வீரத்தளபதி நடித்து அடுத்து மக்கள் எல்லாரும் ஆவலோடு எதிர்பார்க்கும் குவாட்டர் அடிச்ச ஷீ லேசு 007 படத்தைப் பற்றிய செய்திகளை ஆவலோடு எதிர்பார்க்கும் அண்ணன் ஜே,கே.ஆர் ரசிகர்களூக்கும் மக்களுக்கும் தான் இந்தப் பதிவு... படத்தின் இயக்குனர் தேவ்.. சிபியிடம் கூறிய சிறப்பு தகவல்கள் உங்களுக்காக...
சிபி : அது என்ன குவாட்டர் அடிச்ச ஷீ லேசு 007 ?
தேவ்: இது ஒரு த்ரில்லர்ங்க...படத்தோட பீல் டைட்டிலே வரணும்ன்னு அண்ணன் ஆசைப்பட்டாரு..அதான் அப்படி வச்சிருக்கோம்..
சிபி: குவாட்டர்ன்னா வேற மேட்டர் மாதிரி இல்ல இருக்கு...இது எப்படி எல்லா மக்களையும் குறிப்பா தாய்குலங்களையும் சிறுவர்களையும் கவரும் சொல்லுங்க...
தேவ்: இந்த குவாட்டர் வேறங்க... இது ஒரு பாசப்பிணைப்புமிக்க கதை...ஒரு மனுசனோடு வாழ்க்கையோட..அவன் ஸ்கூல் போற காலம் முதல் ஆபிசில் ஆபிசரா ஆகி மேலே மேல போற வரைக்கும் காலைக் கட்டியிழுக்கும் கதை...
சிபி: புரியல்லயே...
தேவ்: அதாவது... ஒரு அஞ்சு வயசு பையனா நம்ம வீரத்தளபதி ஸ்கூலுக்கு போறார்..அப்போ அவர் பர்த்டேக்கு அவங்க அம்மா அப்பா.. ஆரஞ்ச் கலர் சட்டையும் பிங்க் கலர் டிராயரும் வாங்கித் தர்றாங்க... சிவப்பு கலர் ஷூ வாங்கி தர்றார்....அந்த ஷூவுக்கு....
சிபி: கருப்பு லேசா....
தேவ்: இல்ல... ப்ளாரண்ஸண்ட் க்ரீன் லேசு.. வாங்கித் தர்றார் அவங்க தாத்தா...அந்த லேசு தான் நம்ம படத்துக்கு முக்கிய கேரக்டர்...லேசு நம்ம அண்ணனோடவே வளருது.... அதை டைட்டில் போடும் போது பின்னாடியே காட்டுறோம்... லேசு மேல அண்ணனுக்கு இருக்கப் பாசம் பாத்து கண்டிப்பா கிரவுட் பீல் ஆவும்.. முக்கியமா லேடீஸ் கன்பர்மா பீல் ஆவாங்க...
சிபி: ம்ம்ம் அப்புறம்...
தேவ்: டைட்டில் முடியவும்...படத்தோட ஓப்பனிங்...அப்போ அண்ணனுக்கு ப்ர்த் டே...லேசுக்கு அது 25வது பர்த்டே...சாங் இருக்கு...லேசு சாங் முடிவுல்ல காணாமப் போயிடுது...அங்கே தான் கதையோட நாட்... குவாட்டர் அதாவது 25வது பர்த்டேவுல்ல லேசு மிஸ் ஆவுது...அதை தேடி அண்ணன் ஒரு 007ஆ கிளம்புறார்.. அதான் குவாட்டர் அடிச்ச ஷூ லேசு...
சிபி: ஒரு லேசு போய் தேடணுமா...
