Monday, March 17, 2008

இராதா கல்யாணம்


வீடே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. இதோடு நாலு வரன் தட்டி போயாச்சு, இந்த வரனை எப்படியாவது முடிந்து விட வேண்டும்னு எல்லோர் மனதிலும் ஒரு எதிர்பார்ப்பு குடிகொண்டு ஆட்டி படைத்தது.

கை நிறைய சம்பளம், கண்ணுக்கு லட்சணமாய் இராதா இருந்த போதும் ஏதோ ஒரு காரணம் சொல்லி வந்த நாலு இடங்களும் தட்டி விட்டது.

கல்யாணி! எல்லாம் ரெடியா? சும்மா மசமசனு ஒரே வேலைய செஞ்சுண்டு இருக்காதே! அவங்க வர நேரமாச்சு! வந்தபிறகு போண்டாக்கு எண்ணெய் இல்ல, கேசரிக்கு ரவை இல்லைனு வில்லு பாட்டு பாடாதே!

அடடா! நீங்க சும்மா இருந்தாலே எனக்கு எல்லா வேலையும் முடிஞ்சுடும்.
இந்த தடவை முந்திரி பக்கோடா, சூடா ரெடியா இருக்கு. கேசரி பதமா வந்துட்டு இருக்கு. எறக்கற சூட்ல கொஞ்சம் நெய் விட்டா போதும், காப்பிக்கு முதல் டிகாஷன் இறக்கி வெச்ருக்கேன், அவங்க வந்தவுடனே சூடா பாலுல கலந்துட வேண்டியது தான். என் உயிரை வாங்காம நீங்க வாசல்ல போய் நில்லுங்க!னு இராதாவின் அம்மா சொன்ன வினாடி, வாசலில் கார் சத்தம் கேட்டது.

தஞ்சாவூர் பெரிய கோவில் நந்திக்கு பட்டு வேட்டி கட்டியது போல் ஆஜானுபாகுவாய், வாய் நிறைந்த சிரிப்புடன் சம்பந்தி இறங்கினார். அதை தொடர்ந்து, ஷர்மிளா டாகூர் ஸ்டையில் கொண்டையுடன் சம்பந்தியம்மா பின் தொடர ஹாலில் சபை கூடியது.

என்ன சார்? ப்ரயாணம் எல்லாம் சவுரியம் தானே? முதல்ல டிபனை சாப்டுடலாமே? அப்புறம் கேசரி ஆறி விடும். இது இராதாவின் அப்பா. பாவம் அவர் கவலை அவருக்கு.


பெரியவங்க நீங்க சொன்னா சரி தான்! - கொண்டை பின் பாட்டு பாடியது.


பீங்கான் பிளேட்டுகளில் வசதியாக டிபன் பரிமாறபட்டது. இராதவின் அப்பாவும் சந்தடி சாக்கில் அவர் ஷுகர் லிமிட்டுக்கு மேலேயே அமுக்கினார்.
டிபன் முடிந்து வாயை துடைத்து கொண்ட கொண்டை, "ஏதேனும் பாட்டு பாட முடியுமா?னு வழக்கமான பிட்டை போட்டது.


ஓ! அதுக்கென்ன, வாதாபி கணபதிம் வேணும்னா? ஏந்தரோ மாஹானுபாவுலு போதுமா? இல்லாட்டி பாரதியார் கவிதைகள்ள ஏதாவது?னு தமிழ்மண நட்சத்திரம் போல இராதா அப்பா வெரைட்டி காட்ட, மகிழ்ந்து போன கொண்டை வாதாபி கணபதிமுக்கு தீர்ப்பு சொல்லியது.


இராதாவின் இனிமையான குரலால் அந்த ஹாலே பத்து நிமிடம் கட்டி போட்டது போல மயங்கி நின்றது. பின் வழக்கமான விஷயங்கள் எல்லாம் விவாதிக்கபட்டு, ஊருக்கு போய் லெட்டர் எழுதுவதாக சொல்லி விட்டது வந்த கூட்டம் கார் ஏறியது.


இந்த இடம் எப்படியும் முடிந்து விடும்பா! கவலைபடாதே! என ஆறுதலாய் அப்பா சொல்வதை கேட்டு, மீண்டும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க தொடங்கி விட்டான் இராதா என்ற இராதாகிருஷ்ணன்.

10 comments:

திவாண்ணா said...

கமான் யூ கேன் டூ பெடர்!

இப்ப 1000 ஆண்களுக்கு சுமார் 750 பெண்கள்தான் பிறக்கறாங்கன்னு என் மனைவி சொல்றாங்க.
நீங்க எழுதினது சீக்கிரமே நடக்கும்!

rv said...

:)))

காலம் கலிகாலமா போச்சு!

இப்படியா கல்யாணமாகாத பசங்களையெல்லாம் பயமுறுத்தறது?

சீக்கிரமே எந்தரோ மஹானுபாவுலுவும், 'காற்றில் வரும் கீதமே'வும் மனப்பாடம் பண்ணனும்..

திவாண்ணா said...

காலம் கலிகாலமா போச்சு!//

கலிகால லட்சணமே அதுதானே? எல்லாம் தலைகீழ்! தலைகீழா எரியும் விளக்கு, அம்மியை சுத்தி வரும் ஆட்டுக்கல்...(
மின்சார பல்பு, கிரைண்டர்,)
எல்லாரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிற வழிய பாருங்க.

வல்லிசிம்ஹன் said...

எல்லாம் கலிகாலம்தான்.
ஏன் மாப்பிள்ளைப்பொண்ணு வரலை?:)

சாரி சாரி நீங்க ராதாவை பிள்ளை பார்க்க அவங்க வராங்கனு சொன்னதால நானும் மாப்பிள்ளைப் பொண்ணுனு சொல்லிட்டேன்:))
நீ வருவாயென பாட்டையும் மனப்பாடம் செய்யச் சொல்லவும்:)

உண்மை said...

ஹலோ எஸ்சூஸ் மீ , இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை ?

Swamy Srinivasan aka Kittu Mama said...

idhellam tooooooooooooooooooooooooooooooooo muchhhh
:)

-K mami

Swamy Srinivasan aka Kittu Mama said...

idhellam tooooooooooooooooooooooooooooooooo muchhhh
:)

-K mami

Swamy Srinivasan aka Kittu Mama said...

(:-)
amam, Radhava paaka kondaiyum uncleum vandhaanga, yen Krishnar(i) varala??

karpanaiyaga irundhalum superaa ezhudhi irukeenga.
-K mami

Sridhar V said...

//சீக்கிரமே எந்தரோ மஹானுபாவுலுவும், 'காற்றில் வரும் கீதமே'வும் மனப்பாடம் பண்ணனும்..
//

:-))))))) அப்படியே "கத்தாழை கண்ணால, குத்தாதே நீ என்னை" சேத்து மனப்பாடம் பண்ணிக்குங்க தல.

தென்றல்sankar said...

சீக்கிரம் நடக்கும் நீங்கள் நினைப்பதுபோல்