Monday, June 15, 2009

ஒரு அப்பாவி ரங்கமணியின் பதில்

ச்சின்னப்பையன் அண்ணே புதுசா கேள்வி பதில் தொடர் ஒண்ணை ஆரம்பிச்சிருக்காரு. அந்தக் கேள்வியைப் படிச்சி ஃபீல் ஆன ஒரு அப்பாவி ரங்கமணி (ரங்கமணினாலே அப்பாவி தானேனு உண்மையை எல்லாம் சொல்லப்படாது) எனக்கு தனிமடல்ல பதில் அனுப்பினாரு. அதான் உங்களோட பகிர்ந்துக்கலாம்னு

உங்க மூக்கு உங்களுக்கு பிடிக்குமா?
சி.மூ.உ.மு வா இல்லை சி.மூ.உ.பி யா?
அது என்னனு கேக்கறீங்களா? சில்லு மூக்கு உடையறதுக்கு முன்னாடியா இல்லை பின்னாடியானு சொல்லலையே? அது ஒண்ணுமில்லை சீரியல் பாக்கற நேரத்துல கிரிக்கெட் மாட்ச் பார்க்கலாம்னு சேனல் மாத்தற ஒரு சின்ன சண்டைல சில்லு மூக்கு உடைஞ்சிடுச்சி. என் பல்லு அளவுக்கு சில்லு ஸ்ட்ராங்கா இல்லைனு ரொம்ப ஃபீல் ஆகிட்டாங்க. அப்பறம் அவுங்க ஃபீல் ஆனதைப் பார்த்து நாடகமே பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். மூக்கு இப்பவும் நல்லா இருக்கறதா தங்கமணி சொல்றாங்க.

உங்க பக்கத்துலே யாரு இருக்கறதுக்காக வருத்தப்படறீங்க?
இந்த மாதிரி கேள்வி எல்லாம் பப்ளிக்ல கேக்கப்பிடாது. சொல்லிப்பிட்டேன்

கண்ணாடி முன்னாடி நின்னு உங்க பற்களை எண்ணியிருக்கீங்களா? எவ்வளவு தேறுது?
போன வாரம் எண்ணத சொல்றதா இல்லை இன்னைக்கு எண்ணதை சொல்றதா?

(திருமணமான ஆண்களுக்கு மட்டும்) நீங்க கடைசியா சிரித்தது எப்போது?
நேத்துக் கூட சிரிச்சனே!
ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்த மாமனார், மாமியார் நேத்து ஊருக்கு போறோம்னு சொன்னவுடனே தான். அப்ப தான் முந்தின கேள்வில கேட்ட கவுண்ட்ல ஒண்ணு குறைஞ்சது.

சுடுதண்ணீரில் குளிக்க விருப்பமா அல்லது ஜில் தண்ணீரிலா?
கேஸ்க்கு அலைஞ்சதுல இருந்து ஜில் தண்ணில குளிக்கறது தான் விருப்பம்.

படிக்கட்டில் ஏறும்போதும் இறங்கும்போதும் - ஒவ்வொரு படிகளாக போவீர்களா அல்லது இரண்டிரண்டு படிகளாக தாண்டிப் போவீர்களா?
தனியா வீட்டை விட்டு வெளியே போகும் போது நாலு நாலு படியா தாண்டி போவேன். வீட்டுக்கு வரும் போது ஒண்ணு ஒண்ணா...

இட்லிக்கு எதை தொட்டுக்கொண்டு சாப்பிட பிடிக்கும்? (தரையை / சுவற்றை தொட்டுக் கொள்வேன் என்று அறுக்க வேண்டாம்!!).
எது செய்யறதுக்கு சுலபமா இருக்கோ அதைத் தொட்டுக்கொண்டு சாப்பிடறது தான்.

மோதிரம் போட்டுப்பீங்களா? எந்த விரலில் போட்டுப்பீங்க?
தங்கமணி விரல்ல தான் :)

உங்க தலையில் வகிடு எந்தப்பக்கம் எடுப்பீங்க? இடது, வலது அல்லது நடு?
பூரிக் கட்டைல அடி விழும் போது எந்த பக்கம் விழுதோ அதுக்கு எதிர்பக்கம். அப்ப தானே மறைக்க முடியும்.

எந்த விரலில் நகம் கடிக்க அதிகம் விரும்புவீர்கள்?
ஆபிஸ்ல பக்கத்து சீட்ல உக்கார்ந்திருக்க மல்லு ஃபிகர் விரல்ல இருக்குற நகங்களைத் தான். 

இந்த தொடரை யார் வேணும்னாலும் தொடரலாம்.27 comments:

cheena (சீனா) said...

யோவ் - பக்கத்துலே இருக்கற மல்லு பிகரோட நகத்தக் கடிக்க ஆசயா - வாழ்க வாழ்க - கொலஸ்ட்ரால் உனக்குச் சாஸ்தி தான் - சாக்கிரத

சென்ஷி said...

:))))))))))))

மின்னுது மின்னல் said...

ரங்கமணினாலே அப்பாவி தானேனு உண்மையை எல்லாம் சொல்லப்படாது
//


:)))


:))))

சரவணகுமரன் said...

:-))

பூக்காதலன் said...

