Tuesday, December 23, 2008

நெஞ்சுக்கு சேதி - பாகம் - 2

அண்ணன் போர்வாள் போர் முனையில் வஞ்சகர் தம் நஞ்சு கலந்து தொடுக்கும் விஷ அம்பினை எதிர்கொண்டு இனமானம் காக்க...சங்கத்தின் கோடானு கோடி வாலிப நெஞ்சங்களுக்கு சேதி அறிவித்து கொண்டிருக்கும் இந்த வேளையிலே... உலக பொருளாதாரம் முதல் வீட்டில் இருக்கும் தாரம் வரை பிரச்சனைகளை எதிர்கொண்டு..அண்ணனின் அழைப்புக்கு பின்னூட்டம் மின்மடல்..தொலைபேசி என பல வகையிலும் ஆதரவு தெரிவித்து உங்கள் தம் இனமான உணர்வுகளை பொங்கி எழச் செய்து கொண்டிருக்கும் இந்தச் சூழலை நாடே பார்க்கிறது......ஏன்..தில்லி சர்கார் கூட குனிந்து கவனிக்கிறது என்றால் அது மிகையாகாது...

பாலிவுட்டிலே பரபரப்புக்காக... அமிதாப்பச்சனும்.. அமீர்கானும் பதிவிட்டார்களே...அந்தப் பதிவுகள் அகில உலக கவனத்தை கவர்ந்ததாக கவர் ஸ்டோரி எழுதிய வட நாட்டவர் பத்திரிக்கைகள் இன்று இந்த இனமான நெஞ்சுக்கு சேதி பதிவினைப் பக்குவமாக பார்க்க துவங்கியுள்ளது என நாம் நெஞ்சை நிமிர்த்தினால் அது தவறகாது.. இது யாருக்கு கிடைத்த வெற்றி.. அண்ணனின் அழைப்புக்கு அவசரமாய் செவி மடுத்து சிங்கமெனச் சிலிர்த்து எழுந்து களம் காண புறப்பட்ட வீர வாலிப இனமே... என் உடன் பிறவா பிறப்புகளே... பதிவுலகின் பரபரப்புகளே.. நீங்கள் தான்...

"பதிவு தோன்றி பின்னூட்டம் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த கும்மி குடியாம்" அப்படி ஒரு சிறப்பான இனமாம் சங்கத்து சிங்கங்கள் இன வரலாற்றின் முதல் பக்கத்தைக் கூட முழுசாய் படிக்காமல் சங்கத்தின் மீதும் சங்கத்தின் முன்னணியினர் மீதும் ஊழல் என்றும்... ஊது குழல்... என்றும் புழுதி வாரி இறைப்பது இன்றைய சூழலில் ஒரு சிலருக்கு வாடிக்கையாகவும் வேறு பலருக்கு வேடிக்கையாகவும் போனது நெஞ்சுக்கு வேதனை அளிக்கக் கூடிய சேதி...

அண்ணனின் இந்தப் பதிவினை ஒரு பல்கலைகழகப் பட்டப்படிப்பாய் நினைத்து படிக்கும் பதிவுலக பரபரப்பே... எங்கள் தமிழின சுறுசுறுப்பே....

பதிவுகள் என்பது பிளாக் என அழைக்கப்பட்டு ஆங்கில மொழியில் லாக் ஆகி கிடந்த அந்த இருண்ட காலத்தை தமிழ் பதிவிடும் உயர் உள்ளங்கள் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.. ஆங்கில கீ போர்ட்களில் தமிழ் போர் தொடுத்து... அழகு தமிழில் பதிவிட துவங்கியதில் சங்கத்து முன்னணியினர் பலரும் முதல் வரிசையில் நின்றது தமிழன் ஆன் சைட் சென்று கொடி நாட்டிய தலங்கள் அனைத்தும் மறுக்க முடியாத வரலாறு

பதிவு தேய்கிறது பின்னூட்டம் வாழ்கிறது... நம் பதிவுலக பேராசான் கொத்தனார் நமக்கு விடுத்த கூக்குரல்... நம் சங்கத்து பதிவுலக போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்ப்ட வேண்டிய வாக்கியம்...

