Wednesday, March 5, 2008

மாவாட்ட வாரீகளா?

முதல் பகுதி

தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத நமது கைபுள்ளை, உலக அதிசயமாக வெட்டிபயல் ஆன்லைனில் இருப்பது பாத்து சந்தோஷபட்டு ஆலோசனை கேட்கிறார்.


யப்பா! ராசா! எப்படி பா இருக்கே? கல்யாணம் ஆன பிறகு சங்கத்து பக்கமும் வரதில்ல, ஜிடாக்லயும் வரதில்ல.

ஈயத்த பாத்து இளிச்சதாம் பித்தளை! அங்க மட்டும் என்ன வாழுதாம்? சரி, சரி, வந்த விஷயத்த சொல்லுங்க, எனக்கு ஏகபட்ட (வெட்டி) வேலை இருக்கு.

அப்படி என்னப்பா வேலை உனக்கு..?

ஹிஹி, தல உங்கிட்ட சொல்றத்துக்கு என்ன? போண்டா பண்ணிடலாம்னு பருப்பை ஊற வெச்சு ஆட்டிட்டு இருக்கேன்.

கைப்பு, என்னாது போண்டாவா? ஏதேனும் பதிவர் மாநாடு நடக்க போகுதா? ஸ்வீட்டுக்கு என்ன போலியா? சே! போளியா?

பதறி போன வெட்டி, யோவ்! ஏன்யா என்ன சிக்க வெக்க பாக்கற? தங்கமணி ஷாப்பிங்க் போயிருக்காங்க, வரதுக்குள்ள சாயந்தர டிபனுக்கு போண்டா பண்ணி இம்ப்ரஸ் பண்ணலாம்னு பாத்தா இப்படி கோத்து விடறீங்களே தல?
வெட்டி பேச்சு எல்லாம் வேலைக்கு ஆவாது! நான் வறேன் என வெட்டிபயலும் அப்பீட்டாக கைப்பு செய்வதறியாமல் தவிக்கிறார்.

இந்த நேரம் பாத்து பினாத்தலார் தாமாகவே கைப்புவை பிங்க பண்ண, F1 F1 என கத்துகிறார் கைப்பு.


என்ன தல விவரம் தெரியாத ஆளா இருக்கீங்களே? உப்புமா எப்படி கிண்டனும்?னு விவரமா வைப்பாலஜில சொல்லி இருக்கேன் பாருங்க, அதையே இங்க செயல்படுத்துங்க, பாதி கிரைண்டர் மாவை கீழே சரிச்சு விடுங்க, அப்புறம் பாருங்க என்ன நடக்குது?னு என நமட்டு சிரிப்புடன் பினாத்தலார் பத்த வைக்க முயற்சிக்க,

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், நான் உருப்படியா இருக்கறது உனக்கு பொறுக்கலையா? நல்லா இரு ராசா! எத்தனை நாளா என்னய பழி வாங்கனும்னு திட்டம் தீட்டினபா?

சரி விடுங்க தல, வேணும்னா நம்ம பதிவுலக காரைக்கால் அம்மையார், தானை தலைவலி, சகலகலா வில்லி, கீதா மேடத்துகிட்ட உதவி கேளுங்க.

அட ஆமா! நல்ல யோசனை தான்! போடுறா போனை மேடத்துக்கு...

டிரிங்க்...டிரிங்க்...டிரிங்க்...டிரிங்க்...என நேரு காலத்து போன் அலற..

ஹலோ யாரு? டாட்டா இன்டிகாம் காரங்களா? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க மனசுல? நான் யாரு தெரியுமா? என் பேக்ரவுண்டு என்னனு தெரியுமா? ஒழுங்கா மரியாதையா என் வீட்டு இணையத்தை சரி பண்ணுங்க, அப்படியே இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர், நெருப்பு நரி எல்லாம் ஒழுங்கா வந்தாகனும், சரி பண்ணிட்டு என் காலை பிடிச்சு மன்னிப்பு கேளுங்க! மனசு இருந்தா மன்னிக்க பாக்கறேன். கர்ர்ர்ர்ர்.

உறுமலை கேட்டு கதிகலங்கி போன கைப்பு,

அய்யோ மேடம்! நான் உங்க தலைமை தொண்டன்(தலையில் அடித்து கொண்டு) கைபுள்ளை பேசறேன்.

