ஜே.கே.பாண்ட் நடிக்கும்
குவாட்டர் அடிச்ச ஷீ லேசு 007
சங்கத்தின் வாசலில் இப்படி ஒரு மெகா சைஸ் போஸ்ட்டர் ஓட்டப்பட்டது....அதிகாலை முதலே சங்கத்தின் முன்பு மக்கள் ( வாலிபக் கூட்டம் தான்) மொய்த்தது... வாலிபிகளின் வரவைக் கண்காணிக்க தனி படை அமைத்து அதன் தலைமையை பாண்டியே ஏற்று கொண்டது தனி பதிவி மேட்டர்.
ஜப்பான் சோனி டிவி... இங்கிலாந்து பிபிசி டிவி அமெரிக்கா சி.என்.என்... எல்லாமும் ஓபாமாவின் வெற்றியைக் கூட கொஞ்சம் ஓரம் கட்டி வைத்து விட்டு சங்கம் முன்னால் தவமாய் தவமிருந்தது...
சங்கத்தின் முதன்மை செய்தி தொடர்பாளர் பதவி ஏற்ற கப்பி கையில் லேப் டாப்போடு வந்து ஏரியாவை மேப் போட்டு அளந்துக் கொண்டிருந்தார்...
அண்ணன் வர்றார்...அண்ணன் வர்றார்.... சவுண்ட் பலமா ஒலிக்க...
சங்கத்தின் பின்னால் டிஜிட்டல் கட் அவுட்கள் டக்கு டக்குன்னு முளைக்க... வானவெடிகள் அதிர ஏரியாவே அல்லோலப்பட.... துண்டால் கூட்டத்தை விலக்கியப் படி தலக் கைப்பு முன்னால் வர... பின்னால் நாடே பாத்து பயங்கரமாய் மிரண்டு போயிருக்கும் அண்ணன் வீரத்தளபதி ஒரு ரொமான்டிக் லுக் விட்டப் படி வர்றார்...
பத்திரிக்கையாளர்களைக் கண்டவுடன் கண்டப்படி உணர்ச்சிவசப்பட்டு கரன்சிகளை கக்கத்தில் இருந்து வீரத்தளபதி நீட்ட பிரஸ் மீட் பிரஷ் ஜூஸோடு ஸ்டார்ட் ஆகிறது...
ஏய் கைப்புஸ் அந்த அமெரிக்கன் மேனுக்கு டாலர்ஸ்ல்ல செட்டில் பண்ணு... இங்கிலாண்ட் கைக்கு பவுண்ட்ல்ல அமவுண்ட் கொடுத்துரு... ஓ.கே.. என வீரத்தளபதி பொளந்துக் கட்டி பேட்டிக்கு தயார் ஆகிறார்...
வீரத்தளபதியின் வலது கையாக திகழும் நாகை சிவா... மைக் பிடித்து....
"என் பேர் வா..சிவா... என்ன எல்லாரும் செல்லமாப் புலின்னு கூப்பிடுவாங்க...
இப்போ நாம இங்கே வந்து இருக்கது.. உலகப் புகழ் நாயகன் அண்ணன் தென்னகத்தின் அல் பாசினோ.... "
"கொய்யாலே அண்ணன் கிட்டக் காசு வாங்கிட்டு அண்ணனை அல்பாயுசுனா சொல்லுற.... மவனே... "
- பொங்கி வந்த ரசிகரைத் தடுத்தக் கப்பி அல் பாச்சினோ ஒரு மாபெரும் நடிகர் என்பதை எடுத்துச் சொல்லி கீத்துக்கொட்டை எல்லாம் லேப் டாப்பில் காட்டி சமாதானப்படுத்துகிறார்...
அண்ணனோடு புது பட அறிவிப்பு மற்றும் ரசிகர்கள் சந்திப்பு தான் இன்றைய முக்கிய நிகழ்வு....
சிவா சொல்லிவிட்டு மேலும் தொடர்கிறார்...
படம் தயாரிக்கிறது சங்கம் பிலிம்ஸ் ...அதன் சார்பாக பைனான்சியர் கே.ஆர்.எஸ் மற்றும் ராயல் ராம்
படத்துக்கு இசை... இன்னும் முடிவாகல்ல... இயக்கம் நம்ம தேவ்... இன்னிக்கு இந்த விழாவுக்கு ரஜினி,கமல், கேப்டன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா., மம்முட்டி, மோகன்லால், சீரஞ்சிவி, நாகார்ஜுன், அமிதாப், சாருக்கான், சல்மான்கான், ஆமிர்கான், எல்லாரையும் கூப்பிட்டு யாருமே வாரதாக் காரணத்தாலே... பதிவுலகின் மிகப் பெரிய ஸ்டார் விவாஜியை முன்னிலையில் துவக்குகிறோம்...