அனானியின் பின்னூட்டத்தில் கும்மியைக் காண்போம்...அந்த கும்மிகளால் ஒலிக்கும் ஒவ்வொரு சிரிப்பிலும் இறைவனைக் காண்போம் சங்கத்து தளபதியார் ஆரம்பித்த இந்த கும்மிக் குரல் இன்னும் பதிவுலகின் வரலாற்று பக்கங்களில் ஆங்காங்கே எதிரொலித்த வண்ணமே உள்ளது... இதை உங்களால் மறுக்க முடியுமா???

ஒன்றே பதிவு அதில் ஒருவனே பின்னூட்டம் என்ற பொது தத்துவங்களை நாட்டுக்குச் நவின்றது சங்கம் என்பதை ஆன்றோர் பெருமக்கள் மறந்து விடக்கூடாது.. சான்றோர் சபையில் சொல் பிறழ கூடாது.... என்பதை இங்கு உயர் தமிழ் பதிவு குடிமக்களின் நெஞ்சுக்கு உரத்த சேதியாகச் சொல்லிக் கொள்ள விழைகிறேன்...

கூட்டணி என்பது ஒரு குடும்பம் என்பதையும்....குடும்பமே கூட்டணி.... என்பதையும்....சங்கத் 'தல' வரலாறு அறிந்தவர்கள் சாட்சியாக சொல்லுவர்... கூட்டணி பதிவின் கொள்கை கொடி தரணியெங்கும் பட்டொளி வீசி பறப்பதை இன்று கண்டு மகிழாத தமிழ் பதிவிடும் நெஞ்சம் உண்டா....

தனி பதிவுகளின் ஆவர்த்தனம் கோலோச்சியக் காலக்கட்டத்தில் சமத்துவம்.. சமநீதி.. சமப் பின்னூட்டம் அதன் மூலம் தேசிய நீரோட்டம் என உன்னதக் கருத்துக்களை ஊருக்குச் சொன்ன ஈரோட்டு உழவன் வளர்த்தெடுத்த சங்கத்தின் மீதா திராவகம் வீசுவது... சிந்திக்க வேண்டும்... சித்தம் கலங்கியவர் செய்யும் செயல்களுக்கு காரணம் தேடக் கூடாது...

பாண்டிய மன்னர்கள் கண்டது மூன்று தமிழ் சங்கம்.. இன்று பதிவுலகம் காண்பது தம்பி ஜொள்ளுபாண்டி சிறந்த நான்காம் நவீன தமிழ் சங்கம்.. இயல் தமிழ் ,இசைத் தமிழ், நாடகத் தமிழ் எனத் தமிழ் வளர்த்தனர் அந்த பாண்டிகள்.... நம் பாசத்துக்குரிய இந்த தம்பி பாண்டி வாலிப நாட்டின் இதய இடுக்குகளில் குந்தி குனிந்து கொண்டிருந்த இன்னொரு தமிழாம் "ஜொள்ளு" தலை நிமிரச் செய்த உணர்வான உண்மை பெருமைக்குச் சொந்தக்காரன் என்பதை மறுக்க முடியுமா...

வா ரணம் ஆயிரம்... என ரணங்களைத் தாங்க பழகிய இரும்பு நெஞ்சுகளுக்கு நாங்கள் சொந்தக்காரகள்... அந்த இரும்பு நெஞ்சுக்குள் ஆறிலிருந்து அறுபது வரை அனைவருக்கும் நன்மை பயக்கும் திட்டங்களைப் பற்றியே சிந்திக்கும் உங்கள் பதிவ்லக தொண்டர்கள் நாங்கள்... போர் என்றாலும் முதல் வரிசையிலும்... வார் என்றால் வரிந்துக் கட்டியும் நிற்பவர்கள் இந்த வ.வா.சங்கத்தின் சிங்கங்கள்....

ஏ கன் எடுத்து எங்களைச் சுட்டாலும் அந்த தோட்டாவுக்கும் தோழமை பாராட்டும் உயர் தலயின் வழி நடப்பவர்கள் நாங்கள்...

வில்லு பூட்டி வந்தவரையும் சொல்லு கூட்டி பேசாத பழந்தமிழ் பண்பு கொண்டவர்கள் நாங்கள்

மர்ம யோகிகளின் மூடப் பேச்சுகளால் விழையாது நீதி... அதனால் கிளம்பப் போவது வெறும் பீதி...அவர்கள் கேள்விகளால் வேள்வி செய்வார்....வினாக்களால் வினை செய்வார்....ஒரு உன்னத கொள்கை பயணத்தைத் தடை செய்ய இப்படி வித்தைகள் பல புரிவார்கள்...அதில் எல்லாம் என் பாசத்துக்குரிய..உயிரினும் மேலான பதிவுலக பரபரப்புகளே சிக்கி சிதறாதீர்கள்

மக்கள் பணி அழைக்கிறது... நமக்கு நாமே பின்னூட்டமிட்டு நம் பதிவுகளை இன்னும் பரபரப்பாக்கும் திட்டம் இதோ துவங்கப்பட்டு வெற்றியடைந்து விட்டது.. அந்த வெற்றியை மேலும் சிறப்புறச் செய்ய உன் பங்கு அவசியம்...

