Monday, October 2, 2006

அன்புள்ள விநாயகம்,

அன்புள்ள விநாயகம்
நலம் நலமறிய அவல். என்னாடா டுபுக்கு அதிசயமா நமக்கு லெட்டர்லாம் எழுதறானேன்னு நினைக்காத, உன்னை மாதிரி ஆத்தங்கரையோரமா உட்கார்ந்துகிட்டு குளிக்கப் போகிற பிகர்களை லுக்குவிட்டுக்கிட்டு கொழுக்கட்டைய தின்னுக்கிட்டு ஒய்யாராமா உட்கார்ந்திருக்கிற பொழப்பில்ல என்னுது. நாயாப் பேயா ஓடியாடற பொழப்பு. ஐந்நூத்தி சொச்ச தமிழ் ப்ளாக்குல ஐம்பதாவது எட்டிப்பார்த்து ":))))))"- ஸ்மைலியோ, "சூப்பர் கலக்குறீங்க"ன்னோ, "எதார்த்தமான நடை..நல்லாருக்கு"ன்னோ, "இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்"ன்னோ கமெண்டு போட்டாத்…தேன்...நம்ம கல்லாவுல இருபத்து சொச்சம் கமெண்டாவது தேறும். இதெல்லாம் இல்லாம "இன்னிக்கு இன்னிக்கு மூடே சரியில்ல..."ன்னு ஒத்த வரில போடற மொக்கை போஸ்டுக்கெல்லாம் "ப்ளீஸ் கம் பேக் சூன்"..."டேக் கேர்"..."நல்ல பாட்டு கேளு".."காலாற நடந்து வாகிங் போயிட்டுவா".."உனக்குமா??..எனக்கும் :)", "வில் மிஸ் யூ"...ன்னு நூத்துக்கணக்குல கமெண்டு குமியறதுக்கு நானென்ன...தங்கிலிஷ்ல எழுதற ஃபிகரா?? இல்ல இலவசக்கொத்தனாரா?

ஏதோ நாணுன்டு என் இருபது சொச்ச கமெண்டுண்டுன்னு இருந்தா, சும்மா கிடக்கிற சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டின்னு சங்கத்துல இழுத்துவிட்டுடாரு கைப்ஸ். சரி ஏதோ சங்கதுல கூப்பிட்டு "அட்லாஸ்"ன்னு மரியாதை செய்யப்போறாங்கன்னு இங்க வந்து பார்த்தா...ஆளாளுக்கு தர்ம அடிக்கு சவுண்டு விட்டுக்கின்னு இருக்காங்க. அப்பனே விநாயகம்...எனக்கு பயமாயிருக்கு காப்பாத்தைய்யா.

அப்பனே விநாயகம் உன்னை எனக்கும் உனக்கும் இன்றைக்கு நேற்றைக்கா பழக்கம்? உனக்கு நினைவிருக்கிறதா...97ல் நுங்கம்பாக்கம் ஹை ரோட்டில் நடந்து போய்கொண்டிருக்கும் போது ஒரே கூட்டம். என்னடா கூட்டம் என்று வந்து கொண்டிருந்த மார்வாரியைக் கேட்க.."விநாயம் பால் குடிக்கிறான்.." என்று ஏதோ சேட்டு விட்டு பிள்ளை பால் குடிப்பது போல் சொல்லிவிட்டு போக...(அழகாய் இருக்கும்)மிஸ்.ரீனாவின் யுனிக்ஸ் ஷெல் ஸ்கிரிப்டிங் க்ளாஸ் போனால் போகிறது என்று கூட்டத்தை..நெருக்கியடித்துக்கொண்டு முன்னால் வந்து நீ பால் குடிக்கும் அழகைப் பார்த்து பக்தியுடன் தலையிலடித்துக் கொண்டவனல்லவா நான். ஆமாம் விநாயகம்...நீ பால் குடிக்கும் பருவத்திலிருந்தே உன்னை எனக்குத் தெரியும்.

ஏதோ பால் குடிச்ச..அத்தோடு நிப்பாட்டிக்கோ...இல்லைன்னா..உன் பெயரச் சொல்லி எங்க வீட்டுலல்லாம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கொழுக்கைட்டையை அடுத்த வருஷத்திலிருந்து ஆஞ்சநேயருக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிவிடுவார்கள் என்று எவ்வளவு உரிமையோடு உனக்கு அறிவுரை சொல்லியிருப்பேன்? ஊரார் சிரிக்கச் சொல்லுவார் உற்றார் உரைக்கச் சொல்லுவார் நீ புரிந்து கொண்டிருப்பாய்.

"நான் சின்னப் பையன், சங்கத்தில் இருக்கும் பிள்ளைகள் அளவுக்கு இன்னும் வாலிப வயது வரவில்லை" என்று கைப்பிள்ளையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்...கேட்டால் தானே. இங்கு வந்து பார்த்தால் ஒரு பெரிய கூட்டமே எனக்கு ஆப்பு வைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது...ரொம்ப பயமாய் இருக்கிறதப்பா...தயவு செய்து அவர்களை காப்பாத்து...உன்னை ரொம்ப வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.


