Friday, June 13, 2008

இன்றைய புத்தம்புதுத் திரைக்காவியம்

உலக வரலாறுகளிலேயே முதன்முறையாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெருமையுடன் தயாரித்து வழங்கும் அஜித்குமாரின் திரைக்கதை,வசனம்,பாடல்கள்,எழுத்து,இயக்கம்,ஒளிப்பதிவில் உருவான'வெண்ண கவுண்டர்' திரைப்படத்தின் பாடல்காட்சியொன்றை இங்கு காணலாம்.





நடிப்பு அட்லாஸ் சிங்கமா என்ற கேள்வியைத் தவிர்த்து அஜித்குமாருக்கு எல்லோரும் ஒரு 'ஓ' போட்டுச் செல்லலாம்.

பிடிக்கவில்லையாயின் அவர் முதுகில் கூடப் போட்டுச் செல்லலாம்.
'பின்'விளைவுகளுக்கு வ.வா.சங்கம் பொறுப்பேற்காது.

இனி அடுத்து நமது வழமையான கேள்வி நேரத்துக்கு வரலாம்.

கீழே உள்ள இரண்டு படங்களையும் நன்றாக உற்றுப் பார்த்து கேட்கப்பட்டிருக்கும் ஆறு கேள்விகளுக்கும் சரியான விடையைக் கூறுபவரைச் சீனாவுக்கு அழைத்துச் செல்லும் எண்ணம் உண்டு.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சரியான பதிலைக் கூறுமிடத்து அவர்களில் ஒருவரை நடிகை நமீதா குலுக்கல் முறையில் தெரிவு செய்வார்.


இனிப்படங்களுக்கு வரலாம்.


படம் 1 :

படம் 2 :



இரண்டுக்கும் பொதுவான கேள்வி :

மேலுள்ள படங்களில்,

1.எத்தனை பேர் தூங்குகிறார்கள்?


2.எத்தனை பேர் அரை மயக்கத்தில் இருக்கிறார்கள்?


3.எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்?


4.எத்தனை பேர் கவலையாக இருக்கிறார்கள்?


5.எத்தனை பேர் குடித்திருக்கிறார்கள்?


6.எத்தனை பேர் 'மெண்டலாக' இருக்கிறார்கள்?



முதல் படத்தில் மொங்கோலியாத் தங்கங்களையும் இரண்டாம் படத்தில் நமது பதிவுலகச் சிங்கங்களையும் நடிக்கவைத்திருக்கிறேன்.முதலாம் படத்திலுள்ளவர்களின் பெயர்களை நீங்கள் உச்சரித்து நாக்குச் சுளுக்கிக் கொள்ளக் கூடாது என்பதனால் இரண்டாம் படத்தில் உள்ளவர்களது பெயர்களை மட்டும் தருகிறேன்.அவர்களிருவரும்...
வால்பையன் மற்றும் இளையகவி.

படப்பிடிப்பு-ஈரோடு கார்த்திக்

27 comments:

M.Rishan Shareef said...

:)

Kavinaya said...

படம் சூப்பர் :)) கேள்வி/பதில் கொண்டாட்டத்தை ஓரமா இருந்து வேடிக்கை பாக்கிறேன்... :))

வால்பையன் said...

படபிடிப்பு கார்த்திக் அல்ல
அன்னைக்கு அவர் பிளாட்டு

வால்பையன்

Sanjai Gandhi said...

2வது படம். பலியிடப் படுவதற்கு முன் ஆடுகள் இப்படி தான் இருக்குமாம். :)))

M.Rishan Shareef said...

வாங்க கவிநயா..

//படம் சூப்பர் :)) //

எந்தப் படத்தைச் சொல்றீங்கன்னு புரியலையே.. :(
திரைப்படமா? புகைப்படமா?

//கேள்வி/பதில் கொண்டாட்டத்தை ஓரமா இருந்து வேடிக்கை பாக்கிறேன்... :))//

யாரங்கே..? லேடீஸுக்கு முன்னால சீட் போட்டுடுங்க :)

M.Rishan Shareef said...

வாங்க வால்பையா :)

//படபிடிப்பு கார்த்திக் அல்ல
அன்னைக்கு அவர் பிளாட்டு //

அன்னைக்கும் அப்படித்தானா?
பில்டிங்கோட சேர்த்து பேஸ்மெண்டும் வீக்கா? :P

அவருதாங்க இந்தப்படத்தை எனக்குக் கொடுத்தாரு.புண்ணியமாப் போகும்.ஏதாவது பொன்னாடை எடுத்துப் போர்த்திவிடுங்க அவரை :P

M.Rishan Shareef said...

// SanJai said...
2வது படம். பலியிடப் படுவதற்கு முன் ஆடுகள் இப்படி தான் இருக்குமாம். :)))//

இந்தச் சிங்கத்தோட பலியாடுங்களா?
இந்தக் குசும்புதானே வேணாங்குறது சஞ்சய் :P

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நடிப்பு அட்லாஸ் சிங்கமா என்ற கேள்வியைத் தவிர்த்து//

:-((

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நமீதா குலுக்கல் முறையில் தெரிவு செய்வார்//

:-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முதலாம் படத்திலுள்ளவர்களின் பெயர்களை நீங்கள் உச்சரித்து நாக்குச் சுளுக்கிக் கொள்ளக் கூடாது//

உங்கள் மொங்கோலியா காதல்/கடலை அனுபவங்களைச் சபைக்குச் சொல்லி விளக்க வேண்டும் என்று டைரக்டர் (?) ரிசானை கேட்டுக் கொள்கிறேன்!

மங்களூர் சிவா said...

அஜித்குமார் விடியோ சூப்பர். பாராட்டுக்கள்.

மங்களூர் சிவா said...

/
SanJai said...
2வது படம். பலியிடப் படுவதற்கு முன் ஆடுகள் இப்படி தான் இருக்குமாம். :)))

/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

ரெண்டாவது படம் எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு பாத்தா நம்ம கரூர்காரன் கிழகவி ச்ச இளையகவி.

'வள்'பையனை இப்பதான் போட்டோல பாக்கிறேன்.

மங்களூர் சிவா said...

//நமீதா குலுக்கல் முறையில் தெரிவு செய்வார்//

தெரிவுசெய்யும் போது அவரும் குலுங்குவாரா!?!?

விளக்கமாக பதிவில் இல்லாததற்கு கண்டனங்கள்

:)))

மங்களூர் சிவா said...

//முதலாம் படத்திலுள்ளவர்களின் பெயர்களை நீங்கள் உச்சரித்து நாக்குச் சுளுக்கிக் கொள்ளக் கூடாது//

அவனுங்களை உத்து உத்து பாத்து கண்ணு சுளுக்கிகிச்சி டாக்டர்(லேடி) பீஸ் அனுப்பவும்!!

:)))

மங்களூர் சிவா said...

/
kannabiran, RAVI SHANKAR (KRS) said...

உங்கள் மொங்கோலியா காதல்/கடலை அனுபவங்களைச் சபைக்குச் சொல்லி விளக்க வேண்டும் என்று டைரக்டர் (?) ரிசானை கேட்டுக் கொள்கிறேன்!
/

ரிப்பீட்டிக்கிறேன்

KARTHIK said...

வீடியோவ நல்லா பண்ணுன அஜித்துக்கு என் வாழ்த்துக்கள்.

M.Rishan Shareef said...

//உங்கள் மொங்கோலியா காதல்/கடலை அனுபவங்களைச் சபைக்குச் சொல்லி விளக்க வேண்டும் என்று டைரக்டர் (?) ரிசானை கேட்டுக் கொள்கிறேன்!//

வாங்க கேயாரெஸ்.. :)
வரும் போதெல்லாம் இப்படியொரு அபாண்டத்தைச் சுமந்துட்டு வரப்படாது.
சபையில புள்ளைங்களெல்லாம் இருக்காங்க இல்லையா?அதுவுமில்லாம இது பச்ச மண்ணுப்பா :P

M.Rishan Shareef said...

// மங்களூர் சிவா said...
அஜித்குமார் விடியோ சூப்பர். பாராட்டுக்கள்//

அஜித் குமார் சார்பில் நன்றிகள் :)
வீடியோல உங்க பாத்திரத்தை இயல்பா நடிச்சிருக்கார் நம்ம வடிவேல்..இல்லையா சிவா? :P

M.Rishan Shareef said...

// மங்களூர் சிவா said...
//நமீதா குலுக்கல் முறையில் தெரிவு செய்வார்//

தெரிவுசெய்யும் போது அவரும் குலுங்குவாரா!?!?

விளக்கமாக பதிவில் இல்லாததற்கு கண்டனங்கள்//

இப்படியெல்லாம் கண்டன அறிக்கை விட்டு என்னைக் குலுங்கிக் குலுங்கி அழச்செய்ய ஐடியாவா சிவா?
நடக்காது அது நடக்காது :P

M.Rishan Shareef said...

//மங்களூர் சிவா said...
//முதலாம் படத்திலுள்ளவர்களின் பெயர்களை நீங்கள் உச்சரித்து நாக்குச் சுளுக்கிக் கொள்ளக் கூடாது//

அவனுங்களை உத்து உத்து பாத்து கண்ணு சுளுக்கிகிச்சி டாக்டர்(லேடி) பீஸ் அனுப்பவும்!!//

கண்ணு சுளுக்கிக்கிச்சுன்னா டாக்டர் எல்லாம் எதுக்கு சிவா?
போய் அவங்க கூட உட்கார்ந்து ஒரு போட்டோ எடுத்து அனுப்புங்க..
எனக்கும் இன்னொரு பதிவு கிடைச்சாப்ல இருக்கும் :P

M.Rishan Shareef said...

கார்த்திக் said...
வீடியோவ நல்லா பண்ணுன அஜித்துக்கு என் வாழ்த்துக்கள்.

வாங்க கார்த்திக் :)

அஜித்குமார் சார்பாக உங்களுக்கு எனது நன்றிகள் :)

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

:-))))

M.Rishan Shareef said...

// ARUVAI BASKAR said...
:-)))) //

வாங்க அறுவை பாஸ்கர் :)
தலைவர் படத்தை போட்டுக்கிட்டு ரொம்பத்தான் சிரிப்பு உங்களுக்கு :P

புதுகை.அப்துல்லா said...

அண்ணே! படத்தப்பார்த்து மெண்டல் ஆனது நாந்தாண்ணே...

M.Rishan Shareef said...

வாங்க அப்துல்லாஹ் :)

அப்போ படத்தைப் பார்க்காம எப்படியிருப்பீங்க?? :P

M.Rishan Shareef said...

இங்கே பின்னூட்டமிட்டவங்க எல்லோரும் இங்கேயும் வாங்க