Friday, August 14, 2009

ஆரப்பாளையம் போலீசார் Vs டவுசர் பாண்டிகள்

In certain situations, there is a classical function and responsibility there that must not be avoided, even if it is just to appeal to good sense.
- Jacques Derrida



தலித் கலை விழாக்கு மதுரை இறையிறல் கல்லூரிக்கு போய் கலந்துகிட்டு திரும்பும் போது நடந்த மேட்டரு இது.

" டேய் இருக்குறது வெறும் முன்னூரு ரூபாதாண்டா, அளவா குடிங்கடா" சுகுணா பொலம்பிக்கொண்டிருந்தான். உட்காந்து குடித்து கொண்டிருந்தது "கபடி கருப்பையா ஒயின்ஸ்" ஆரப்பாளையம் பஸ்ஸாடண்டுக்கு பக்கத்துல. நானும் ,கண்ணீர் புகை இருவரும் "டெரித்தா"வின் டவுசரை நார் நாராய் கிழித்துகொண்டிருந்தோம் , அவன் குரலை காதுல வாங்காம. பொறுமை தாங்காம எந்துரிச்சு நிக்கறது, பெருமுச்சு விடுறதுன்னு டிராஹன் எபெக்ட் கொடுத்தவனை பார்த்து எரிச்சலாகி கன்ணீர் புகை எழுந்து போலாம் வரவனை என்றார். சரி என்று கிளம்பி வெளியே வந்தோம். வைகை இங்க தானே ஓடுது, பக்கத்துல என்றார் க.பு. ஆமாம் அதோ தெரியுது பாருங்க என்றேன். அப்போது மழை பெய்து தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அருகில் போய் பார்க்க ஆசைப்பட்டார். சரி வாங்க போகலாம் என்று அருகில் போனோம். நான் வாய் சும்மா இருக்க மாட்டாம, " அங்க தெரியுது பாருங்க ஒரு குடிசை, அங்கதான் இஞ்சி விப்பாங்க " நம்ம அடிக்கிறதுலாம் என்ன சரக்கு அது ஒரு லார்ஜ் அடிச்சா ஆஃப் அடிச்ச மப்பிருக்கும்"( பொட்"டீ"க்கடை note the point) அப்படின்னு சொல்லிப்புட்டேன். அத புடிச்சுகிட்டாரு க.பு, சரி வாங்க போலாம் நானும் ஸ்கூல்ல படிக்கும்போது அடிச்சதுன்னு சொல்லி நடையகட்டுனோம். டேய் காசில்லடான்னு சுகுணா பொலம்பல ஆரம்பிக்க." ராசா அங்க உட்கார்ந்த்து குடிச்சாலும் ஆளுக்கு 30 ரூவாய்க்கு மேல் குடிக்க முடியாது' பேசாம வா ன்னு சொல்லி போய் உட்காந்தோம்.

மல்லிகா அக்கா கிழவியாகி போயிருந்துச்சு, அப்பலாம் பாத்தா அவ்வளவு அலம்பல கொடுக்கும், மாமூல் வாங்க வர போலீசு கூட உடுப்பில் வரக்கூடாதுன்னு கண்டிசன் போட்டுரூக்குன்னு கோசிப் சொல்லுவாய்ங்க. சிங்காரவேலன் படம் மிட்லேண்ட் தியேட்டரில் ரீலிஸ் ஆனப்ப இது கடைக்கு சாராயம் , இஞ்சி, குடிக்க வந்தவங்கலாம் லைன்ல நின்னுதான் வாங்கிட்டு போகனும் சொல்லிடிச்சு. அப்ப ரெண்டு லைன் நிக்கும் ஒன்னுபடம் பாக்க , ஒன்னு இஞ்சி குடிக்க. நான் இஞ்சி குடிக்க லைன்ல நின்னு வீட்டுல யாரோ போட்டு குடுத்துட்டாய்ங்க. வீட்டுக்குபோனா செம பரைடு , படம் பாக்க போனேன் வரிசை மாறி நின்னுட்டேன்னு சொல்லி தப்பிச்சது தனிக்கதை.