தேவ்: கேப்பீங்கன்னு தெரியும்...ஆனா அதுல்ல ஒரு முக்கிய நாட் இருக்கு... அண்ணனோட தாத்தா சாகும் போது ஒரு ரகசியம் சொல்லுறார்...அது என்னங்கறது தான் சஸ்பென் ஸ்.. அது லேசு..அப்புறம் அதோட சக்தி பத்தி... குவாட்டர் அடிச்ச பிறகு அந்த லேசு அபார சக்தி படைச்சதா மாறிடும்...அது செல்ப் ஆக்டிவேட்டட் நியுக்கிளியர் ரியாக்டர் ஒயரா மாறிடும்....
சிபி: அட்ரா சக்க.. டெக்னிக்கலாக் கூட மிரட்டலா இருக்கும் போல இருக்கே,,,
தேவ்: கண்டிப்பா... இன்னிக்கு தேதியிலே ஹாலிவுட்டே மிரள்ற மாதிரி லேட்டஸ்ட் டெக்னாலஜி எல்லாம் யூஸ் பண்ணப் போறோம்.. அதுக்கு எங்க புரொட்யுசர்ஸ் அன்பு அண்ணன் கே.ஆர்.எஸ் சாரும்... ராயல் ராம் சாரும் ஓ.கே சொல்லிட்டாங்க.. க்ராபிக்ஸ் மட்டும் 10 கோடி பட்ஜெட்...
சிபி: ஸ்டண்ட் எல்லாம் எப்படி?
தேவ்: இதுல்ல அண்ணன் வந்து ஒரு ஸ்காட்லாண்ட் யார்ட் சீக்ரெட் ஸ்பையா வர்றார்... சோ ஸ்டண்ட் எல்லாம் பிரமாதமா இருக்கும்... ஒரு கட்டத்துல்ல நிலா டு நிலா அண்ணன் தாவி பைட் பண்ற ஒரு பைட் இருக்கு... அதாவது குளோபல் வார்மிங் எதிர்த்து பைட் பண்ணுவார்....
சிபி: அது எப்படிஙக்.. கதைக்கு சம்பந்தமே இல்லாமல் போயிடதா...
தேவ்: கதையே அங்கே தான் இருக்கு... அண்ணன் ரேஞ்சுக்கு அண்ணனோட லேசை எடுக்க எந்த மனுசனுக்கு தைரியம் வரும்....
சிபி: ஆமா ஷூ பக்கம் போனாலே செத்துருவாங்களே...
தேவ்:அதைச் சொல்லல்ல...அண்ணனுக்கு சரியா டப் கொடுக்க எந்த ஆக்டரும் இல்ல.. சோ நம்ம படத்துல்ல அண்ணனுக்கு வில்லன்ஸ் எல்லாம் ஏலியன்ஸ் ஆல் பிளானட்ஸ் அட்டாக் பண்றாங்க க்ளைமேக்ஸ்ல்ல... அது பாக்கும் போது உங்களுக்கே புரியம்... மயிர் கூச்சேறியும்....
சிபி: சரி அம்மா..தங்க்ச்சி சென்டிமெண்ட் எல்லாம்,,.,
தேவ்: இருக்கு... அம்மா வோட செருப்பு தங்கச்சியோட ப்ளாரஸண்ட் பிங்க் ரிப்பன் தொலையுறது அதை கண்டுபிடிக்க அண்ணன் போராடுறதுன்னு ஒரு மனசைப் பிசையுற சடி கதையும் இருக்கு...
சிபி: காதல்...
தேவ்: அண்ணன் மாதிரி ஒரு யூத் நடிகர்...அவர் பின்னாடி இருக்கது எல்லாமே யூத்.. அதுவும் ஓரி இல்லாத... யூத்.. லவ் இல்லாம படமா...
சிபி: அண்ணன் லவ் பண்ணுறதும் ஏலியன் பொண்ணையா... ஜோடி பொருத்தம் கரெக்ட்டா இருக்குமே.. எத்தனை ஜோடிங்க அண்ணனுக்கு
தேவ்: நோ..நோ..அண்ணன் இதுல்ல் ஜேம்ஸ் பாண்ட் மாதிரி கேரக்டர் சோ பாண்ட் கேர்ள்ஸ் டைப்ல்ல ஹாட்டா இலியானா...தமன்னா...இப்படி ட்ரை பண்ணிட்டு இருக்கோம்...