வா... ஒரு எந்திரனாய் எழும்பு... வசூல் வேட்டைக்கு கிளம்பு...பதிவு புரியாவிட்டால் கொஞ்சம் குழம்பு... பரவாயில்லை.. புரிந்தவுடன் சோர்வினை அகற்றி சிற்று எறும்பை பணியாற்ற களம் காண வா....வா...வா...

அண்ணன் நெஞ்சுக்கு சொல்லிய சேதி இப்போதைக்கு முற்றும்...

பாலைவன பகலவன் பெனத்தலார் கொள்கை நாமம் வாழ்க... வாழ்க...
பேராசான் கொத்தனார் நமக்கு இட்ட நாமம் வாழ்க.. வாழ்க...

30 comments:

சென்ஷி said...

மீ த ஃபர்ஸ்ட்டு ;-)

சென்ஷி said...

//அண்ணன் போர்வாள் போர் முனையில் வஞ்சகர் தம் நஞ்சு கலந்து தொடுக்கும் விஷ அம்பினை எதிர்கொண்டு இனமானம் காக்க...சங்கத்தின் கோடானு கோடி வாலிப நெஞ்சங்களுக்கு சேதி அறிவித்து கொண்டிருக்கும் இந்த வேளையிலே... உலக பொருளாதாரம் முதல் வீட்டில் இருக்கும் தாரம் வரை பிரச்சனைகளை எதிர்கொண்டு..அண்ணனின் அழைப்புக்கு பின்னூட்டம் மின்மடல்..தொலைபேசி என பல வகையிலும் ஆதரவு தெரிவித்து உங்கள் தம் இனமான உணர்வுகளை பொங்கி எழச் செய்து கொண்டிருக்கும் அந்த ஒரு சூழல் நாடு பார்க்கிறது...தில்லி சர்கார் கூட குனிந்து கவனிக்கிறது என்றால் அது மிகையாகாது...//

அண்ணன் போர்வாள் வாழ்க.. வாழ்க..

சீக்கிரம் அண்ணனுக்கு ஜோடா குடுங்கப்பா.. எழுதியே களைச்சிருப்பாரு

சென்ஷி said...

//பதிவு தோன்றி பின்னூட்டம் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த கும்மி குடியாம் சங்கத்து சிங்கங்கள் வரலாற்றின் முதல் பக்கம் கூட முழுசாய் படிக்காதவர்கள் சங்கத்தின் மீதும் சங்கத்தின் முன்னணியினரும் மீது ஊழல் என்றும்... ஊது குழல் என்றும் புழுதி வாரி இறைப்பது இன்றைய சூழலில் ஒரு சிலரின் வாடிக்கையாகவும் வேறு பலருக்கு வேடிக்கையாகப் போனதும் நெஞ்சுக்கு வேதனை அளிக்கக் கூடிய சேதி...//

டாய்.. எவண்டா அது எங்க அண்ணாத்தைகளை கலாய்ச்சது.. தலக்காக டீக்குடிக்கவும் தயங்கமாட்டான் இந்த சென்ஷி..

அது ஒட்டகப்பால் டீயா இருந்தாலும் சரிதான் :-)

சென்ஷி said...

//அண்ணனின் இந்தப் பதிவினைப் பட்டப்படிப்பாய் நினைத்து படிக்கும் பதிவுலக பரபரப்பே... எங்கள் தமிழின சுறுசுறுப்பே//

ஹி..ஹி.. ஆனாலும் என்னைய அநியாயத்துக்கு பாராட்டுறிக...

சென்ஷி said...

//அழகு தமிழில் பதிவிட துவங்கியதில் சங்கத்து முன்னணியினர் பலரும் முதல் வரிசையில் நின்றது தமிழன் ஆன் சைட் சென்று கொடி நாட்டிய தலங்கள் அனைத்தும் மறுக்க முடியாத வரலாறு//

பின்னே இப்ப அமேரிக்காவே அலறுதாமே.. கைப்பு பேர கேட்டா :-)

பினாத்தல் சுரேஷ் said...

