பதிவர் கலைஞரைப் பாராட்டி பாசக்காரப் பதிவர் என்னும் புனைப் பெயர் குடுக்க சங்கம் எடுக்கும் விழா. பாராட்ட அனைவரும் கூடியிருக்கும் நேரம். தலை என்கிற பதிவரை பாராட்டி பதிவெழுதச் சொல்கிறார்கள். “தலைவரே, உங்களைப் பாராட்டி பதிவெழுதச் சொல்றாங்க. இல்லாட்டினா யாருமே பின்னூட்டம் போட மாட்டேன்னு சொல்றாங்க. திரட்டி நடத்துறவங்ககிட்ட சொல்லி என்னோட பதிவ தூக்கச் சொல்றாங்க. நீங்களே ஒரு பதிவர் இப்படி நடந்தா நீங்க சும்மா இருப்பீங்களா? இந்தச் சங்கத்து ஆளுங்க என்னை அனானி பேர்ல மிரட்டறாங்க ஐயா. we are sick of it. எத்தனை முறைதான் பாராட்டியே பதிவெழுதறதாம். எங்களுக்கும் மொக்கை, வெக்கை, பீரு, வெமோன்னு நாங்களும் கும்மியடிக்கனும் ஐயா, நீங்களே ஒரு பதிவெழுதி சொல்லுங்க”
படத்தின் PRO,”சார் நாங்க குடுக்க வேண்டி கவரை சங்கத்து ஆள்கிட்ட குடுத்துட்டோம். உங்க சங்கத்து ஆளுங்ககிட்டச் சொல்லி யாரும் படம் நல்லா இல்லேன்னு எழுதச் சொல்லாதீங்க. ஆஹா, ஓஹோன்னு எழுதுங்க. வேணுமின்னா எங்க தயாரிப்பாளர், இயக்குனர் எல்லாரையும் ஒரு பதிவு ஆரம்பிக்கச் சொல்லி சங்கத்துல சேர்த்து விட்டுறோம். அப்படின்னாதான் யாரும் மொக்க்ப படத்தைக் கூட நல்ல படம் எழுதுவீங்க”
“தலைவரே, எங்க சாமி அப்படி இப்படி இருந்துட்டாங்க. அதுக்காக அவர் அப்படின்னு எழுதிறாதீங்க. எல்லாருக்கும் அவர் நடிச்ச, இன்னும் வெளியவே வராத “மிட் நைட் சாமி” பட சீடி எல்லாருக்கு பார்சல் பண்ணிடறோம். கண்டுக்காதீங்க, பார்த்து, அவரை நல்லவர் வல்லவர்னு மட்டும் எழுதுங்க. எங்க மடம் சார்பா எல்லாருக்கும் 10 பின்னூட்டம் போடச் சொல்றோம்”
”நானும் பதிவர்டா, நானும் சங்கத்து ஆள்தான். அதுக்காக எனக்கு பின்னூட்டம் போட மாட்டேன்னா எப்படி? நான் போடறது பதிவு சரியில்லேன்னு சொல்லுங்க. அதையாவது பின்னூட்டத்துல சொல்லுங்க. இல்லாட்டி ஒரு மைனசோ, பிளசோ குத்துங்க. ஒன்னுமே சொல்லாம் போனா எப்படி? சங்கத்துல சொல்லிருவேன் ஜாக்கிரதை.”
நீங்க ட்விட்டர்ல மட்டும்தான் எழுதனும், பதிவராகனும்னா 100 பின்னூட்டம் போட்டாத்தான் சங்கத்துல சேர முடியும். இல்லாட்டினா உங்களை பதிவுலகத்தை விட்டே ஒதுக்கி வெச்சிருவோம்
நாங்க ரஜினி ரசிகர்கப் பதிவர் சஙகம். எந்திரன் படம் வரும்போது கமல் ரசிகப் பதிவர்கள் வேற மாதிரி விமர்சனம் போட்டா எல்லாருக்கு மைனஸ் ஓட்டு போட்டுருவோம்னு சொல்லிருங்க. அப்புறம் யாவரும் கேளிர் அப்போ பேஜார் ஆகிரும். நல்லா இல்லே ஆமா
டிஸ்கி: இங்கே சங்கம்னா வ.வா. சங்கம்னு மட்டுமே அர்த்தமா எடுத்துக்கனும்
3 comments:
Oore pathi eriyum pothu ungaluku comedy thevaiya?
:-)))
Oore pathi eriyum pothu ungaluku comedy thevaiya?/
எதுவும் எரியாது. எல்லாம் மனப் பிராந்தி.
ILA
Post a Comment