Thursday, August 6, 2009

டவுசர் பாண்டிகளின் கதை பாகம் 1



" கழிவறை எழுத்துக்கள் தவிர்க்கலாமா ? இல்லை, தலையெழுத்தா? " என்கிற தலைப்பில் ஞானஒளிபுரம் ( சின்னப்பிள்ளையில் ஒகாராத்தை ஓகாரமாய் சொல்லியும் சிறப்பு "ழ"கரம் போட்டும் முதுகில் அடிக்கடி வாங்கிக்கட்டிக்கொள்வேன் ) சமூகபணி மன்றத்தில் ஒரு வீணாய்ப்போன NGO கருத்தரங்கம் நடத்திக்கொண்டிருந்தது. நம்ம டவுசர்பாண்டிக்கும் கட்டுரை வாசிக்கும் வாய்ப்பு. சோலமலை தியேட்டரில் மட்ட மத்தியானம் வேகாத வெயிலில் எஸ்.ஜே. சூர்யாவின் "நியு"("ட்" சைலன்ஸ் போல ) எங்கிற புளுபிலிம் பார்க்க வரிசையில் நின்னுகிட்டு இருந்தவனை கூப்பிட, ஏஸ் வென்சுரா'வில் நெருப்புக்கோழியில் வந்திறங்கும் ஜிம் கேரி போல் ஒரு 350 CC யமகாவை கியர் மாத்துகிறேன் பேர்வழியென்று வதை செய்தவாரே வந்தான் "டேஞ்சர்" கிருட்டிணன். இவனும் ஒரு டவுசருபாண்டிதான், வயசு 40யை தொடப்போதுன்னு பேசிகிறாய்ங்க. கேட்டா "இளமையாய் சிந்திக்கும் இடத்தில் உறைந்து போனது வயது"ன்னு எதையாவது புரியாத மாறி சொல்லி கிறுக்குசுத்தி விட்டுடுவான். என்னய்யா கிருஷ்ணா ! படத்துக்கா இவ்வளவு மேக்கப்பு போட்டு வந்திருக்க.

சரி வண்டியை ஸ்டாண்டுல விட்டுட்டு வா'ன்னு சொன்னேன்.

ஸ்ஸ்ஸ்... பேர மாத்தாதட என் பேரு கிருட்டிணன்'ன்னான்.

அட தமிழ்க்கிறுக்கா, அப்படின்னா உன் பேர கண்ணன்னு மாத்திக்க வேண்டியதுதானே . கிருட்டினன் உருட்டினன் மிரட்டினன் அப்படின்னு இருக்கவனுக்கு நாக்க சுளுக்கு விழ வைக்கிறிங்கடா'ன்னு டென்சன் ஆனேன். இந்த படம் பார்த்துதான் ஆகனுமான்னு கேட்டான், ஆமாம்டா "சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை - சிம்ரனுக்கு மிஞ்சிய பிகருமில்லை" மிஸ் பண்ண முடியுமா அப்படின்னு சொன்னேன்.



டேய் நான் கட்டுரை வாசிக்கபோறேன் வாடா'ன்னான்.எங்கடான்னு கேட்டா எங்க தெருவுக்கு எதித்தாப்ல இருக்கிற மண்டபம். வேணாம்ட அரியர் எக்ஸாம் பீஸ் கட்ட போறேன்னு சொல்லிட்டுதான் வந்திருக்கேன். என் ஜென்ம விரோதி எங்க அண்ணன் பார்த்தா நான் அவ்வளவுதான்.

வீட்ல தோடு ( பெந்தே கோஸ்தே) இல்லாதவைங்க கூட்டத்துல போய் உக்காந்துருக்கான்னு போட்டு கொடுத்திருவான், நான் வரலை தோழர்ன்னு சொன்னேன். இல்லட பின்னாடி வழியா ஏறிக்குதிச்சி போலாம்டான்னு சொல்ல தலையெழுத்தேன்னு கூட வண்டில ஏறி உக்காந்தேன். ஸ்டார்ட் பண்ணிட்டு கேட்டான். இந்த வண்டிக்கு விசை( கியராம்) எப்படி போடுறதுன்னு. இந்த வண்டி யாருது தோழர்ன்னு கேட்டேன்.

நம்ம ரெட்டை மண்டை அப்பா இருக்காரலுல அவருதுதான்னான். "ரெட்டை மண்டை" செல்வி டவுசர்பாண்டியின் தங்கை முறை. இவருக்கும் அந்த பேரு வச்சு கூப்பிடுறது தெரியாது என்று நினைதிருந்தேன் . பரவாயில்ல தோழர் நெருங்கிட்டார்ன்னு நினைச்சு. தோழர் அவங்க அப்பாதான் இறந்திட்டாருல்ல அதுமில்லாம அவங்கப்பன் சாகுகிறவரைக்கும் டயர உருட்டிகூட பார்த்ததில்லையே அப்புறம் எப்படி 350 CC யமகா வந்ததுன்னு கேட்டேன்.
நீ யார சொல்லுற' நான் சொன்னது ரெட்டை மண்டை ஃபாதரைத்தான் தமிழில் ரெட்டை மண்டை அப்பான்னு சொன்னேன்னான்.
அட ஒந்தமிழ்ல தீயை வாரிக்கொட்டன்னு நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே நேரா போய் ஒரு டிரை சைக்கிள்காரனை தூக்கிட்டாரு.
( நாளை முடிக்கிறேன்)



முல, கப சுட்டி : http://kuttapusky.blogspot.com/2007/04/blog-post_27.html

6 comments:

சென்ஷி said...

:-))

அசத்தல்! அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டீஸ்..

ரவி said...

ஓ. எஸ்..!!

நன்றி ஷென்ஷி

பித்தன் said...

அடுத்த பார்ட் எப்போடே....

டவுசர் பாண்டி said...

வாஜாரே !! எம் பேருல இன்னா கோவம் உனுக்கு ? ஐயே ! தெரியாத தான் கேக்குறேம்பா !!
டவுசர் பாண்டிகளின் கதை இன்னு வேற கீதா , ஒரே மழக்கம் ,மழ்க்கமா !! வர்து.

ரவி said...

பித்தன்..

நாளைக்கு ஷெட்யூல் பண்ணியிருக்கோமே ?

ரவி said...

நிஜ டவுசர் பாண்டியவர்களே

வருகைக்கு நன்றி !!!!!