Thursday, September 11, 2008

நலம் நலமறிய ஆவல்...

காதல் கோட்டை படத்தில் ஒரு அருமையான பாடல் 'நலம் நலமறிய ஆவல்...'. இது காதலர்கள் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி பாடறது.

அதே அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு அறுபது நாள் ஆனப்பிறகு (என்ன வெட்டி?... முப்பது நாள் போதுமா...) பாடினா எப்படி இருக்கும்றதுதான் இந்த கற்பனைப் பாடல்.

இது ஒரு ஜாலியான கற்பனைதான். அந்த பாட்டை கொலை செய்யும் முயற்சி இல்லை. அதனாலே, பின்வர்ற பாட்டை அதே மெட்டுலெ பாடி, எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

நம்ம ஹீரோ தனியா வெளிநாட்டுக்கு வந்துடறார். ஹீரோயின் இந்தியாவிலே....

இன்னொரு முக்கியமான விஷயம். ஒரிஜினல் பாட்டுலே - கேள்விகள் ஹீரோ கேக்கறமாதிரியும், பதில்கள் ஹீரோயின் சொல்றாமாதிரியும் இருக்கும். இங்கே அது அப்படியே உல்டா.

இப்போ பாட்டு....

நலம்.. நலமறிய ஆவல்... உன் நலம் நலமறிய ஆஆவல்...

நான்இங்கு சுகமே.... நீ அங்கு சுகமா?... ( நான்)

தீண்டவரும் காற்றினையே இங்கனுப்புங்க...... வேர்க்கிறதே...
ஏற்கனவே சம்மர் இங்கே... வெயில் வேறே மண்டையை பொளக்கிறதே...

கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிவெக்கட்டா?
கப்பினில் போஸ்ட்மேனும் மயங்கிடுவாரே...

இரவினில் கனவுகள் தினம் தொல்லையா...
மப்பினில் நினைவில்லை கனவுகளே...ஏஏஏ......... ( நலம்)


கோயிலிலே நான் தொழுதேன்... கோவைக்கு நீங்க திரும்பிடவே...
கோடி முறை நான் தொழுதேன்... Contract Renew ஆகிடவே......

என் முகம் நீங்க பார்க்க கடிதமேதானா....
ஊர்லே வெச்சி பார்த்ததே... பயம் போகலியே....

நிழற்படம் அனுப்பட்டா, என் உயிரே...ஏ..?
திருஷ்டி பொம்மை இருக்குது... என்கிட்டேயே..... ( நலம்)

--------

இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடாமே தப்பிக்கறவங்கல்லாம், மேலே சொன்ன கருத்தை வழிமொழியறாங்கன்னு நான் தெரிஞ்சிப்பேன். ரொம்ப ரொம்ப நன்றி...


16 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))...

விஜய் ஆனந்த் said...

// இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடாமே தப்பிக்கறவங்கல்லாம், மேலே சொன்ன கருத்தை வழிமொழியறாங்கன்னு நான் தெரிஞ்சிப்பேன். ரொம்ப ரொம்ப நன்றி... //

நா போட்டுட்டேன்பா..

மீ த எஸ்கேப்பு...

Anonymous said...

//கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிவெக்கட்டா?
கப்பினில் போஸ்ட்மேனும் மயங்கிடுவாரே...//

கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடவா? கப்பினில் போஸ்ட்மேனும் மயங்கிடவா?

இப்படி மாத்துங்க இன்னும் நல்லா இருக்கும்.

Anonymous said...

//இன்னொரு முக்கியமான விஷயம். ஒரிஜினல் பாட்டுலே - கேள்விகள் ஹீரோ கேக்கறமாதிரியும், பதில்கள் ஹீரோயின் சொல்றாமாதிரியும் இருக்கும். இங்கே அது அப்படியே உல்டா.//

இந்த ஒரு பாரா தேவையேயில்ல.

கல்யாணம் ஆனாலே கேள்வி கேகுற உரிமையும் போயிடுதே.

பரிசல்காரன் said...

ச்சின்னப்பையன்..

உங்க தங்கமணி உங்க கூடவே இருக்கறது ஏன்னு இப்போதான் புரியுது.

நம்பமுடியாதுய்யா உங்களையெல்லாம்..

சின்னப் பையன் said...

வாங்க விஜய் -> அடடா.. கரெக்டா பின் போட்டு எஸ்கேப்பாயிட்டீங்களா.... :-))

வாங்க வேலன் ஐயா -> அவ்வ்வ்வ்.... சரியா சொன்னீங்க.... :-)))

வாங்க பரிசல் -> ஹிஹி... இதெல்லாம் எப்படி தெரியுது உங்களுக்கு?????

புதுகை.அப்துல்லா said...

பாட்டெல்லாம் எழுதுனது சரி. டெடிகேட் பண்ண மறந்துட்டீங்களே?

சாங் டெடிகேட்டட் டு மங்களூர் சிவா

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

சூப்பர் தல !

Kanchana Radhakrishnan said...

ரித்திஷின் அடுத்த படத்தில் பாடலாசிரியராக நீங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்

rapp said...

:):):)

குடுகுடுப்பை said...

இந்த பாட்டை தொடர்ந்து பாடும்படி , H4, L2 மாதிரி விசா எல்லாம் தடை செய்ய மாட்டாங்களா.

H1,L1,GC மனைவிகளை அடைந்த கணவர்களுக்கு கவிஞர் புதிய பாடல் ஒன்றை தருவார் என நம்புவோம்

சின்னப் பையன் said...

வாங்க அப்துல்லா -> அச்சச்சோ... பாவங்க தல.... இன்னிக்குத்தான் கல்யாணமே ஆச்சு...

வாங்க பாஸ்கர் -> நன்றி...

வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> அவ்வ்வ். ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு????????

சின்னப் பையன் said...

வாங்க ராப் -> அமைதியா சிரித்ததற்கு நன்றி...

வாங்க குடுகுடுப்பை -> அவ்வ்வ். நான் வரலை இந்த விளையாட்டுக்கு.... என்னெ விட்ருங்கோ......

வால்பையன் said...

உங்க கஷ்டம் புரியுது

M.Rishan Shareef said...

ஹா ஹா ஹா
யார்க்கிட்டையாவது செமத்தியா அடிவாங்கப் போறீங்க நீங்க :D

சின்னப் பையன் said...

வாங்க வால் -> ஒரு ஆம்பளயோட மனசு இன்னொரு ஆம்பளக்குத்தான் தெரியும்னு சொல்றது சரிதாங்க...

வாங்க ரிஷான் -> ஏற்கனவே ஒரு தடவை மாட்டிக்கிட்டது போறாதுன்றீங்களா???? ஆஆஆ....