தல தர தர'ன்னு இழுந்துட்டு வந்த நிஜார் எக்ஸ்பிரஸ் என்னோட ஸ்டேசனிலே ஆணிகளெனும் அவஸ்தை புயலினால் தடம் புரண்டுவிட்டது, தடம் நிமிர்த்தி ட்ராக்'க்கு இழுந்துட்டு வந்தாச்சு.
டவுசர்(aka) நிஜார் அணிந்த காலங்களில் நாம் புரிந்த அக்கப்போருகளை சரித்தரபக்கங்களாக ஆவணப்படுத்தும் சுயமுயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.... (ஹி ஹி)
அந்த சரித்திரத்தை நீங்கள் அறிந்துக்கொள்ள உங்களின் காலச்சக்கரத்தை சென்ற நூற்றாண்டின் இறுதிகளில் சுழற்றி(டிஜிட்டல் கடிகாரமாயிருந்தாலும்) வைக்கவேண்டும், ச(த)ரித்தர நாயகனான அவனும், அவனின் உடன்பிறப்பான தமக்கையாரும் பள்ளி முடிந்து வந்ததும், விளையாட செல்கிறோம் என அவர்கள் வீட்டில் அனுமதி வாங்கி வந்து, அவர்கள் குடியிருந்த தெருவில் தங்கியிருந்த சக வானராங்களுடன் அடித்த கொட்டத்தை எழுதி வைக்க நூறு அல்ல நூறாயிரம் பக்கங்கள் கொண்ட ஏடுகள் தேவை.
சரித்திரநாயகனின் வீடு விசாலமான தெருவில் அமைந்து விட்டதால் அதற்கடுத்த மற்ற தெருக்கள் எல்லாம் குறுகலானது எனபதினால் மற்ற தெரு வானாரங்களும், ஒரே தெருவில் கூடிதான் விளையாடுவார்கள். அந்த விசாலமான தெருவில் அனைத்து வீடுகளும் உயரமான வாசல் அதாவது திண்ணை இருப்பதினால், முதலில் எல்லாரும் ஆரம்பித்து வைப்பது, "கல்லா - மண்ணா" விளையாட்டுதான். பத்து பதினைந்து பேரு கூடி சாட்-பூட் த்ரி போட்டு கடைசியாக மிச்சமாக இருப்பவன்/ள் தவிர அனைவரும் திண்ணையில் ஏறி நின்னு அவன்/ள்'க்கு பழிப்பு காட்டுவார்கள், யாராவது கிழே வந்துவிடுவார்கள் என அவன்/ள்'ம் மிகவும் பிரயத்தன படுவான்/ள். அவன்/ள்'ஐ இவர்கள் வெறுப்பேத்த இந்த திண்ணையிலிருந்து அந்த திண்ணைக்கு தாவி குதிப்பார்கள், தாவி குதிப்பது என்பது ஒரு ஆளாக செய்வதில்லை, மொத்தமாக இந்த திண்ணையிலிருந்து ரெண்டு பேரும், அந்த திண்ணையிருந்து ரெண்டு பேரும் இண்டர்சேன்ஞ் பண்ணி அவனை/ளை போட்டு குழப்பிவிடுவார்கள். அதிலும் கொஞ்சம் சோதா'வான ஒருத்தன் இண்டர்-சேன்ஞ் செய்யும்பொழுது மாட்டிக்கும் பொழுது அவன்/ள் அவுட்.. அப்புறம் அதற்கடுத்து அவர்களிடமிருந்து ஆட்டம் மறுபடியும் தொடங்கும், எப்பிடியும் அவர்களிடம் மாட்டுவது நமது சரித்தரநாயகன் என்பது உள்ளங்கை மாங்கனி,(மங்காணி தான்).