ஆளுக்கு ரெண்டு கிளாஸ் அடிச்சோம் , சரி போலாம் மணீ 11 என்றான் சுகுணா , என் டிரசும் அவன் டிரசும் மழையில் நனைந்து பார்த்தவுடன் சந்தேக கேசுல கூட்டிட்டு போய் உக்கார வைக்கிற மாதிரி இருந்தோம். க.பு குறுந்தாடி, சங்கிலியுடன் கூடிய கண்ணாடி ,இன்ஷர்ட், பார்மல் ஷு என்று "விஞ்ஞானி முருகன்" கெட்டப்பில் இருந்தார். பொறமையாக அவரை பார்த்தபடி பஸ்ஸடாண்ட் வந்தோம். கூட இருந்த இன்னொரு நண்பர் டைட்டாகி படுக்க இடம் தேடினார். அவரை தாங்கிபிடித்த படி பேருந்துக்குள் ஏறினால் நடத்துனர் ஏற்றவில்லை. அவரிடம் பயணிகளுக்கான உரிமைகள் குறித்து பொங்கியெழுந்து கொண்டிருந்தார் க.பு , அப்போது அங்கு வந்த ரோந்து போலிசாரிடம் புகார் சொன்னார் நடத்துனர். எங்களுக்கு லேசா டர்ரு கிளம்பிச்சு. போலிசுகாரய்ங்க எங்கள பாத்து இங்க வாங்கடான்னு கூப்பிட்டாய்ங்க. நானும் சுகுணாவும் பக்கத்துல போயி என்ன சார்னோம்.
அந்த நடத்துனர் வந்து இவைங்க நல்லவனங்க சார் ! அங்க நிக்கிறானே கண்னாடி அவந்தான் ரூல்ஸ் பேசுறான். ரூல்ஸ் பேசுனானா " எவேய்ன் அவேன் " என்று லத்தியை வாகாய் எடுத்து க.பு'வின் கு***யில் நாலு இழுப்பு வைத்தார். தன் பேண்ட்'ன் பின்புறத்தை தடவி விட்டவாறே உட்டாரு ஒரு டயலாக்கு, ஊருக்கு வந்து ஒரு வாரம் சிரிச்சோம் நானும் சுகுணா திவாகரும்.

" இப்ப நீங்க யாரை அடிச்சிங்க தெரியுமா' தமிழ்நாட்டோட மிகமுக்கியமான எழுத்தாளர" என்றபடியே நீவிக்கொண்டிருந்தார் பின்புறத்தை. அந்த போலீஸ்காரன் பாவம் பயந்து போயி ஸாரி சார் ! உங்களை பார்க்கறப்பவே நினைச்சேன், இவர பாத்துதான் தப்ப கணக்கு போட்டுடேன் என்றான் எங்களைப்பார்த்து. அதைக்கேட்டு க.பு மேலும் டென்சனானார். சார் வாங்க ஒ.பி(புறக்காவல் நிலையம்) ஸ்டேசன் போயி முகத்த கழுவிட்டு போலாம் என்றபடி அழைத்து போனார். அங்கு சென்று லெமன் ஜூஸ் அந்நேரத்துக்கு எங்கிருந்தோ வாங்கி வந்து குடிக்கச்சொல்லி உபசரித்துக்கொண்டிருந்த போது உள் நுழைந்தார் அக்காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர். எங்க நேரம் அன்னைக்கு சாயுங்காலந்தான் அந்த எஸ்.ஐ பொண்டாட்டியை எவனோ தண்ணியைப்போட்டு லந்த(கிண்டல்) கொடுத்துருக்கான். உள்ள வந்தவரு எங்கள ஒரு மாதிரியா பாத்துட்டு அந்த போலீச்காரன் பக்கம் திரும்பி என்ன கேசு, இது ? உக்கார வச்சு கொஞ்சிகிட்டு இருக்கேன்னு எரிச்சலா கேட்டான். அதுக்கு அந்த போலீசு' எழுத்தாளர்களாம் சார், அரசரடி மாநாட்டுக்கு வந்துருக்காங்க கொஞ்சம் ஓவராச்சு போல அதான் உங்காந்துட்டு போங்கய்யான்னு உக்காரா வச்சுருக்கேன் என்றான்.