ஹிஹி, எனக்கு தான் தெரியுமே! சும்மா உங்களை பயமுறுத்தி பார்த்தேன்!
(குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலையாம்)

ஆஹா! மேடத்தின் அறிவே அறிவு! மேடம், மாவாட்றதை பத்தி ஒரு சின்ன சந்தேகம்.

அடடா! அதேல்லாம் விட்டு பல வருஷம் ஆச்சே! இப்ப எல்லாம் சாம்பு மாமா தான்! நீயே சொல்லு! எங்கப்பா அதுக்கெல்லாம் நேரம் இருக்கு எனக்கு? என்னோட (மொக்கை) எண்ணங்களில் டெய்லி ஒரு பதிவாவது போடனும், முத்தமிழ் குழுமத்துல வேற எழுத கூப்ட்ருக்காங்க, நடுவுல ஜிடாக் வேற இருக்கு. தமிழ்மணத்துல நட்சத்திரமா என்னிக்கு கூப்ட போறாங்களோ தெரியல. ஏற்கனவே நான் ஒரு நட்சத்திரம் தான்னு உனக்கு தெரியும். இந்த ஊருக்கே தெரியும், என்ன நான் சொல்றது?

கைப்பு, (மடார், மடார்னு தலையில் அடித்து கொண்டே) ஆமா! இல்லையா பின்னே? சரி மேடம், நான் அப்புறமா போன் போடறேன் என நைசா நழுவுகிறார்.


இந்த நேரத்தில் நமது ஜொள்ளு பாண்டிக்கு தகவல் தெரிந்து ஜிடாக்கில் வந்து,

அண்ணே! இட்லி சுட்டாச்சாண்ணே? குஷ்பூ இட்லியா? இல்ல சிம்ரன் இட்லியா?

ஏன்டா வெந்த புண்ணில் வெங்காயத்தை தேய்க்கற?னு லைனை கட் பண்ணி விட்டு, வேற வழியே இல்ல! நாமே இந்த சவால சமாளிப்போம்! என சொல்லிய வினாடி, கரண்ட் புடுங்கி கொள்கிறது.

சொல்லி வைத்தாற் போல கைப்புவின் தங்கமணியும் வீடு வந்து சேர, பேக்ரவுண்டுல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!னு சவுண்டு மட்டும் கேட்கிறது.

முடிவு என்னனு நான் சொல்லவும் வேணுமோ?


வேற என்ன, ஸ்டார்ட் மியூஜிக் தான்! :)

16 comments:

mgnithi said...

music starts..

mgnithi said...

kalakkal post ambi.

Unga story maathiriye irukku... :-)

//ஈயத்த பாத்து இளிச்சதாம் பித்தளை! அங்க மட்டும் என்ன வாழுதாம்? சரி, சரி, வந்த விஷயத்த சொல்லுங்க, எனக்கு ஏகபட்ட (வெட்டி) வேலை இருக்கு.//

ROTFL

கப்பி பய said...

:)))

ILA(a)இளா said...

//அடடா! அதேல்லாம் விட்டு பல வருஷம் ஆச்சே! இப்ப எல்லாம் சாம்பு மாமா தான்! நீயே சொல்லு! எங்கப்பா அதுக்கெல்லாம் நேரம் இருக்கு எனக்கு? என்னோட (மொக்கை) எண்ணங்களில் டெய்லி ஒரு பதிவாவது போடனும், முத்தமிழ் குழுமத்துல வேற எழுத கூப்ட்ருக்காங்க, நடுவுல ஜிடாக் வேற இருக்கு. தமிழ்மணத்துல நட்சத்திரமா என்னிக்கு கூப்ட போறாங்களோ தெரியல. ஏற்கனவே நான் ஒரு நட்சத்திரம் தான்னு உனக்கு தெரியும். இந்த ஊருக்கே தெரியும், என்ன நான் சொல்றது//

அஹ்ஹஹஹ்ஹ, இதுதான் சைக்கிள் கேப்புல லாரி ஓட்டுறதுங்கிறது

பொன்வண்டு said...

கலக்கல் :))))

CVR said...

chance-a இல்லை!!
செம ROFL காமெடி!!!!

கலக்குங்க அண்ணாச்சி!! :-D

மதுரையம்பதி said...

