Saturday, June 5, 2010

ஆகவே, தமிழ் வலைப்பதிவர்களே...

ஆகவே,

பிரபலமாகத் துடிக்கும் பதிவர்களே.. புதிதாய் பதிவு எழுத ஆரம்பித்திருக்கும் தோழர்களே... பதிவு எழுத ஆரம்பித்தும் பின்னூட்டம் வராமல் தவிக்கும் நண்பர்களே..

பதிவை பிரபலப்படுத்த என்னென்னமோ செஞ்சிருப்பீங்க.. திரட்டிகள்ல சேர்க்கறது.. ஓட்டு போட வைக்கறது.. சரளமா பின்னூட்டக் கருத்துக்களை எல்லா இடத்துலயும் தூவுறது.. மத்தவங்க பதிவை நாம பின் தொடர்ந்து போதாம நமக்கு நாமே திட்டத்துல நம்ம பேரையும் ஃபாலோயர்ஸ் லிஸ்ட்ல ஏத்திக்கறது இப்படி வலையுலகின் எல்லா விதங்களையும் பின்பற்றியும் ஹிட்ஸ் ஏறலையா உங்களுக்கு..

அவசரப்படவேண்டாம்... ஆவேசப்படவேண்டாம்.. இயல்பை இழக்கவேண்டாம்..

பதிவு எழுதி திரட்டில சேர்த்தும் எவனும் எட்டிப்பார்க்கலைங்கற கவலையில இருக்கீங்களா.. அங்கங்கே ஹிட்ஸ் லட்சக்கணக்குல தூக்கும்போது நமக்கு ஆயிரம்கூட தொடலையேங்கற வருத்தம் இருக்கா..

வருத்தமோ கவலையோ இனி படத்தேவையில்லை..

நான் சொல்ற வழியைக் கேட்டா, சூடு வச்ச மீட்டர் கணக்கா ஹிட்ஸ் ஓடிக்கிட்டே இருக்கும். மாயமில்லை.. மந்திரமில்லை.. மனசு முக்கியம்.. நம்பிக்கை வைக்கணும்.

கேஎஃப்சி கோழி போட்ட முட்டையை எடுத்து நாலு நாள் மண்ணுல புதைச்சு, அஞ்சாம் நாள் அசங்காம எடுத்து, மந்திரம் சொல்லி தண்ணியில கழுவி வெங்காயம் அரிச்சு தக்காளி போட்ட ஆம்லெட் சாப்பிட்டு செஞ்ச எந்திரம்.

நம்பாதவன்  கமெண்ட் போட்டு ஒதுங்கிப்போ.. நம்பறவன் ஓட்டு போட்டு சைடு கட்டு..

குடுகுடுப்பைக்காரன் கணக்கா சவுண்டு வுட்டுப் போறதுக்கில்லை நான் சொல்றது.. உனக்கு உதவணும்.. எதிர்காலத்துக்கு உதவணும்.. எல்லோரையும் பிரபலமாக்கணும்.. எல்லோருமே ஹிட்சை குவிக்கணும் அது மாத்திரந்தாஞ்சாமி என் ஆச.

காலையில எந்திரிச்சு குளிச்சியோ குளிக்கலையோ பல்லு விளக்கியோ விளக்காமலோ காப்பித்தண்ணியை பல்லு படாம வாயில ஊத்தி நேத்து போட்ட பதிவுக்கு ஹிட்ஸ் ஏறலைங்கற வருத்தம் இனியில்லை உங்களுக்கு..

பாகச சார்பா எல்லாருக்கும் பயன்பட செஞ்ச யந்திரம்.. இதை சைடுபட்டைல வச்சா எதிரிகள் சைடுல ஒதுங்கும்.. முகப்பு பட்டையில வச்சா முதுகு காட்டி திரும்பிப் போவாங்க.. கீழ பார்க்க வச்சா கில்லாடியா அடிச்சி விரட்டுவீங்க. மொத்தத்துல இது சுத்தற சுத்தலை பார்க்கற பொறாமைக்காரங்க தலை சுத்திப்போவாங்க. அம்புட்டு பவரு...

வலையுலக சாஸ்திரப்படி, இந்த எந்திரத்தை பாலபாரதியானந்தஸ்வாமிகள் அர்ப்பணிச்ச ஒரு பொக்கிஷம்.. எல்லோருக்கும் உபயோகப்படுமுன்னு சங்கத்து மூலமா வழங்குறோம் சாமியோவ்வ்வ்..





கீழ இருக்கற கோடிங்கை தூக்கி பதிவு வூடு உள்ள ஒட்ட வெச்சாப்போதும்..

<img src="http://i42.photobucket.com/albums/e302/kuilbala/spinning.gif" />

21 comments:

ஆயில்யன் said...

