Tuesday, August 4, 2009

அண்ணா நகர் ரவுண்டானாவும் நைக்கி ஷூவும்


ஹல்லோ..ஏ.எஸ்.எல் ப்ளீஸ்..

நாகா, என்னாது அது ஏ.எஸ்.எல் அப்படீன்னா ?

நாகா என்னுடைய அலுவலக நன்பர். கண்ட மொக்கை படங்களையும் 2002ல் இருந்து 2004 வரை என்னுடன் இணைந்து பார்த்தவர்..முந்தின நாள் இயற்கை என்ற ஷாம் நடித்த மொக்கை படம். க்ளைமாக்ஸ் மட்டும் மாற்றியிருந்தால் ஷாம் தமிழின் முன்னனி ஹீரோவாக மாறியிருந்திருக்கக்கூடும். லீவ் தட் அஸைட். கணிப்பொறியும் சாட்டும் அப்போதுதான் எனக்கு அறிமுகமான காலகட்டம். காரணம், அலுவலகத்தில் கிடைத்த இலவச இண்டர்நெட்.

கல்லூரி காலத்தில் ஒருமுறை மணிக்கு 100 ரூபாய் கொடுத்து யாகூ டாட் காமில் மின்னஞ்சல் முகவரி உருவாக்க முயன்று தோற்றபின், இணையத்தை காசு கொடுத்து எந்த ப்ரவுசிங் செண்டரிலும் பார்ப்பதில்லை என்ற கொள்கை முடிவால், அலுவலகத்தில் நிரந்தர வேலை கிடைத்தபின், வேலை நேரம் முடிந்து ஓஞ்ச வாழப்பழம் கிடைக்கும் மொக்கையான மத்தியான நேரங்களில் இண்டநெட்டும் சேட்டும்.



டேய். ஏ எஸ் எல் அப்படீன்னா, ஏஜ், செக்ஸ், லொக்கேஷன்.

ஐ..செக்ஸா ?

முண்டம். செக்ஸ்னா ஜெண்டர். ஆம்பளையா, பொம்பளையான்னு கேக்குறது.

சரி. இந்த சாட்டிங் ரூம்ல எப்படி போறதுன்னு கொஞ்சம் சொல்லிக்குடு மாமா...

உன்னோட யாகூ ஐடியை வெச்சு உள்ளாற போகனும்டா. அப்புறம் சாட் ரூம் அப்படீங்கறதை க்ளிக் பண்ணினா, சென்னை ரூம், மும்பை ரூம், இண்டியா ரூம் அப்படீங்கறமாதிரி வரும்.

அதில் ஒன்னை க்ளிக் பண்ணிட்டேன்னு வை. உன்னுடைய ஐடி ரூம் உள்ளாற எண்டர் ஆகிரும். அதுக்கு அப்புறம் நீ பேசுறது எல்லாருக்கும் தெரியும்.

அப்படியே ஓரத்துல பார்த்தியா. பேரு எல்லாம் வருது. அதுல ஒரு நல்ல பிகர் பேரா எடுத்து, சேட்டிங் பண்ணவேண்டியது தான்...

மாமா, உன்னோட மூஞ்சி அதுல தெரியுமா ?

நாகா, மேட்டுக்குடி கவுண்டர் ரொமாண்டிக் லுக்கோட என்னைய பாக்குறார்.

இல்லைடா. போட்டோ போட்டாதான் தெரியும்.

அதான், உன்னோட மூஞ்சிய மட்டும் பாத்தாளுங்க, கம்ப்யூட்டர ஷட்டவுன் இல்ல பண்ணிட்டு ஓடுவாளுங்க.

கு.ரங்கா. ஒழுங்கா பாருடா...எப்படி பிகரை மடக்கி காட்டுறேன்...

அதில் ஓரத்தில் இருந்த gayathiri2000 என்ற ஐடியை ஒரு க்ளிக் செய்கிறார் நாகா.

Naga -> hello. asl please.

gayathiri2000 -> 'male here'

என்று உடனே பதில் வருகிறது...

மாமா. ஹி ஹி. ஆம்பளையாம்ல. இருந்தாலும் பரவால்ல, பேசு மாமா.