சிபி: நல்ல வேளை நயந்தாரா எஸ்கேப்டா சாமி..ம்ம்ம் படத்துல்ல காமெடி...
தேவ்: என்னங்க இப்படி ஒரு கேள்வி...
சிபி: தப்புத் தான் அண்ணன் சீரியசா சீறுனாவே காமெடியாத் தான் இருக்கும்... இருந்தாலும்...
தேவ்: காமெடிக்கு ரஜினி...
சிபி: யோவ் அவர் எதோ இப்போ அப்படி இப்படி கொஞ்சம் காமெடியா அறிக்கை விட்டா டோட்டலா அவரைக் காமெடியனாப் போடுறதா முடிவே பண்ணீட்டீங்களா... அவர் ரசிகர்கள் உங்களைச் சும்மா விட மாட்டாங்க....
தேவ்: சிபி கூல்... காமெடிக்கு ரஜினி சார் படத்துப் பாணியிலே அண்ணனே பண்ணிடுவார்ன்னு சொல்ல வந்தேன்.. அதுக்குள்ளே என்னைக் கட்டம் கட்டுறீங்களே...
சிபி: மீசிக் பத்தி சொல்லவே இல்லயே...
தேவ்: அண்ணன் படத்து மீசிக்ன்னா சின்ன குழந்தையும் ரசிக்கணுமே... போன படத்துல்ல நிலா நிலா ஓடி வா போட்ட மாதிரி இதுல்ல கொல கொலயா முந்தரிக்கா நரியே நரியே சுத்தி வா... அப்புறம் ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே ஒரு பூ பூத்த்து,,,, போல நல்ல தமிழ் பாட்டோட,.,, ஜாக் அன்ட் ஜில் வென்ட் அப் தெ ஹில் பாட்டும் இருக்கு
சிபி: ஆகா... பாட்டு கேட்டா ரைம்ஸ் சொல்லுறாங்களே... சரிங்கண்ணா... படம் எப்போ ரிலீஸ்
தேவ்: எந்திரன் வரும் நம்ம குவாட்டர் அடிச்ச ஷூ லேசு 007ம் வரும்ங்கோ
சிபி: படம் பத்தி ஒன் லைன்...
தேவ்: ரொமான்டிக்கா.. காமெடியா... ஆன்மீகமா... சென்டிமென்டா.. த்ரிலிங்கா.. ஒரு சயின்ஸ் பிக்சன்...
இதைக் கேட்டு சிபி மயக்கம் போட்டு விழுகிறார்... படிச்சவங்க மயக்கம் போட்ட சொந்த முயற்சியிலே முகத்துல்ல தண்ணி தெளிச்சு எந்திரிச்சிக்கங்கோ
32 comments:
மீ த பர்ஸ்ட்டு வெயிட்டிங்க் பார்
அண்ணனின் குவாட்டர் அடிச்ச ஷீ லேசு - 007
விளம்பரமெல்லாம் சும்மா பட்டையை கெளப்புணும் ஆமாம் சொல்லிப்புட்டேன் :)
//ஆபிசில் ஆபிசரா ஆகி மேலே மேல போற வரைக்கும் காலைக் கட்டியிழுக்கும் கதை...
//
இதுக்கு எம்புட்டு பெரிய ஷீ லேஸ் பயன்படுத்த்தியிருக்கீங்களோன்னு இப்ப நினைச்சாலே சும்மா அதிருதுல்ல :)))
//ஆரஞ்ச் கலர் சட்டையும் பிங்க் கலர் டிராயரும் வாங்கித் தர்றாங்க... சிவப்பு கலர் ஷூ வாங்கி தர்றார்....அந்த ஷூவுக்கு..../
ஹய்ய்ய்ய்ய்!
