Wednesday, January 6, 2010

பின்மண்டைத்துவவாதிகள்!

செந்தில்:என்னணே இங்க உட்கார்ந்திருக்கிங்க!

க.மணி:இங்க உட்காராம சந்திரமண்டலத்துலயா உட்கார்றது, வந்த விசியத்த சொல்றா வெண்ண வாயா !

செந்தில்:உங்களை பாக்க வீட்டுக்கு போயிருந்தேணே, நம்ம சம்சாரம் நீங்க இங்க இருக்குறதா சொன்னாங்க!

க.மணி:அடிங்க ..... , உன்னை அங்க போகூடாதுன்னு சொல்லியிருகேன்ல, பாவம் பச்சபுள்லைங்கல்லாம் பயப்படுது! அதென்ன நம்ம சம்சாரமா ?

செந்தில் : டங்கு இச்சிளிப் ஆயிருச்சுன்னே !

க. மணி : டங்கு டனாளாகி ,டகுலு பிகுலாயிரும் !

செந்தில்:என்னணே நீங்க.... கூடவே இருக்கேன், என் அறிவையும் பயன்படுத்திகோங்கண்ணே!

க.மணி:தார்டின் மண்டையா, உன்னை பயன்படுத்துற பத்தி யோசிக்கலா ஆனா அறிவ பத்தியெல்லாம் நீ பேசாத!

செந்தில்:அண்ணே வேணும்னா என்ன கேள்வி கேட்டு பாருங்க

க.மணி:ஆமா இவரு டோண்டு , நான் அனானி , இவருகிட்ட கேள்வி கேப்பாங்க

செந்தில்:கேட்க தெரியாட்டி விடுங்கண்ணே

க.மணி:டே பச்செல புடுங்கி , நாலும் நாலும் எத்தனடா?

செந்தில்:ம்ம்ம்ம் ... நாலு நாலும் நாப்பத்திநாலுண்ணே!

க.மணி:டே பனங்கொட்ட தலயா.. ஒன்ன பிதுக்காம விடறதில்ல !, நான் கூட்ட சொன்னேண்டா

செந்தில்:அப்ப விளக்கமாறு கொடுங்க

க.மணி:அய்யோ ராமா.... என்ன ஏன் இந்த கழிசட கூடெயெல்லாம் கூட்டு சேர வைக்கிற!

செந்தில்:அண்ணே, என்ன தப்புன்னு சொல்லுங்கண்ணே!

க.மணி:ஒன்னு கூட ஒன்னு சேந்தா ரெண்டு தாண்டா ஆகும், பதினொன்னா ஆகும்!

செந்தில்:அப்படி கேளுங்க, எங்க அம்மா,அப்பா ரெண்டு பேரா, இப்ப எங்க வீட்ல பதொனோரு பேரு!

க.மணி:அய்யோ மகா ஜனங்களே, இந்த பழிபாவத்துகெல்லாம் நான் ஆளாக மாட்டேன், நான் என்ன கேட்டா அது என்ன பதில் சொல்லுது பாருங்க!, .... அது என்னடா கக்கத்துல துண்டு?

செந்தில்:வர்ற வழியில ஒரே கூட்டமா இருந்துச்சுணே, எட்டிபார்த்தேன் ரெண்டு பேர் கூப்டு துண்டு போட்டுவிட்டாங்க!

க.மணி: அடிங் கொப்பன் தலைல ஆணியடிக்க ! இத என்ன நம்ப சொல்றியா, எங்க காய்ஞ்சிக்கிட்டு இருந்த கோவணத்த ஆட்டைய போட்டுட்டு வந்த?

செந்தில்:நிஜமா தான்னே, அவுங்க எனக்கு தெரிஞ்சவங்க தான், அதான் போட்டாங்க,

க.மணி:என்ன போட்டாங்க ... செருப்படியா ? அது சரி அப்படி என்னடா நீ பெருசா பண்ணிட்டே துண்டு போடுற அளவுக்கு

செந்தில்:ஒரு மாசத்துல தர்றேன்னு ரெண்டாயிரரூவா கடன் வாங்கியிருந்தேணே, ரெண்டு வருசமாகியிம் தரலயா, அதான் கழுத்து துண்டு போட்டு பணம் கேட்டாங்க!