ஹையோ ஹையோ. இது என்ன சின்னப்புள்ளை தனமா இருக்கு
(ஆனாலும் உங்கள் பதிலை படித்து ஆபிசுன்னும் பார்க்காமல் கண்ணா பின்னானு சிரிச்சேன்)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இந்த தொடரை யார் வேணும்னாலும் தொடரலாம்//

மல்லு ஃபிகருக்கு-க்கு பத்து விரல் தான் இருக்கு!
இரண்டு விரல்ல இருக்குற நகத்தைக் கடிச்சிட்டாங்க ச்சின்னப் பையனும் வெட்டியும்!

இன்னும் எட்டு விரல்! இன்னும் எட்டு பேர் மட்டுமே தொடர முடியும் என்பதை அணியினருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்!

அம்பயர் குசும்பன் ஆணைப்படி
கேஆரெஸ்! :)

ஆயில்யன் said...

//எந்த விரலில் நகம் கடிக்க அதிகம் விரும்புவீர்கள்?
ஆபிஸ்ல பக்கத்து சீட்ல உக்கார்ந்திருக்க மல்லு ஃபிகர் விரல்ல இருக்குற நகங்களைத் தான். ///மிக
மிக
மிக
ரசித்தேன் !

:))

வெட்டிப்பயல் said...

// cheena (சீனா) said...
யோவ் - பக்கத்துலே இருக்கற மல்லு பிகரோட நகத்தக் கடிக்க ஆசயா - வாழ்க வாழ்க - கொலஸ்ட்ரால் உனக்குச் சாஸ்தி தான் - சாக்கிரத//

வாங்க சீனா சார்...

யாருக்கு கொலஸ்ட்ரால்னு சொல்றீங்க? இந்தப் பதிலை மெயில்ல அனுப்பன அப்பாவி ரங்க்ஸையா?

அவரைப் பார்த்தா அப்படியெல்லாம் தெரியலையே :)

வெட்டிப்பயல் said...

சென்ஷி, மின்னல், சரவணகுமரன்,
நன்றி ஹை!!!

வெட்டிப்பயல் said...

//பூக்காதலன் said...
ஹையோ ஹையோ. இது என்ன சின்னப்புள்ளை தனமா இருக்கு
(ஆனாலும் உங்கள் பதிலை படித்து ஆபிசுன்னும் பார்க்காமல் கண்ணா பின்னானு சிரிச்சேன்)//

மிக்க நன்றி பூக்காதலன். இதை அந்த அ.ரகிட்ட சொல்லிடறேன் :)

வெண்பூ said...

கலக்கல் வெட்டி... பதிவு போட்டு 40 நிமிசத்துல அதுக்கு பதில் பதிவா? ஒத்துக்குறேன், நீங்க வெட்டியாத்தான் இருக்கீங்கன்றத ஒத்துக்குறேன்.

வடகரை வேலன் said...

//வெண்பூ said...

கலக்கல் வெட்டி... பதிவு போட்டு 40 நிமிசத்துல அதுக்கு பதில் பதிவா? ஒத்துக்குறேன், நீங்க வெட்டியாத்தான் இருக்கீங்கன்றத ஒத்துக்குறேன்.//

சத்தமா ரிபிட்டேய்

வடகரை வேலன் said...

பதிலெல்லாம் சூப்பர் பாலாஜி.

கடைக்குட்டி said...

என்ன விபரீதம் இது ???

உங்களப் பாத்து எல்லாரும் தொடர்ந்துட்டா...

மங்களூர் சிவா said...

ஹா ஹா

மிக அருமை. ரசித்தேன்
:)))

புதுகைத் தென்றல் said...

வயிறு வலிக்க சிரிக்க வெச்சிட்டீங்க

ச்சின்னப் பையன் said...

ஹாஹாஹா...

நான் சொல்ல வந்ததை வெண்பூவே சொல்லிட்டாரு....

:-)))))))))))))))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

தேவைதான்.!

sam said...

ha ha ha he heheeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
//எந்த விரலில் நகம் கடிக்க அதிகம் விரும்புவீர்கள்?
ஆபிஸ்ல பக்கத்து சீட்ல உக்கார்ந்திருக்க மல்லு ஃபிகர் விரல்ல இருக்குற நகங்களைத் தான். ///மிக
மிக
மிக
ரசித்தேன் !

:))//

நன்றி ஆயில்ஸ் :)

வெட்டிப்பயல் said...

//வெண்பூ said...
கலக்கல் வெட்டி... பதிவு போட்டு 40 நிமிசத்துல அதுக்கு பதில் பதிவா? ஒத்துக்குறேன், நீங்க வெட்டியாத்தான் இருக்கீங்கன்றத ஒத்துக்குறேன்//

ஹி ஹி ஹி...

இந்த பதிவுக்கு பத்து நிமிஷம் போதுமே :)

வெட்டிப்பயல் said...

//வடகரை வேலன் said...
பதிலெல்லாம் சூப்பர் பாலாஜி.//


நன்றி அண்ணாச்சி :)

வெட்டிப்பயல் said...

//
கடைக்குட்டி said...
என்ன விபரீதம் இது ???

உங்களப் பாத்து எல்லாரும் தொடர்ந்துட்டா...//

ரசிக்கும்படியா தொடர்ந்தா என்ன விபரீதம் :)

வெட்டிப்பயல் said...

சிவாண்ணே, பு.தெ அக்கா, ச்சி.பை அண்ணே,
மிக்க நன்றி!!!

வெட்டிப்பயல் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
தேவைதான்.!

//

ஹி ஹி ஹி :)

வெட்டிப்பயல் said...

//sam said...
ha ha ha he heheeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

Tue Jun 16, 08:06:00 AM IST//

Sam,
Thx a lot :)

MayVee said...

mudiyala