இது ராமராசருக்கு கிட்ட காப்பி அடிச்சிட்டீங்கலா ????????
//இல்ல... ப்ளாரண்ஸண்ட் க்ரீன் லேசு.. வாங்கித் தர்றார் அவங்க தாத்தா...அந்த லேசு தான் நம்ம படத்துக்கு முக்கிய கேரக்டர்/
படத்துக்கு மட்டுமா? டோட்டல் உலகத்துக்கே இதுதான் முக்கிய கலர் கேரக்டரைசேஷன்!
பார்த்தாலே அவனவன் அப்படியே பதறிடணும்! பாக்கிறவன் பல்ப்பு எல்லாம் பீஸாகணும்
டார்கெட் அச்சீவ் பண்ண வாழ்த்துக்களுடன்....!
//...அவர் பின்னாடி இருக்கது எல்லாமே யூத்.. அதுவும் ஓரி இல்லாத... யூத்..///
நெசமா?
நெசமா?
நீங்க சொன்னது நெசமா? அப்படின்னு ஒரு டூயட்டும் வைக்கறதுன்னு ஐடியாவும் வைச்சுக்கோங்க :)))
ஆயில்ஸ் இப்படி ஐடியாவா அள்ளி விட்டு கலக்குறீங்களே... அண்ணன் கேட்டா நோட்டு மாலைலே போடுவாரே உங்களுக்கு.. நெக்ஸ்ட் மூவில்ல நீங்கத் தான் நம்ம கூட்டுகார டிரைக்ட்டர் சொல்லிட்டேன்,,, இப்போவே தயாராகிடுங்க....
:))
வடபழனி சிக்னல்ல நாளைக்கு பேனர் இறங்குது! உதயம் எதிர்ல வீரத்தளபதியோட முழு உருவ கட்-அவுட்டு!! பத்தடிக்கு ஒரு பந்தல் போட்டு பப்ளிசிட்டி பண்றோம்!!
//கப்பி | Kappi said...
:))
வடபழனி சிக்னல்ல நாளைக்கு பேனர் இறங்குது!
//
நோஓஓஓஓஒ
கப்பி சார் !
கப்பி சார்!
நெவர் யூஸ் நெகடிவ் வார்த்தைஸ்!
நாளைக்கு பேனர் ஏறுது ஒ.கே!!!!
(அப்பாடா கரெக்ட் பண்ணிட்டேன் இல்லாட்டி அண்ணன் ரொம்ப ஃபீல் ஆயிருப்பாரு!)
எங்க தலைவரை கலாய்க்கும் தேவ் அண்ணாச்சியை விரைவில் எங்க சங்கம் சார்பில் பதிலுக்கு கலாய்ப்போம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். :))
//சிபி: யோவ் அவர் எதோ இப்போ அப்படி இப்படி கொஞ்சம் காமெடியா அறிக்கை விட்டா டோட்டலா அவரைக் காமெடியனாப் போடுறதா முடிவே பண்ணீட்டீங்களா... அவர் ரசிகர்கள் உங்களைச் சும்மா விட மாட்டாங்க....//
ரஜினியை நடிக்க வைக்க எல்லாம் வேண்டாம். அப்பப்போ அவர் விடும் அறிக்கை விடியோக்களை நடு நடுவே சேர்த்தாலே போதும். வடிவேலு VRS வாங்கிடுவார்.. :))
எச்சுசுமீ.. கோயம்புத்தூர் விநீயோகத்துக்கு அட்வான்ஸ் அனுப்பறேன்.. அட்ரஸ் ப்ளீஸ்.. :))
சங்கம் அட்ரஸ் தெரியாதா....
நம்ப்ர் 12 விவேகானந்தர் தெரு...
துபாய் குறுக்கு சந்து
துபாய் மெயின் ரோடு
துபாய் பஸ் ஸ்டாண்ட் பக்கம்
துபாய்
ரைட் பொடியன்ஸ் கோவை ஏரியா உங்களுக்கே உங்களுக்கு தான் ஓ.கே
//பொடியன்-|-SanJai said...
