Sunday, October 15, 2006

சையன்ஸ் பிக்க்ஷன் மாதிரி..

"உட்காருங்கள்..இன்னும் பத்து நிமிஷத்தில் பிரசாத் உங்களை அழைப்பார்" - எல்லா ஆஸ்பத்திகளிலும் வழக்கமாய் சொல்லுவது போல் டாக்டர் என்று சொல்லாமல் பிரசாத் என்று அந்த அழகுப் பதுமை சொன்ன போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

"ஒருவேளை டாக்டருக்கும் ரிசப்ஷனிஸ்டுக்கும் ஒரு இது இருக்குமோ?" அவன் மனம் நதிமூலம் ஆராய முற்பட்ட போது ஒரு அதட்டு போட்டு மனதை அடக்கிக் கொண்டான். அவள் இவன் நினைப்பதையெல்லாம் பற்றி அலட்டிக் கொள்ளாமல் ஐஸ்குச்சி மாதிரி எதையோ வைத்துக் கொண்டு நளினமாய் நகத்தை ராவிக் கொண்டிருந்தாள்.

ஒரு கடி கடிச்சு இழுத்து துப்பி எறியாமல் ஏன் இந்த இழவ இப்படி சிங்காரித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது. நல்லவேளை அவன் பொறுமையை இழப்பதற்கு முன்னால் பிரசாத் உள்ளே அழைத்துவிட்டார்.

"ஹலோ டாக்டர்...ஐ ஆம் சந்திரா"

"சந்திரா நீங்க என்னை பிரசாத்னே கூப்பிடலாம்..டாக்டர் எல்லாம் அவசியம் இல்லை"

"ஏன் நீங்க இன்னும் டாக்டர் பரீட்சை பாஸ் பண்ணவில்லையா?"

"ஹா ஹா குட் ஒன். சொல்லுங்க...ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?"

"மிஸ்டர் பிரசாத் எனக்கு கொஞ்ச நாளா ஒரு பிரச்சனை. சாரி இது பிரச்சனையான்னே எனக்குத் தெரியாது...எதுக்கும் ஒரு ஒபினியன் கேட்கலாம்னு தான் வந்திருக்கேன்" - சொல்லிக் கொண்டே கொண்டுவந்திருந்த பையிலிருந்து அந்த அழகான கடிகாரத்தை எடுத்து மேஜை மேல் வைத்தான். அழகிய வேலைப்பாடுகளுடன் பந்து வடிவத்திலிருந்த அந்த டிஜிட்டல் கடிகாரம் பேக்லிட்டில் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது.

"வாவ் அழகா இருக்கே..கண்டிப்பா நம்மூர்ல செஞ்சது இல்லை போலிருக்கே...அமெரிக்காவா ஐரோப்பாவா இல்லை சைனாவா?"

"எனக்குத் தெரியாது மிஸ்டர் பிரசாத். இது என்னோட நண்பன் கிட்டேர்ந்து என்னிடம் வந்தது. பிரச்சனையைக் கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். என் நண்பன் ராகவ் இதை மூன்று மாதங்களுக்கு முன்னால் எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தான்...அவனுக்கு கிஃப்டாக வந்ததாம் இந்த கடிகாரம்" அவன் சொல்லிக் கொண்டே அடிக்கடி அந்தக் கடிகாரத்தை பத்து நொடிக்கொருமுறை பார்த்துக் கொண்டான்.

"மிஸ்டர் சந்திரா இந்தக் கடிகாரம் உங்கள் கவனத்தை திசை திருப்புகிறது என்று நினைக்கிறேன். இதை சொல்லி முடிக்கும் வரையில் நாம் தவிர்க்கலாமே" பிரசாத் தனது கைக்குட்டையினால் அந்தக் கடிகாரத்தை மூடினான்.

"யெஸ் பிரசாத் யூ ஆர் ரைட். கொஞ்ச நாளாக நான் இந்த கடிகாரத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரு விநோதமான பிரச்சனை. நான் பார்க்கும் போதெல்லாம் நேரம் யுனீக்காக இருக்கிறது. 12:12, 10:10, 07:07, 12:34 இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.."

"ம்ம்..அது உங்கள் மனதை உறுத்துகிறது ரைட்?"

