Saturday, January 12, 2008

லவ் பண்ணாதீங்க...

பாருக்குள் போகிறார் கைப்புள்ள. அங்கு காலியான இருக்கையில் அமர்கிறார். அவருக்கு அருகில் இருப்பவர் வருத்தத்துடன் 90 இறக்கிக்கொண்டிருக்கிறார். அவரிடம்....

வடிவேல் :- அண்ணே என்னண்ணே சோகம் கலர்கலரா பாட்டில கமுத்தரிங்களேண்ணே.....

அவர்:- அது ஏகப்பட்ட பிரச்சனைப்பா...ஆமா நீ யாரு ....

வடிவேல் :- நான் ...நேத்திக்குதான் அமரிக்காவுலயிருந்து வந்தேன்.....

அவர்:- டேய் வெருப்பேத்தாத...நீ ஏற்கனவே துபாய் போயிட்டு வந்தவான்
தானே.....இப்ப அமெரிக்கா போய் அந்த ஊரையும் கெடுக்கரயா...

வடிவேல் :-என்ன சின்ன புள்ள தனமா ராஸ்கேல்....அதுயிருக்கட்டும் ஏன் இந்த கொல வெறீ...

அவர்:-எங்க வீட்ல எனக்கு பொண்ணு பாக்கராங்க...நல்ல பொண்ணா கிராமத்து பொண்ணா......ஆன எனக்கு அதுல கொஞசம் கூட இஷ்டமேயில்ல....லவ் பண்ணி கல்யான பண்ணனும்னு ஆசை....அதனாலதான் இறக்கிட்டு இருக்கேன்.......எனக்கு அரேஞ்சுடு மேரேஜ் ரொம்ப எரிச்சலா இருக்கு....ஆமா நீங்க ஏன் இங்க வந்திங்க.....

உடனே வடிவேல் மனதில்..." ஏண்டா உனக்கு நல்ல பொண்ணா பாத்தா புடிக்காதா....லவ் கேக்குதா....ஏண்டா .என்கிட்டயே லந்து குடுக்கரியா.........
அப்போ ஆரமிச்சரவேண்டியாதுதான்......"

வடிவேல் :- பரவாயில்ல அப்பு உனக்கு.... நா ஒரு சின்ன பிரச்சனைனால வீணா போயிட்டேன்......

அவர்:- விவரமா சொல்லுங்கண்ணே.....

வடிவேல்:- அப்படிவா.....டே.. நா அமரிக்கா போயி ரொம்ப வருஷ்ம் ஆகுது. இத்தன வருஷத்துல என்னென்னல்லாம் நடந்துது தெரியுமா. ஒரு வெள்ளகார பொண்ணா பாத்து லவ் பண்ணேன்.அது ஒரு கணவன இழந்த பொண்ணா, நான் ஆதரவு காட்டிகிட்டு வந்தேன்....... அந்த பொண்ணுக்கு ஒரு 15 வயசுல பொண்ணு இருக்குடா.........என் கூட இருந்த அந்த 15 வயசு பொண்ணுக்கும் என் சித்தப்புக்கும் லவ் வந்துடுச்சி. இதுனால என்னாச்சி என் சித்தப்பு இப்போ எனக்கு மருமகனாயிட்டாண்டா.....நான் என் சித்தப்புக்கு மாமனார் ஆயிட்டேண்டா.....என் சித்தி எனக்கு மகளாய்ட்டாடா..அந்த பொண்ணு இப்போ எனக்கு அம்மாவாயிட்டா...
இதுக்கப்புறம் தான் பிரச்சனையே ஆரமிச்சது......எனக்கு ஒரு பையன்
பொறந்தான்........இப்போ என் பையன் என் சித்தப்புக்கு சகலையானதுனால..நா அவனுக்கு மாமாவாயிட்டேன்....நிலைமை ரொம்ப இப்போ தான் என்னன்னா... சித்தப்புக்கு ஒரு பையன் பொறந்ததான். அந்த பையனுக்கு நான் தான் தாத்தா ..என் வீட்டுகாரிதான் பாட்டி......என் சித்தப்பு தான் அந்த பையனுக்கு அப்பா..... இதுதாண்டா என் சின்ன பிரச்சனை....எல்லாம் காதல்னால வந்த பிரச்சனை

......

அவர்:- அண்ணே முடியல .......நா வீட்ல பாக்கர பொண்ணயே கல்யாணம்
பண்ணிக்கிறேன்.....


வடிவேல்:- ம்ம்ம் அப்படிவா வழிக்கு........எதாவது லவ் கிவ்ன்னு சுத்துன சோளிய முடிச்சிபுடுவேன் ஆமா........
Thanks to (¯`•._Σ└ªñ_.•´¯) ♣

10 comments:

MyFriend said...

ஹாஹாஹா.. கைப்புள்ளய குழப்புனீங்களோ இல்லையோ.. எங்களை குழப்பிபுட்டீங்க.. :-)))))

குசும்பன் said...

அம்மே!!!! தலைசுத்துகிறது.

நல்லா இருங்க. காதல் குருவாச்சே ஏதும் டிப்ஸ் கொடுத்து இருப்பார் என்று ஆர்வத்தில் உள்ளே வந்துட்டேன்!

Unknown said...

//இப்போ என் பையன் என் சித்தப்புக்கு சகலையானதுனால//
இப்போ என் பையன் என் சித்தப்புக்கு மச்சானானதுனால??

// .:: மை ஃபிரண்ட் ::. said...
ஹாஹாஹா.. கைப்புள்ளய குழப்புனீங்களோ இல்லையோ.. எங்களை குழப்பிபுட்டீங்க.. :-)))))//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

இவான் said...

தாங்க முடியல ...

பாச மலர் / Paasa Malar said...

"என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய அப்பா என் மருமகளுக்கு மாமனார்.."

இதைப் படித்ததும் அபூர்வ ராகங்களில் வரும் மேற்கூறிய வசனம் நினைவுக்கு வந்தது...

இது போல எழுதுவது ரொம்பக் கஷ்டம்..உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்..

இலவசக்கொத்தனார் said...

ம். இன்னும் எம்புட்டு தடவைதான் இந்த மேட்டர் பதிவா வரப்போகுதுன்னு பார்க்கறேன்....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், காதல் குருவே!

இந்தப் பதிவை எழுதும் போது நாலு முறை மயக்கம் போட்டு வுழுந்தீங்களாமே! லைம் ஜோடா கொடுத்தாங்களாமே!
தலையில எத்தனை எலுமிச்சம் பழம் தேய்ச்ச பிறகு அந்தக் கடைசிப் பத்திய எழுத முடிஞ்சுது? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஹாஹாஹா.. கைப்புள்ளய குழப்புனீங்களோ இல்லையோ.. எங்களை குழப்பிபுட்டீங்க.. :-)))))//

மை ஃபிரண்ட் அக்கா!
ஏன் இப்பிடித் தேவையில்லாம கொழம்புறீங்க!
கைப்புள்ளை தானே "அவரைக்" குழப்பறாரு!
கைப்புள்ளையை "அவர்" குழப்பலையே!

குழம்பிக் கிடந்த ஒரு 90 கட்டிங்கை, நல்ல கதை சொல்லி, குழப்பத்தில் இருந்து விடுவித்த ஒரு குழப்பமில்லாக் குழந்தை உள்ளத்தை, கைப்ஸ் செல்லத்தை, குழப்பவாதியிடம் சிக்கிக் குழம்பிப் போனார் என்று குழப்பமான தகவல் கொடுத்து, தேவை இல்லாமல் தானும் குழம்பி, மற்றவரையும் குழப்பும் மை ஃபிரண்ட் அக்காவைக் குழப்பமாய்க் கண்டிக்கிறேன்! :-)

குழப்பமே இல்லாம கைப்பு எதைச் சொன்னாலும், அதையும் தெளீவாக் குழப்பறதுக்குன்னே ஒரு படை கெளம்புதேப்பா! அவ்!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

உங்க பதிவைப் படிச்சுட்டு எல்லாரும் ஒரு முடிவெடுத்துட்டு,அந்த முடிவுனால போட்ற பின்னூட்டட்தில என்ன எழுதனுமுன்னு செய்யுற முடிவுல,குழப்பம் இருக்கக்கூடாதுங்கற முடிவுனாலயும்,முதல்ல எடுத்த முடிவுப் படி எழுதனுமே அப்படீங்கற முடிவ விடக்கூடாதுங்கற முடிவுனாலயும்,ஒரு முடிவு பண்ணி,அந்த முடிவுப்படியே பின்னூட்டம் போட்றாங்கங்குறதுதான் என் முடிவு..இந்த முடிவு தப்புங்கற முடிவோட யாராவது இருந்தா அவங்க முடிவு சரியாங்கறத நீங்க முடிவா சொல்லுங்க...ஏதானும் முடிவு கெடைக்கனுமுல்ல?????

ரவி said...

Why This KolaiVeri ???????