Thursday, October 12, 2006

Sangam Technologies Part-1 (Farmer)

"ஆகா... என்ன சொகம்டா சாமி... கால் மேல கால் போட்டுகிட்டு இந்தக் கயித்து கட்டிலே படுத்துகிட்டு அவுட்சைட் காத்து வாங்கிட்டு, காவேரி ஆத்தைப் பாத்துக்கிட்டே சிந்திக்கிற சொகம் இருக்கே சாமி.. சக்க சொகம்டா"

"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி..விவசாயீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.. விவசாயி"

அப்போது அங்கு சல்லென்று வெள்ளை வேன் ஒன்று வந்து சடன் பிரேக் அடித்து நின்றது. வேன் கதவு திறந்து ஜோடியா ஒரு குறுந்தாடியும் ஒரு அல்ட்ரா மாடர்ன் லேடியும் இறங்கினாங்க....தோப்புக்குள்ளே கயித்துக் கட்டிலே கவுந்துக் கிடந்த விவசாயி லைட்டா ஜெர்க்காகி முகத்தை மூடியிருந்த தொப்பியை ஸ்டைலா வீசிட்டு கண்ணைத் திறந்தா.. அந்தக் குறுந்தாடி அவுட் ஆப் போகஸ்ல்லயும் லேடி அல்ட்ரா போகஸ்ல்லயும் விவசாயி கண்ணுக்கு தெரிஞ்சாங்க....

லேடி மைக் ஒண்ணைக் கொண்டு வந்து விவசாயி கிட்ட நீட்டி...
"ஹாய்...."

"அதெல்லாம் காலையிலேயே ஆயிருச்சு"

"சீ..ஹலோ..."

"இது போன் பேசுற நேரம் இல்ல... கேக்க வந்ததைப் பட்டுன்னு கேட்டுட்டு, சட்டுன்னு எஸ்கேப் ஆனீங்கன்னா நான் என் ஓர்க்கைக் கன்டினீயூ பண்ணிக்குவேன்"

"ஓ..அவ்வளவு முக்கியமான வேலையில இருக்கீங்களா.. பார்த்தா அப்படித் தெரியல்லீயே"

"எனக்கு கூட உங்களைப் பார்த்தா என்ன என்னமோ தெரியுது அதுக்காக...."

"ஹே நீ ரொம்ப பேசுற..." எனக் குறுந்தாடி குறுக்கிட...

"என்னப் பண்றது பழக்கம் அப்படி...""சரி.. எதோ முக்கியமான வேலைன்னு சொன்னீயே அது என்ன?"

"சிந்திக்கிறேன்...அல்லும் பகலும் சிந்திக்கிறேன்...காலையிலே கழிவறையிலே துவங்குற சிந்தனை... அப்படியே ராவைக்கு ராவா சைஸா ஊறுகாய் தொட்டுட்டு உள்ள உட்டுகிட்டு குப்புற விழுந்து குறட்டை விடுற வரைக்கும் கன்டினீயூ ஆகுது"

"சோ நீ ஒரு வெட்டி வில்லேஜ் பாய்.. அப்படித் தானே"

"பாவாடைக் குட்டையா இருந்தாலும்... உன் மூளை ஒரளவுக்குக் வளந்து தான் இருக்கு.. அதை நான் பாராட்டுறேன். சில பேர் வெட்டிப்பயன்னு கூட பேர் வெச்சு இருக்கானுவ. அவுங்க எல்லாம் வெட்டியாவா இருக்காங்க? ..."

" உன்னை மாதிரி இளைஞர்கள் உழைச்சா எவ்வளவு நன்மைன்னு தெரியுமா?" குறுந்தாடி சவுண்டாய் அட்வைஸ் விட

"ஆடு மாதிரி உன் லுக் மட்டும் இல்ல சவுண்ட் கூட அப்படித் தான் இருக்கு மேன்.. ஓ.கே.. ஓ.கே லேடி அண்ட் தாடி உங்க வழிக்கே நானும் வர்றேன்... உழைச்சா என்ன நனமை டைம் வேஸ்ட் பண்ணாம டக்ன்னு சொல்லுங்க?"

"உழைச்சா நிறைய பணம் சம்பாதிக்கலாம்"

" பணத்தைச் சம்பாதிச்சு என்ன பண்ணுறது?"