"எக்ஸாட்லி"

"இதில் சலனப்படுவதற்கு ஒன்றும் இல்லை சந்திரா..இது ரொம்ப நார்மல்..ஜஸ்ட் கோ இன்ஸிடென்ஸ்...இந்தக் கடிகாரத்தின் அழகு உங்களை கவர்ந்திருக்கலாம்..அதனால் நீங்கள் இதை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கலாம்...நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த நேரங்கள் அந்த வித்தியாசமான நொடிகளாய் இருந்திருக்கலாம்...இந்த விபரங்களை ஒரு முதுகலை கணித மாணவனிடம் கொடுத்தால்..கணக்கு போட்டு உங்களுக்கு இது நிகழக் கூடிய ப்ராபபலிட்டியை சொல்லிவிடுவார்கள். ரொம்ப சிம்பிள் உங்களை மாதிரி நானும் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கும் நிகழக் கூடியது தான் இது"

"எனக்குப் புரிகிறது டாக்டர். என் நண்பன் இதைக் கொடுத்தான் என்று சொன்னேன் அல்லவா...அவனுக்கு இதே பிரச்சனை என்று சொல்லி தான் என்னிடம் வந்தான். நானும் நீங்கள் சொன்ன மாதிரியான விளகத்தைச் சொல்லி தான் இந்தக் கடிகாரத்தை வாங்கிக் கொண்டேன் "

"ஹூம்...வெல்டன் அப்புறம் என்ன..."

"என் நண்பன் கூடுதலாக ஒரு விபரம் சொன்னான். நான் முன்பு சொன்ன நேரங்கள் தவிர்த்து அவனுக்கு 99:99 என்ற நேரமும் அடிக்கடி தெரிவதாக சொன்னான். அது தான் கொஞ்சம் இடித்தது. நானும் கடிகாரத்தில் கோளாறு இருக்கலாம் என்று அவனிடமிருந்து வாங்கி வைத்தேன். இதுவரை நான்கு கடைகளில் கொடுத்து செக்கப் செய்தாயிற்று. கடிகாரத்தில் பிரச்சனையே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவன் சொன்னதை சரிபார்ப்பதற்காக நானும் அடிக்கடி கடிகாரத்தை நோட்டம் விட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நார்மலாகத் தான் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் எனக்கும் அடிக்கடி 99:99 தெரியா ஆரம்பித்து இருக்கிறது..அதான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்"

"இன்ட்ரெஸ்டிங்...ம்ம்ம்....ஹாலூசினேஷன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?"

"கேள்விப் பட்டிருக்கிறேன்..."


"மாயை..சில சமயம் நமது மனம் மூளை இவை விசித்திரமாக செயல்படும். நமது மூளை இருக்கிறதே..அதன் அமைப்பு அவ்வளவு விந்தையானது, சிறப்பானது. மருத்துவ உலகின் மிக முக்கியமான ஆராய்ச்சிகளில் ஒன்று மனித மூளையின் செயல்பாடுகளை புரிந்து செயல் படுத்த முயன்று கொண்டிருக்கும் ஆராய்ச்சி. எந்த அளவில் என்று தெரியுமா? லட்சத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. இதில் ஒரு பகுதியையாவது கிழித்துவிடுவோம் என்று ஐ.பி.எம்மும் ஸிவிஸ் விஞ்ஞானிகளும் இறங்கி இருக்கிறார்கள், ஆனால் இன்னும் நம்பிக்கை பிறக்கவில்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் இந்த ஹாலுசினேஷன் என்பது மூளையின் பில்லியன் கணக்கான ந்யூரான்களில் ஏற்படும் ஒரு கெமிக்கல் எஃபெக்ட். சில பேருக்கு குரல்கள் கேட்கலாம்..சில பேருக்கு உருவங்கள் தெரியலாம். அந்த மாதிரியாக உங்கள் நண்பர் சொன்னதிலிருந்து நீங்கள் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருப்பத்னால் வந்த விளைவு தான் இது. கவலையே படாதீர்கள்...நீங்கள் மிக மிக ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறீர்கள். குணப்படுத்திவிடலாம். ஆனால் அதற்கு முன்னால் உங்களை இன்னும் தரோவாக செக்கப் செய்யவேண்டும்

"எனக்கு என்னமோ இது அது மாதிரி தெரியவில்லை டாக்டர்"

"சந்திரா நான் சொன்ன மாதிரி நீங்கள் மிக மிக ஆரம்ப கட்டத்தில் இருக்கிறீர்கள் என்று நான் சந்தேகம் தான் படுகிறேன். நான் சில டெஸ்டுகள் எடுத்துப் பார்த்து விட்டால் அதுவும் தெரிந்துவிடும்...என்ன சொல்லுகிறீகள்"

"செலவு.."

