Saturday, March 1, 2008

மாவாட்ட வாரீகளா?

கைப்புள்ளை வழக்கம் போல டிவி வால்யூமை ம்யூட்டில் போட்டு, பேஷன் டிவி பார்த்து கொண்டிருக்க, அவரது தங்கமணி குரல் கொடுக்க, பதறியடித்து பொதிகை சேனலுக்கு மாற்றி வால்யூமை கூட்ட, அதில் கே.பி.சுந்தராம்பாள் "பழம் நீயப்பா! என பாடுவதை முறைத்தபடியே நடந்து சமயல்கட்டுக்கு சென்று பவ்யமாக உள்ளேன் அம்மா! போடுகிறார்.

இந்த பாருங்க, அவசரமா நான் என் பிரண்டை பாக்க ஹாஸ்பிடல் போறேன். சமையல் எல்லாம் முடிஞசது. கிரைண்டரில் இட்லிக்கு மாவு போட்ருக்கேன். அத கொஞ்சம் பாத்து, அப்பப்ப தண்ணி விட்டு, தெரியலைனா உங்க பிரண்ட் கொத்தனார் கிட்ட கேட்டு, சரியான பதத்துல மாவை அந்த சட்டியில வழிச்சு வைங்க! என்ன நான் சொல்றது புரியுதா? என பதிலுக்கு கூட காத்திருக்காமல் மேடம் பறந்து போக, நம்ம கைப்பு என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது?னு புரியாமல் பே! என ஒரு நிமிடம் முழித்து பின் சுதாரித்து கொள்கிறார்.

என்னாது???? தெரியலைனா, கொத்தனாருகிட்ட கேட்டுக்கனுமா? அவரு இதுக்கெல்லாம் கூடவா டெக்னிகல் கன்சல்டன்ட்டா இருக்காரு? சரி, தேவைனா கேட்டுக்கலாம், என்றபடியே மாவாட்டும் கிரைண்டரை பார்கிறார் கைப்பு. எப்படியும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வந்தா போதும்! என நிம்மதியாக மறுபடி பேஷன் டிவியை மியூட்டில் போட்டு (என்ன செய்ய, பழக்க தோஷம்) செட்டில் ஆகிறார்.

சரியாக பத்து நிமிடம் கழித்து வந்து பார்க்க, எவ்ளோ தண்ணி விடனும்?னு சிறிது குழப்பமாகி, ஜிடாக்கில் இருக்கும் கொத்ஸை பிங்க் பண்ணி மேட்டரை சுருக்கமாக சொல்லி உதவி கேட்க,

கொத்ஸ், "மாவு எதுக்கு? இட்லிக்கா? தோசைக்கா? "

அட என்னப்பா, நாளைக்கு இட்லி, மறு நாள் தோசை, இதுல என்னபா உனக்கு சந்தேகம்?

இப்ப அரைக்கிறது அரிசியா? உளுந்தா?
கைப்பு ஓடிபோய் மாவை உத்து உத்து பாத்தும் ஒன்னும் புலப்படாமல், மறுபடி ஓடி வந்து ஜிடாக்கில், "அரிசி மாதிரி தான் இருக்கு. இருந்தாலும் உளுந்துக்கும் சேர்த்தே ஐடியா சொல்லிடுங்க".

நீ முதல்ல அது அரிசியா? உளுந்தா?னு கண்டுபிடிச்சு வை, மீதிய அப்புறமா சொல்றேன்! என கொத்ஸ் நழுவ,

ஐடியா கேட்டா, குவிஸ் நடத்றாரு இந்த கொத்ஸ்! இந்த மேட்டரை நாளைக்கு நாலு டிஸ்கி போட்டு பதிவர் வட்டம்!னு லேபிள் குடுத்து ஒரு விவாதத்தை வேற ஆரம்பிச்சுடுவாரு. ஆளு பாத்து கேட்டேன் பாரு! என்ன சொல்லனும் என நொந்தபடி வேற யாரும் ஜிடாக்கில் சிக்குவார்களா?னு பாக்க அங்கு கேஆரெஸ் மாட்டுகிறார்.

ஆகா! இவர் ரொம்ப நல்லவரு, பக்குவமா கேட்டா பதமா சொல்லுவாரு! அண்ணே! எப்படிண்ணே இருக்கீங்க? என மெல்ல பேச்சை துவங்க,

"நம்மாழ்வார் அருளால் நலமாக உள்ளேன் கைப்பு! என்ன விஷயம்..?"