அவன் மண்ணுக்கு வந்துவிட்டதால், நமது சரித்தரநாயகன் சோதா'பய என்பதினாலும் ஓடிச்சென்று திண்ணை மாற்றுபவர்கள் மெதுவாக நடந்துச்சென்று திண்ணையில் ஏறி நின்று வெறுப்பேத்துவார்கள், இவனும் தன்னால் இயன்றவரை முயன்று பார்த்து தன்னுடைய தன்மானம் பெண்ணினத்துக்கு முன்னால் தலைகுனியும் அவலத்துக்கு உள்ளாக்கப்பட்டதை நினைத்து தன்னுடைய ஆணாதிக்கத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவும், தன்மான ஆணினத்தை உசுப்பேத்துவிதமாகவும், "டேய் பசங்களா, நாமே எதுக்குடா பொம்புள்ளபிள்ளக கூட வெளாயாடாணும்? நாமே போயி பச்சக்குதிர தாண்டி வெளையாடுவோமி"ன்னு சங்கத்தை கலைத்து இனம் இனத்தோடு சேர்த்தே தொலையுமின்னு இருக்கிற எல்லாபேத்தயும் உசுப்பேத்தி வைத்து, அவர்கள் எல்லாரும் வேறுவழி இல்லாமல் பச்சக்குதிர வெளயாட ஆரம்பிப்பார்கள். நிரகாரிக்கபட்ட இனமான அந்த பகுதியினர் "போங்கடா வெளக்கெண்ணெய்களா, என ரோட்டில் கவருமெண்ட் போட்டு வைத்த நிரத்தர கோடுகளால் அமைந்த மைதானத்தில் பாண்டியாடுவார்கள். அது எப்பிடின்னா சின்ன சில்லாக்கு எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு வானத்தை பார்த்துக்கொண்டே, அந்த கோடு'ஐ மிதிக்காமால் காலை எட்டிவைச்சு நடந்து அடுத்த எல்கைக்கு போயி சேரவேண்டும், அந்த விளையாட்டு ஆரம்பிக்கும் பொழுதே சரித்திரநாயகனின் இனத்தார்கள் இதெல்லாம் பொண்டுக வெளையாட்டு, அலுங்கமே குலுங்கமே வெளயாடுதுக'ன்னு எளக்கார அறிக்கைவிட்டு, வழக்கம்போலே சாட்-பூட் த்ரி'யில் தோற்கும் நமது சரித்திரநாயகனின முதுகில் ஏறி குதிப்பார்கள், சிக்கினது நம்ம சரித்திரநாயகன என்பதினால் தெருவில் போகும் கிழ கட்டைக்கூட ஒரு ஜம்பு அடித்துவிட்டு செல்லும். அனைவரும் பச்சகுதிர தாண்டுவதற்காக, தன்னுடைய முதுகை கவுத்திப்போட்ட 'U'வாக வளைத்துகாட்டியவன் தன்னுடய தாண்டும் முறை வருவதற்குள் சோர்ந்துவிடுவான், கிடைத்தது லாபமின்னு மற்றவர்களும் செவனே'னு உக்கார்ந்துவிடுவார்கள். இப்போழுது விளம்பர இடைவேளை, அல்லது டிரிங்ஸ் பிரேக்.
