"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்"
என்று உற்சாகமாகப் பாடியவாறே சங்கத்து பில்டிங்கினுள் நுழைகிறார் கைப்பு!
அங்கே இளா, தேவ், ஜொள்ளுப் பாண்டி, புலி, தம்பி கதிர், 'ராயல்' ராம் ஆகியோர் கவலையோடு முகத்தைத் தொங்கப் போட்ட படி அமர்ந்திருக்க வீடியோ கான்பரன்ஸில் கப்பி, வெட்டி மற்றும் நாமக்கல் சிபி ஆகியோரும் கவலை தோய்ந்த முகங்களுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
"என்னாது சங்கத்துல சலசலப்பேயே காணோம்!"
என்றவாறே எல்லோரையும் ஒரு கணம் உற்று நோக்குகிறார் தல!
தல : "அட என் அப்பிரண்டிசுகளா! ஏன்யா எல்லாரும் கவலையா இருக்கீங்க?"
தம்பி : "தல எங்களை ஒண்ணும் கேக்காதீங்க! நாங்க வருத்தமா இருக்கோம்"
தல : "வருத்தமா இருக்கீங்களா? என்னாத்துக்கு? அட சிங்கங்களா! இது வருத்தப் படாத வாலிபர் சங்கம்யா! இங்கன இருந்துகிட்டு அதுவும் நானும் இருக்கும்போது வருத்தப் படலாமா? என்னன்னு சொல்லுங்கய்யா"
கப்பி : "வேணாம் தலை! விட்டுடுங்க! நாங்க பாத்துக்குறோம்"
தல : "என்னாது இது! சின்னப் புள்ளத் தனமா! ராஸ்கல்ஸ்! இவ்ளோ நேரமா கேக்கிறேன்! ஒருத்தரும் சொல்ல மாட்டேங்குறீங்க! இப்ப மட்டும் சொல்லலே! அப்புறம் என்ன நடக்கும்னே தெரியாது சொல்லிட்டேன்! ஆமா"
என்று ஒரு அதட்டல் போட சிங்கங்கள் அனைவரும் ஒரு கணம் ஆடிப் போய்விடுகின்றனர்!
நாமக்கல் சிபி ஒரு நிமிடம் ஆஃப் லைனில் சென்று விட்டு வருகிறார்!
இளா : "சரி தல! நீங்க இவ்ளோ தூரம் கேக்குறீங்க! அதனால சொல்றோம்"
தல : "ம் சொல்லு!"
இளா :"அதாவது தல! சங்கத்தோட ரெண்டாவது ஆண்டு விழா வருதில்லையா?"
தல : "ஆமா அதுக்கென்ன இப்போ?"
புலி : "அதுக்கொண்ணும் இல்லை தல! ரெண்டாவது ஆண்டு விழா வருதுல்ல"
தல : "அட ஆமாய்யா! சொல்றதையே திருப்பி திருப்பி சொல்றானே! ஸ்ஸப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே!"
கப்பி : "ஆமா தல! சங்கத்துல பத்து பைசா இல்லாத இந்த நிலைமைல ஆண்டு விழா போட்டிக்கு பத்தாயிரம் ரூவான்னு பரிசு அறிவிச்சிருக்கீங்களே"
தல : "அடப் பாவிகளா! நீங்களெல்லாம் சேர்ந்துதாண்டா போடச் சொன்னீங்க"
கப்பி : "இவ்ளோ நாளா நீங்க சங்கத்துப் பக்கம் வராம இருந்தபோது எல்லாத்தையும் நாங்களே பார்த்துகிட்டோம்! இப்போ ரெண்டாவது வருஷ போட்டிக்கு அறிவிப்பு நீங்கதான் போடணும்னு நாங்க ஏன் ஒத்தக் கால்ல நின்னோம்னு யோசிச்சீங்களா தல?"
தல : "ஆமா! ஒட்டு மொத்தமா சொன்னீங்களேடா! நீங்க போட்டாத்தான் ஒரு மதிப்பா மரியாதையா இருக்கும்னு! அதனாலதாண்டா அறிவிச்சேன்! அப்போ அதுக்கில்லையா! அப்ப என்னாத்துக்கு? "
தேவ் : "அதாவது தல! எல்லா இடத்துலயும் நாம சேர்ந்து போயி சவுண்டு விடுவோம். ஆனா கடைசியில அடி வாங்கி அவல் ஆகி, உடம்பை ரணகளமாக்கிக்குறது மட்டும் நீங்க! நீங்க அடிவாங்கும் போது மட்டும் நாங்க எல்லாரும் அடுத்த ஷாட்ல மாயமா மறைஞ்சிடுறோம் இல்லையா!"
தல : "ஆமா! அதான் ஒவ்வொரு இடத்துலவும் ஆப்பை வாங்கி கொடுத்துட்டு அடுத்த நிமிஷம் எஸ் ஆகிடுறீங்களே! அதுக்கென்ன இப்போ"
வெட்டி : "ஆனா பாருங்க தல! சமீப காலமா இதை பிராக்டீஸ் பண்ண எங்களுக்கு வாய்ப்பே அமையலை! அதனால ஒரு மேட்ச் பிராக்டீஸ் மாதிரி உங்களை போஸ்ட் போடச் சொன்னோம்!"