"நிறைய ஆகாது வெறும் டெஸ்டுகள் தான்...நீங்கள் நாளை காலை வாருங்கள்..அதற்கு முன்னால் இந்த கடிகாரத்தையும் எனக்குத் தெரிந்த இடத்தில் கொடுத்து சோதித்து பார்த்துவிடுவோம்..கடிகாரம் தான் பிரச்சனை என்றால்...ரிப்பேர் சார்ஜ் மட்டும் கொடுங்கள் போதும் என்ன..ஹா ஹா"

சந்திரா அந்த ஜோக்கை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது அவன் கவலை தோய்ந்த முகத்துடன் கிளம்பிச் சென்றதிலேயே தெரிந்தது.

"பிரசாத் இன்று நீங்கள் மிஸ்டர் ரெட்டியை சந்திப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்" ரிசப்ஷன் பதுமை பதவிசாக வந்து நியாபகப் படுத்தியபோது பிரசாத் அந்த மெடிகல் ஜார்னலில் ஆழ்ந்திருந்தான்.

"ஓ மை காட் மறந்தே போய்விட்டேன்...இதோ கிளம்புகிறேன்...இன்றைக்கு வந்த ஆள் நாளை மீண்டும் வருவான்...அவனுக்கு இனிஷியல் டெஸ்ட் ஒன்று செய்ய ஏற்பாடு செய்துவிடு..ஆரம்ப கட்டமாய் தான் தோன்றுகிறான்..பார்ப்போம்"

டாக்டர் பிரசாத் பக்கத்திலிருந்த பாத்ரூமில் முகம் கழுவிப் புறப்பட்டான். கைக்குட்டையை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது கண் அநிச்சையாய் சந்திராவின் கடிகாரத்தில் மணி பார்த்தது...துல்லியமாக 99:99 என்று அவனைப் பார்த்து கண்சிமிட்டியது.

பி.கு- இந்தக் கதைக்கும் வேறொருவரின் வலைப்பதிவுக்கும், எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. விபரங்கள் பின்னூட்டத்தில் அல்லது அடுத்த பதிவில்.

பி.கு2 - இந்தப் பதிவ படிச்சிட்டு சாவித்திரி வாடை வருது சுஜாதா வாடை வருதுன்னு பின்னூட்டம் போடாதீங்க இப்போவே சொல்லிப்புட்டேன்...போதும் நிறுத்திகிரலாம் :)

17 comments:

சும்மா அதிருதுல said...

/./
- இந்தக் கதைக்கும் வேறொருவரின் வலைப்பதிவுக்கும், எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. விபரங்கள் பின்னூட்டத்தில் அல்லது அடுத்த பதிவில.
/./


நிலவு நன்பனை சொல்லுரீங்களா...

ILA (a) இளா said...

//இந்தப் பதிவ படிச்சிட்டு சாவித்திரி வாடை வருது சுஜாதா வாடை வருதுன்னு பின்னூட்டம் போடாதீங்க இப்போவே சொல்லிப்புட்டேன்//

வருது வருது..விலகு விலகு.

நாமக்கல் சிபி said...

//இந்தப் பதிவ படிச்சிட்டு சாவித்திரி வாடை வருது சுஜாதா வாடை வருதுன்னு பின்னூட்டம் போடாதீங்க இப்போவே சொல்லிப்புட்டேன்//
இனிமே சுஜாதா கதைகளை படிச்ச்சுட்டு டுபுக்கு வாடை வருதுன்னு சொல்லவோம் ;)

கைப்புள்ள said...

//டாக்டர் பிரசாத் பக்கத்திலிருந்த பாத்ரூமில் முகம் கழுவிப் புறப்பட்டான். கைக்குட்டையை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது கண் அநிச்சையாய் சந்திராவின் கடிகாரத்தில் மணி பார்த்தது...துல்லியமாக 99:99 என்று அவனைப் பார்த்து கண்சிமிட்டியது//

எனக்கு ஏனோ சுஜாதாவும் நினைவுக்கு வரலை...சாவித்ரியும் வரலை. விசு தான் நினைவுக்கு வர்றாரு. காரணம் படிச்சதும் தோணுனது "பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா"ங்கிற டயலாக் தான்.
:)

//பி.கு- இந்தக் கதைக்கும் வேறொருவரின் வலைப்பதிவுக்கும், எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. விபரங்கள் பின்னூட்டத்தில் அல்லது அடுத்த பதிவில்.//
நர்ஸ் மரியக்கா ட்யூட்டியில இருக்காங்க போலிருக்கு? யாருக்கு ஊசி போட போறாங்களோ?
:))

இலவசக்கொத்தனார் said...