வெளையாடி வெளையாடி களைந்து போனவர்கள் அவரவர் வீட்டிற்கு சென்று தண்ணிக்குடிக்க செல்லும் போது, அம்மா "டேய் பசங்களா, இருட்டுற பொழுதாச்சு, வெளாயாண்டது போதும் வந்து வீட்டுப்பாடத்தை எழுதிட்டு படிங்க" என கட்டளை பிறப்பிப்பார். இருட்டுவதற்கு இன்னும் ரெண்டு மணி நேரமிருக்கிற மிதப்பில் அடுத்தக்கட்ட விளையாட்டுப் போட்டிகள் அந்த தெருவான மைதானத்தில் நடக்க ஆரம்பிக்கும். இப்போழுது பம்பரம் சுழற்றுவது. ஆணினம் மட்டும் ஆடும் ஆட்டமெனில் அது பெரும்பாலும் "ஆக்கர்" வகையறவாகே இருக்கும், அனைவரும் சாட்டைய பம்பரத்தில் சுற்றி ரெடி 1 2 3 சொல்லியதும் சுழற்றவிடுவார்கள், அபேஸ் சொல்லும் கணநேரத்தை பம்பரமும், அதன் எஜமானரும் சரியாக பயன்படுத்திக்கொள்வார்கள். எப்பிடியெனில் பம்பரத்தை சுழற்றிவிட்ட சமயத்தில் சரியாக எல்லாரும் "அபீட்" சொன்னதும் எஜமான விசுவாசத்தின் கட்டமைப்புகளின் தக்கநிலையான கிழ்படிதல் மற்றும் சொல்பேச்சு கேட்டல் ஆகிய காரணிகளை பொறுத்து அந்த பம்பரம் அவர்களின் கைகளில் தஞ்சம் புகுந்துக்கொள்ளும். இவ்விடத்தில் உங்களால் எளிதாக யூகித்துக்கொள்ளும் வகையில் நமது சரித்திரநாயகனின் சொல்லிற்கு கீழ்படியாமல் அந்த பாழாய்ப்போன பம்பரம் கிழே இருந்துக்கொண்டு புவியுர்ப்பு சக்திக்கு என்னால் எதிர்ப்பு சக்தி கிடையாது என காந்திவழியில் அறப்போராட்டத்தில் ஈடுபடும். அப்புறமென்ன எல்லாரும் நமது சரித்திர நாயகனின் பம்பரத்தை வட்டத்திற்குள் வைத்து செம சார்ப் "ஆக்கர்" வைப்பார்கள். சில பல என இந்த பேருலகத்தில் சூழ்ந்த எதிரிகளால் அந்த அருமை கொண்டை வைத்த பம்பரம் ரெண்டு முன்று பிளவாக பிளக்கப்பட்டு சரித்திரநாயகனின் வரலாற்று பக்கங்களில் கரும்புள்ளிகளின் பங்கில் ஒன்றாய் பல்லுளிக்கும்.
மாலைகருக்கலின் இறுதியில் வசிறி கம்போடு அம்மா வர எல்லாரும் ஹெ.. ஹெ...ன்னு கத்திக்கொண்டே வீடு என்னும் கூடு அடைந்து வீட்டுபாடங்களும், மறுநாள் ஒப்பிக்க வேண்டிய மனபாடங்களுக்கும் படிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் வரு(று)புறுத்தல்கள் காரணமாக நமது சரித்திரநாயகனின் நிஜார் எக்ஸ்பிரஸ் அப்பிடியே நிறைவடைந்தது...
இன்னும் எழுத வேண்டியது நிறைய இருந்தாலும் தடம் புரண்ட தண்டவாளத்தை சரி பண்ணி எக்ஸ்பிரஸ் டிரெயின் ஓடவைக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே கண்ணுக்கு தெரிந்ததால் சரியாக கொசுவர்த்தி சுருளை சுற்றுவதில் கொஞ்சகாணு சிரமம்... ஆன விடமாட்டோமில்ல.... மிச்சமிருக்கிற கதை எல்லாத்தையும் வலையேத்தாமா விடமாட்டோமில்லே..... :))
நான் வந்து திரும்ப எக்ஸ்பிரஸ் ஓட்டிட்டு போறவரைக்கும் வலையுலக விவசாயி'யுடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறேன்.
முதல் நிறுத்தம் :- சென்னை
இரண்டாம் நிறுத்தம்:- மதுரை
முன்றாம் நிறுத்தம்:- பவானி
17 comments:
மீ த பர்ஸ்டூ :))
, "கல்லா - மண்ணா" விளையாட்டுதான். பத்து பதினைந்து பேரு கூடி சாட்-பூட் த்ரி போட்டு கடைசியாக மிச்சமாக இருப்பவன்/
அட நம்ம டிராக்லயும் எக்ஸ்பிரஸ் போயிருக்கா?