டேய். என்ன என்னா 'அவன்' னு நினைச்சியா ? பிகரை மட்டும்தான் மடிப்பான் இந்த மகாதேவன். ஆம்பிளைன்னா பேசக்கூட மாட்டேன். அவனும் பேசமாட்டாண்டா..எதிர்முனையில் ஒரு மொக்கை ஸ்மைலி வந்தவுடன் அந்த விண்டோவையே க்ளோஸ் செய்கிறார் நாகா..

நாகாவை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லனும்னா, நாகா பேஸிக்கலி ஒரு கொலுட்டி. தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர், கொஞ்சம் ஆந்திரா கருப்பு. டி நகர் ரேணுகா ஹோட்டலில் அவர் தின்ற பருப்பு பொடியை மட்டும் மூட்டை கட்டினால் ரெண்டு ஊரு ஒரு வாரத்துக்கு திங்கலாம்...அவர் அப்பாகாரு, தெலுங்குதேசத்தில் தீவிர பொண்ணு வேட்டையில் இருந்தாலும், நாகா காருவுக்கு சிங்கார வேலன் கமல் மாதிரி, ஒரு பொண்ணை பார்க்கனும், அப்புறம் லவ் பண்ணனும், அப்புறம் கல்யாணம் கட்டனும், என்ற கொலைவெறி.

தினமும் நாகாகாரு கண்ணாடி பார்த்து தலை வாறுவதால், நேரடியாக சென்று ஐ லவ் யூ என்று ப்ரப்போஸ் செய்தால் பிகர்கள் வெளக்குமாறு, ஹை ஹீல்ஸ், கருங்கல் என்று கையில் கிடைப்பதை கொண்டு அடிப்பார்கள் என்ற உண்மை தெரிந்ததாலோ என்னமோ, கடந்த ஒருவருடமாக asl asl asl என்று யாகூவிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார்...

அப்படித்தான் திடீர்னு ஒரு நாள்...

டேய் டேய் டேய்...சிக்கிருச்சு, சிக்கிருச்சு..என்று கிசுகிசுப்பாக அலறுகிறார் நாகா...

அது ஒரு வெள்ளிக்கிழமை மதியம்..

ஏதோ ஒரு ப்ராஜக்டில் ஏதோ ஒரு பைல் ஒர்க் ஆகவில்லை என்று நான் மண்டை காய்ந்துகொண்டிருக்க. நாகாவோ, ஏதோ பழமும் பாலும் நழுவி வாயில் விழுந்தது போல சந்தோஷத்தில் துள்ளுகிறார்.

அவருடைய இடத்தில் இருவரும் ஐக்கியமானோம்.

annanagar80 என்பது ஐடி. நாகா குஜாலாக பேச பேச, எதிர்முனையும் பேச, உற்சாகமாக சேட்டுகிறார் நாகா...

ஞாயிற்றுக்கிழமை அண்ணா நகர் ரவுண்டானாவில் வந்து காத்திருப்பதாக எதிர்முனை குயில் கூவுகிறது...

அலைபேசி எண்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. ஞாயிறு காலைதான் அந்த அலைபேசி எண் தன் கையில் இருக்கும் என்றும், அப்போது மட்டுமே அழைக்குமாறும் டைப்புகிறார் சாட் அழகி...

அன்றைக்கு இரவு பார்ப்பதாக இருந்த மொக்கை படத்தை ஸ்கிப் செய்துவிட்டு, பிகர் கிடைத்த குஜாலில் சரக்கை போட்டுவிட்டு, மல்லாந்துவிட்டார் நாகா...

ஆயிற்று ஞாயிற்றுக்கிழமை...

திருவான்மியூரில் சோம்பலாக விடிகிறது என்னுடையது...ஊருப்பட்ட துணிகள் துவைக்க..அப்படியே பல்லு கூட விளக்காமல் அண்ணன் கொண்டுவந்த் இட்லி பார்சலை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கும்போது, ரிங் ரிங்.

எதிமுனையில் நாகா..

யோவ் என்ன ஆச்சு அண்ணா நகர் ?

இன்னும் போகல டா..

நாகா, என்ன நேரக்கொடுமை இது ? இன்னுமா போகல ?