"நிறைய சொத்து வாங்கலாம்"

"அந்த சொத்து எல்லாம் வாங்கி"

"வயசுக் காலத்துக்கு சேத்து வைக்கலாம்"

"சேத்து வச்சி...சொல்லு மேன் பக்கத்துல்ல எட்டிப் பாக்காதே"

" சேத்து வச்சி... சொகமா இப்படி தோப்பு துரவுன்னு வாங்கிட்டு வாழலாம்"

"ஏ ஆட்டுத் தாடி.. புல் பேண்ட் போட்டு இருக்க ஒனக்கு மூளை புல்லா வளரல்ல"

"ஏன் அப்படி சொல்லுறே வில்லேஜ் பாய்"

"என்ன நல்லாப் பார்.."

" பார்த்தாச்சு"
"இப்போ நான் என்னப் பண்ணுறேன்?"

"தோப்புல்ல கயித்து கட்டில்ல கால் ஆட்டிக்கிட்டு படுத்துகிட்டு இருக்கீங்க"

"அடேய் டுப்புக்கு டாபாக்கு.. எனக்கு வயசு முப்பது... இப்போவே நான் நீ அறுபதுல்ல செய்வேன்னு சொல்லறதெல்லாம் நான் செஞ்சுகிட்டு இருக்கேன்... சோ எதுக்குடா நான் உழைக்கணும்"

லேடியும் தாடியும் மிரள.. விவசாயி வாய்ஸ் எக்கோ ஆகிறது....

"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி..விவசாயீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.. விவசாயி"...

"இப்படித் தான் எனக்கு வேலைக் கொடுக்கணும் அமெரிக்கா வெள்ளை வீடு புஸ்... அப்புறம்... தம்மாத்தூண்டு மெல்லிஸ் அப்படின்னு எதோ பெரிய கம்யூட்டர் கடை வச்சிருக்க கதவுகாரரு...எல்லாம் வந்து எப்படியாவது என்னிய வேலைக்குச் சேத்துக்கணும்ன்னு தலை சைடா நின்னாங்க... நான் மசியல்லயே. ஆமைதாபாளையத்துல இருந்து.."

"அது ஆமைதாபாளையத்துல இல்லே ஃபார்மர், அகமதாபாத்"

"அது இங்கிலீசு, நான் சொல்றது தமிழு. தமிழ்ல சொன்னா வரி விலக்கம்ன்னு கலிஞ்சரூ சொன்னது தெரியாதா?"

"சரி.சரி..சரி மேல சொல்லுங்க."

"என்னாத்த மேல கீழன்னுட்டு. ஆமைதாபாளையத்துல இருந்து 'தல' கைப்புள்ளைன்னு ஒருத்தர் சங்கம் டெக்னிலஜீஸ்ன்னு ஒரு சங்கத்த ஆரம்பிச்சு வேலைக் கொடுத்தே ஆகணும்ன்னே ஒரு கடுதாசி போட்டு இருக்காரு அவர பார்க்கதான் நாளைக்கு போறேன்"
அவருதான் நான் வெவசாயமும் பார்த்துக்கலாம் அங்கன இருக்கிற வேலையையும் பார்த்துக்கலாம்னு சொல்லிருக்காப்புல. நாளைக்கு இண்டிரிவியு. பட்டணம் போறேன் வழிய உடு, நட்ட நடுவால நின்னுகிட்டு ஆளுங்களும் மொகறகளும்.. ஹூம்"

லேடியும், தாடியும் "எவ்வளவு மூளை இருந்து இருந்தா இந்த வெவசாயி எல்லாம் வேலை எடுக்க சரின்னு சொல்லி இருப்பாரு. எல்லாம் தலை விதி"

25 comments:

Anonymous said...

Eppadiyo, interviwkku muthal aal ready agiyachu. Appo sangam Technologies seekiram vanthurum. IT makkal ellam thankgal anupavathai solla oru itam kidakkum.

ILA(a)இளா said...

கண்டிப்பா ஐ.டி பத்தின ஒரு தொடர் வந்துரும். எல்லாரும் அவுங்க அவுங்களுக்கு நேர்ந்த கொடுமைய நகைச்சுவையை சொல்ல ஒரு துண்டு போட்டு ஒரு இடம் பிடிச்சு வெச்சுக்கோங்க.

நாகை சிவா said...

//"ஆகா... என்ன சொகம்டா சாமி... கால் மேல கால் போட்டுகிட்டு இந்தக் கயித்து கட்டிலே படுத்துகிட்டு அவுட்சைட் காத்து வாங்கிட்டு, காவேரி ஆத்தைப் பாத்துக்கிட்டே சிந்திக்கிற சொகம் இருக்கே சாமி.. சக்க சொகம்டா"//

சும்மா படுத்துக்கிடக்குறப்பவே இம்புட்டு லொள்ளு, கொள்ளு, ஏகத்தாளம் எல்லாம் இருந்துச்சுனா, நீர் சங்கம் டெக் சேர்ந்ததுக்கு அப்புறம் என்ன லொள்ளு பண்ண போறியோ.....