ஆகா! இப்பவே ஆரம்பிச்சிட்டார்யா இந்த மனுஷன்! சரி பேசித்தான் பாப்போம்! என கேஆரெஸிடம் விவரத்தை கூற,

"இது ஒன்னும் பெரிய கஷ்டமில்லை கைப்பு. இப்ப அரைக்கிறது அரிசியா? உளுந்தா?னு தெரியனும் அவ்ளோ தானே!"

"அவ்ளோ தான்! அவ்ளோ தான்! இது தெரிஞ்சா கொத்ஸ் உதவி பண்றேன்னு சொல்லியிருக்கார்".

அப்படியா? சரி, நல்லா கேட்டுக்கோங்க கைப்பு. "கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்! இதுல கம்பர் என்ன சொல்லியிருக்கார்னா...

அண்ணே! இதுல கம்பர் எங்கண்ணே வந்தாரு?

பொறுங்க கைப்பு, நான் மேட்டருக்கு வரேன், அவ்ளோ உறுதியான மனம் படைத்த இலங்கை வேந்தனே மனம் கலங்கி விட்டான், அது போல உங்க கிரைண்டரில் உள்ள மாவு கொஞ்சம் உறுதியா, கெட்டியா இருந்தா அரைச்சுட்டு இருக்கறது அரிசி!னு சொல்ல வந்தேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்! அப்ப உளுந்துனா?

பாற்கடலில் கால் மாட்டில் இலக்குமி அமர்ந்திருக்க, முப்பத்து முக்கோடி தேவர்களும் கமலன் கண் திறக்க காத்திருக்க, "சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ" என பாட பாம்பணை மீது பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமான்.....

அண்ணே! என்ன வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலையே?

பொறுங்க கைப்பு! அந்த பாற்கடலில் பொங்கி வழியும் அமுதம் போல உங்க கிரைண்டரில் மாவு பொங்குதா?னு பாருங்க. அப்படி பொங்குச்சுனா அது உளுந்து. சரி, நான் வரட்டா? என அவர் அப்பீட்டாக தலையில் கை வைத்து அமருகிறார் கைப்பு.



...தொடரும்

21 comments:

பினாத்தல் சுரேஷ் said...

ரொம்ப ரசிச்சு சிரிச்சேன்:)

ILA (a) இளா said...

இன்னுமாயா வெளங்கல? வாங்க அம்பி, அப்படியே அண்ணாந்து பாருங்க.. ஹிஹிஹ்

மங்களூர் சிவா said...

கேஆரெஸ் சொன்னது கலக்கல்.

:-))))))))

நிஜமா நல்லவன் said...

படிச்சிகிட்டே நான் மட்டும் தனியா சிரிக்கவும் எல்லோரும் ஒரு மாதிரியா பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

கைப்புள்ள said...

//பொறுங்க கைப்பு! அந்த பாற்கடலில் பொங்கி வழியும் அமுதம் போல உங்க கிரைண்டரில் மாவு பொங்குதா?னு பாருங்க. அப்படி பொங்குச்சுனா அது உளுந்து. சரி, நான் வரட்டா? என அவர் அப்பீட்டாக தலையில் கை வைத்து அமருகிறார் கைப்பு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

ஆரம்பமே அசத்தல். தொடர்ந்து கலக்குங்க அம்பி

Santhosh said...

kalakkal ambi.. asathunga..

Sridhar Narayanan said...

//இந்த மேட்டரை நாளைக்கு நாலு டிஸ்கி போட்டு பதிவர் வட்டம்!னு லேபிள் குடுத்து ஒரு விவாதத்தை வேற ஆரம்பிச்சுடுவாரு. //

:-)))) இப்பல்லாம் பட்டிமன்றம் வேற.

கல்யாணத்துக்கு அப்புறம் நல்ல டிரையினிங் போல. அரிசி உளுந்து அரைக்கிறது எல்லாம் பிரிச்சு மேயறீங்க :-))

CVR said...

போட்டு தாக்குங்க!!!
இந்த மாசம் கலகலப்பா போகப்போதுன்னு தெரிஞ்சு போச்சு!!

செம காமெடி போஸ்ட்!!
நெக்ஸ்ட் சீக்கிரம் போடுங்க!! B-)

Yogi said...

ரொம்ப ரசித்தேன் ! :)

கோபிநாத் said...

அம்பிண்ணே...கலக்கல்...அதுவும் தல கேஆரெஸ் சொல்லுறது சூப்பரே சூப்பர் ;))

கப்பி | Kappi said...

மாவாட்ட துணைத் தலைவர் அம்பி வருக! வருக!! :)))

கலக்கல் பதிவு தலீவா!! தொடர்ந்து மாவரைங்க :)))

இலவசக்கொத்தனார் said...