பி.கு - அன்பார்ந்த சங்கத்து சிங்கங்களே...இந்த மாதம் முழுக்க நானும் உங்களில் ஒருவன். ஆதலால் நமக்கு நாமே திட்டதைக் கைவிட்டு வேறு யாருக்காவது செல்லமாக மனதை புண்படுத்தாமல் ஆப்பு வைக்கலாம் என்று நினைக்கிறேன். மற்றபடி இந்த ஆப்பு ஐடியாவிற்கு நன்றி

வலையுலக மக்களே - சும்மா எத்தனை நாள் தான் கொசுவத்தியை சுத்த விட்டு மலரும் நினைவுகளை சொல்லுவது? நானும் தர்ம அடி வாங்க வேண்டாமா? அதனால் உங்களில் வாரம் ஒரு அதிர்ஷடசாலியை கிறுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து செல்ல ஆப்பு வைக்கலாம் என்று நினைக்கிறேன். ஆப்பு கண்டிப்பாக பலமாகவோ மனதை புண்படுத்துமாகவோ இருக்காது. எங்க ஊர் மரியக்கா நர்ஸ் ஊசி போடுவது மாதிரி சிலசமயம் ஆப்பு உங்களுக்குத் தான் என்பதே தெரியாமல் போகலாம். சும்மா அறிவுஜீவித்தனமாக (??!!) காட்டிக்கொள்வதற்காக உங்கள் பெயரே இருக்காது...சின்ன க்ளூ மட்டும் தான் பதிவுகளில் இருக்கும். அடியேனின் கன்னி முயற்சிக்கு ஆப்பு வைச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ் !!
ஓ.கே தர்ம அடி ...ரெடி ஸ்டார்ட் :) ஸ்டார்ட் மீசிக்

50 comments:

Anonymous said...

அன்பில்லாத டுப்புக்குவிற்கு,

நலமில்லை நலமறியவேண்டாம்!

என்னாடா ஆத்த்ங்கரை விநாயகம் அதிசயமா உடனே நமக்கு பதில் கடிதம் போட்டுட்டானேன்னு நினைக்காதே!

ஆத்தங்கரையோரமா உட்கார்ந்துகிட்டு குளிக்கப் போகிற பொண்னுங்களை லுக்குவிட்டுக்கிட்டு கொழுக்கட்டைய தின்னுக்கிட்டு ஒய்யாராமா உட்கார்ந்திருக்கிறேன்னு எழுதியிருக்கியே!
அது உனக்கு அபாண்டமாத் தோணலையா?

நான் உட்கார்ந்திருக்கிறதுனாலதான் பொண்ணூங்களே குளிக்க வருதுங்க.
இங்க குளிக்க வர்றேன்னு சேட்டை பண்ண வர்ற பேமானிப் பசங்ககிட்ட இருந்து அந்தப் பொண்ணூங்களைப் பாதுகாகிறதே நாதான் - அதைத் தெரிஞ்சுக்கசாமி முதல்ல!!

இப்படியெல்லாம் என்னப்பத்திக் கேவலமா எழுதினீன்னா உனக்கு எப்படிப் பின்னுட்டம் விழுகும்?

இனிமே ஒழுங்கா எழுது

ஒரு பின்னுட்டம் என்ன உனக்கு 100 பின்னூட்டம் வர்ற மாதி நான் பண்றேன்

என் பகதன் ஒருத்தன் இருக்கான் சின்னப்பதாஸ்ன்னு பேரு அங்க தமிழ் மணத்தையே சுத்தி வந்துக்கிட்டிருப்பான். அவனைவிட்டு உனக்குத் தேவையான பின்னுட்டுத்த நான் போடவைக்கிறேன்

இப்படிக்கு,
ஆத்தங்கரைப் பிள்ளையார்.

Udhayakumar said...

//ஓ.கே தர்ம அடி ...ரெடி ஸ்டார்ட் :) ஸ்டார்ட் மீசிக்///

தர்ம அடி நாங்க தருவோம். மூசிக் நீங்கதான் குடுக்கணும்... (மானே, தேனே மாதிரி அம்மா, அய்யோ...ன்னு நீங்க பில் பண்ணிக்குங்க...) வர்ட்டா....

நாமக்கல் சிபி said...

வருக வருக டுபுக்கு அவர்களே!

தங்களிடம் முதலில் மாட்டப்போகும் அன்பர் யாரோ?

சீட்டுக் குலுக்கிப் போட்டாச்சா? இதுக்கு ரெக்கமெண்டேஷன் எல்லாம் வேணுமா?

பெருசு said...

//நூத்துக்கணக்குல கமெண்டு குமியறதுக்கு நானென்ன...தங்கிலிஷ்ல எழுதற ஃபிகரா?? இல்ல இலவசக்கொத்தனாரா?//
ஆரம்பமே ஆப்போட ஆரம்பிக்குது.

சரி , சரி பாத்து டுபுக்குங்க.

