ஸ்பானிஷ் மொழியைப் படிக்க வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஸ்பானிஷில் ஒரு பக்கம், இரண்டு பக்கம், நாலு பக்கம் எழுதும் அளவுக்கு மொழி கைவசப்படும்.
சமீபத்தில் இதை படித்தவுடனேயே, டக்கென்று கொசுவர்த்தி கொளுத்தி விட்டேன்.
நானும் 'அந்த' மொழியை படிக்க/பேச எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும். தினமும் போவோர் வருவோரிடமெல்லாம் 'அந்த' மொழி தெரியுமா என்று கேட்டு, அவரிடத்தில் பேசுவேன். சரியாக இரண்டே இரண்டு வருடம், 'அந்த' மொழியில் தேர்ச்சி பெற்றேன். என் திறமையைக் கண்டு என் பெற்றோரும், நண்பர்களும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
சரி சரி.. பில்டப் போதும்... 'அந்த' மொழி எந்த மொழி என்று கேட்பவர்கள் சிறிது கீழே படிக்கவும்....
கணிணிக்கு கீழேயல்ல... கணிணித்திரையிலேயே கீழே....
...கீழே...
.. இன்னும் கொஞ்சம்...
... ப்ளீஸ்...
அந்த மொழி : தமிழ்
கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது என் வயது: இரண்டு
14 comments:
நீங்க நல்லாவே
இருங்க
இப்படியா கடிக்கிறது
நீங்க ரெண்டு வயசில கத்துகிட்ட அதே தமிழ்ல உங்கள கெட்ட வார்த்தை சொல்லி திட்டுனா என்னாங்குறேன்??? :))))
:)
சாரு இத பார்க்கனும் ஆண்டவா.. அவரு படிச்சா நான் மொட்டை போட்டுக்கிறேன் கடவுளே..
கடவுள் : என்ன தம்பி நீ, தமிழ்ல எழுதிட்டு சாரு படிக்கணும்னு வேண்டிக்கிற. தமிழ்ல அவரு படிக்கிற ஒரே ஆளு ஜெமோ...
சூப்பரப்பு..
:-))))
சூப்பர்:):):)
//சாரு இத பார்க்கனும் ஆண்டவா.. அவரு படிச்சா நான் மொட்டை போட்டுக்கிறேன் கடவுளே..
கடவுள் : என்ன தம்பி நீ, தமிழ்ல எழுதிட்டு சாரு படிக்கணும்னு வேண்டிக்கிற. தமிழ்ல அவரு படிக்கிற ஒரே ஆளு ஜெமோ...//
:):):)
வாங்க வால் -> நான் நல்லா இருக்க வாழ்த்தியதற்கு நன்றிங்க.... :-))
வாங்க வெண்பூ -> ஓ. நான் சொல்ல மறந்துட்டேன். அந்த கெட்ட வார்த்தைகளையும் நான் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த வயசுலே இல்லே.... ஹிஹி...
வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி -> நன்றி...
வாங்க நானும் ஒருவன் -> ஹாஹா....:-))
வாங்க கார்க்கி -> நன்றி...
வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> நன்றி...
வாங்க ராப் -> நன்றி...
பெயர்ப் பொருத்தத்தை மெய்ப்பிக்கிறீர்கள்!
மிக்க நன்றி சிக்கிமுக்கி....
?!
சூப்பர் சூப்பர்.
நல்லா இருந்தது. மிகவும் ரசிச்சேன்.
Post a Comment