சரித்தர நாயகன் கூட விளையாண்ட சரித்திர நாயகிகள் எல்லாம் இப்ப எங்க இருக்காங்கன்னு ஒரு சின்ன மெயில் ஓட்டலாமே! :))))
என்னது என்னோட கதையா ! கிளியெல்லாம் பறந்துப்போச்சு! :)
//நான் வந்து திரும்ப எக்ஸ்பிரஸ் ஓட்டிட்டு போறவரைக்கும் வலையுலக விவசாயி'யுடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறேன்./
டிராக்டர்ல வந்தாலும் ஸ்பீடாத்தான் வருவாருன்னு எதிர்பார்த்து இந்த ஸ்டேஷன்ல உக்காந்து ரெஸ்ட் எடுக்கறேன் சீக்கிரம் வரணும்!
me the fifth
மீ த சிக்ஸ்து :))
:))
சரித்திர நாயகனுக்கு டங்குவார் கிழிஞ்சிருக்கு :)))
:)
மீ எய்த்து!
//சரித்திர நாயகனுக்கு டங்குவார் கிழிஞ்சிருக்கு//
ரிப்பீட்டு!
//சரித்தர நாயகன் கூட விளையாண்ட சரித்திர நாயகிகள் எல்லாம் இப்ப எங்க இருக்காங்கன்னு ஒரு சின்ன மெயில் ஓட்டலாமே!//
இதை நான் வழி மொழிகிறேன்!
எக்ஸ்பெக்டெட் ரிப்ளை!
இராம் : "தள! ஏன் இந்த கொலை வெறி?"
தடம் புரண்டாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்-"ராம்"-ஆதித்தன் வாழ்க! வாழ்க! :)
//எக்ஸ்பெக்டெட் ரிப்ளை!
இராம் : "தள! ஏன் இந்த கொலை வெறி?"//
சிபி அண்ணா
அப்போ அன்எக்ஸ்பெக்டெட் ரிப்ளை?
23 ம் புலிகேசியை விட இந்த சரித்திர நாயகன் நிறைய பட்டிருப்பார் போலவே...:)
மீ த பர்ஸ்டூ'லே எய்த் வரைக்கும் கமெண்ட் போட்டவங்களுக்கு நன்றி..
பதிவை படிச்சீங்களா??
ஆயில்ஸ்,
அவங்க எல்லாம் இப்போ ஆன்டி'யா ஆகிட்டாங்க.... :))
கவுஜாயினி,
நன்னி.
விவாஜி,
உங்க டிரெயின்'லே சீக்கிரம் ஏறி ஒக்காருங்க... :)
கப்பிநிலவா,
அந்த அருமை பெருமைகளை எடுத்துயம்பினதுக்கு தானே இந்த பதிவு!!!
தள,
ரொம்ப முக்கியம்... !!! :)
சிக்மா சித்தர்,
உங்களுக்கு சீக்கிரமே டெவில் ஷோ போடனுமே... :)
முத்துக்கா,
அம்புட்டு பெரிய ஆளா நம்ம சரித்திரநாயகன்!!
//
எப்பிடியும் அவர்களிடம் மாட்டுவது நமது சரித்தரநாயகன் என்பது உள்ளங்கை மாங்கனி,(மங்காணி தான்).
//
இந்த சரித்திர நாயகன் பயபுள்ளைக எல்லாம் ஓரே மாதிரித்தான் இருப்யாய்ங்க போல
ம்ம்ம் எக்ஸ்பிரஸ் எடுப்பதற்குள் ரெட் சிக்னல் போட்டு நிறுத்திட்டீயே ராசா.. எதோ மறுபடியும் தொடருவேன்னு வாய்தா வாங்கியிருக்க சோ அதுக்கு வெயிட்டீங்... நமக்கு இப்போவே எக்ஸ்பிரஸ்ல்ல டிக்கெட் சொல்லிக்குறேன் ராமு
Post a Comment