நெஞ்சுக்கு சேதியைக் கண்ட வாதிக்கு மகிழ்ச்சியும், பிரதிவாதிக்கு பேதியும் வருவது நிச்சயம். பஞ்சத்தின் மஞ்சத்தில் லஞ்சத்தை கிஞ்சித்தும் அனுமதியாமல் வஞ்சகர்கள் வாழ்வை துஞ்சவைக்கும் நெஞ்சங்கள் சொல்லும் செய்திகள் கண்களைப் பனிக்க வைத்து இதயத்தை இனிக்க வைத்து மூக்கை சளிக்க வைக்காமல் ஓயாது ஒளியாது!

சென்ஷி said...

//பதிவு தேய்கிறது பின்னூட்டம் வாழ்கிறது... //

ரிப்பீட்டே...

(இதுதான் வாழ்வாங்கு வாழுது)

சென்ஷி said...

//பினாத்தல் சுரேஷ் said...
நெஞ்சுக்கு சேதியைக் கண்ட வாதிக்கு மகிழ்ச்சியும், பிரதிவாதிக்கு பேதியும் வருவது நிச்சயம். பஞ்சத்தின் மஞ்சத்தில் லஞ்சத்தை கிஞ்சித்தும் அனுமதியாமல் வஞ்சகர்கள் வாழ்வை துஞ்சவைக்கும் நெஞ்சங்கள் சொல்லும் செய்திகள் கண்களைப் பனிக்க வைத்து இதயத்தை இனிக்க வைத்து மூக்கை சளிக்க வைக்காமல் ஓயாது ஒளியாது!
//

ஓ.. இதுக்கு இங்க இப்படித்தான் கமெண்டு போடணுமா.. தெரியாம போயிடுச்சே..

இப்ப போயிட்டு அடுத்த கமெண்டுல வர்றேன் :-)

சென்ஷி said...

//கண்களைப் பனிக்க வைத்து இதயத்தை இனிக்க வைத்து மூக்கை சளிக்க வைக்காமல் ஓயாது ஒளியாது!
//

அநியாயத்து உணர்ச்சி வசப்பட்டு அப்புறம் துண்டை நனைக்க வேண்டியது. இதே வேலையா போச்சு பினாத்தலாருக்கு :-)

சென்ஷி said...

விடியல் காணும் வெள்ளி முளைத்து
புல்மேல் பனியை மெல்லத் துடைத்து
புவியின் இருட்டை வெகுவாய் கிழித்து
இப்பதிவும் சூடாகும் மற்றதை கழித்து..

கோபிநாத் said...

;)))))))))))))))))))))))

ஆயில்யன் said...

// ஆங்கில கீ போர்ட்களில் தமிழ் போர் தொடுத்து... அழகு தமிழில் பதிவிட துவங்கியதில் சங்கத்து முன்னணியினர் பலரும் முதல் வரிசையில் நின்றது தமிழன் ஆன் சைட் சென்று கொடி நாட்டிய தலங்கள் அனைத்தும் மறுக்க முடியாத வரலாறு///


உண்மை!

உண்மை!!

உண்மை!!! :))))

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//கண்களைப் பனிக்க வைத்து இதயத்தை இனிக்க வைத்து மூக்கை சளிக்க வைக்காமல் ஓயாது ஒளியாது!
//

அநியாயத்து உணர்ச்சி வசப்பட்டு அப்புறம் துண்டை நனைக்க வேண்டியது. இதே வேலையா போச்சு பினாத்தலாருக்கு :-)
//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

//உயிரினும் மேலான பதிவுலக பரபரப்புகளே சிக்கி சிதறாதீர்கள்///


ஒ.கே அண்ணே!

நாங்க லைன் கட்டி நிக்கிறோம்!

:)))

Sridhar V said...

நானும் என்னமோ சேதி சொல்லப் போயிருக்கீங்கன்னு திரும்பி திரும்பி படிச்சு பாத்தேன்.

இதையெல்லாம் படிக்க புரிஞ்சிக்க தனியா ரூம் போட்டு ட்ரையினிங் எடுக்கனும் போல. நாங்கல்லாம் அப்பாவிங்கோவ்.

இராம்/Raam said...