யோவ் பஸ்ல ஏத்தி வெரட்டி விடுயா, சாயுங்காலத்துல இருந்து குடிச்சவுனங்களை கண்டாலே வெறி வருது என்றபடி , க.பு'வை அழைத்து எந்த ஊருயா நீ ! என்றார் . சென்னை என்றார், சுகுணாவும் சென்னை என்றே சொல்ல நான் எனது ஊரைச்சொன்னேன்.

சென்னைல எங்க ? என்றார் . நம்பர் 117 , பெருமாள்கோவில் தெரு, சூளை என்று கண்ணீர்புகை சொல்ல. சுகுணாவும் தனது முகவரியாக , நம்பர் 118 , பெருமாள்கோவில் தெரு , சூளை என்று சொல்லி அந்த எஸ்.ஐ யிடமும் க.பு'க்கு கு***யில் மேலும் இரண்டு வாங்கித்தர முயற்சித்தார்.

சரி என்னா பொஸ்தகம்யா எழுதிருக்கே என்றார்? உழைப்பை ஒழிப்போம் என்கிற புத்தகத்தை ஜெர்மன் லருந்து மொழி பெயர்த்திருக்கேன் சார் என்றார் க.பு'

புத்தக தலைப்பைகேட்டு பொறுமையிழந்த எஸ்.ஐ. சுகுணா திவாகரை நீ என்ன எழுதிருக்கே என்றார். நான் கவிஞன் சார் என்றார். அப்போ ஒரு கவிதை சொல்லியிட்டு போ என்றார்.

*பறக்க இயலா சிறகுகளின் ஓலத்தை
மேலும் கேட்டபடி தொடர்கிறது பயணம்
மாட்டுவண்டிகளின் தடம் நம் வாழ்க்கை
போல் காய்ந்த தரையில் இருக்காது
விழிகள் மூடு செவிகள் திற...

அவரு அவனையே பாத்துகிட்டு இருந்தாரு. புரிஞ்சுச்சா புரியலையான்னே தெரியல. சரி ஒழுங்க ஊரு போயி சேருங்க என்றபடி அனுப்பி வைத்தார்.

என்ன ரொம்ப போரடிச்சிட்டேனா, இனிமேதான் இருக்கு நம்ம "பஞ்ச்"

நாங்க போயி அடுத்த பஸுக்கு காத்துகிட்டு இருந்தோமா, அப்போ ஒரு நாலு பேரு கடலைவண்டி காரனுடன் போதையில் வம்பிழுத்துக்கொண்டிருந்தனர். நம்ம எஸ்.ஐ அங்க வந்தவர் அவனுங்களை கூப்பிடு விசாரித்து கொண்டிருந்தார். எதோ ஓவியர் மாநாடுக்கு கோவில்பட்டி போயிட்டு ரிட்டர்ன் ஆயிருக்கானுங்க போல


எஸ்.ஐ நம்மள பாத்து சிரித்துக்கொண்டே என்னய்ய இன்னைக்கு பூராம் கலைஞர்களா வந்து நம்ம தாலிய அறுக்குறிங்க என்றபடி அவனுங்களை அழைத்து எச்சரித்து ஒழுங்காய் ஊர் போய் சேரும் படி சொல்லிவிட்டு அவனுங்களை ஒருத்தன கூப்பிட்டு ஓவியம் வரைஞ்சுகாமிச்சுட்டு போ என்று உத்தரவிட்டார்.

நான் சிகரட் வாங்க போயிட்டு வந்து பாக்கறேன் , அவன போட்டு வெளுத்துகிட்டு இருக்காரு. 'ஏது அம்மன படம் வரஞ்சிட்டான் போலன்னு பக்கத்துல போனா, " யாருகிட்டடா பொய் சொல்ற பிராடுகாரா என்றபடி திரும்பவும் அடிக்கிறாரு. அப்படி என்னாதான் வரஞ்சானு பாத்தா

பாவம்யா அவனுங்க நவீன ஓவியர்கள். அவனுக்கு தெரிஞ்சத வரைஞ்சுருக்கான். அதுக்கு இந்த எஸ்.ஐ அவனிடம் "ஏண்டா சாயத்தை பூராம் கரச்சு ஊத்திட்டு ஓவியம்னா சொல்றன்னு அடி பின்னிருக்காரு.