//அடடா! அதேல்லாம் விட்டு பல வருஷம் ஆச்சே! இப்ப எல்லாம் சாம்பு மாமா தான்! நீயே சொல்லு! எங்கப்பா அதுக்கெல்லாம் நேரம் இருக்கு எனக்கு? என்னோட (மொக்கை) எண்ணங்களில் டெய்லி ஒரு பதிவாவது போடனும், முத்தமிழ் குழுமத்துல வேற எழுத கூப்ட்ருக்காங்க, நடுவுல ஜிடாக் வேற இருக்கு. //

பதிவுல பாதி உண்மைச் சம்பவங்கள் அப்படிங்கறதுக்கு சாட்சி மேலே இருக்கும் வரிகளே :-)...

சூப்பரப்பு.

Kittu said...

asathal post ambi...

haha saambu mama rouse superO super :-)

paravaala, oorae maavu aatardha kaetaa manasukku konjam edhamaa irukku :)

sari, naan appuram varaen...ulunda poatuttu enakku inga comment thevaya???

கோபிநாத் said...

சூப்பரு அண்ணாச்சி..;))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஈயத்த பாத்து இளிச்சதாம் பித்தளை!//

Yov,
யாரு ஈயம் யாரு பித்தளை அதைச் சொல்லுவே மொதல்ல! :-)

//சரி விடுங்க தல, வேணும்னா நம்ம பதிவுலக காரைக்கால் அம்மையார்//

தங்கத் தலைவியை காரைக்"கால்" அம்மையார் என்றால் எப்படிச் சொல்லலாம் நீங்க?
அவங்க காரை"அரை" அம்மையார்! அவங்க காரை"முக்கால்" அம்மையார்!
அவங்க காரை"ஃபுல்" அம்மையார்!
மொதல்ல அதைத் தெரிஞ்சிக்கோங்க! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஈயத்த பாத்து இளிச்சதாம் பித்தளை!//

Yov,
யாரு ஈயம் யாரு பித்தளை அதைச் சொல்லுவே மொதல்ல! :-)

//சரி விடுங்க தல, வேணும்னா நம்ம பதிவுலக காரைக்கால் அம்மையார்//

தங்கத் தலைவியை காரைக்"கால்" அம்மையார் என்றால் எப்படிச் சொல்லலாம் நீங்க?
அவங்க காரை"அரை" அம்மையார்! அவங்க காரை"முக்கால்" அம்மையார்!
அவங்க காரை"ஃபுல்" அம்மையார்!
மொதல்ல அதைத் தெரிஞ்சிக்கோங்க! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தங்கமணியும் வீடு வந்து சேர, பேக்ரவுண்டுல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!னு சவுண்டு மட்டும் கேட்கிறது.
முடிவு என்னனு நான் சொல்லவும் வேணுமோ?
வேற என்ன, ஸ்டார்ட் மியூஜிக் தான்! :)//

எனக்கு மீஜிச் சரியாக் கேக்கலையே! டால்பியில் இன்னும் கொஞ்சம் சவுண்டு விட முடியுமா? :-)))

ambi said...

வாங்க mgnithi, என்னாது? என் கதை மாதிரியே இருக்கா? :)))

@kappi, :))))

//இதுதான் சைக்கிள் கேப்புல லாரி ஓட்டுறதுங்கிறது
//

@ila, ஹிஹி, உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? :)

நன்றி பொண்வண்டு :)

தேங்கிஸ் சிவிஆர். :)

ஹிஹி, உண்மைய கத்தி சொன்ன மதுரையம்பதி அண்ணன் வாழ்க! :))

கிட்டு மாமா, உங்க வீட்லயும் உளுந்தா? நடத்துங்க, நடத்துங்க. :p

நன்றி கோபி. :)

//அவங்க காரை"அரை" அம்மையார்! அவங்க காரை"முக்கால்" அம்மையார்!
அவங்க காரை"ஃபுல்" அம்மையார்!
//

@KRS, இதுக்கு பேர் தான் உள்குத்தா? :p

//எனக்கு மீஜிச் சரியாக் கேக்கலையே! டால்பியில் இன்னும் கொஞ்சம் சவுண்டு விட முடியுமா?//

@KRS, சவுண்டு தானே? அதான் சிதம்பரத்துலிருந்து கேட்டுட்டு இருக்கே இப்போ. :p (just kidding)

Arunkumar said...

//
ஈயத்த பாத்து இளிச்சதாம் பித்தளை! அங்க மட்டும் என்ன வாழுதாம்?
//

ROTFL..

super comedy ambi.. as usual kalakkitinga :P

gils said...

:) vambi...chancela..semma flow...sontha katha soga kathaiku aduthavanga pera poatu unga pera kaapthintel :) besh besh

மங்களூர் சிவா said...

சூப்பர்ப்.......