ஏம்பா அம்பி, எனக்கு அரிசிக்கும் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாதுன்னு போட்டுக் குடுக்கலையே. இல்லை நான் வெறும் அரைச்ச மாவையே அரைக்கறேன்னு எதாவது உள்குத்தா?

நல்லா இருங்கடே!!

(கைப்ஸ், இதுக்கெல்லாம் மனசைத் தளர விடவேண்டாம்.)

இராம்/Raam said...

வாங்க வாங்க அம்பி.... கலக்கலா வந்திருக்கீங்க..... :))

Dubukku said...

சுப்பரப்பூ :))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அந்த பாற்கடலில் பொங்கி வழியும் அமுதம் போல உங்க கிரைண்டரில் மாவு பொங்குதா?னு பாருங்க. அப்படி பொங்குச்சுனா அது உளுந்து//

பொங்கீட்ட தல! பொங்கீட்ட! :-)
சரி, எதுவா இருந்தாலும் நேர்ல பேசித் தீத்துக்குவோம்! :-)

மொதல்ல அட்லாஸ் சிங்கமானதுக்கு வாழ்த்துக்கள்!
வ.வா.ச போலவே சீக்கிரம்
மா.வா.ச வையும் ஆரம்பீங்க!


மா.வா.ச-ன்னா என்னாவா? - தலைப்பைப் பாருவே! தலைப்பைப் பாரு!

Swamy Srinivasan aka Kittu Mama said...

ultimate maavaaatath thalaivarae - pinniteenga...

endha topic koduthaalum, adha maavu maadhiri niceaa oru comedy track solradhu ambi style...idhuvum oru semma takkar post ambi...first postunnu solli irukkeenga...idhuvae ippadi irukku

inimae va vaa sangathula kandippa kalai kattapogudhu

all the best..waitings for the next maavaatals

ambi said...

@suresh, நன்றி தலைவா!

@ila, ஆஹா! அடிச்சிடீங்களே ஆப்பு!

@Mglore siva, நன்றி சிவா, இந்த வீக் எண்ட் ஸ்பெஷல் என்ன? :p

@real true man, நீங்க ரெம்பா நல்லவருங்கோ!

@kaippu, வணக்கம் தல! ரெம்ப டேமேஜ் பண்ணிட்டேனோ?

நன்றி சந்தோஷ்!

@sridhar, ஹிஹி, உண்மைய இப்படி சபைல போட்டு உடைக்கறீங்களே தலைவா?

CVR, நன்றி சிவிஆர்! எல்லாம் உங்க பக்க பலம் தான்!

நன்றி பொண் வண்டு! அந்த சோப்பு கம்பனி உங்களதா? :p

மிக்க நன்றி கோபி,

@kappi, என்னாது மாவாட்ட தலைவரா? நடத்துங்க அப்பு!

@elavasam, உள்குத்தா? அப்படினா என்னனு நம்ம ஊரு காரங்களுக்கு என்னனே தெரியாது அண்ணாச்சி.

நன்றி இராம்.

@dubukku, டேங்கீஸ் அண்ணே!


@KRS, சரி, நேர்ல பேசிக்கலாம், எவ்ளோ அக்கவுண்ட் டிரான்ஸ்பர் ஆவும்? :p

வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கின மாதிரி இருக்கு தலைவா! மா.வா.ச க்கு நீங்க தான் பிரஸிடெண்ட், ஓ.கேவா?

@kittu mama, உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி கிட்டு மாமா (நா தழ தழக்கிறது) :)))

மங்களூர் சிவா said...

//
ambi said...

@Mglore siva, நன்றி சிவா, இந்த வீக் எண்ட் ஸ்பெஷல் என்ன? :p

///
இந்த கேள்விய உங்க வீட்டு அம்மிணிக்கு ஃபார்வர்ட் பண்ண போறேன் அப்புறம் நடக்கறதுதான் வீக் எண்ட் ஸ்பெஷலோ ஸ்பெஷல்!!!

ச்சும்ம்மாஆ லுல்லுலாஆயி

மெளலி (மதுரையம்பதி) said...

சூப்பர்...அதுவும் கே.ஆர்.எஸ் பார்ட் கலக்கலோ கலக்கல்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல ரகளையாத்தான் ஆரம்பிச்சிருக்கீங்க.. மாவு பதம் சொன்ன விதம் ரொம்பவே அருமை.. :)))

Arunkumar said...

sema kalakkal ambi.. motha postum ROCKING :)

aduthadhu padikkanum.. appeet...