-வரவனையான்

12 comments:

ஊர்சுற்றி said...

கெக்கே புக்கே.... ஹாஹாஹா...

நெசமாலுமே சிரிப்பு சிரிப்பா வருதுங்கோ... :))))))

யாசவி said...

// க.பு குறுந்தாடி, சங்கிலியுடன் கூடிய கண்ணாடி ,இன்ஷர்ட், பார்மல் ஷு என்று "விஞ்ஞானி முருகன்" கெட்டப்பில் இருந்தார்//

//திரும்பி என்ன கேசு, இது ? உக்கார வச்சு கொஞ்சிகிட்டு இருக்கேன்னு எரிச்சலா கேட்டான்//

//சென்னைல எங்க ? என்றார் . நம்பர் 117 , பெருமாள்கோவில் தெரு, சூளை என்று கண்ணீர்புகை சொல்ல. சுகுணாவும் தனது முகவரியாக , நம்பர் 118 , பெருமாள்கோவில் தெரு , சூளை என்று சொல்லி அந்த எஸ்.ஐ யிடமும் க.பு'க்கு கு***யில் மேலும் இரண்டு வாங்கித்தர முயற்சித்தார்.//


//
பாவம்யா அவனுங்க நவீன ஓவியர்கள். அவனுக்கு தெரிஞ்சத வரைஞ்சுருக்கான். அதுக்கு இந்த எஸ்.ஐ அவனிடம் "ஏண்டா சாயத்தை பூராம் கரச்சு ஊத்திட்டு ஓவியம்னா சொல்றன்னு அடி பின்னிருக்காரு.//


Really impressive and laughing till now

ஜானி வாக்கர் said...

முதல் முறை உங்கள் பதிவை படித்தேன், தொடக்கம் முதல் கடைசி வரை சிரிப்பை நிறுத்த முடிய வில்லை, படித்து முடித்த பின்னும் சிரித்துக்கொண்டு இருக்கின்றேன்.

//சென்னைல எங்க ? என்றார் . நம்பர் 117 , பெருமாள்கோவில் தெரு, சூளை என்று கண்ணீர்புகை சொல்ல. சுகுணாவும் தனது முகவரியாக , நம்பர் 118 , பெருமாள்கோவில் தெரு , சூளை என்று சொல்லி அந்த எஸ்.ஐ யிடமும் க.பு'க்கு கு***யில் மேலும் இரண்டு வாங்கித்தர முயற்சித்தார்.//

நல்ல எழுத்து நடை, ரசித்தேன்

Pot"tea" kadai said...

யேய் பெரிய மாப்ளே, எண்ட மச்சானுக்கு கிரெடிட் கொடுக்கலியா.

ஏற்கனவே குட்டபுஸ்கில வந்தது தானே இது?

Pot"tea" kadai said...

யப்பா சாரிப்பா...கொஞ்சம் பெயின் கிள்ளர்ஸ் அதிகமா போட்டுட்டேனா...மப்பாயிருச்சு இப்ப தான் கொட்டயெழுத்துல இருக்கறத படிச்சேன்...ஹி ஹி ஹி

அடுத்தாப்புல வர்ரப்போ மல்லியக்காட்ட சொல்லி 2 டம்ளர் இஞ்சி நமக்கும் பார்ஸல்/

ரவி said...

ஊர் சுற்றி, நன்றி...

ரவி said...

நன்றி யாசவி........

ரவி said...

நன்றி ஜானிவாக்கர்.

ரவி said...

நன்றி பொட்டி...எறங்கிடுச்சா ?

தமிழன்-கறுப்பி... said...

:))

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹாஹாஹா
ஹாஹாஹா
ஹாஹாஹா
ஹாஹாஹா
ஹாஹாஹா
ஹாஹாஹா