பெருசு said...

//நூத்துக்கணக்குல கமெண்டு குமியறதுக்கு நானென்ன...தங்கிலிஷ்ல எழுதற ஃபிகரா?? இல்ல இலவசக்கொத்தனாரா?//
ஆரம்பமே ஆப்போட ஆரம்பிக்குது.

சரி , சரி பாத்து டுபுக்குங்க.

நாகை சிவா said...

வாங்க வாங்க டுபுக்கு. ஆரம்பமே அசத்தல் தான் போங்க.

பிள்ளையாருக்கே அவல் கொடுக்குறீங்களா கொடுங்க. எப்படி பாத்தாலும் அவரு நம்ம ஆளுங்க. பேசி தீர்த்துக்கலாம்.....

இந்த பதிவுலே நம்ம கொத்துஸ் சைட்ல ஒரு இடி இடிச்சி இருக்கீங்க பாருங்க. அது தாங்க டாப்.......ம்ம்ம்
நடத்துங்க நடத்துங்க

நாகை சிவா said...

//அன்பார்ந்த சங்கத்து சிங்கங்களே...இந்த மாதம் முழுக்க நானும் உங்களில் ஒருவன். ஆதலால் நமக்கு நாமே திட்டதைக் கைவிட்டு வேறு யாருக்காவது செல்லமாக மனதை புண்படுத்தாமல் ஆப்பு வைக்கலாம் என்று நினைக்கிறேன். //

சிந்திக்கும் பிரங்கி, நீ என்றுமே எங்களில் ஒருவன் தான்.

நீங்கள் கூறி இருக்கும் திட்டமும் நல்லா தான் இருக்கு. எப்படியோ எங்க தல கைப்புள்ளயை ஆப்பில் இருந்து காப்பாற்றினால் போதும் எங்களுக்கு.

கப்பி பய said...

வாங்க திங்கு டாங்கு வாங்க....

//நூத்துக்கணக்குல கமெண்டு குமியறதுக்கு நானென்ன...தங்கிலிஷ்ல எழுதற ஃபிகரா?? இல்ல இலவசக்கொத்தனாரா?
//

அதான் அவர் ஒரு மாசம் ரூம் போட்டு ஆப்பு எல்லாத்தையும் பொறுமையா வாங்கிட்டு போனாருல்ல..இப்ப உங்களை கவனிப்போம் ;)

//நானும் உங்களில் ஒருவன். ஆதலால் நமக்கு நாமே திட்டதைக் கைவிட்டு வேறு யாருக்காவது செல்லமாக மனதை புண்படுத்தாமல் ஆப்பு வைக்கலாம் என்று நினைக்கிறேன்//

மக்களே..உஷார்...அடுத்தவனை
மாட்டிவிட்டு பார்ட்டி எஸ்கேப் ஆகப் பாக்குது :))


//அடியேனின் கன்னி முயற்சிக்கு //

போட்டோ போடுவீங்களா :D

//
ஆப்பு வைச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ் !!
ஓ.கே தர்ம அடி ...ரெடி ஸ்டார்ட் :) ஸ்டார்ட் மீசிக்
//
ஆசிர்வாதம், எதிர்வாதம், பக்கவாதம் எல்லாம் தல வந்து தான் பண்ணனும்...

மூசிக் தி ஸ்டார்டடு!!!

கப்பி பய said...

வாங்க திங்கு டாங்கு வாங்க....

//நூத்துக்கணக்குல கமெண்டு குமியறதுக்கு நானென்ன...தங்கிலிஷ்ல எழுதற ஃபிகரா?? இல்ல இலவசக்கொத்தனாரா?
//

அதான் அவர் ஒரு மாசம் ரூம் போட்டு ஆப்பு எல்லாத்தையும் பொறுமையா வாங்கிட்டு போனாருல்ல..இப்ப உங்களை கவனிப்போம் ;)

//நானும் உங்களில் ஒருவன். ஆதலால் நமக்கு நாமே திட்டதைக் கைவிட்டு வேறு யாருக்காவது செல்லமாக மனதை புண்படுத்தாமல் ஆப்பு வைக்கலாம் என்று நினைக்கிறேன்//

மக்களே..உஷார்...அடுத்தவனை
மாட்டிவிட்டு பார்ட்டி எஸ்கேப் ஆகப் பாக்குது :))


//அடியேனின் கன்னி முயற்சிக்கு //

போட்டோ போடுவீங்களா :D

//
ஆப்பு வைச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ் !!
ஓ.கே தர்ம அடி ...ரெடி ஸ்டார்ட் :) ஸ்டார்ட் மீசிக்
//
ஆசிர்வாதம், எதிர்வாதம், பக்கவாதம் எல்லாம் தல வந்து தான் பண்ணனும்...

மூசிக் தி ஸ்டார்டடு!!!

நாமக்கல் சிபி said...

வாங்க!!! தலைவா வாங்க!!!
இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக முடியாது.

மக்களே இங்க ஒருத்தர் வந்து மாட்டிக்கிட்டாரு எல்லாம் ரெடியாயிக்கோங்க ;)

இலவசக்கொத்தனார் said...