சங்கம் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கம் வீரத்தளபதி ஜே.கே.பாண்ட் நடிக்கும் குவாட்டர் ஆப் ஷூ லேசு 007,,,, சிவா ஆரவாரமாய் அறிவிக்க .. விசில் பறக்கிறது....
அண்ணன் எழுந்து பாண்ட் தோரணையில் போஸ் கொடுக்க கேமராக்கள் க்ளிக் சத்தம் வானை கிழிக்கிறது...
பாண்ட் மீசிக் பின்னால் அதிர... அண்ணன் மைக் பிடிக்கிறார்.....
ம்ம்ம் படம் பத்தி பேசுறதுக்கு முன்னாடி உங்க கேள்விகளுக்கு அண்ணன் பதில் சொல்லுவார் என சிவா அறிவிக்க.... நிருபர்கள் மத்தியில் அக்கப்போராகிறது....
நீங்க அரசியலுக்கு வந்துட்டீங்களா? எப்போ வந்தீங்க..? ஏன் வந்தீங்க?
அரசியல்ல இருந்து வெளியே வருவீங்களா? எப்போ வருவீங்க?
இந்தப் படத்துல்ல உங்களுக்கு ஜோடி யார்? எத்தனை ஜோடி...?
இந்தப் படத்துல்ல நீங்க ஆடுற டான் ஸ் எந்த காட்டுல்ல.. சாரி நாட்டுல்ல ஆடப்படும் நடனம்?
நீங்க ஆலிவுட் நடிகர்களோடு ஆலிவுட்ல்ல நடிப்பீங்களா? அதுக்கு அவங்க ஒத்துக்கல்லன்னா என்னப் பண்ணுவீங்க?
உங்களுக்கு அடுத்து நீங்களே கொடுக்கப் போகும் மெகா பட்டம் என்ன?
கைப்புள்ளயை வச்சு காலத்தை ஓட்டிகிட்டிருந்த சங்கத்தை எம்புட்டு அமவுண்ட் கொடுத்து கரெக்ட் பண்ணீங்க...
கூடவே இருக்க இந்த ஆளு ( சிவா) ஒரு புலியாமே.. அப்படின்னா நீங்க புலி ஆதரவாளரா.....
அமெரிக்காவில்ல நியு யார்க்ல்ல உங்க படம் ரிலீஸ் ஆகாம தடுத்தார் ஜார்ஜ் புஷ் அப்படின்னு ஒரு குற்றசாட்டு இருக்கு... இப்போ புதிய அதிபர் ஒபாமா ஆட்சியிலே உங்க படம் அமெரிக்காவில்ல வருமா... அமெரிக்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா....
இந்த பரபரப்பான கேள்விகளுக்கு அண்ணன் என்ன பதில் சொல்லியிருப்பார்... ஆவல் அதிகமாகிறதா...
நாளைக்கு சேம் டைம் சேம் பதிவு வாங்க.... படிச்சுத் தெரிஞ்சு புரிஞ்சுப் பொழச்சுக்குங்க....
.......
23 comments:
எ கொ இ ச!
//கைப்புள்ளயை வச்சு காலத்தை ஓட்டிகிட்டிருந்த சங்கத்தை எம்புட்டு அமவுண்ட் கொடுத்து கரெக்ட் பண்ணீங்க...
கூடவே இருக்க இந்த ஆளு ( சிவா) ஒரு புலியாமே.. அப்படின்னா நீங்க புலி ஆதரவாளரா.///
சூப்பரூ :)))
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்-ண்ணே, தெரிஞ்சாகணும்!
இந்த மாசம் அட்லாஸ் சீங்கம் யாரு?
தேவ்-ஆ? இல்லை இளா-வா?
மாத்தி மாத்தி ஆடறாங்களேப்பா! :))
//அண்ணன் தென்னகத்தின் அல் பாசினோ....
கொய்யாலே அண்ணன் கிட்டக் காசு வாங்கிட்டு அண்ணனை அல்பாயுசுனா சொல்லுற.... மவனே//
ஹா ஹா ஹா
நேசமணிப் பொன்னையா தான் ஞாபகத்துக்கு வராரு! :))
//அதன் சார்பாக பைனான்சியர் கே.ஆர்.எஸ் மற்றும் ராயல் ராம்//
அய்யகோ, இந்தக் கொடுமையைக் கேப்பாரு யாருமில்லையா?