தல : "மாட்ச் பிராக்டீஸா! அதுக்கும் நான் போஸ்ட் போட்டதுக்கும் என்னப்பா சம்மந்தம்?"
சிபி : "அதாவது பரிசு பத்தாயிரம்னு அறிவிச்சது நீங்க! சரியா! போட்டில கலந்துகிட்டு ஜெயிக்குறவங்க பரிசு எங்கேன்னு உங்களைத்தான் கேப்பாங்க! அந்த டைம்லே நாங்க எல்லாரும் எஸ் ஆக பிராக்டீஸ் பண்ணிக்குவோம்!"
தல : "அடப் பாவிகளா! வெச்சிடீங்களேடா ஆப்பு!"
சிபி : "ஒரு போர்வீரனா இருந்தாலுமே கூட பயிற்சி இல்லைன்னா போர்க்களத்துல போயி தோத்துடுவான் தல"
ஜொள்ளுப் பாண்டி : "ஆமா பிராக்டீஸ் ஈஸ் அ மஸ்ட்"
தல : "சரி! அதுக்கும் இப்ப நீங்க சோகமா இருக்குறதுக்கும் என்னய்யா தொடர்பு?"
ஜொள்ளுப் பாண்டி : "நிறைய பேரு போட்டில கலந்துக்குவாங்கன்னு எதிர்பார்த்தோம்! ஆனா இதுவரைக்கும் ரெண்டே பேருதான் கலந்துகிட்டிருக்காங்க"
தல: "அதனால...........!"
ஜொள்ளுப் பாண்டி: "வெறும் ரெண்டே ரெண்டு பேர் கும்முறதெல்லாம் ஒரு கும்மா தல! நினைச்சிப் பார்க்க எங்களுக்கே அசிங்கமா இருக்கு! உங்களுக்கு எப்படி இருக்கும்! அதை நினைச்சித்தான் தல எங்களுக்கு கவலையா இருக்கு!
அங்க பாருங்க! அந்த கவலையை மறக்கத்தான் சிபி திரும்பவும் பீர் அடிக்க உக்காந்துட்டாரு"
தேவ் : "ஆமா தலை! சும்மா கும்முறதுலே எங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை! எல்லாரும் சேர்ந்து சும்மா பின்னிப் பெடலெடுக்கணும் அப்பத்தான் நீங்களும் பிராக்டீஸ் பண்ணுற மாதிரி ஆச்சு! நாங்களும் பிராக்டீஸ் பண்ணுற மாதிரி ஆச்சு"
சிபி : " நீங்கதான் எங்க கவலையைத் தீர்த்து வைக்கிறேன்னு சொன்னீங்களே தல! தீர்த்து வையுங்க! எவ்ளோ செலவு ஆனாலும் நாங்க பார்த்துக்கிறோம்"
தல : "அடப் பாவிகளா! என்னை பஞ்சராக்க ஆள் பத்தலைன்னு என்கிட்டயே கவலைப் பட்டு பிட் போடுறீங்களா? உங்களை........."
என்று தல கோபமாக எழுந்திருக்க
சிங்கங்கள் அனைத்தும் நொடிப் பொழுதில் எஸ்கேப் ஆகிறார்கள்!
14 comments:
சூப்பர் தல
///சிபி திரும்பவும் பீர் அடிக்க உக்காந்துட்டாரு"////
இது எப்ப?
மலேசியா போனது இதுக்குத்தானா?
அஞ்சனேயா...என்ன ஆச்சய்யா... உன் பக்தனுக்கு?
(பீர் மட்டும் தானே? தாய்லாந்து வேற போனீரே - அங்க சும்மா இருந்திருக்க முடியாதே?)
பள்ளிக்கூடத்துப் பேரையே கெடுக்கிறீங்கையா!
மக்களே!
இந்தப் பதிவைப் படிச்சிட்டு சங்கத்து இரண்டாம் ஆண்டு விழா போட்டியில கலந்துக்காம இருந்துடாதீங்க. பரிசு கண்டிப்பா உண்டு. தொகையும் கண்டிப்பா பத்தாயிரம் தான். சங்கத்து கஜானால பத்து பைசா இல்லைங்கிறது உண்மை தான். ஆனா நான் என் உயிரை விட மேலா மதிக்கிற என் பச்சை கலர் சிலுக்கு ஜிப்பாவையும், மீசை எழுத உபயோகிக்கிற ஐடெக்ஸ் மை பென்சிலையும் அடகு வச்சாவது கண்டிப்பா பரிசுத் தொகையை ஏற்பாடு பண்ணிடுவேன்.