ஆரம்பமே இப்படியா? சீனியருக்கு சலாம் வச்சிட்டு ஆரம்பியுடான்னா ஆப்பா வைக்கற? இருக்கட்டும் உனக்கும் இருக்கு. ...

இலவசக்கொத்தனார் said...

ஆரம்பமே இப்படியா? சீனியருக்கு சலாம் வச்சிட்டு ஆரம்பியுடான்னா ஆப்பா வைக்கற? இருக்கட்டும் உனக்கும் இருக்கு. ...

ILA(a)இளா said...

இப்போதைக்கு ஒரு :). அப்பால வந்து இந்த விநாயகத்துக்கு பால் ஊத்திருவோம்.

கைப்புள்ள said...

//"வில் மிஸ் யூ"...ன்னு நூத்துக்கணக்குல கமெண்டு குமியறதுக்கு நானென்ன...தங்கிலிஷ்ல எழுதற ஃபிகரா?? இல்ல இலவசக்கொத்தனாரா?//

கொத்ஸ் கவனிக்க!
தங்லீஷ்ல எழுதற ஃபிகர் ரேஞ்சுக்கு இருக்குங்க உங்க மவுசு. என்னமோ எங்களை எல்லாம் மறக்காம இருந்தா சரி தான்.
:)

கைப்புள்ள said...

//எங்க ஊர் மரியக்கா நர்ஸ் ஊசி போடுவது மாதிரி சிலசமயம் ஆப்பு உங்களுக்குத் தான் என்பதே தெரியாமல் போகலாம்//

ஊசி போட்டுக்கற அதிர்ஷ்ட சாலியை எப்படி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பீங்களா?

தேவ் | Dev said...

//எங்க ஊர் மரியக்கா நர்ஸ் ஊசி போடுவது மாதிரி சிலசமயம் ஆப்பு உங்களுக்குத் தான் என்பதே தெரியாமல் போகலாம். //

ஆகா சிக்குனவனுக்கு சிக்கன் குனியாத் தான்ங்கறதை எம்புட்டு அழகாச் சொல்லுறாருய்யா நம்ம யோசிக்கிற டாங்க்...

டோன்ட் வொர்ரி வைக்கிற ஆப்பு அங்கிட்டு இங்கிட்டு மிஸ் ஆகி ஏடாக்கூடம் ஆனாலும் நம்ம யோசிக்கிற டாங்கி ஊர்கார மரியா அக்கா ஊசியோட ஆஜர் ஆயிடுவாங்கப்பா

தேவ் | Dev said...

ஆமா இவர் எதுக்கு கொத்தனாரைப் பிகர்கள் லிஸ்ட்ல்ல சைலண்ட்டாச் சேத்துவிடுறாரு... சரி நாம அதுப் பத்தி எல்லாம் பேசி அட்லாஸ் வாலிப்ஸ்குள்ளே மூட்டி எல்லாம் விடப்பிடாது ... நம்ம வேலையைப் பாப்போம் சாமீ.. ஜூட்.. இப்போ போறோம் ஆனா மறுபடியும் வ்ருவோம்...

ஜொள்ளுப்பாண்டி said...

//ஆத்தங்கரையோரமா உட்கார்ந்துகிட்டு குளிக்கப் போகிற பிகர்களை லுக்குவிட்டுக்கிட்டு கொழுக்கட்டைய தின்னுக்கிட்டு ஒய்யாராமா உட்கார்ந்திருக்கிற பொழப்பில்ல என்னுது//

வாங்க டுபுக்கண்ணா விநாயகமும் நம்ம பொழப்பத்தான் பண்ணுராருன்னு சொல்லி என்னைய புல்லரிக்க வச்சுடீகளே !! மக்கா பார்துக்கோங்க :)))

ஜொள்ளுப்பாண்டி said...

//நூத்துக்கணக்குல கமெண்டு குமியறதுக்கு நானென்ன...தங்கிலிஷ்ல எழுதற ஃபிகரா??//

ஹிஹிஹிஹிஹிஹி டுபுக்கண்ணா ஆராணு ஆ தங்கிலீசு பெண்குட்டி? ஆயாள் Blog address கொடுத்தெங்கில் ஞாணும் எண்டெ கமெண்டுகளை அள்ளிவிடும் ;)))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//எங்க ஊர் மரியக்கா நர்ஸ் ஊசி போடுவது மாதிரி சிலசமயம் ஆப்பு உங்களுக்குத் தான் என்பதே தெரியாமல் போகலாம்.//

ஏதோங்கண்ணா மொத்ததுல உங்களுகு வெக்கலாமின்னு இருந்த ஆப்பை திருப்பி விடப்போறீகண்ணு தெரியுது. மக்கா அல்லாரும் அலர்டா இருங்கோ !! ஏதுக்கும் நம்ம தளபதிய ரெடியா இருக்க சொல்லுங்கப்பூ !! :)))

நாகை சிவா said...