அட்டகாசம்... :)

வாழ்க சங்கம்... வீழ்க "....." என்னான்னு சொல்லுறது?.. :) எவனும் சண்டைக்கு வந்தா அந்த பேரை இங்க போட்டுக்கவேண்டியதுதான்.. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அண்ணே! ஊழல் பதிவர் தேவ் அண்ணே! உங்க நெஞ்சுக்கு சேதி படிச்சிட்டு.....சென்னை மாநகரமே அழுவுதுண்ணே!

எலே...எவன்டா அவன் செட்டுல மழை சீன் போடச் சொன்னேனே! என்ன ஆச்சி? :))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பதிவுலக பரபரப்பே... எங்கள் தமிழின சுறுசுறுப்பே//

//பதிவு தேய்கிறது பின்னூட்டம் வாழ்கிறது//

//ஒன்றே பதிவு அதில் ஒருவனே பின்னூட்டம்//

//கூட்டணி என்பது ஒரு குடும்பம்....குடும்பமே கூட்டணி//

சான்சே இல்லீங்கண்ணோவ்!ஒவ்வொன்னும் ஒரு பொன்மொழி! பொன் எழுத்துக்களால் பொறிக்கணும்!

யாருப்பா பொருளாளார்? பொறிக்கத் தங்கம் வாங்க அட்வான்சா அறுவது லட்சம் அந்த ராயல் கிட்ட குடுங்க! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாலைவன பகலவன் பெனத்தலார் கொள்கை வாழ்க...
பேராசான் கொத்தனார் வழி வாழ்க...//

இங்க தான் எஃபெக்ட்டு மிஸ்ஸிங்!

பாலைவனப் பகலவன் பெனத்தலார் "நாமம்" வாழ்க...
பேராசான் கொத்தனார் "பெத்த நாமம்" வாழ்க...
ன்னு சொல்லியிருந்தீங்கன்னா...அந்த டச்சே வேற! :)))

Unknown said...

சேதி புரியவில்லை என ஆங்காங்கே உங்களை குழப்பி விட எதேச்சதிகார ஆலோசனைகாரர்கள் சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாய் சங்கத் தலைமைக்குத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன...பாசத்திற்குரிய என் பதிவுலக பரபரப்பே... பதறாதே... உனக்கு நான் சொன்ன சேதி விளங்கி விட்டது என இந்த அண்ணன் அறிவேன்...

இனமான இளம் சிங்கம் சென்ஷி.... பாலைவன பகலவன் பாசறையில் பாடம் படித்த அன்புத் தம்பி அஞ்சா நெஞ்சன் ஆயில்யன்..இன்றைய பதிவுலக தலைமுறையில் நான் காணும் அறிவு சுடரொளிகள் இனத்தின் பேரொளிகள்...

சங்கத்தான் என்று சொல்லடா... சவுண்ட் விட்டு செல்லடா.... என பரபரப்பு தொடரட்டும் திக்கெட்டும் நெஞ்சுக்கு சேதி ஒலிக்கட்டும்...

Unknown said...

பாசத்துக்குரிய பெரும் பரபரப்பு கே.ஆர்.எஸ் அவர்களே... நீங்கள் உங்கள் உள்ளத்தில் சங்கத்தின் மீதும் சங்கத்து முன்னணி சிங்கங்கள் மீதும் எவ்வளவு பாசம் கொண்டுள்ளீர்கள் என்பதை என் உள்ளம் அறியும்...ஆன்மீக வெள்ளமே....உங்களை யாரோ எடுப்பார் கைப்பிள்ளையாக ( இது கைப்புள்ள அல்ல என்பதை நோட் செய்யவும்) மாற்றி அவதூறு பரப்ப கிளப்பி விட்டிருப்பதால் இப்போது நீங்கள் ஆன்மீக வெள்ளம் அல்ல.. பதிவுலகின் பள்ளமே...

இருந்தாலும் மாற்றான் பதிவிற்கும் எங்கள் சங்கத்து பதிவில் லிங்க் உண்டு என்று பதிவுலகம் போற்றும் நீதி தேவன் பாஸ்டனார் பெருந்தகை வழியில் நடக்கும் நாங்கள் உங்களை மன்னித்து மறுபடியும் ஏற்றுகொள்ள பொதுக்குழுவை கூட்டுகிறோம்...

உடனே உங்கள் ஊரிலிருந்து 5000 பஸ்களில் ஆட்களைக் கிளப்பிக் கொண்டு..நம் அடுத்த சங்க மாநாட்டிற்கு நிதியுடன் சென்னைக்கு வரவும்....