ராமூ...இந்தப் பின்னூட்டத்தைத் தந்தியா பாவிச்சி,
சிங்கையில்
எங்கிருந்தாலும்,
நொங்கெடுக்க,
இங்கே வரவும்!
//கைப்புள்ளயை வச்சு காலத்தை ஓட்டிகிட்டிருந்த சங்கத்தை எம்புட்டு அமவுண்ட் கொடுத்து கரெக்ட் பண்ணீங்க...//
சத்யமேவ ஜெயதே!
வாய்மையே வெல்லும்!
Change has come - By Obama & Ila :)))
//கூடவே இருக்க இந்த ஆளு ( சிவா) ஒரு புலியாமே.. அப்படின்னா நீங்க புலி ஆதரவாளரா.....//
பேசாம நம்ம புலியை இயக்குனரா போட்டா என்னா? அமீர், சீமான் ரேஞ்சுக்கு சங்கத்தைத் தூக்கீற மாட்டாரு? :))
சூப்பரப்பு !!!
ஜேம்ஸ் பாண்டு வேடத்தில் நடித்து அண்டசராசரங்களையும் டரியலாக்கும் அண்ணன் வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாள்க!!
இதில் வீரத்தளபதி பாண்ட் வேடத்தில்தான் நடிக்கிறார். பாண்டா வேடத்தில் அல்ல! எதிரிகள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்!
//இதில் வீரத்தளபதி பாண்ட் வேடத்தில்தான் நடிக்கிறார். பாண்டா வேடத்தில் அல்ல! எதிரிகள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்!//
சூப்பரப்பூ :)
//சங்கத்தின் பின்னால் டிஜிட்டல் கட் அவுட்கள் டக்கு டக்குன்னு முளைக்க... வானவெடிகள் அதிர ஏரியாவே அல்லோலப்பட.... துண்டால் கூட்டத்தை விலக்கியப் படி தலக் கைப்பு முன்னால் வர... //
கடசில துண்டு வீசற நெலையில இருக்கு நம்ம நெலமை.
:(
//""கொய்யாலே அண்ணன் கிட்டக் காசு வாங்கிட்டு அண்ணனை அல்பாயுசுனா சொல்லுற.... மவனே... " - //
:)))))
//இதில் வீரத்தளபதி பாண்ட் வேடத்தில்தான் நடிக்கிறார். பாண்டா வேடத்தில் அல்ல//
:))
//எ கொ இ ச!//
என்ன கொடுமையா இது? பின் நவீனத்துவம் புரியாத நமக்கு பின்னூட்ட நவீனத்துவம் வேறையா? ஆராவது எ கொ இ ச! க்கு அர்த்தன் தெரிஞ்சா சொல்லுங்கப்பு
இன்னும் பதில் வரல!!
எ கொ இ ச!
ரிப்பீட்டேய்....
இலாவுக்காக.....
என்ன கொடுமை இது சரவணண்....
இஎஇ ;)
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அதன் சார்பாக பைனான்சியர் கே.ஆர்.எஸ் மற்றும் ராயல் ராம்//
அய்யகோ, இந்தக் கொடுமையைக் கேப்பாரு யாருமில்லையா?
ராமூ...இந்தப் பின்னூட்டத்தைத் தந்தியா பாவிச்சி,
சிங்கையில்
எங்கிருந்தாலும்,
நொங்கெடுக்க,
இங்கே வரவும்!//
விவாஜி'க்கு வந்த பணத்தை எல்லாத்தையும் சங்கத்து சூவிஸ் பேங்க் அக்கவுண்ட்'லே போட்டு வைச்சிருந்தேன்.....
எங்கடா தீடிரென்னு காணாமே போச்சு'ன்னு பார்த்தா, "இப்போ போட்ட சோமாஸ்"ஐ வைச்சு படமெடுக்கதான் அது வெளியே வந்துருக்கு போலே... :(
//இதில் வீரத்தளபதி பாண்ட் வேடத்தில்தான் நடிக்கிறார். பாண்டா வேடத்தில் அல்ல! எதிரிகள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்!//
:))))))))))))))))))
வாழ்க வீரத்தளபதி.... !!
// ஜேம்ஸ் பாண்டு வேடத்தில் நடித்து அண்டசராசரங்களையும் டரியலாக்கும் அண்ணன் வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாள்க!! //
வாள்க.... வால்க.... :)))))))))
சூப்பரப்பு !!!
Photo Super
Post a Comment