எங்க தலைவரை கலாய்க்கும் தேவ் அண்ணாச்சியை விரைவில் எங்க சங்கம் சார்பில் பதிலுக்கு கலாய்ப்போம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். :))//
எங்க தலைவரா.. நம்ம தலைன்னு சொல்லுங்க...
அப்புறம் கோவையா நீங்க... சமீபத்துல்ல கோவையில்ல தலைவா வா தமிழ் பதிவு தா அப்படின்னு பேனர் எல்லாம் வச்சு தலைவரே ஏகத்துக்கும் டென்சன் பண்ணவரு நீங்க தானா? :)))
எனக்கு கோவை ஏரியா விநியோக உரிமை தந்த தேவ் அண்ணா வாழ்க வாழ்க! :)
//அப்புறம் கோவையா நீங்க... சமீபத்துல்ல கோவையில்ல தலைவா வா தமிழ் பதிவு தா அப்படின்னு பேனர் எல்லாம் வச்சு தலைவரே ஏகத்துக்கும் டென்சன் பண்ணவரு நீங்க தானா? :)))//
ஹிஹி.. கம்பனி சீக்ரெட்டா வெளிய உடாதிங்கண்ணா :))
//அவர் எதோ இப்போ அப்படி இப்படி கொஞ்சம் காமெடியா அறிக்கை விட்டா டோட்டலா அவரைக் காமெடியனாப் போடுறதா முடிவே பண்ணீட்டீங்களா.//
:))
//தேவ்: காமெடிக்கு ரஜினி...
சிபி: யோவ் அவர் எதோ இப்போ அப்படி இப்படி கொஞ்சம் காமெடியா அறிக்கை விட்டா டோட்டலா அவரைக் காமெடியனாப் போடுறதா முடிவே பண்ணீட்டீங்களா...//
இங்கயொரு சின்ன திருத்தம்.... ரஜினி'ல்லாம் தன்னோட படத்திலே நடிக்கிற அளவுக்கா பேராண்ட நாயகன் JKR நிலைமை மோசமா' இருக்கு???
:))
கிர்ருன்னு இருக்கு
லேசா லேசா.. நீ இல்லாம ஷூ அது லூசா.. போன்ற பாடல்களை எழுதித்தர இன்னும் கவிமடத்தை அணுகவே இல்லையே..
:))))))))Superb.. :))))
தலைப்பே கலக்குதே!
பதிவ படிச்ச எனக்கும் மயக்கம் வருது!
சூப்பரப்பு !!!
சூப்பரப்பு !!!
சூப்பரப்பு !!!
சூப்பரப்பு !!!
2011 ல சூப்பர் ஸ்டார் 2015 ல தமிழகத்தின் முதல்வர் என்ற கொள்கைப் பிடிப்புடன் போர்வாள் துணையுடன் வீரத் தளபதியின் விசில் அடிச்சான் ஞ்ஞ்ஞ் ஆவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவின் 007 வீரத் தளபதி ஜெ.கே.ரீ வாழ்க
வாழ்க
வாழ்க
// பினாத்தல் சுரேஷ் said...
லேசா லேசா.. நீ இல்லாம ஷூ அது லூசா.. போன்ற பாடல்களை எழுதித்தர இன்னும் கவிமடத்தை அணுகவே இல்லையே..//
அண்ணனுக்கு பாட்டு எழுதும் அளவுக்கு கவிமடத்துக்கு சக்தி இருக்கா என்பது தான் மேட்டரே....