மறுபடியும் சொல்றேன்...கண்டிப்பா பரிசு உண்டு. ஆனா அதுக்கு நெறைய பங்கேற்பு வேணும். இதுக்கு மேலயும் யாரும் போட்டில கலந்துக்கலைன்னா என் மாப்பிள்ளை பேபி பவன் கிட்டயும் புதுசா வந்திருக்கற தம்பி கிரிக்கெட் ரசிகர் கிட்டயும் டிசைன் டிசைனா அடி வாங்கறதை தவிர எனக்கு வேற வழியே இல்லை :(
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
கலந்துப்போம் தல, கவலைய விடுங்க. :)
இந்த தடவ நீங்க கொஞ்சம் மார்கெட்டிங்க்ல சோம்பல் காட்டிடீங்களோ?னு தோணுது.
காமடி பதிவு போட்டில வந்த என்ட்ரி மட்டும் 100க்கு மேலே! அது எப்படி சாத்யமாச்சு?னு யோசிங்க. வேணும்னா போட்டி கடைசி தேதிய நீட்டியுங்க.
//பள்ளிக்கூடத்துப் பேரையே கெடுக்கிறீங்கையா!
//
தாய்லாந்து போயிட்டு தப்புத்தண்டா பண்ணாம வந்துட்டதைச் சொல்றீங்களை ஐயா?
இந்த மாதிரி போனமா வந்தமான்னு வந்ததாலதான் பள்ளிக் கூடத்துப் பேரும் கெடுதுன்னா இந்த மாதிரி ஆயிரம் பள்ளிக் கூடத்துப் பேரைக் கெடுப்பேன் நான்!
:)
//நான் என் உயிரை விட மேலா மதிக்கிற என் பச்சை கலர் சிலுக்கு ஜிப்பாவையும், மீசை எழுத உபயோகிக்கிற ஐடெக்ஸ் மை பென்சிலையும் அடகு வச்சாவது கண்டிப்பா பரிசுத் தொகையை ஏற்பாடு பண்ணிடுவேன்.//
கப்பி! பாத்தியா தல பேக்கப் வெச்சிகிட்டுத்தான் சவுண்ட் விட்டுருக்காரு போல!
முதல்ல அதை ஆட்டையப் போடுவோம் நாம!
அடப்பாவமே. மாமாக்கள் மானத்தை காப்பாத்த நானும் ரெண்டு போட்டோ ரெடி பண்றேன்.
///தாய்லாந்து போயிட்டு தப்புத்தண்டா பண்ணாம வந்துட்டதைச் சொல்றீங்களை ஐயா?
இந்த மாதிரி போனமா வந்தமான்னு வந்ததாலதான் பள்ளிக் கூடத்துப் பேரும் கெடுதுன்னா இந்த மாதிரி ஆயிரம் பள்ளிக் கூடத்துப் பேரைக் கெடுப்பேன் நான்!///
இந்தமாத்ரி பிளேட்டைத் திருப்பிப் போடுகிற
சாமர்த்தியத்திற்காகத்தான் -அதாவது டகால்டி வேலைக்காத்தான் - உம்மைக் கடைசி பெஞ்ச்சில் உட்கார விடாமல் - வகுப்பறையின் முதல் வரிசையில் என் எதிரிலேயே உட்கார வைத்திருக்கிறேன்.
விடுப்பு முடிந்து வந்தால் உம்மை நிற்க வைத்துத்தான் பாடம் எடுப்பதாக உத்தேசம்!:-))))))
////கைப்புள்ள சொல்லியது: சிலுக்கு ஜிப்பாவையும், மீசை எழுத உபயோகிக்கிற ஐடெக்ஸ் மை பென்சிலையும் அடகு வச்சாவது கண்டிப்பா பரிசுத் தொகையை ஏற்பாடு பண்ணிடுவேன்///
அதெப்படி சாமி முடியும? மர்லின் மன்றோ வைத்திருந்த கவுன் விலைபோனது மாதிரி இதுவும் போகும் என்ற நினைப்பு அடகுக் கடைக்காரனுக்கு வந்தால் மட்டுமே அது சாத்தியம்!
இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது...! வேடிக்கை பார்க்க நானும் என் வகுப்ப்றைப் பையன்களுடன் வருவேன், கையில் நாற்காலி மினரல் வாட்டர் கேன் சகிதமாக!
சிபி மாம்ஸ்.. கலக்கல் :)
//தாய்லாந்து போயிட்டு தப்புத்தண்டா பண்ணாம வந்துட்டதைச் சொல்றீங்களை ஐயா?//
ஹிஹி.. யூ டூ? ...மீ டூ :P..
Ennai serthukollathua Sibi chitapakku en kadumaiyana kandangkal....
endrum anbudan
ilaiyakavi
//தாய்லாந்து போயிட்டு தப்புத்தண்டா பண்ணாம வந்துட்டதைச் சொல்றீங்களை ஐயா?//
இதெல்லாம் ஓப்பனா வேற சொல்லிக்குவாங்களாக்கும்? :)
தல, எனக்கு பரிசு கிடைக்காட்டாலும் பரவாயில்லை. ஆனால் பரிசே இல்லைனு சொல்லி வ.வா.சங்கத்தோட மானத்தோட விளையாடாதீங்க. இது நமக்கு ஒரு மானப்பிரச்சினை. அப்புறம் எங்கும் போய் உதார் விட முடியாது.
: )
Post a Comment