//அவசரப்படவேண்டாம்... ஆவேசப்படவேண்டாம்.. இயல்பை இழக்கவேண்டாம்.. //


ஒ.கே பாஸ் மீ த கண்ட்ரோல் ஆகிட்டேன் !

நீங்க இந்த மாச அட்லாஸ் வாலிபரா ரைட்டு நடத்துங்க கச்சேரியை ! :)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த எஸ் எஸ் மியூசிக் காரங்களே தேவலாம் போலவே.. கவசம் விக்கிறத மிஞ்சிட்டீங்க போங்க..

எல் கே said...

soooooooooperrr

யோசிப்பவர் said...

அஞ்சு லக்கமெல்லாம் எங்க ரேஞ்சுக்கு ரொம்ப கம்மி பாஸ்!!;-)

சாந்தி மாரியப்பன் said...

அஞ்சு டிஜிட்டை தாண்ட மாட்டேங்குதே, கோடிக்கணக்கில் ஹிட்ஸ் வர்ற மாதிரி ஒரு எந்திரம் கண்டுபிடிங்க :-)))))

அஷீதா said...

பதிவு எழுத ஆரம்பித்தும் பின்னூட்டம் வராமல் தவிக்கும் நண்பர்களே..//

மனசுல இருக்கற சோகம் பிழிஞ்சு எடுக்கிறீங்க பாஸ் . அத ஏன் கேக்குறீங்க...போன தடவ பதிவு எழுதி முடிச்ச கையோட, திருப்பதிக்கு போய் மொட்டை போட்டுட்டு வந்தேன். ஏதோ பெருமாள் புண்ணியத்துல 10 கமெண்ட் வந்துது. இந்த மாதிரி பல சோக கதைகள் :((

அஷீதா said...

மத்தவங்க பதிவை நாம பின் தொடர்ந்து போதாம நமக்கு நாமே திட்டத்துல நம்ம பேரையும் ஃபாலோயர்ஸ் லிஸ்ட்ல ஏத்திக்கறது//

அவ்வவ்வ்வ்வ்... இந்த டகால்ட்டி மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா பாஸ். எங்கள மாதிரி புது பதிவர்கள (ஃபாலோயர்ஸ் கெடைக்காத பதிவர்கள) டாமேஜ் செய்யற மாதிரியே இருக்கு ...அப்புறம் நாங்க அழுதுடுவோம் :(

அஷீதா said...

அவசரப்படவேண்டாம்... ஆவேசப்படவேண்டாம்.. இயல்பை இழக்கவேண்டாம்..//

சரிங்க பாஸ். இதுல ஏதோ உள்க்குத்து இருக்கற மாதிரி தெரியதே :))))))))))))))))))))))))

அஷீதா said...

சூடு வச்ச மீட்டர் கணக்கா ஹிட்ஸ் ஓடிக்கிட்டே இருக்கும். மாயமில்லை.. மந்திரமில்லை.. மனசு முக்கியம்.. நம்பிக்கை வைக்கணும்//

எங்க பாஸ் 86801 க்கு மேல மீட்டர் நின்னுபோயடுது. பெட்ரோல் ஊத்தணும் போல. :))))))))))
வேற ஏதாச்சும் நல்ல மந்திரிச்ச யந்திரம் குடுங்க... சும்மா போட்டவுடனே டகார்னு ஹிட்ஸ் லட்சம் கோடின்னு அடிக்கணும் :))))))))))))))

அஷீதா said...

எல்லோரையும் பிரபலமாக்கணும்.. எல்லோருமே ஹிட்சை குவிக்கணும் அது மாத்திரந்தாஞ்சாமி என் ஆச.//

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் இந்த பஞ்சு டயலாக் நல்லா கீது பாஸ் :))

அஷீதா said...

கடைசியா ஒரு கேள்வி பாஸ்.
நான் எப்படி பாஸ் உங்கள மாதிரி பிரபல பதிவர் ஆகறது ?

Karthick Chidambaram said...

sooooooperu

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு, நன்றி சென்ஷி.

உபயோகமான தகவல்கள் அடங்கிய பயனுள்ள பதிவு.




அடப்பாவிகளா எப்பிடியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு.......

முடியல....

ரைட் நடத்துங்க..

thiagu1973 said...

சென்சி குசும்புங்க

ஆயில்யன் said...

//அஷீதா said... போன தடவ பதிவு எழுதி முடிச்ச கையோட, திருப்பதிக்கு போய் மொட்டை போட்டுட்டு வந்தேன். ஏதோ பெருமாள் புண்ணியத்துல 10 கமெண்ட் வந்துது. இந்த மாதிரி பல சோக கதைகள் :((/

lol :)))))

ஆயில்யன் said...