நாகை சிவா said...

//சில பேர் வெட்டிப்பயன்னு கூட பேர் வெச்சு இருக்கானுவ. அவுங்க எல்லாம் வெட்டியாவா இருக்காங்க? ..."//

யோவ் விவ், ஏன் இப்ப நம்ம வெட்டிய வம்புக்கு இழுக்குற. அவரு பாட்டுக்கு சும்மா வெட்டியா தானே இருக்காரு அப்புறம் என்ன?

வெட்டி No Hard Feeling, கமான் கமான்

நாமக்கல் சிபி said...

//சில பேர் வெட்டிப்பயன்னு கூட பேர் வெச்சு இருக்கானுவ. அவுங்க எல்லாம் வெட்டியாவா இருக்காங்க?//

விவசாயி... அப்படியே அந்த குட்டி பாவடைக்கிட்ட நம்ம அருமை, பெருமைய சொல்லி மெயில் ஐடி, போன் நம்பரெல்லாம் வாங்கியிருக்கலாமில்ல...

சரி எங்க கம்பெனிக்கு தான இண்டர்வியுவுக்கு வரீரு... நாங்க பாத்துக்குறோம்!!!

Syam said...

இது நல்லா இருக்கே...தோப்புல கட்டல போட்டு கம்முனு படுத்து இருந்தா குட்ட பாவாட போட்டுக்கிட்டு மைக்கோட வருவாங்களா..நானும் போறேன் எங்க தோப்புக்கு :-)

Syam said...

//ஆகா... என்ன சொகம்டா சாமி... கால் மேல கால் போட்டுகிட்டு இந்தக் கயித்து கட்டிலே படுத்துகிட்டு அவுட்சைட் காத்து வாங்கிட்டு, காவேரி ஆத்தைப் பாத்துக்கிட்டே சிந்திக்கிற சொகம் இருக்கே சாமி.. சக்க சொகம்டா//

இது மட்டும் இல்ல எந்த வேளையும் இருக்க கூடாது...எவனும் ஏன் வேளை செய்யலனு கேள்வி கேட்ட கூடாது...ஒரே வேளை சாயந்தரமா டாஸ்மாக்கு போறதா மட்டும் இருக்கனும் :-)

Syam said...

//எவனும் ஏன் வேளை//

சொரிங்க...ச்சே சாரிங்க ஆபீஸர்ஸ் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு...அது வேலை

ILA(a)இளா said...

//சும்மா படுத்துக்கிடக்குறப்பவே இம்புட்டு லொள்ளு, கொள்ளு, ஏகத்தாளம் எல்லாம் இருந்துச்சுனா//
சும்மா இருந்தா இதெல்லாம் நிறைய வருமுங்க, வேலை இருந்தா இதெல்லாம் வர நேரம் இருக்குமா?

ILA(a)இளா said...

//ஏன் இப்ப நம்ம வெட்டிய வம்புக்கு இழுக்குற//
ஏன் இழுத்தா என்ன? ஏற்கனவே சங்கம் டெக்'ல சேர்ந்துட்டாரு அப்படிங்கிறதுக்காக எல்லாம் விட்டுற முடியாது. சீனியரை ரேகிங் பண்ற கம்பேனியா இருக்கட்டும் இந்த சங்கம் டெக்.

ILA(a)இளா said...

//இது மட்டும் இல்ல எந்த வேளையும் இருக்க கூடாது...எவனும் ஏன் வேளை செய்யலனு கேள்வி கேட்ட கூடாது//
ஆமா இப்போ மட்டும் என்ன வாழுதாம். எல்லாமே பெஞ்ச் மயம்

Anonymous said...

IT கம்பெனியயும் விட்டுவைக்க போறது இல்லியா? ஆண்டவன்தான் இவுங்ககிட்ட இருந்து IT காப்பாத்தனும்.

தேவ் | Dev said...

அண்ணா விவ் அண்ணா.. இன்ட்ர்வியூ எடுக்கப் போறவர் பெயர் ஊர் எல்லாம் விசாரிச்சுட்டேன்... ஹெ.எச் ஆர் மேனேஜரையும் கரெக்ட் பண்ணிட்டேன். சோ யூ ஆர் அப்பாயின்ட்டெட். ஓ.கே வா

நாகை சிவா said...