//வாங்க டுபுக்கண்ணா விநாயகமும் நம்ம பொழப்பத்தான் பண்ணுராருன்னு சொல்லி என்னைய புல்லரிக்க வச்சுடீகளே !! மக்கா பார்துக்கோங்க :))) //

பாண்டி, அவரையும் நம்ம லிஸ்டுல சேர்த்துட்டியா நீ!

//ஹிஹிஹிஹிஹிஹி டுபுக்கண்ணா ஆராணு ஆ தங்கிலீசு பெண்குட்டி? ஆயாள் Blog address கொடுத்தெங்கில் ஞாணும் எண்டெ கமெண்டுகளை அள்ளிவிடும் ;))))))) //

அடியே சந்துல சிந்து பாடுற பாத்தியா நீ, நாங்க இங்க அத வாங்க தானே சைலண்டா அவரு வருவாருனு சைல்ண்டா வர்கார்ந்து இருக்கோம். நீ போயி வரிசையில் குந்து....

Syam said...

//எங்க ஊர் மரியக்கா நர்ஸ்//

அந்த அக்கா போட்டோ போட்டு இருக்கலாம்ல என்னமோ போங்க :-)

Syam said...

//இந்த மாதம் முழுக்க நானும் உங்களில் ஒருவன். ஆதலால் நமக்கு நாமே திட்டதைக் கைவிட்டு//

அந்த ஒரு திட்டம் தான் இங்கன உருப்படியா இருக்கு அதையும் கைவிட்டுட்டு என்ன பன்றது...அதுனால கிறுக்கல் முறைல யார வேனாலும் தேர்ந்து எடுங்க ஆனா ஆப்புக்கு சோல் புரொப்பரைட்டர் நீங்க தான் :-)

Syam said...

//ாயாப் பேயா ஓடியாடற பொழப்பு. ஐந்நூத்தி சொச்ச தமிழ் ப்ளாக்குல ஐம்பதாவது எட்டிப்பார்த்து ":))))))"- ஸ்மைலியோ, "சூப்பர் கலக்குறீங்க"ன்னோ, "எதார்த்தமான நடை..நல்லாருக்கு"ன்னோ, "இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்"ன்னோ கமெண்டு போட்டாத்…தேன்...நம்ம கல்லாவுல இருபத்து சொச்சம் கமெண்டாவது தேறும்//

இந்த கஷ்டமெல்லாம் நமக்கு தான் தெறியும்...ஜாலியா அம்மா அப்பாவ சுத்தி வந்து மேங்கோவ சுட்டுட்டு போன அவருக்கு என்ன தெறியும் :-)

Syam said...

//ஹிஹிஹிஹிஹிஹி டுபுக்கண்ணா ஆராணு ஆ தங்கிலீசு பெண்குட்டி? ஆயாள் Blog address கொடுத்தெங்கில் ஞாணும் எண்டெ கமெண்டுகளை அள்ளிவிடும//

அதே ஞாணும் அங்கனயே பறஞ்சு :-)

நாமக்கல் சிபி said...

//Syam said...
//ஹிஹிஹிஹிஹிஹி டுபுக்கண்ணா ஆராணு ஆ தங்கிலீசு பெண்குட்டி? ஆயாள் Blog address கொடுத்தெங்கில் ஞாணும் எண்டெ கமெண்டுகளை அள்ளிவிடும//

அதே ஞாணும் அங்கனயே பறஞ்சு :-)
//
சரி இதப்பத்தி அண்ணன் ஒரு தனி பதிவு போடுவார்... எல்லாம் ரெடியாயிக்கோங்க ;)

Syam said...

//சரி இதப்பத்தி அண்ணன் ஒரு தனி பதிவு போடுவார்... எல்லாம் ரெடியாயிக்கோங்க//

அண்ணன் கழுவுற மீனுல நழுவுற மீனு...இதுக்கு என்ன சொல்லி சமாளிப்பார்னு பாருங்க :-)

ஜொள்ளுப்பாண்டி said...

//அடியே சந்துல சிந்து பாடுற பாத்தியா நீ, நாங்க இங்க அத வாங்க தானே சைலண்டா அவரு வருவாருனு சைல்ண்டா வர்கார்ந்து இருக்கோம். நீ போயி வரிசையில் குந்து.... //

அட சிவாதம்பி என்னாதிது கலாட்டா ? சந்துல சிந்துன்னு சொல்லி கலவரப்படுத்துர :((

சரி சரி நானும் வரிசையிலே துண்டைப் போடுதேன் ஆமா நம்ம தல எத்தனாவதா குந்திகினு இருக்கு ??:))))

ஜொள்ளுப்பாண்டி said...

//அதே ஞாணும் அங்கனயே பறஞ்சு :-) //

ஓ மை God ! எந்தா சேட்டா ஷ்யாம் சுகந்தன்னே?? :)))

நாகை சிவா said...

