க என்னா கட்சி? அதைச் சொல்லுங்க! தேர்தல் வருதுல்ல? :)

//இன்னும் விளக்கம் அளிக்கும் முன்னாலே ஊழல் பதிவர் என கட்சிக்காரர் மேல் பழி சுமத்தி விட்டார்//

எப்படி இருந்தாலும் வழக்கு முடிஞ்சப்புறம் தேவ் பீஸ் கொடுக்கலை-ன்னு நீங்க சுமத்தத் தான் போறீங்க! அதான் ஒரு உதவியா...

//இதற்காகவே அவர் மேல் மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டும் என எச்சரிக்கை செய்கிறேன்//

ஹிஹி!
மானம் நஷ்டமெல்லாம் ஆச்சா? ஜொள்ளவே இல்ல? :)

நாகை சிவா said...

6, இதே கேள்வியை சிபி சிறையில் இருந்து போது பதிவு போட்ட ஜொள்ளு பாண்டியை கேட்டீர்களா? அவர் தளபதி என்பதால் கேட்க வில்லை, நான் வெறும் போர்வாள் தானே. அதான் இந்த கேள்வி வருது. சங்கத்தில் நிகழும் இந்த ஏற்றத்தாழ்வுகளை நான் உள்ளம் குமற குமற கண்டும் காணாமல் உள்ளேன்.

7, காப்பிரைட் குடுத்துட்டு கொடுக்கலாம் என்று சொன்னாங்க, அது என்ன பிசாத்து காப்பினு அதை விட சூப்பரா ஒரு குவாட்டரை வாங்கி பாண்டிக்கிட்ட குடுத்து ரைட் சொல்லிட்டு தான் விகடனுக்கு கொடுத்தேன்.

நாகை சிவா said...

8, செயற்குழுவை கூட்டி விளிம்பு நிலையில் ரொம்ப நேரமாக நிற்பவர்களை தள்ளி விடுவதற்கு ஒரு குழு அமைக்க ஏற்பாடு செய்கிறேன். கிடைக்குற கேப்பில் எல்லாம் (சும்மா கிடக்குற நிலத்தில்) எல்லாம் விவசாயம் பாக்கும் விவசாயிகளுக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கவும் உறுதி அளிக்கிறேன்.

9, அப்பட்டமான பொய், அவங்க எப்ப என் கிட்ட பேசினாங்க. நான் தானே.. எதுக்கு தேவையில்லாம... ஆதாரம் இருக்கா???

Kannabiran, Ravi Shankar (KRS) said...

புலி களத்தில் எறங்கிடுச்சே! :))))

நாகை சிவா said...

10, மூன்றுக்குள் இரண்டு அடக்கம் என்ற காரணத்தினாலே அதை நடத்தினேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// நாகை சிவா said...
8, செயற்குழுவை கூட்டி விளிம்பு நிலையில் ரொம்ப நேரமாக நிற்பவர்களை தள்ளி விடுவதற்கு ஒரு குழு அமைக்க ஏற்பாடு செய்கிறேன்//

:))

//கிடைக்குற கேப்பில் எல்லாம் (சும்மா கிடக்குற நிலத்தில்) எல்லாம் விவசாயம் பாக்கும் விவசாயிகளுக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கவும்//

ஒரு வாசகம்-னாலும் திருவாசகமா சொன்னீங்க புலி! :)

ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


இம்புட்டு குற்றசாட்டுகளை சுமத்தியும் அண்ணன் சிங்கிளா சைலண்டா இருக்காருன்னா

சிங்கம்லே!!!!!!

ஆயில்யன் said...

பெரிய பாண்டியும் சின்ன பாண்டியும் கூட்டணி போட்டிருக்காங்களா அது சரி !

வெளங்கிடும் வ.வா.சங்கம் :)))))))))))

ஆயில்யன் said...