//IT கம்பெனியயும் விட்டுவைக்க போறது இல்லியா? ஆண்டவன்தான் இவுங்ககிட்ட இருந்து IT காப்பாத்தனும். //

ஹிஹி விவ், உங்களை இது விட யாரும் அசிங்கப்படுத்த முடியாது போல இருக்கு. வந்து சீக்கிரம் பதில் சொல்லுங்க

நாகை சிவா said...

//விவசாயி... அப்படியே அந்த குட்டி பாவடைக்கிட்ட நம்ம அருமை, பெருமைய சொல்லி மெயில் ஐடி, போன் நம்பரெல்லாம் வாங்கியிருக்கலாமில்ல...//

ஆஹா, வெட்டி காரியத்தில பல கரேக்டா இருக்கியே நீ. உன்கிட்ட இனி ஜாக்கிரதையாகவே இருக்கனும். ஐ.டி. கிடைத்தவுடன் பார்வட் பண்ண மறந்துவிடாதே என்ன?

நாகை சிவா said...

//சீனியரை ரேகிங் பண்ற கம்பேனியா இருக்கட்டும் //

சீனியர் நீங்க சொன்னா சரி தான். நான் வயச சொன்னேன். ;)

ILA(a)இளா said...

//உங்களை இது விட யாரும் அசிங்கப்படுத்த முடியாது போல இருக்கு. //

எதையும் கலாய்க்காம விடமாட்டோம்ல. வாங்க ஒரு கை பார்த்துருவோம்.(கைப்புவைதான் சுருக்கி கை'ன்னு சொன்னேன்)

ஜொள்ளுப்பாண்டி said...

//"பாவாடைக் குட்டையா இருந்தாலும்... உன் மூளை ஒரளவுக்குக் வளந்து தான் இருக்கு..//

:))))) ரொம்ப குஜாலா இருந்துக்குமே !!

//ஆமைதாபாளையத்துல இருந்து 'தல' கைப்புள்ளைன்னு ஒருத்தர் சங்கம் டெக்னிலஜீஸ்ன்னு ஒரு சங்கத்த ஆரம்பிச்சு வேலைக் கொடுத்தே ஆகணும்ன்னே ஒரு கடுதாசி போட்டு இருக்காரு அவர பார்க்கதான் நாளைக்கு போறேன்"//

அப்படியே நமக்கும் ஒரு கார்டு அனுப்ப சொல்லுங்க மக்கா :)))

நாமக்கல் சிபி said...

// பார்வட் பண்ண மறந்துவிடாதே என்ன?//
புலி அதெல்லாம் கம்ப்பெனி மேட்டரு.. சீக்கிரம் நீயும் வந்து சேரு.... புர்தா???

நாமக்கல் சிபி said...

//ILA(a)இளா said...

//ஏன் இப்ப நம்ம வெட்டிய வம்புக்கு இழுக்குற//
ஏன் இழுத்தா என்ன? ஏற்கனவே சங்கம் டெக்'ல சேர்ந்துட்டாரு அப்படிங்கிறதுக்காக எல்லாம் விட்டுற முடியாது. சீனியரை ரேகிங் பண்ற கம்பேனியா இருக்கட்டும் இந்த சங்கம் டெக்.//

கண்ணு இண்டர்வியு முதல் ரவுண்ட் எடுக்க போறது நான் தான்...

நாமக்கல் சிபி said...

///Anonymous said...

IT கம்பெனியயும் விட்டுவைக்க போறது இல்லியா? ஆண்டவன்தான் இவுங்ககிட்ட இருந்து IT காப்பாத்தனும்.//

ஆண்டவன் சொல்றான் கைப்பு ஆரம்பிக்கறான்னு ஆரம்பிச்சதுதான் இந்த கம்பெனி...

தம்பி said...

//கண்ணு இண்டர்வியு முதல் ரவுண்ட் எடுக்க போறது நான் தான்...//

மொத்தம் எத்தன ரவுண்ட்?

மிக்ஸிங் எல்லாம் கரெக்டா இருக்கும்ல, அப்புறம் நமக்கு கோலி சோடாவ தவிற வேற எதுவும் ஒத்துக்கிறாது.

தம்பி said...

//லேடி மைக் ஒண்ணைக் கொண்டு வந்து விவசாயி கிட்ட நீட்டி...
"ஹாய்...."

"அதெல்லாம் காலையிலேயே ஆயிருச்சு"//

என்னா குசும்புயா ஒமக்கு!

ILA(a)இளா said...

//என்னா குசும்புயா ஒமக்கு! //
கொங்கு நாட்டுக்காரவுங்களுக்கு கொஞ்சம் குசும்பு சாஸ்திங்கோவ்

Anonymous said...

Konjam Lollu, Konjam Jollu