//விபரங்கள் பின்னூட்டத்தில் அல்லது அடுத்த பதிவில்//

யப்பா, இது வரைக்கும் ஒரு .., சாரி ஒண்ணுமே புரியலை. இந்த விபரங்கள் வந்தாலாவது புரியுதான்னு பார்க்கலாம். நம்மளை டாக்டர் கிட்ட அனுப்பிடாதீங்க சாமி.

அது சரி, உங்க உடம்பு மனசுல எல்லாம் ஒரு பிராப்பளமும் இல்லையே, நல்லாத்தானே இருக்கீங்க?

துளசி கோபால் said...

நேற்றுதான் நண்பரும் இப்படித்தான் அவர் மணி பார்க்கறப்ப எல்லாம்
2.22 , 5.55 ன்னு சொல்லிக்கிட்டு இருந்தார்.

ரொம்பக் 'காமன்' வியாதியோ?:-))))

[ 'b u s p a s s' ] said...

எனக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருந்தது...

கார்'ல இருக்கிற கடிகாரத்தில அடிக்கடி "9:11" தெரிஞ்சது... ரொம்ப நாள் கழிச்சு என் Manager கூப்பிட்டு சொன்னார்.. "you seem to be late to office these days.."

இப்போ எல்லாம் அவ்வளவா தெரியரதில்லை...

ILA (a) இளா said...

நல்ல பேருங்க "Buss Pass"

Anonymous said...

ஏதோ ஒரு ப்ளாக்ல ஒரு லிப்டு கதை படிசிட்டு பேய் முழி முழிச்சேன்.ஒரு ...ம் புரியல. நீங்களும் ஆரம்பிச்சாசா?? இதுல சுஜாதா வாட,வட,உப்புமானு வேற ஹைப்பு ;-)
நல்லா தானே இருந்திங்க??

Deekshanya said...

சூப்பர்!

Unknown said...

கைப்புள்ள ஆமைதாபாத்க்குப் போயிட்டார்ன்னு தைரியத்துல்ல அவரைப் பத்தி இப்படி கன்னா பின்னான்னு எழுதுன்னா வ.வா.சங்கம் உங்களைச் சும்மா விடாது...

திட்டுறதா இருந்தா கைப்புள்ளயை நேராத் திட்டுங்க டுபுக்கு....

இப்படி குதர்க்கமாப் பேசுன்னா அவருக்குப் புரியாது ஆமா

ILA (a) இளா said...

//ஆமைதாபாத்க்கு//
கைப்புவைதான் எல்லாரும் தப்பா பேசறாங்கன்னா அவரு போன ஊரைக்கூடவா தப்பு தப்பா சொல்லுவீங்க. அது ஆமைதாபாத் இல்லே ஆமைதாபாளையம். மண்டூகம்'னு கொத்ஸ் சொன்னத நிரூப்பிக்கிறீங்களோ? என்னது இது. சிறுபுள்ளத்தனமா..

ILA (a) இளா said...

தேவு, கண்ணுல விளக்கெண்ணைய ஊத்திக்கிட்டு தேடியாச்சு. இதுல எங்கேயா கைப்பு வராரு?

இலவசக்கொத்தனார் said...

//மண்டூகம்'னு கொத்ஸ் சொன்னத நிரூப்பிக்கிறீங்களோ?//

யாம் முற்றும் உணர்ந்தவன்.

(அதான் தொடர்கதை எல்லாம் படிக்கறது இல்லை!)

நாமக்கல் சிபி said...

//appu said...
ஏதோ ஒரு ப்ளாக்ல ஒரு லிப்டு கதை படிசிட்டு பேய் முழி முழிச்சேன்.ஒரு ...ம் புரியல.
//
அது என் ப்ளாக் இல்லைங்களே ;)

Anonymous said...

//அது என் ப்ளாக் இல்லைங்களே ;) //

அப்பா..புரியவேண்டியவங்களுக்கு புரிந்துவிட்டது!!!

aruna said...

Watch background-ல லைட் இல்லாமலே 8:88 தெரியுமே..அந்த மாதிரி ஏதும் இருக்குமோ?

என்னதான் சொல்ல வறீங்க?