மீ த பத்தும் அப்புறமாட்டிக்கு பதின்னொண்ணும் பெறவு வாரேன் :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆயில்யன் said...
மீ த பத்தும் அப்புறமாட்டிக்கு பதின்னொண்ணும் பெறவு வாரேன் :)))//

ஒ...பதினொன்னாம் நம்பர் குற்றச்சாட்டு வேற இருக்கா? அதுவும் ஆயில்ஸ் சொல்றாரு-ன்னா கண்டிப்பா வழுக்கி விழறா மாதிரி தான் இருக்கும்! :)

பரிசல்காரன் said...

//* இச்-சின்னப்பையன்,//

மிகவும் ரசித்தேன் ஜி!!!

ஆட்காட்டி said...

]

இலவசக்கொத்தனார் said...

கட்சியின் உண்மைத் தொண்டன் கழகப் போர்வாள் தம்பி தேவினைப் பார்த்து நேத்துப் பெய்த மழையில் முளைத்த காளான்கள் கேள்வி கேட்பதும், அதனைக் கூட இருந்து கடலைக்காய்க்காக ஜால்ரா அடிக்கும் சின்னப்பையன்கள் சுற்றி நிற்பதும் பார்க்க மனம் வருத்தமாக இருக்கிறது. தங்கத் தம்பிக்குக் கட்டாயங்கள் பல இருக்கலாம். சில வாக்குறுதிகளை இப்பொழுது நிறைவேற்றவில்லை என்றாலும் அடுத்த தேர்தலுக்கு முன் நிறைவேற்றலாம் அல்லது அடுத்த தேர்தலில் நிறைவேற்றுவேன் என மீண்டும் வாக்குறுதி தரலாம். ஆனால் அதற்காக அவரின் அடிப்படை நாணயத்தை சந்தேகப்படுவது என்பது சற்றும் அனுமதிக்க முடியாத ஒன்று. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
நேத்துப் பெய்த மழையில் முளைத்த காளான்கள் கேள்வி கேட்பதும்//

ஒரு சின்ன திருத்தம் ப்ளீஸ்...
நேத்துப் பெய்த மழையில் "இலவசமாக" முளைத்த காளான்கள் கேள்வி கேட்பதும் :)

//அதனைக் கூட இருந்து கடலைக்காய்க்காக ஜால்ரா அடிக்கும் சின்னப்பையன்கள் சுற்றி நிற்பதும்//

கடலைக்காய்-ன்னா கேவலமாப் போச்சா கொத்தனாரே உமக்கு? போயி தேசி கடைல கடலைக்காய், கடலை எண்ணெய் வாங்கிப் பாருங்க! மதிப்பு தெரியும்!

//தங்கத் தம்பிக்குக் கட்டாயங்கள் பல இருக்கலாம்//

அப்போ வெள்ளித் தம்பிக்கு கட்டாயம் இல்லையா?
இதுக்கு ஈயமும் பித்தளையுமான நீங்க சப்போர்ட்டா?

//சில வாக்குறுதிகளை இப்பொழுது நிறைவேற்றவில்லை என்றாலும் அடுத்த தேர்தலுக்கு முன் நிறைவேற்றலாம் அல்லது அடுத்த தேர்தலில் நிறைவேற்றுவேன் என மீண்டும் வாக்குறுதி தரலாம்//

ஹா ஹா ஹா
இதுக்கு தேவ் அண்ணனை டீசென்ட்டாவே திட்டி இருக்கலாம்! :)

//ஆனால் அதற்காக அவரின் அடிப்படை நாணயத்தை சந்தேகப்படுவது என்பது//

தேவ் அண்ணனைத் தானே சந்தேகப் பட்டோம்! அவர் வாலெட்டையோ, அதில் உள்ள நாணயத்தையோ நாங்க ஜந்தேகப்படுவோமா? அது மகா பாவம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பரிசல்காரன் said...
//* இச்-சின்னப்பையன்,//

மிகவும் ரசித்தேன் ஜி!!!//

அட, இந்தச் சின்னப்பையன் என்பதைத் தமிழிலக்கணப் படி இச்-சின்னப்பையன்-ன்னு சொல்ல வந்தேங்க! வேற ஒன்னுமில்லை பரிசல்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆட்காட்டி said...
]//

[

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆயில்யன் said...
பெரிய பாண்டியும் சின்ன பாண்டியும் கூட்டணி போட்டிருக்காங்களா அது சரி !//

அட அது யாருங்க பாண்டி சகோதரர்கள்?