அறிவே ஆலயம்...அதில் பகுத்தறிவே பகலவன்.... ம்ம் புறப்படுங்கள்....

இது உங்களுக்கு அண்ணனின் பாச அழைப்பு....

நாகை சிவா said...

//வா... ஒரு எந்திரனாய் எழும்பு... வசூல் வேட்டைக்கு கிளம்பு...பதிவு புரியாவிட்டால் கொஞ்சம் குழம்பு... பரவாயில்லை.. புரிந்தவுடன் சோர்வினை அகற்றி சிற்று எறும்பை பணியாற்ற களம் காண வா....வா...வா...//

என்ன ஒரு எழுச்சி அய்யா... தவறிய விழும் யானை அல்ல நீ தடுக்கி விழுந்த குதிரை... அதுவும் சும்மா அரேபிய குதிரை என்னமாம் எழுந்து நிக்குறான் பாருய்யா எங்க ஆளு...

நாகை சிவா said...

//மர்ம யோகிகளின் மூடப் பேச்சுகளால் விழையாது நீதி... அதனால் கிளம்பப் போவது வெறும் பீதி...அவர்கள் கேள்விகளால் வேள்வி செய்வார்....வினாக்களால் வினை செய்வார்....ஒரு உன்னத கொள்கை பயணத்தைத் தடை செய்ய இப்படி வித்தைகள் பல புரிவார்கள்...அதில் எல்லாம் என் பாசத்துக்குரிய..உயிரினும் மேலான பதிவுலக பரபரப்புகளே சிக்கி சிதறாதீர்கள்//

உன் வார்த்தை ஜாலத்தில் எங்கள் உள்ளங்களை சிதைத்து விட்டீர் அய்யா...

நாகை சிவா said...

//சங்கத்தான் என்று சொல்லடா... சவுண்ட் விட்டு செல்லடா.... என பரபரப்பு தொடரட்டும் திக்கெட்டும் நெஞ்சுக்கு சேதி ஒலிக்கட்டும்...//

:))))

சங்கத்தான்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆக மொத்தம் கேட்ட பத்து கேள்விக்கு....
ஒன்னே ஒன்னுத்துக்குக் கூட பதில் இல்லை......
என்பதை தெள்ள தெளீளீஈஈஈஈஈஈஈஈவாச் சொன்ன எங்கள் போர் வாள் அண்ணன் தேவ் "நாமம்" வாழ்க! :))

Syam said...

சூப்பர் அப்படியே பரசொலில விளைஞர் சொல்ற மாதிரியே பின்னிடீங்க :-)

ஜொள்ளுப்பாண்டி said...

கச்சேரியே வா...
களப்பணியே வா...
போர்ப் பறையே வா...
போர்களமே வா...
சிங்கத் தமிழே வா...
சங்க களிரே வா...
துஞ்சாமல் தளராமல்
களிர் எனவே
மார் நிமிர்த்தி நடை பயிலும்
அருமை அண்ணன்
எங்கள் தங்கம்
சங்கம் கண்ட வீரத் தமிழன்
திண்தோள் திமிரும்
காளை வேந்தன்
வஞ்சனையால்
பஞ்சனை துறந்து
பகையால்
(விழு)புண்பட்ட நெஞ்சத்தை
ஆற்ற அருமைத் தம்பி
தங்கக் கம்பி உங்கள் பாண்டி...
பீரோடும் வீதிகளில்
காக்டெய்லோடும்....
மல்கேட் மைனருக்கு
மாக்டெய்லோடும் காத்திருக்கிறேன்
ஆணையிடுங்கள்...
குவாட்டர்களும்...
ஆஃப்களும் அடித்துவிட்டு
ஆப்படிப்போம் எதிரிகளுக்கு....



//சங்கத்தான் என்று சொல்லடா... சவுண்ட் விட்டு செல்லடா.... //
அண்ணன் சொன்ன மாதிரியே சவுண்ட் விட்டுட்டேன்...போதுமாண்ணே..??? :))))

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷியோட இரண்டாவது கமன்ட்டுக்கு பெரியதொரு "ரிப்பீட்டு" ஏன்னா நான் படிச்சு களைச்சுப்போயிட்டன்...:)

தமிழன்-கறுப்பி... said...

ஆனா என்ன தேவ் அண்ணாச்சியை கலைஞர் கெட்டப்புல பாக்க முடியலை...:)