க.மணி:அட வாஸ் பேசன் வாயா ! இத முதல்லயே சொல்லியிருக்க வேண்டியது தான, பின்ன எப்படிடா உன்ன விட்டாங்க, கைய கிய்ய தூக்கிட்டயா?

செந்தில்: இல்லன்னே , எங்கண்ணே நோட்டு அடிக்கிற மிஷின் வாங்கியிருக்காரு, ரெண்டாயிரத்துக்கு பத்தாயிர்ரமா கொடுத்துர்றதா சொல்லிட்டேன்!

க.மணி:அடே பீர்பாட்டில் மண்டையா, என்ன ஏண்டா மாட்டிவிட்ட,

செந்தில்:பின்ன என்னணே, நீங்க மட்டும் நல்லா சம்பாதிக்கிறிங்க எனக்கும் கொஞ்சம் சொல்லிதரலாமுல

க.மணி:அடேய் தயிர்சட்டி மண்டையா, அதுகெல்லாம் மூளை மண்டைக்குள்ள இருக்கனுண்டா ....

செந்தில்: அப்ப எனக்கு எங்க இருக்குன்றீங்க ?,

க.மணி:கரிச்சட்டி மண்டையனுக்கு எகத்தாளாத்த பாருங்க ஜனங்களே,

செந்தில்:கோவிச்சிகாதிங்கண்னே, சொல்லி கொடுங்கண்னே,

க.மணி:அடேய் ஹெட்லைட் மண்டையா, ஊருகுள்ள எவனுக்காவது சொத்து தகராறு வந்தா முன்னாடி நின்னு சரிசமமா பிரிச்சி கொடுக்கனும்டா, நமக்கு எதாவது கொடுப்பாங்க புரியுதா,

************

க.மணி:டேய் டேய் நிறுத்துங்கடா, எதுக்குடா அவன போட்டு அடிக்கிறிங்க,

செந்தில்:அண்ணே, நீங்க சொல்லி கொடுத்தா மாதிரி தாண்ணே செஞ்சேன், அதுக்கு எல்லாரும் போட்டு அடிக்கிறாங்க!

க.மணி:என்றா பண்ண

செந்தில்:ரெண்டு பசங்க பன்னை வச்சிகிட்டு பிரிக்கமுடியாம நின்னுகிட்டு இருந்தாங்க, நான் பிரிச்சிதர்றேன்னு சொல்லி வாங்குனேன், அதை ரெண்டா பிரிச்சனா, ஒரு பக்கம் அதிகமா போயிருச்சு, அதனால அதை லேசா ஒரு கடி கடிச்சேன், அப்புறம் பார்த்தா அது சிறிசா போயிருச்சு, அதனால மீதி இருந்த பன்ன ஒரு கடி கடிச்சே அப்புறம் அது சிறுசா போச்சு, அதனால ....

க .மணி : டேய் நிறுத்து !

செந்தில் :அதானே ! அப்படியே மொத்த பன்னும் காலியா போச்சுனே, அதுக்கு தான் எல்லாரும் சேத்து அடிக்கிறாங்க

க.மணி: பார்ரா ! நீ ஒன்னு கவலைப் படாத கண்ணு ! இப்பிடி வந்து கெழக்கு பக்கம் பாத்து கைய ,கால விரிச்சுட்டு நில்லு ..

செந்தில் : ம்ம் ... சொல்லுங்கண்ணே !

க மணி : காலையும் விரி ராஜா !

செந்தில் : ஐ ! நான் விரிச்சா நீ ஒதைப்பையே!

க மணி : நீ விரிக்காட்டியும் நான் ஒதைப்பேனே ! குட்டீர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ..........

25 comments:

Rajan said...

//நீ விரிக்காட்டியும் நான் ஒதைப்பேனே ! குட்டீர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் //''

இறுக்கு நல்லா !

வால்பையன் said...

ஏன், இங்க மட்டும் கூட்டம் சேர மாட்டிங்குது!

Rajan said...

//ஏன், இங்க மட்டும் கூட்டம் சேர மாட்டிங்குது!//

உன்னோட ராசி நல்ல ராசி !

sathishsangkavi.blogspot.com said...

நல்ல நகைச்சுவை...

Unknown said...

ஹி ஹி.....