//வெளங்கிடும் வ.வா.சங்கம் :)))))))))))//

அதுக்குத் தானே இம்புட்டு கஷ்டப் படறோம்! :)

இராம்/Raam said...

:))

இராம்/Raam said...

//:))//

மூத்த பதிவர் ஆகிட்டா இவ்வளவு பெரிய கமெண்ட்தான் போடனுமாம்.... :)))

இராம்/Raam said...

ஐயா துருபிடிச்ச போர்வாளு, உருப்படியா ஒரு படத்தையாவது எடுத்து முடிச்சிருங்கய்யா.... :(

முதலுக்கே மோசம் வர வைச்சிராதீங்க..

குடுகுடுப்பை said...

உள்குத்து வெளிகுத்தெல்லாம் இல்லைன்னு நெனச்சு ஒரு பின்னூட்டம் போட்டுக்கறென்

நசரேயன் said...

இது ஒன்னும் பதிவர் சண்டை இல்லையே

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நசரேயன் said...
இது ஒன்னும் பதிவர் சண்டை இல்லையே//

இல்லை நசரேயன்!
இது சும்மான்னா இரு டிவிக்களின் சண்டை! கடைசீல கட்டிப் புடிச்சி போஸ் கொடுதுருவம்ல? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வருங்கால முதல்வர் said...
உள்குத்து வெளிகுத்தெல்லாம் இல்லைன்னு நெனச்சு ஒரு பின்னூட்டம் போட்டுக்கறென்//

இந்தப் பின்னூட்டத்திலும் எங்க தானைத் தலைவன் கொத்தனாரு உகு/வெகு கண்டு புடிப்பாரு! நீ வா தலைவா! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இராம்/Raam said...
ஐயா துருபிடிச்ச போர்வாளு//

ஓ துருவே பிடிச்சிருச்சா? :)

//உருப்படியா ஒரு படத்தையாவது எடுத்து முடிச்சிருங்கய்யா.... :(//

"உருப்படியை" வைத்து படத்தை முடிச்சிரு-ன்னு தப்பான பொருள் எடுத்துக்கப் போறாரு போர்வாள்! தெளீவா சொல்லிரு ராயலு! :)

//முதலுக்கே மோசம் வர வைச்சிராதீங்க..//

முதலா?
போர்வாள் ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனி மொதலு, தனித்தனி பதிவு போடப் போறாரு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இராம்/Raam said...
:))//

//இராம்/Raam said...
//:))//

மூத்த பதிவர் ஆகிட்டா இவ்வளவு பெரிய கமெண்ட்தான் போடனுமாம்.... :)))//

அடங்கொக்க மக்கா!
ராயலே சிரிப்பான் போட்டுக்கிட்டு, அடுத்த பின்னூட்டத்தில்....
சொந்தச் சிரிப்பானுக்கே சிரிப்பான் போடுறாரே! சத்தியமா இவர் மூமூமூமூத்த பதிவரு தான்!

சொந்தச் சிரிப்பானுக்கே சிரிப்பான் = சொ.சி.சி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆயில்யன் said...
இம்புட்டு குற்றசாட்டுகளை சுமத்தியும் அண்ணன் சிங்கிளா சைலண்டா//

ஆயில்ஸ்! இதெல்லாம் குடும்பச் சண்டை!
இம்புட்டு குற்றசாட்டுகளை சுமத்தியும் எங்க அண்ணனை சைலன்ட்-ன்னு சொல்லுங்க ஒத்துக்கறோம்! ஆனா சிங்கிள் ன்னு சொல்லி இன்சல்ட் பண்ணீங்க....பொங்கிருவோம்! ஆமா! :))

கோவி.கண்ணன் said...

//விளிம்பு நிலைப் பதிவர், கோவி. கண்ணனின் மறு வாழ்வுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?//

கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுக்க ச் சொல்லுங்க, புள்ளகுட்டிக்காரன்

சின்னப் பையன் said...

மீ த பேட் எண்ட்ரி... ச்சீ... லேட் எண்டரி....

சின்னப் பையன் said...

// பரிசல்காரன் said...
//* இச்-சின்னப்பையன்,//

மிகவும் ரசித்தேன் ஜி!!!

//

ஏம்ப்பா, ச்சும்மாவே இருக்க மாட்டியா நீ????????

சின்னப் பையன் said...

// இலவசக்கொத்தனார் said...
கட்சியின் உண்மைத் தொண்டன் கழகப் போர்வாள் தம்பி தேவினைப் பார்த்து நேத்துப் பெய்த மழையில் முளைத்த காளான்கள் கேள்வி கேட்பதும், அதனைக் கூட இருந்து கடலைக்காய்க்காக ஜால்ரா அடிக்கும் சின்னப்பையன்கள் சுற்றி நிற்பதும் பார்க்க மனம் வருத்தமாக இருக்கிறது.
//

ஜி, இசையில் எனக்கு ஆர்வம் இருக்குங்க.. ஆனா எனக்கு பிடிச்ச வாத்தியம்(!!) ஜால்ரா இல்லீங்கண்ணா!!!! அவ்வ்வ்..

சின்னப் பையன் said...

// வருங்கால முதல்வர் said...
உள்குத்து வெளிகுத்தெல்லாம் இல்லைன்னு நெனச்சு ஒரு பின்னூட்டம் போட்டுக்கறென்

//

இங்கே ரத்த ஆறே ஓடிட்டிருக்கு, ஒருத்தரு ஒரு குத்து கூட இல்லேன்றாரே!!!!!!!

ILA (a) இளா said...

:)

மூத்த பதிவர் ஆகிட்டா இவ்வளவு பெரிய கமெண்ட்தான் போடனுமாம்.... :)))

ILA (a) இளா said...

இராமு, இன்னும் நீங்க மூத்தப்பதிவர் ஆகலை.அதாவது முத்தப்பதிவராம்.

ILA (a) இளா said...

//அதற்காக அவரின் அடிப்படை நாணயத்தை சந்தேகப்படுவது என்பது சற்றும் //
காசு குடுத்து சரி பண்ணிடலாம்னு சொல்ல வர்றீங்கதானே.

M.Rishan Shareef said...

//* வெள்ளை மாளிகை 305-இல் கேஆரெஸ்,//

பார்த்துங்க அங்கிள்..இப்ப அதில இருக்கிறவங்களத்தான் ஷூவால அடிக்கிறாங்களாம்.. :P

அதுல இன்னுமா மோனிகா வேலை பார்க்கிறாங்க ? நெசமாலுமே தெரியாமத்தான் கேக்குறேன் :)

M.Rishan Shareef said...

//முன்னாள் அட்லாஸ் சிங்கங்களான
* ரிஷான் ஷெரீப்,
* இச்-சின்னப்பையன்,
* ஆயில்யன்,
* கானா பிரபா
என்ற நால்வர் கூட்டணி, உங்க கிட்ட சங்கத்தை விலை பேசறாங்களாமே? அது உண்மையா?//

இந்த மேட்டர் எப்படி லீக்காச்சுன்னு தெரியலையே :(

Unknown said...

had hearty laugh after a long time.