என்னொட அப்பா நேத்து நைட்டு ஏதோ வேலையா கெளம்பி சென்னை வந்துட்டார். அவரோட அம்பத்தூர் போறேண்டா. உனக்கு அவளோட நம்பர மெசேஜ் அனுப்பியிருக்கேன். நீ போயி பாருடா..வெக்கட்டா ?

நாகா, நாகா, என்ன பேரு அவளுக்கு ?

எவனுக்கு தெரியும் ? நீ ரவுண்டானா போய் அவளை கால் பண்ணு. அவள்ட்டே கேட்டு தெரிஞ்சுக்கடா. கிங். துண்டித்துவிடுகிறார் நாகா...





திடீரென இதயத்துடிப்பு அதிகமாகிவிட்டது எனக்கு. மேற்கொண்டு இட்லி இறங்கவில்லை. அண்ணனோட யமஹா சாவியை எடுத்துக்கொண்டு, எவ்வளவு வேகமாக ட்ரஸ் பண்ண முடியுமோ, அவ்வளவு வேகமாக ட்ரஸ் பண்ணிக்கொண்டு, பைக்கை ஸ்டார்ட் செய்கிறேன் நான்..

தொடரும்...!!!

16 comments:

குப்பன்.யாஹூ said...

I have been in Yahoo chat (Tamilnadu 1 room for 9 years).

There are facilities like voice chat, webcam and there are quite decent educated female, male chatters (married/unmarried) also there.

We used to debate on cinema, politics, education, music, raagas,sports, how to make chennai as London etc.

ofcourse we used to meet in real also. Like bloggers we had meets as well.

Infact chat is more interactive than blog. You need not wait for the replys. across the mike you speak and get your responses, feedbacks.

குப்பன்.யாஹூ said...

I will be glad if google also starts Chat rooms like yahoo.

Private message alone is boring because you will interact with known and predetermiend people.

In a public chat room you could meet unexpected people. Its like real life.

சென்ஷி said...

வெல்கம் தலைவா :)))

வவாசவுல இந்த மாச அட்லஸ் ஒன்லி மாதிரி தெரியலை. ஏதோ அடல்ஸ் ஒன்லி மாதிரிதான் இருக்கும் போலருக்குதே ;-))

ஜமாய்ங்க..

Anonymous said...

ஏற்கனவே இதே கதையை லக்கிலுக்கும் இதே பிளாக்கில் எழுதியது மாதிரி தெரியுது.

ரவி said...

குப்பன் யாஹூ

உங்கள் போட்டோவில் இருக்கும் வெள்ளைக்காரர் யார் ?

குப்பன்.யாஹூ said...

I thought u might be knowing him. Stephen covey,

The author of 7 Habits of highly effective people, 1st things 1st, He too a Harward alumini. He loves Mahaathma Ghandi a lot.

http://en.wikipedia.org/wiki/Stephen_Covey

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலக்கல் காமெடி

Nathanjagk said...

ஸைபர்-லவ் நல்லாயிருக்கு!! ​தொடருங்கள்!

Anonymous said...

நாடோடிகள் படம் வந்தாலும் வந்திச்சு, இந்த காதலுக்கு உபகாரம் பண்ணரவங்க அதிகமாயிட்டாங்க :)

பித்தன் said...

ஆரம்பிச்சிட்டங்கையா.... ஆரம்பிச்சிட்டாங்க....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாங்க வாங்க!
வெல்கம் அண்ணாச்சி! :)

//வவாசவுல இந்த மாச அட்லஸ் ஒன்லி மாதிரி தெரியலை. ஏதோ அடல்ஸ் ஒன்லி மாதிரி//

ஹிஹி! ரிப்பீட்டே! :)

அந்த நைக்கி ஷூவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :)

ரவி said...

ஸ்டார்ஜன், நன்றி !!!!!!

ரவி said...

ஜெகன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !!!

ரவி said...

சின்ன அம்மணி...

இது சிறுகதையாக்கும் !!!!!!

ரவி said...

பித்தன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

ரவி said...

வாங்க கே ஆர் எஸ்...!!!!!

கருத்துக்கு நன்றி !!!!