Friday, January 29, 2010

தல, புதுசா பிஸ்னஸ் ஆரம்பிக்கபோறோம் தல!



செந்தில்:அண்ணே, ரொம்ப போரடிக்குதுண்ணே, எதாவது ஐடியா குடுங்கண்னே!

க.மணி:போரடிச்சா திருப்பி அடி, என்னை வந்து ஏண்டா உசுரை வாங்குற!

செந்தில்:அதுயில்லண்ணே, புதுசா தொழில் எதாவது செய்ய ஐடியா கொடுங்கண்ணே!

க.மணி:அப்படியா, எவ்ளோ காசு வச்சிருக்க!

செந்தில்:நாலு முறுக்கு வாங்குறதுக்கு காசு வச்சிருக்கேண்ணே!

க.மணி:டால்டா டின் மண்டையா, அதை வச்சி என்னடா தொழில் பண்றது,

செந்தில்:முதல் போடாம தொழில் பண்ண ஐடியா கொடுங்கண்ணே!

க.மணி:அந்தா இருக்கு பேரு பெருமாள் கோவிலு, அது வாசல்ல உட்கார்ந்தா செயத்தியா வசூல் ஆகும், முதலே தேவையில்ல!

செந்தில்:விளையாடாதிங்கண்ணே! என்னை பத்தி ஊரே பேசனும், அதுக்கு ஒரு ஐடியா கொடுங்க!

க.மணி:அப்படினா சாமியார் ஆகிட வேண்டியது தான்!

செந்தில்:அது ரொம்ப ஈஸியாண்ணே!

க.மணி:அதாண்டா இன்னைக்கு ட்ரெண்டே!

செந்தில்:அதுக்கு நான் என்ன செய்யனும்!

க.மணி:முதல்ல பேரை பஜ்ஜியானந்தா, பக்கிபரு மாசுதேவ் நு எதாவது மாத்தி வச்சிக்கோ!
அப்ப தான் மக்கள் மனசுல பச்சக்குன்னு உட்காந்துகலாம்!

செந்தில்:அப்புறம்!

க.மணி:பத்து பேரை வேலைக்கு வச்சிக்கோ, பஸ்டேண்டு மாதிரி மக்கள் கூடுற இடத்துல நின்னு அந்த சாமியார் வாயை திறந்தா போதும், பணம் கொட்டோ கொட்டோன்னு கொட்டும்னு புரளியை நீயே கிளப்பிவுடு!

செந்தில்:மக்கள் நம்புவாங்களாண்ணே!

க.மணி:அது இல்லைனா, யாராவது நடிகர், எழுத்தாளர்ன்னு கையில வச்சுக்கோ, அவுங்க சொன்னா மக்கள் நம்புவாங்க!

செந்தில்:அப்புறம்ணே!

க.மணி:சூஃபி கதைகள், முல்லா கதைகள்னு ஒண்ணு விடாம படிச்சிக்கோ! கதையில வர்ற ஆளுங்களோட பேரை மட்டும் மாத்தி உனக்குன்னு ஒரு நாயகணை உருவாக்கிக்கோ, மக்களுக்கு கதை கேக்குறதுன்னா ரொம்ப பிடிக்கும் அதனால கூட்டம் வரும்!

செந்தில்:கண்டிப்பா வருமாணே!

க.மணி:பத்துபேர் வந்தா பின்னாடியே ஒரு கூட்டம் வரும்!

செந்தில்:ஒருத்தர் கொட்டாவி விட்டா பின்னாடியே இன்னொருத்தரும் கொட்டாவி விடுறாங்களே அது மாதுரியா!

க.மணி:டிஸ்க்பிரேக் மண்டயா, இவ்ளோ நேரம் நல்லா தானே பேசிகிட்டு இருந்தெ!
கொட்டாவி வந்தா மூளைக்கு ஆக்சிசன் பத்தலைன்னு அர்த்தம், நீ இருக்குற இடத்துல தானே அவனும் இருப்பான், உனக்கு கொட்டாவி வந்தா அவனுக்கு ஆக்சிசன் கொரியர்லயா வரும், அதுனால தான் அவனுக்கும் கொட்டாவி வருது!

செந்தில்:வேற என்னாண்ணே செய்யனும்,

க.மணி:அப்படி கேள்றா! சாமியார் வேலைங்கிறது ஒரு கார்ப்பரேட் கம்பெனிய நிர்வகிப்பது மாதிரி, வர்ற போற எல்லாருடய நிலையையும் கவனிக்கனும், தப்பு ஏதும் அவுங்களுக்கு நடந்தா கண்டுக்காத! அதுவே எதாவது நல்லது நடந்தா ஆளுங்களை வச்சு அதை விளம்பர படுத்தீரு! மத்த விளம்பரங்களை விட அதுக்கு ரீச் நல்லாயிருக்கும்!

செந்தில்:அது எப்படிண்ணே!

க.மணி:இன்னைக்கு படிச்சவங்க தான் நிறைய பேர் சாமியார் கிட்ட போய் ஏமாறுறாங்க, நூத்து ஒருத்தனுக்கு வேலை கிடைக்கும், உன்னால தான் கிடைச்சதுன்னு உன் அல்லக்கைகளை வச்சு விளம்பரம் கொடு, அவனோட போன் நம்பரும் கொடுத்துரு, உன் பெருமை பேசி அவனே உனக்கு ஏஜெண்ட் வேலை பார்ப்பான்!

செந்தில்:எல்லாத்துக்கும் வேலை வாங்கி தரமுடியாதாண்ணே!

க.மணி:டேய் டின் பீர் மண்டையா, வாலு மாதிரி ஆளுங்க வந்து ஒன்பதாவது தான் படிச்சிருக்கேன், எனக்கு டாக்டர் வேலை வாங்கி கொடுன்னு கேப்பாங்க, உனக்கு எட்டுல சனி ரெண்டு வருசத்துக்கு இந்த பக்கம் வந்துறாதேன்னு தொரத்தி விட்று, அந்த மாதிரி ஆளுங்களை உள்ள விட்டேன்னா நீ உள்ள போக வேண்டியது தான்!

செந்தில்:இம்புட்டு சொல்றிங்களே, நீங்களே செஞ்சிரலாமே!

க.மணி:அடேய் பனங்கொட்டை தலையா, அதுக்கு உன்ன மாதிரி இளிச்சவாயி மூஞ்சு வேணும்டா, ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு இளி இளிப்ப, எனக்கு டென்ஷன் ஆனா ஓடி வந்து அப்பிபுடுவேன்! சாமியார்னா திட்டுனாலும் சொரணை இல்லாம சிரிச்சிகிட்டே இருக்கனும்டா, உனக்கு அது தான் லாயக்கு! வரட்டா, உள்ள போனா சொல்லி அனுப்பு காஜா பீடி வாங்கியாறேன்!

15 comments:

வால்பையன் said...

ஆதரவளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!

வால்பையன் said...

ஆதரவளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!

sathishsangkavi.blogspot.com said...

:))))))

ஆ.ஞானசேகரன் said...

// வால்பையன் said...

ஆதரவளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!//

நீங்களே ஆதரவை எடுத்துக்கொண்டீர்களா தல

Rajan said...

//செந்தில்:அதுயில்லண்ணே, புதுசா தொழில் எதாவது செய்ய ஐடியா கொடுங்கண்ணே!

க.மணி:அப்படியா, எவ்ளோ காசு வச்சிருக்க!
//

தொழில் செய்ய எதுக்கு தல காசு ! சும்மாவே செய்யலாமே

வால்பையன் said...

//நீங்களே ஆதரவை எடுத்துக்கொண்டீர்களா தல//

இந்த மாதத்தோடு என் பங்கு இந்த தளத்தில் முடிவடைகிறது! அதான் நன்றி சொன்னேன் தல!

Rajan said...

// மக்கள் மனசுல பச்சக்குன்னு உட்காந்துகலாம்!//எப்புடி உக்காரலாம் ?

Rajan said...

//செந்தில்:ஒருத்தர் கொட்டாவி விட்டா பின்னாடியே இன்னொருத்தரும் கொட்டாவி விடுறாங்களே அது மாதுரியா!//

எனக்கும் நெறையா உதாரணம் வாய்ல வருது ! சொன்னா சில்றப்பயன்னு திட்டறாங்க

Rajan said...

//இம்புட்டு சொல்றிங்களே, நீங்களே செஞ்சிரலாமே!//

நானும் அதையே தான் சொல்றேன் ! பேசாம ஆசரமம் போட்றலாம் தல

வெற்றி said...

ரொம்ப காமெடியா இருந்துச்சு :))

Robin said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

Unknown said...

நல்ல காமெடி. நீங்க பேசாம சினிமால காமெடி ட்ராக் எழுதப் போகலாமே?

கண்ணகி said...

வாலு. வாலு....வாலு........

முடியலை.

சாமக்கோடங்கி said...

சூப்பர் மாப்ளே... அருமையா எழுதி இருக்கீங்க..

நீங்க சொன்ன இதே விஷயத்த அப்படி தஞ்சாவூர் கல்வெட்டுல....

அய்யயோ.. மோரைக்கிரீங்கன்னு புரியுது...

நன்றி...