கலக்கல்....

வானம்பாடிகள் said...

=)).சூப்பரு

ILA (a) இளா said...

//ஏன், இங்க மட்டும் கூட்டம் சேர மாட்டிங்குது//
Online -18 பத்தாதா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆமா இவரு டோண்டு , நான் அனானி , இவருகிட்ட கேள்வி கேப்பாங்க//

:-))))))))))))

Unknown said...

கவுண்டமணிக்கு வசனம் எழுதிய வீரப்பன் இல்லாத குறையைத் தீர்த்து வைக்கிறிங்க.

கூட்டம் சேராததற்குக் காரணம் தலைப்போ ;-)?

Ashok D said...

வந்துட்டோமில்ல... இவ்வளோ லேட்டா லிங் கொடுத்தா எப்டி?

Starjan (ஸ்டார்ஜன்) said...

சிரிப்பு

☀நான் ஆதவன்☀ said...

:))))))

dondu(#11168674346665545885) said...

//செந்தில்:அண்ணே வேணும்னா என்ன கேள்வி கேட்டு பாருங்க

க.மணி:ஆமா இவரு டோண்டு , நான் அனானி , இவருகிட்ட கேள்வி கேப்பாங்க//

செந்தில்: அப்படி நான் சொல்ற பதில் பிடிக்கலைன்னாக்க, இருக்கவே இருக்காரு வால்பையன். அவர் ஒரு செட் பதில்கள் தருவாருல்ல?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கேடியார் said...

நம்ம டோண்டு சார் அவரே அனானியா மாறி அவரே கேள்வி கேட்டுக்கிட்டு அவரே பதிலும் சொல்லற விசயத்தை இப்படி போன போக்குல போட்டுக்குடுத்திட்டியே வாலு :))))))))))

அனானி (32 கேள்வி கேட்பவர்) said...

//கேடியார் said...
நம்ம டோண்டு சார் அவரே அனானியா மாறி அவரே கேள்வி கேட்டுக்கிட்டு அவரே பதிலும் சொல்லற விசயத்தை இப்படி போன போக்குல போட்டுக்குடுத்திட்டியே வாலு :))))))))))//

ரிப்பீட்டு.........:)

அனானி (விடியக்காத்தால 04.39-க்கு கேட்டவர்) said...

அடடா இந்த விசயம் வெளிய வந்திருச்சா. அதுக்காக‌ டோண்டு சாரு அவரே கேள்வி கேட்டு அவர பதில் சொல்றத நிருத்திர மாட்டார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பின்மண்டைத்துவவாதிகள்! //


அங்க அடிச்சா ஒரே மூச்சுல உசுரு போயிருமுங்குறாங்களே!?

அந்த எடமுங்ளா சாமியோய்!

ஹேமா said...

வாலு...இங்கயுமா !

ரதா.....வாலுகூடவா இப்போ.அதான் பாட்டுப் பாடியும் காணமுடியால.உருப்பட்டாச் சரி.

KARTHIK said...

செந்தில்; அண்ணே நீங்க ஒரு அறிவு கொலுந்துண்ணே

Thekkikattan|தெகா said...

:)) ஓ! இங்கயுமா நடந்துங்க, நடத்துங்க.

cheena (சீனா) said...

அன்பின் வாலு

நகைச்சுவையின் உச்சம் - நல்ல தொரு இடுகை - கற்பனை சூப்பர்- சிந்தனை நன்று

நல்வாழ்த்துகள்

நேசமித்ரன் said...

வால்பையன் கவுண்டர் கூட்டணிக்கு வீராசமி என்பவர்தான் நகைச்சுவை பகுதி எழுதி வந்ததாக சொல்வார்கள்

ஒரு வெலை அவர் பார்த்தால் கூட அய்யோ என் ஸ்க்ரிப்டு பேப்பரை எந்த மண்டயனோ சுட்டுடானுவ போல என்று சொல்லும்படிக்கு அசலாக இருந்தது

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

சூப்பரு தல...

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//வால்பையன் said...

ஏன், இங்க மட்டும் கூட்டம் சேர மாட்டிங்குது!//

இன்னும் நீங்க, இந்த கடைல "வியாபார காந்தம்" ஆகல தல..

Kalaiselvan said...

thalaippai kattayam maathunga