//அஷீதா said...

கடைசியா ஒரு கேள்வி பாஸ்.
நான் எப்படி பாஸ் உங்கள மாதிரி பிரபல பதிவர் ஆகறது ?//


மீ த ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :) பாஸ் நானும் கூட நொம்ப நாளா கேக்க நினைச்ச கொஸ்தீனு எப்படி பாஸ் உங்கள மேரி பெரபல பதிவராவுறது?

ILA (a) இளா said...

வவாசவுல, பாகசவா? வேணாம்டி.. கைமுறிஞ்ச ஜொள்ளுப்பாண்டி கதையாகிறப் போவுது

வால்பையன் said...

//யோசிப்பவர்

அஞ்சு லக்கமெல்லாம் எங்க ரேஞ்சுக்கு ரொம்ப கம்மி பாஸ்!!;-)//


வழிமொழிகிறேன்!

Anonymous said...

hi

Important subject: just show only post titles instead of showing both post title and its content.

Bloggers don't know the mentality of readers. They are showing both post title and its content. It must be avoided. Surely. Bloggers must show only post titles as like s.ramakrishnan has in his blog.

Please not these 3 things:

1. மக்களுக்கு பொறுமை கிடையாது. உங்கள் பிளாகின் முதல் பக்கத்தில் உள்ள போஸ்ட்டுகளை மட்டுமே பார்த்து விட்டு அவர்கள் வெளியேறி விடுவார்கள். அதிலும் 2 பிரச்சனை உண்டு. பலருடைய கட்டுரைகள் மிகவும் நீளமாக இருக்கின்றன. அதனால் முதல் பக்கத்தில் பத்து போஸ்ட்டுகள் மட்டுமே இருந்தால் கூட ஒருவித அலுப்பை அவை ஏற்படுத்திவிடும். Scroll barஐ கீழே fast ஆக‌ இழுக்கும் போது முதல் பக்கத்தில் உள்ள கட்டுரைகளின் தலைப்புகளைக் கூட தவறிவிடுவார்கள்.

2. பல பொது மக்களுக்கு ஒரு blogஐ எப்படி use செய்வது என்பதே கூட தெரியாது. முதல் பக்கத்திலேயே Blog archive sideல் உள்ளது. அதை திறந்து பார்த்தால் இதுவரை எழுதப்பட்டுள்ள அத்தனை கட்டுரை தலைப்புகளையும் பார்க்க முடியும். ஆனால் இது கூட பலருக்கும் தெரியாது என்பது உண்மை.

3. மருதன், முகில், பா.ராகவன் போன்ற சில கிழக்கு எழுத்தாளர்கள் கிட்னி பிரச்சனையால் அவதிப்ப‌டும் முத்துக்குமார் என்பவருக்கு உதவுமாறு ஒரு கட்டுரை எழுதினார்கள். அவர்கள் புதிதாக அடுத்த கட்டுரைகளை எழுதிய போது அந்த உதவி தேவை என்ற கட்டுரை கீழே இறங்கிப் போய் விட்டது அல்லது அடுத்த பக்கத்திற்கு போய் விட்டது. அதனால் அந்த முக்கிய கட்டுரை புதிய வாசகர்கள் கண்ணில் உடனடியாக படாமல் போய்விட்டது. எந்த வாசகரும் post titleகளுக்காக blog archiveஐ பொறுமையாக திறந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மேலும் next page என்பதை திறந்து திறந்து பார்ப்பார்கள் என்று சொல்வதும் முடியாது. அவர்களுக்கு பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை. இந்த கிழக்கு எழுத்தாளர்கள் மட்டும் போஸ்ட் டைட்டில்கள் மட்டும் தெரியுமாறு செட் செய்திருந்தால் அந்த முக்கிய கட்டுரை இன்னும் பலர் கண்ணில் எளிதாய் பட்டிருக்கும். இன்னும் நிறைய பேரின் உதவி கிடைத்திருக்கும்.

So, Please set your blog to show just post titles only instead of showing both title and its content as in my blog http://blufflink.blogspot.com/

A blogger followed my tips and she has changed her blog to show only post title. Watche her blog http://livingsmile.blogspot.com/

For showing only post title instead of showing both title and its content visit and follow steps mentioned here

http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

(If you decide to show only post title in your blog after changing it so set you blog to show 50 post titles per page. It will enable the reader to have very quick glance of your posts.)

வவ்வால் said...

Enthiram manthiramla thevai illai,Naarasama oru Punaivu or pagidi pathivu pottale pothum hits egirume(thozhil ragasiyatha sollama maraitha suya nalathai kandikiren)

YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

இந்த பதிவிற்கு உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி