வாங்க வாங்க...
கண்ணாடியப் பார்க்கமுன்னாடி ஒரு உண்மைக்கதை சொல்லப் போறேன்..என் வாழ்க்கையில நடந்தது தாங்க..
எனக்குத் தெரிஞ்ச வீட்ல 19வயசுப்பையன் ஒருத்தன் இருந்தான்.ரொம்ப வாலுப்பையன்.. (எலே உன்ன மாதிரியா? ன்னெல்லாம் கேட்கப்படாது)
சும்மா ஊர் சுத்துறதும்,யார் தோட்டத்துலயாவது இருக்குற காய்,பழங்களுக்குக் கண்ணு வைக்கிறதும்,ரோட்ல போற பொண்ணுங்கள லுக்கு விடுறதுமாவே சுத்திட்டிருந்தான்..
(சரி அதுக்கென்ன.. மேல சொல்லுடா வேலை இருக்கில்லன்னு கத்தாதீங்க..சொல்றேன் சொல்றேன்..)
அந்தப்பையன ஒருநாள் அப்பா கண்டபடி திட்டிப்புட்டாரு..
"சும்மா சும்மா இப்படித் தின்னுக்கிட்டே ஊர் சுத்திட்டு இருக்கியே..வீட்ல உருப்படியா ஒண்ணுமே செய்யமாட்டியா?"ன்னு சொல்லிட்டு வெளியே போயிட்டார்..
நம்ம பையனுக்கு ரொம்ப கவலையாப் போயிடுச்சி..அம்மா கூட வெளியே போயிருந்தார்.
இவரு கதவை மூடிட்டு,ஷேவிங் பிலேட் இருக்கில்லையா?அதைக் கையில எடுத்துக்கிட்டு.. (இதுக்கு மேல இரக்க மனசுள்ளவங்க படிக்காதீங்க)
பையனை ரொம்பத் திட்டிட்டோமேன்னு அப்பாவுக்கு ரொம்பக் கவலையாப் போயிடுச்சு.
வெளியே போனவரு சீக்கிரமா வீட்டுக்கு வந்து பார்த்து அலறிட்டாரு..
"எதுக்குடா இப்படிப் பண்ணினே?"ன்னு பையன்கிட்ட கேட்டா,
"இதுதான் வீட்ல வந்து ரொம்பத் தொந்தரவு பண்ணிட்டிருக்கில்ல.சமையலறையில எல்லாத்தையும் தட்டிவிடுது..எல்லாத்துலயும் வாய் வைக்குது..அதான்.."
அப்படீன்னு சொல்லியிருக்கான் பையன்..
அப்படி என்னதான் பண்ணியிருக்கான்னு கேட்டீங்கன்னா..அதுக்கு தனியா ஒரு கதை சொல்லணும்..
சரி சுருக்கமா சொல்றேன்..
கொஞ்சநாளாவே ஒரு பூனை வந்து அவங்க வீட்டுல வாலாட்டிட்டிருந்துச்சு.நம்ம பையன் என்ன பண்ணான்னா அந்தப் பூனையைப் புடிச்சுக் கட்டி உடம்பு பூரா ஷேவ் பண்ணிட்டான்..இனி அது ஜென்மத்துக்கும் அந்தப் பூனை அந்த வீட்டை எட்டிப்பார்க்காதுன்னு நினைக்கிறேன்..
இப்போ இந்தக் கதையை எதுக்குச் சொல்றேன்னா ..இந்தக் கண்ணாடியை நீங்க பார்க்கமுன்னாடி உங்க மனசைக் கொஞ்சம் திடப்படுத்தத்தேன்...
பாருங்க..
14 comments:
:P
அடக்கடவுளே.. பாவங்க அந்தப் பூனையும் கொரங்கும்....
அதிகமாகப் பணிச் சுமையற்ற ஒரு சிகை லங்கார நிபுணர் செய்திட்ட வேலை போல அல்லவா இஃது உள்ளது?
//அதிகமாகப் பணிச் சுமையற்ற ஒரு சிகை லங்கார நிபுணர் செய்திட்ட வேலை போல அல்லவா இஃது உள்ளது?
//
ரிப்பீட்டேய்ய்ய்....
???:)
முடியல...
Nice :-)
/
எனக்குத் தெரிஞ்ச வீட்ல 19வயசுப்பையன் ஒருத்தன் இருந்தான்.ரொம்ப வாலுப்பையன்.. (எலே உன்ன மாதிரியா? ன்னெல்லாம் கேட்கப்படாது)
/
உன்னை மாதிரியான்னு எல்லாம் கேக்க மாட்டோம்யா ஏன்னா இது உன்கதைன்னு எங்களுக்குதான் தெரியுமே!!
:)))))
//அடக்கடவுளே.. பாவங்க அந்தப் பூனையும் கொரங்கும்....//
வாங்க ஜிரா :)
பூனை பாவம் ஓகே..
மற்றப்பெரியவரு நீங்க தானே..எதுக்கு பாவம்னெல்லாம் சொல்றீங்க ? :P
//அதிகமாகப் பணிச் சுமையற்ற ஒரு சிகை லங்கார நிபுணர் செய்திட்ட வேலை போல அல்லவா இஃது உள்ளது? //
லதானந்த் அங்கிள்..
பின்னவீனத்துவத்துல பின்னூட்டமிட்ட முதல் ஆள் நீங்கதான் பா :P
////அதிகமாகப் பணிச் சுமையற்ற ஒரு சிகை லங்கார நிபுணர் செய்திட்ட வேலை போல அல்லவா இஃது உள்ளது?
//
ரிப்பீட்டேய்ய்ய்.... //
வாங்க சின்னப்பையன்..
ரொம்ப பலமாத்தான் ரிப்பீட்டுறீங்க :P
// தமிழன்... said...
???:)
முடியல...//
அப்படித்தான் தமிழன்..பார்க்காம இருந்துட்டு த்டீர்னு கண்ணாடியைப் பார்த்துட்டா இப்படி அதிர்ச்சியாத்தான் இருக்கும் :P
// போக்கிரி பையன் said...
Nice :-) //
வாங்க போக்கிரிப் பையன் :)
ஊருல பூனையெல்லாம் சௌக்கியமா இருக்கா?
poonai matuma nambalum than pavam!!!
இங்கே பின்னூட்டமிட்டவங்க எல்லோரும் இங்கேயும் வாங்க
Post a Comment