இரண்டு மூணு சாம்பிளை எடுத்து விடுங்க பினாத்தாலாரே!
idhu enna ritish kumaroda official websitea... raiga kanmaningaloda anba patha thangaliye...
actually i didnt know who this guy is. aprom akkam pakkam visarichi patha ellarume super star apdine sollitu irundhanga.. edhu dhan unmayo!
also, indha linka ambi eppavo solli irukkar. but had been never here. but vandhu patha dhan theriyudhu.. ovvoru postum soooooooooooooooper! indha website vittu vera edhayum padikkave illa. oru naal mulukka idhiliye ukkandhutten.. ((yennadhu pudunga aanni yedhuvum illayava?? yaarupa adhu)) keep it up.
sangathula sera rules yennavo?
//அதுக்கு எங்க புரொட்யுசர்ஸ் அன்பு அண்ணன் கே.ஆர்.எஸ் சாரும்... ராயல் ராம் சாரும் ஓ.கே சொல்லிட்டாங்க.. க்ராபிக்ஸ் மட்டும் 10 கோடி பட்ஜெட்...//
அண்ணன்கள் kRS மற்றும் ராயல் ராம் இவர்கள் இருவருக்கும் இது எல்லாம் சர்வரிடம் டிப்ஸ் கொடுக்கும் ஒரு வார காசு இது!
//குசும்பன் said...
அண்ணன்கள் kRS மற்றும் ராயல் ராம் இவர்கள் இருவருக்கும் இது எல்லாம் சர்வரிடம் டிப்ஸ் கொடுக்கும் ஒரு வார காசு இது!//
என்னடா கெளப்பலையேன்னு பார்த்தேன்! பத்து கோடி டிப்ஸா? லேடி பார்டென்டர் என்றால் கூட அவ்ளோ டிப்ஸ் எல்லாம் கெடையாது அண்ணாச்சி! :)
//சிபி: யோவ் அவர் எதோ இப்போ அப்படி இப்படி கொஞ்சம் காமெடியா அறிக்கை விட்டா டோட்டலா அவரைக் காமெடியனாப் போடுறதா முடிவே பண்ணீட்டீங்களா...//
இது தேவ் அண்ணன் சொல்ல வந்தது! நைசா சிபி அண்ணன் மேல ஸ்டேட்மென்ட் வுட்டுட்டாரா? பழி ஓரிடம், நயன் தாரா ஓரிடம்! என்னத்த சொல்ல! :(
லேசு மாசா வரும் தகவலுக்கே இம்புட்டு பரபரப்புன்னா, படம் வரப்போ, அவனவன் ஷூ லேசு எல்லாம் பத்திக்கிட்டு எரியாது?
தேவ் அண்ணனுக்கு இப்பவே ஒரு ஆளுயர ஷூ லேசு ரெடி பண்ணுங்கடே! :)
//
சிபி: குவாட்டர்ன்னா வேற மேட்டர் மாதிரி இல்ல இருக்கு...இது எப்படி எல்லா மக்களையும் குறிப்பா தாய்குலங்களையும் சிறுவர்களையும் கவரும் சொல்லுங்க...
//
அச்சோ, அச்சச்சோ, கதநாயகன் குவாட்டர் மேட்டெர்லே தான் குறியா இருப்பாரு. லேசு அவுராம சண்டைகாட்சியில் நடிக்கணும் இல்லையா! ம்ம்ம்ம் நல்லா தான் இருக்கு. எப்போங்க ரிலீசு? டிக்க்க்கெட் வாங்கத்தான்.....
//
சிபி: குவாட்டர்ன்னா வேற மேட்டர் மாதிரி இல்ல இருக்கு...இது எப்படி எல்லா மக்களையும் குறிப்பா தாய்குலங்களையும் சிறுவர்களையும் கவரும் சொல்லுங்க...
//
அச்சோ, அச்சச்சோ, கதநாயகன் குவாட்டர் மேட்டெர்லே தான் குறியா இருப்பாரு. லேசு அவுராம சண்டைகாட்சியில் நடிக்கணும் இல்லையா! ம்ம்ம்ம் நல்லா தான் இருக்கு. எப்போங்க ரிலீசு? டிக்க்க்கெட் வாங்கத்தான்.....
Post a Comment