//சரி சரி நானும் வரிசையிலே துண்டைப் போடுதேன் ஆமா நம்ம தல எத்தனாவதா குந்திகினு இருக்கு ??:)))) //

சின்ன பசங்களுக்கு தான் முதல் இடம் சொன்னதால நான் 1st. இரண்டாவதா நம்ம தல குந்திகினு இருக்கு. அதான் இப்ப நீ வந்துட்டுல நீ தான் 2nd.....
:)))

நாகை சிவா said...

////எங்க ஊர் மரியக்கா நர்ஸ்//

அந்த அக்கா போட்டோ போட்டு இருக்கலாம்ல என்னமோ போங்க :-)//

பங்கு, உனக்கு தெரியுது, அவருக்கு தெரிய மாட்டேங்குது பாரு. இப்ப தான் ஊருக்கு எல்லாம் போயிட்டு வந்தார். அண்ணாத்த கொஞ்சம் கருணை காட்டுங்க, நம்ம பங்கு ரொம்பவே பாவம்....

Syam said...

//ஓ மை God ! எந்தா சேட்டா ஷ்யாம் சுகந்தன்னே?? :)))//

சுகமாய்ட்டு உண்டு கேட்டோ..பட்சே ஈ டுபுக்கு ஏட்டா ஆ குட்டிகள்ண்ட blog address கொடுத்தெங்கில் வல்லிய சுக்மாய்ட்டு இருக்கும்..்

Syam said...

//இப்ப தான் ஊருக்கு எல்லாம் போயிட்டு வந்தார். அண்ணாத்த கொஞ்சம் கருணை காட்டுங்க, நம்ம பங்கு ரொம்பவே பாவம்....//

பங்கு, அண்ணன் டுபுக்கு நல்லவர்,வல்லவர், நாலு என்ன நாற்பதே தெறிந்தவர்...அதுனால போட்டோ நமக்கு எல்லாம் தனியா ஈமெயில்ல அனுப்புவார்....

Syam said...

//சரி சரி நானும் வரிசையிலே துண்டைப் போடுதேன் ஆமா நம்ம தல எத்தனாவதா குந்திகினு இருக்கு//

நான் மூணாவது தல நாலாவது...

அதாவது நான் மூனாவது பாஸ் தல நாலாவது பெயில்... :-)

Dubukku said...

anonymous - இன்னா பிள்ளையாரே என்னான்ட கோச்சிக்கிற...நான் உங்கைல எவ்வோளு ப்ரெண்டு...இதெல்லாம் சும்மா டமாசுக்கு தானே.. அட்ஜீஸ் பண்ணிக்கோப்பா...கண்டுக்காதபா...

அந்த 100 கமெண்ட் ஆசிர்வாதம் சீக்கிரம் பண்ணுப்பா :)


Udhayakumar - மீசிக் கூட குடுக்கமாட்டீங்களா...என்ன கொடுமை இது சரவணன்!!

சிபி - நன்றி சிபி அவர்களே...(பெருசுங்க பேசற மாதிரியே இருக்கு..இந்த அவர்களேவ இனிமே விட்டுறுங்க...)

ஒரு பட்சி சிக்கியிருக்கு...ஆனா கொஞ்சம் பயமா இருக்கு கோச்சுப்பாரோன்னு :)

Dubukku said...

பெருசு- நன்றி பெருசு...(கொத்ஸ் பாருங்க கொதிச்சு போயிட்டார்)

நாகை சிவா - நன்றி தல.ஏற்கனவே கொத்ஸ் கொதிச்சு போயிருக்கார்...எங்க வைச்சு என்ன அடி பின்னப்போறார்ன்னு தெரியல நீங்க வேற ஏத்திவிடாதீங்க :))

கப்பி பய - ரொம்ப உஷாராத் தான் இருகீங்க...அடேங்கப்பா...பின்னி எடுக்கிறீங்களேயா...விஷயம் தெரியாமல் அட்லாஸ்க்கு ஒத்துக்கிட்டேனோ?? :))))

Dubukku said...

வெட்டிப்பயல்- அடப்பாவிங்களா...தலைவான்னு கூப்பிட்டுட்டு கும்மு கும்முன்னு கும்முறீங்களேய்யா...வங்கத்துகாரன நம்பினாலும் சங்கத்துகாரான நம்பக்கூடாதுன்னு சும்மாவா சொல்லிருக்காங்க...

கொத்ஸ் - அண்ணே..வணக்கம்ணே...ஏதோ சின்னப் பையன்.தெரியாம பண்ணிட்டேன்...பெரிசு படுத்தாம சீனியரா லட்சணமா...பெருந்தன்மைய நடந்துக்கோங்கண்ணே...எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.

இளா - ஓ...ஸ்மைலி பார்ட்டியா நீங்க :))) எங்க பால் ஊத்த ஆளே காணோம் அப்புறம்??

Dubukku said...

கைப்புள்ள- ஹப்பாடா..நான் சொன்னத நீங்க தான் கரெக்டா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க. ஆமாங்க குலுக்கல் முறையில் தான்.

