முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!
எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.
க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா...
வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.
க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?
வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.
க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...
வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க.
க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?
வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.
க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?
வி: என்னங்கணா?
க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்...
வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.
க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?
வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)
க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!
வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி
க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே...
வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.
க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.
வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...
க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?
வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)
இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)
க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?
வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?
ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல
க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?
வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.
க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?
வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.
க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...
16 comments:
ithu oru meel pathivu. ஆனாலும் எந்தக் காலத்துல போட்டாலும் செட் ஆவுதே, அதுதான் இளைய தளபதி மருத்துவர் விஜய்
இந்த படம் எப்ப போட்டாலும் ஹிட் தான்
//விஜய் ரசிகர்கள் //
ஆமா.. யாரு அவங்க?? :))
சங்கத்தின் சார்பாக கண்டனங்களை தெரிவிக்கிறேன்.
இனி இப்படி எழிதினால் குருவி படத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்படுவீர்கள்.
//இனி இப்படி எழிதினால் குருவி படத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்படுவீர்கள்//
இதுக்கு புதை குழியில் தள்ளப்படுவீர்களன்னே சொல்லிரலாம்
நல்ல கற்பனை
விஜயின்
உயரத்தின் காரணத்தையும்
சறுக்களின் காரணத்தையும்
சரியாக யூகித்திருக்கிறீர்கள்
Kalakalaana pathivu...
:-))
//இனி இப்படி எழிதினால் குருவி படத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்படுவீர்கள்//
இதுக்கு புதை குழியில் தள்ளப்படுவீர்களன்னே சொல்லிரலாம் ////
:) :)
:) :) :)
எழுதப்பட்ட பதிவில் உள்ள சில வரிகள் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. இருந்தாலும் விஜயை வைத்து காமெடி பண்ணியதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.:) ஹிஹி..
இந்தியாவின் வருங்கால முதலமைச்சரை சீண்ட வேண்டாம்!:)
- அகில உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவி
//அகில உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவி//-யா???
டேய்... இப்படி எத்தன பேர்டா கெழம்பிறிக்கிங்க?
//இராம்/Raam said...
//விஜய் ரசிகர்கள் //
ஆமா.. யாரு அவங்க?? :))//
ஆம்ஸ்டர்டாம்-ல டாம் கட்டிக்கிட்டு இருக்குறாங்க! மருத்துவர் விஜய் தான் வாட்டர் இன்ஜினியர்! ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போட்டு விட்ட முன் அனுபவம் இருக்குப் பாருங்க! :))
சங்கத்துல இதான் மொத மீள்பதிவா இளா? ஓ மை காட்!
தேவ் அண்ணாச்சி...இதெல்லாம் தட்டிக் கேக்க மாட்டீங்களா?
Nallaya America Janathipathi Dr. Vijay Vazhga..............
Ethai Vida vera varthai ellai vazhtha............hi...hi...hi...
:):):)
அருமையா? ரூம் போட்டு யோசிப்பிங்களோ?..ம்ம்ம் நல்லா தான் இருக்குது ..... இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன் ...அன்புடன் விஜய் தீவிர ரசிகன் .....( ச்ச்சும்மா )...
Post a Comment