கரும்பெல்லாம் எட்ட நின்னு பாக்கும் போது ரெட்டைச் சடைப் போட்ட புள்ளகளாக் கண்ணுக்குத் தெரிஞ்சு.... வாயோரம் பொங்கல் சாப்பிட்ட எபெக்ட் வந்துச்சுன்னா.... அப்படி ஒரு பொங்கலுக்குப் பேரு "ஜொள்ளு பாண்டி பொங்கல்"
கரும்பை வாங்கி வாயாலக் கடிக்காம... கரும்பு விக்கறவரை வாயிலே வர்ற வார்த்தையாலக் கடிச்சீங்கன்னா... இந்த வருசம் நீங்க கொண்டாடப் போறது "சிபி பொங்கல"
பொங்கல் அன்னிக்கு வூட்ல்ல உக்காந்து பழசை எல்லாம் நினைச்சுப் பாத்து....நான் பத்து வயசுல்ல எப்படி எல்லாம் பொங்கல் கொண்டாடினேன்ன்னு பீலிங்க்காப் பதிவு போட உக்காந்து அடுப்புல்ல வச்சு தங்கமணி உங்க கன்ட்ரோல்ல விட்டுப் போனப் பொங்கலைக் கண்டபடி பொங்க விட்டீங்கன்னா அது கண்டிப்பா "கைப்புள்ள பொங்கல்ங்கோ"
அமெரிக்கா ஹவேஸ்ல்ல.... காரெல்லாம் சர் புர்ன்னு போகவும் வரவும் இருக்க... ரோட்டோரம் அஞ்சு கிலோ மீட்டர் வேகத்துல்ல போற டிராக்டர்ல்ல ஏறி... பில்லாவுல்ல அஜித் போட்ட கருப்பு கண்ணாடி போட்டுகிட்டு.. புரட்சித்தலைவர் பாடுன்ன.. விவசாயி விவசாயி.. பாட்டை ஐ பாட்ல்ல கேட்டுகிட்டு மாட்டுப் பொங்கல் அன்னிக்கு புல் பைட் பாக்க போனீங்கன்னா... அது நம்ம "விவசாயி பொங்கல்ங்க..."
பொங்கல் அன்னிக்கு பொழுது விடிஞ்சும் விடியாமலும் இருக்கும் போதே எழுந்து கூகுள் டாக்கை திறந்து வச்சு...ஸ்ட்டேஸ் மெசேஜ்ல்ல எல்லாருக்கும் ஒரு பொங்கல் வச்சா எனக்குன்னு ஒரு பொங்கல் வச்சுருக்கான்னு மெசெஜ் போட்டு அந்த மெசெஜை மதியமே போங்கடி நீங்களும் ஒங்க பொங்கலும்ன்னு மாத்துனா..அது தாங்க "மதுரக்கார ராயலு பொங்கல"்
பொங்கல் வைக்கறது எப்படின்னு போனைப் போட்டு அம்மாகிட்டே கேட்டுக்கன்னு புது மாப்பி ஜோரோட உத்தரவெல்லாம் போட்டுட்டு...அப்புறம் அப்படியே சைலண்ட்டா தங்கமணி வச்ச பொங்கலை மாங்குன்ன்னு மாங்குன்னு தின்னுபுட்டு எங்க அம்மா கூட இப்படி எனக்குப் பொங்கல் வச்சுக் கொடுத்ததுல்லன்னு அரிச்சந்திர அவதாரமெடுத்தீங்கன்னா... புது மாப்பிள்ளைகளா நீங்க எல்லாரும் கொண்டாடப் போறது நம்ம "வெட்டி பொங்கல"்
பொங்கல் அன்னிக்கு பொழுது முழுக்க தூங்கிபுட்டு..சாயங்காலமா எழுந்து புதுப்படம் பாக்க கிளம்பி போய் போஸ்டரைப் பாத்து டிக்கெட் வாங்கிட்டு தமிழ் படம் மொத்தத்தையும் பாத்து முடிச்சுட்டு ..அதுக்கு விமர்சனமும் பொட்டித் தொறந்து தட்டிட்டு...அப்படியே பொங்குற பிலீங்கோட கிழக்காப்பிரிக்கவுல்ல 1935ல்ல எப்படி பொங்கல் வச்சாங்கன்னு கருப்பு வெள்ளையிலே வந்த எதாவது படத்தை டவுண்லோட் பண்ணிப் பாத்துட்டு..ஐ பொங்கல் அப்படின்னு !!!!?????? எல்லாம் போட்டு ஒரு பதிவைப் போட்டு படுத்தீங்கன்னா...அது கண்டிப்பாக் "கப்பி பொங்கல்ங்க..."
வழக்கமா சூடான பொங்கல் சாப்பிடுறவங்க....கொஞ்சம் சூடு ஆறுன பொங்கலை இங்கன இந்தியாவுக்குள்ளே சாப்பிட்டுட்டு..... மீசையை ஏத்தி இறக்கி விட்டுட்டு....போட்டோவுக்கு போஸ் எல்லாம் கொடுத்துகிட்டு.... உள்ளூர்ல்ல நடக்குற கோலி விளையாட்டுல்ல இருந்து வீர விளையாட்டு வரைக்கும் போய் வேடிக்கை மட்டும் பாத்துகிட்டே அலப்பரை கொடுத்துகிட்டு....சாயங்காலமா அழுக்கான வேட்டியோட வீட்டுக்கு வந்து ஒரு புலி மார்க் சீயக்காய் பாக்கெட்டை உடைச்சி தலைக்குத் தேய்ச்சு குளிச்சு ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்பா அப்படின்னு ஒரு எபெக்ட் கொடுத்தீங்கன்னு வைங்க...அது "நாகை புலி பொங்கல்ங்க..."
பொங்கலுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்ன்னு முழுசா சொல்லாம.... வெறும் வாழ்த்துக்கள் அப்படின்னு வாய் வலிக்கற வரைக்கும் சொல்லிகிட்டு திரிஞ்சிங்கன்னா..அது நம்ம "தம்பியின் பாவனா பொங்கல்ங்க...."
இப்படி பொழப்பு இல்லாம எல்லாரையும் நக்கல் விட்டு பதிவுல்ல பொங்கல் வச்சா... அது கண்டிப்பா நம்ம பொங்கல் தாங்க...
எல்லாப் பொங்கலையும் சொல்லியாச்சு.. உங்களுக்குப் பிடிச்சப் பொங்கலை எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி குடும்பத்தோட நண்பர்களோட நம்ம வ.வா.சங்கத்தோடச் சேர்ந்து கொண்டாடுங்க...
எல்லாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இப்படிக்கு
போர்வாள்
11 comments:
தேவ் அண்ணே...
விவசாயி பொங்கல் சூப்பரோ சூப்பர்.. :-)))
அடுத்து ராயலு பொங்கல் அதுவும் "போங்கடா நீங்கள்ளும் உங்க பொங்கலும்" சூப்பரண்ணே.. :-))))))))))
:)))))
பொங்கலோ பொங்கல்!!!
ஓஹ் இது அந்தப் போங்களா?
பசங்க எல்லாம் "பொண்களோ பொண்கள்" அப்படின்னு இல்ல சத்தம் போடறாங்களாம். அவிங்களுக்கு மட்டும் நிதம் காணும் பொங்கள், அடச்சீ, காணும் பொங்கல் போல! :))
பொங்கலுடன் மகிழ்ச்சியூம் பொங்கட்டும் இந்த இனிய தமிழர் திருநாளில் !!!
ஆமா பொங்கல கிண்டுறது யாருங்கோ .. ;)))))
பிரமாதமான பொங்கல்களா இருக்கே. :)
இன்னும் சிலது விட்டுப் போச்சுங்களே.
களகளன்னு நெய் ஊத்தி அழகாப் பொங்கல் வெச்சி...அத வாழையில எடுத்து வெச்சி....ஆனா திங்காம ஃபோட்டோ பிடிச்சீங்கன்னா...அது சிவியார் பொங்கல்
நீங்க வெச்ச பொங்கல்லயே நல்ல பொங்கல்னு நீங்க நெனச்சு...ஆனா ஏன் யாரும் சாப்பிடலைன்னு தோணுதா....அப்ப அது சர்வேசன் பொங்கல்
இனிமே பொங்கல் வைக்காதீங்கன்னு உங்களுக்குத் தோணுச்சுன்னா அது கண்ணபிரான் ரவிசங்கர் பொங்கல்
இது தமிழ்ப் பொங்கல்..இது அதே பொங்கல். ஆனா மலையாளத்துப் பொங்கல். அதெ பொங்கல் ஆந்திராவுல பொங்குனப்போ இப்பிடி இருந்துச்சு. இப்பிடி ஸ்டேட் விட்டு ஸ்டேட் பொங்கலா வருதா...அப்ப அது ரேடியோஸ்பதி கானாபிரபா பொங்கல்
//எல்லாப் பொங்கலையும் சொல்லியாச்சு.. உங்களுக்குப் பிடிச்சப் பொங்கலை //
எங்களுக்கு புடிச்சது எல்லாம் அபிஅப்பா வெச்ச பொங்கள் தான்
தை மாசத்தையும் காதலையும் இணைச்சு விடியல், வெளிச்சம், முத்தம், கனவு, சூடு, போர்வை, வியர்வை இப்படியான வார்த்தைகளை எல்லாம் போட்டு ஒரு கவி செதுக்க முயற்சி பண்ணி எக்கச்சக்கமா தோத்துப் போயிட்டு அப்பிராணியா மேஞ்சிக்கிட்டு இருக்கற அம்புட்டு வருத்தப்படாத வாலிபனுவங்களுக்கும் பொங்கலைக் கிண்டிக் கொடுத்துப்பிட்டுத் தனக்குன்னு பொங்கல் வச்சிக்காத தியாகத் தன்மானப் பொங்கல் தான் "போர்வாள் பொங்கல்"
எல்லாப் பொங்கலயும் சாப்பிட்டு மறு மொழி இடறது - கும்மி அடிக்குறது - இதெல்லாம் யாரோட பொங்கலுங்கோ
வித விதமாகப் பொங்கல் நகைச்சுவை..வாழ்த்துகள்
:))
Super Pongals Dev!
Post a Comment