Dev - தொடச்சிக்கோங்க :))...மரியக்கா..கூப்பிட்டு உங்களுக்கெல்லாம் மாட்டு ஊசி போடச் சொல்றேன்.யோவ் கொத்ஸ் பற்றி எதார்த்தமாய் தான் சொன்னேன்...என்னத்தையாவது கிளப்பி விட்டு என்ன வம்புல மாட்டிவுடாதீங்கய்யா :))

ஜொள்ளுப்பாண்டி- விநாயம் விட்ட கமெண்டப் பார்க்கலியா? நான் எழுதினதுக்கே கோச்சிக்கிட்டாரு...பார்த்து அப்புறம் பிகர் தோஷம் ஆகிடப்போகுது :) மரியக்கா அட்ரெஸ் தானே...28, வடக்குத்...ஆங் ஆசை தோசை அப்பளம் வடை..போய் லைன்ல உட்காருய்யா...

Dubukku said...

நாகை சிவா - அதானே...நைஸா ஐஸ் வைச்சிட்டு...பாண்டி லைன தாண்டி வராரு...

syam - அது கரெக்டு...அவருக்கு தெரிஞ்சிருக்காது...அதான் எடுத்துச் சொன்னேன் :)
வூட்டு அட்ரெஸ் குடுங்க போட்டோவோட பூரிக்கட்டையையும் அனுப்பி வைக்கிறேன்...

Dubukku said...

வெட்டிப்பயல்- யோவ் அட்லாஸ் வாலிபன் பட்டத்தக் குடுத்துட்டு...தொழில மாத்தாதீங்கைய்யா :))

syam - இப்படியெல்லாம் ஐஸ் வைச்சாலும் அட்ரெஸ் கிடைக்காது :))

ஜொள்ளுப்பாண்டி -உங்க தல ஒரே சல்லியம்...மெயில அட்ரெஸ் குடு அட்ரெஸ் குடுன்னு....ஒரே நச்சரிப்பு


நாகை சிவா /ஸ்யாம் /ஜொள்ளுபாண்டி - அடாடா...மூனு பேரும் அட்ரெஸுக்கு ரொம்ப ஆசைபடுறீங்க...(அலையறீங்க). இதுக்காக மலையாளத்துல பேசறீங்க...ஆனா சோகம் என்னான்னா...நானும் இந்த தரம் ஊருக்கு போயிருக்கும் போது அலைஞ்சு பார்த்தேன்...மரியக்கா..ஊரு மாறிப்போயி....;P

ஜொள்ளுப்பாண்டி said...

//நாகை சிவா /ஸ்யாம் /ஜொள்ளுபாண்டி - அடாடா...மூனு பேரும் அட்ரெஸுக்கு ரொம்ப ஆசைபடுறீங்க...(அலையறீங்க).//

ஆஹா டுபுக்கண்ணா எங்களைப் போயி அலையுறீங்கன்னு சொல்லீட்டியளே அய்யகோ இதைக் கேட்க ஆருமே இல்லையா ?? ச்ங்கத்து ஆளை அலையுறேன்னு சொல்லிட்டு இருக்காங்க இந்த 'தல'வேற தலைமறைவா அட்ரஸை டேடி சுதிகிட்டு இருக்கு போல !! வாலிப மக்காஸ் சீக்கிரம் அணி திரள்வீர். ரத கஜ படைகள் கிளம்பட்டும். மலையாளம் மட்டுமென்ன இதோ வரிந்து கட்டுகிறோம் பாருங்கள் டுபுக்கு !! புறப்படுங்கள் தோழர்களே !!

ஆயாள் மரியக்கா அட்ரஸ் எவ்விடே??

மரி அம்மாயி அட்ரஸ் ஏமி ??

ஏன்றி மரியக்கா அட்ரஸ் எல்லி??

போதுமா ? நாலு ஸ்டேட்டுலயும் புகுந்து பொரப்படுவோம்லே?
ஹிந்திய நம்ம தல கவனிச்சுகும் ஹிஹிஹி ;))))

இராம் said...

//ஆஹா டுபுக்கண்ணா எங்களைப் போயி அலையுறீங்கன்னு சொல்லீட்டியளே அய்யகோ இதைக் கேட்க ஆருமே இல்லையா ?? ச்ங்கத்து ஆளை அலையுறேன்னு சொல்லிட்டு இருக்காங்க இந்த 'தல'வேற தலைமறைவா அட்ரஸை டேடி சுதிகிட்டு இருக்கு போல !! வாலிப மக்காஸ் சீக்கிரம் அணி திரள்வீர். ரத கஜ படைகள் கிளம்பட்டும். மலையாளம் மட்டுமென்ன இதோ வரிந்து கட்டுகிறோம் பாருங்கள் டுபுக்கு !! புறப்படுங்கள் தோழர்களே !!//

அய்யோ எங்க பாண்டியண்ணே கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரவில்லையென்றால் என்னாவது.

//ஆயாள் மரியக்கா அட்ரஸ் எவ்விடே??//

ஹீம் எவ்விடே???

//மரி அம்மாயி அட்ரஸ் ஏமி ??//

தொறக செப்பு ஆ அம்மாயி அட்ரஸ்???

//ஏன்றி மரியக்கா அட்ரஸ் எல்லி??//

சொல்ப பேகா ஏழி குரு???

//போதுமா ? நாலு ஸ்டேட்டுலயும் புகுந்து பொரப்படுவோம்லே?
ஹிந்திய நம்ம தல கவனிச்சுகும் ஹிஹிஹி ;)))) //

வேணாம் பாண்டிண்ணே தல'க்கி கஷ்டம் குடுக்க வேணாம். நானே சொல்லிறேன்.

கிருப்பயே மேரி'கா அட்ரஸ் பத்தாய்ங்கே..???

You Want English also..???

Syam said...

//நாகை சிவா /ஸ்யாம் /ஜொள்ளுபாண்டி - அடாடா...மூனு பேரும் அட்ரெஸுக்கு ரொம்ப ஆசைபடுறீங்க...(அலையறீங்க).//

அது என்ன மூனு பேரு...எங்க தலய இதுல சேர்க்கல...இது தலைக்கு அவமானம்,அநியாயம்...இதுக்கு நீதி கேட்டு supreme court கதவுகளை தட்டாமல் விடமாட்டோம்... :-)

Syam said...

//ஆயாள் மரியக்கா அட்ரஸ் எவ்விடே??

மரி அம்மாயி அட்ரஸ் ஏமி ??

ஏன்றி மரியக்கா அட்ரஸ் எல்லி??//

ஜொள்ஸ் கலக்கிட்டீங்க...இப்படி தான் ஆயிரம் டாங்கிகள் மறைத்து நின்னாலும் நம்ம காரியத்துல கண்ணா இருக்கனும்...உங்களுடன் தோள் கொடுக்க நாங்கள் தயார் :-)

துளசி கோபால் said...

வாங்க டுபுக்கு.
அதென்னா டாங், பீரங்கின்னு வானளாவ புகழா?
பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.

இன்னிக்கு நர்ஸ் மரியக்காதான் 'டாக் ஆஃப் த டவுன்':-)))))

நல்லா இருக்கட்டும்.

அதென்ன ஐந்நூத்தி சொச்ச தமிழ் ப்ளொக்?

பாக்கி எல்லாம் எங்கே போச்சு? 1135ன்னு 'ங் தமிழ்மணம்' சொல்லுதேய்யா!

ILA(a)இளா said...

அன்புள்ள டுபுக்கு
Dubukku-The Think Tank அப்படின்னு போட்டு இருக்கீங்களே...
1. இந்த டாங்கில தண்ணி மட்டும்தான் ஊத்த முடியுமா?
2. சிந்டெக்ஸ் டாங்க் விளம்பரத்துல வர மாதிரி இந்த டாங்க மாடியில இருந்து தொபுக்கடீர்ன்னு கீழே போட்டா உடையாதா?
3.இந்த டாங்க எடுத்துக்கிட்டு சண்டைக்கு போக முடியுமா?
4.ரொம்ப தின்க் பண்ணினா இந்த டாங்க ரொம்பி வழியாதா?

Syam said...

இளா,

நானும் கொஞ்சம் சேத்துக்கறேன்....

5.இது gas tank ஆ இல்ல oil tank ஆ
6. gas tank ஆ இருக்கும் பட்சத்தில் இது highly inflammable ஆ
7. இந்த tank குழாயடியில் மட்டும் சண்டைக்கு போகுமா இல்ல கினத்து பக்கமும் போகுமா
8. இந்த tank ரோட்டுல போகும் போது டண்டனக்கா டண்டனக்கா அப்படினு சத்தம் வருமா

Dubukku said...

நாகை சிவா /ஸ்யாம் /ஜொள்ளுபாண்டி - அலையறேன்னு சொன்னதுக்கு கோச்சிக்கிட்டீங்களா...அதான் அடுத்த வரில நானும் ஊருக்குப் போயிருக்கும் போது அலைஞ்சு பார்த்தேன்னு என்னையும் சேர்த்திருக்கேன்ல? இவ்வளுக்கு முறுக்கு ஜொள்ளுக்கு ஆகாதுப்பா...


துளசியக்கா- வானளாவ புகழா...பசங்க எப்படி குப்பிடு வைச்சு ரவுண்டு கட்றாங்கன்னு பார்த்தீங்களா...தெரியாம மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்...அவ்வ்வ்வ்வ்வ்...

இளா/ ராம் /ஸ்யாம் - தெரியாதுலு, ஓ தெரியாதாக்கும், தெரியாதுல்லி, தெரியாது ஹை போதுமா?

Dubukku said...

இளா / ஸ்யாம் - நன்றி ஹை. ரூம் போட்டு யோசிப்பீங்களோ?? :))

இலவசக்கொத்தனார் said...

49 ஆயிருச்சாமே. இந்தாங்க நம்ம சார்புல இன்னும் ஒண்ணு. ஆச்சுப்பா 50. அடுத்த பதிவு வேற போட்டுட்டாரு. இனி அங்க போயி ஸ்டார்ட்டு மியூஜிக் பண்ணலாம்.