"சங்கத்தில் ஜில்லுனு ஒரு காதல் சுயம்வரம் நடக்கப் போவுது! எங்கே மொக்கை போட்டுக்கிட்டு இருந்தாலும் அதை எல்லாம் நிறுத்திட்டு, சிங்கங்கள் உடனடியாக சங்க ஆபிசுக்கு வந்து சேரவும்!
சிபியாகப்பட்டவர், கையோடு அந்த ராயலைக் கூட்டிக்கிட்டு வரவும்!"
தல கைப்பு இப்படி ஒரு சுற்றறிக்கையை, எஸ்.எம்.எஸ்-ல எல்லாருக்கும் அனுப்பிச்சி இருந்ததைப் பார்த்து சிங்கங்களுக்கு எல்லாம் ஒரே ரென்சன்! அதுவும் காதல் சுயம்வரம்! அதுக்கு ராயலைக் கையோட இஸ்துக்கினு வரச் சொல்லி இருக்காருன்னா, இதுல ஏதோ விசயம் இருக்கு டோய்!
IPL Twenty20ல சென்னை கிங்க்ஸ் ஆப்பு வாங்குன சோகத்துல இருந்தாரு தேவ் அண்ணாத்த! அவரு கிட்ட போயி இளா வம்பு பண்ணக்கூடிய நேரமா இது? ஈர வெங்காயம் பத்திக்கிட்டு எரியாதா என்ன? இது தெரியாம இந்த இளா...
இளா: அண்ணே ஒரு கிங் ப்ளேக் இருந்தா கொடுங்கண்ணே!
தேவ்: டேய்! நானே சென்னை கிங்கு எல்லாம் ப்ளேக்கான சோகத்துல இருக்கேன்! வந்துட்டான் கிங் ப்ளேக், குயின் ப்ளேக்குன்னு! சென்னைக் கிங்க்ஸை வச்சி, சென்னைக் கச்சேரில என்னென்னமோ பண்ணத் திட்டம் போட்டிருந்தேன்! எல்லாம் போச்சி!
இளா: அட! ஏண்ணே சலிச்சிக்கிறீங்க? IPL இல்லீன்னா இருக்கவே இருக்கு OPL, OPML! ஈர வெங்காயம்...விட்டுத் தள்ளுவீங்களா!
தேவ்: ஆமாண்டா! ஈர வெங்காயம், ஈரப் பூண்டு, ஈரப் பட்டை, ஈர லவங்கம்! இங்க என்ன பிரியாணியா போடுறோம்? தல கைப்போட மெசேஜ் பாத்தல்ல? என்னா சுயம்வரம் அது? உனக்கு ஏதாச்சும் விசயம் தெரியுமா?
இளா: தல இப்பிடி எல்லாம் தைரியமா சுயம்வரம் நடத்தறாரு-ன்னா இதுல ஏதோ விசயம் இருக்கு அண்ணாச்சி! அப்படி சுயம்வரம் வச்சா அதுல கலந்துக்க Eligible Bachelors வேணுமே! நம்ம சங்கத்துல யாரெல்லாம் அண்ணாச்சி தேறுவாங்க?
தேவ்: அதானே, இந்தக் கேயாரெஸ்ஸும், கப்பியும் தானே இருக்காங்க! எதுக்கு தல ராயலைக் கூட்டியாரச் சொன்னாரு? சரி வா, சங்க ஆபீஸ் பக்கம் போயாருவோம்!
வழியில காபி டே பாத்தீனா நிறுத்து டே! ஒரு சிக்கன் க்ராய்சண்ட் கடிச்சிக்கலாம்! தல இப்பல்லாம் மீட்டிங்குல சட்னி வடை கூட காட்டுறதில்ல!
சங்க அலுவலகத்தில் வவாசவின் நால்வண்ணக் கொடி பட்டொளி வீசி பறக்குது!
எங்க பார்த்தாலும் இளம் பெண்களின் கூட்டம் தான்! ஜீன்ஸ், சுடிதார், மேக்சி, லோ-கட், ஃப்ளிப் ப்ளாப்-னு ஒரே இளமையின் திருவிழா!
அந்த ஆழிப் பேரலையில் புகுந்து, ஒரு வழியா நீந்திக் கரை சேரறாங்க தளபதி சிபியும், கையோடு கூட்டியாந்த ராயலும்!
சங்க ஆபிசுக்கு நயன்தரா வந்தபோது கூட இம்புட்டு கூட்டம் கூடி இருக்குமான்னு தெரியாது!
ராயல்: என்ன நடக்குது இங்க? இப்பிடி இத்தினி ஃபிகரும் ஒன்னா கெளம்பி வந்தா எப்பிடி? எப்பிடி எப்பிடி நான் SLR-ல ஃபோட்டோ புடிக்கிறதாம்?
இந்தத் தலைக்குக் கொஞ்சம் கூட வெவரனையே இல்ல! தனித்தனியா அத்தினி பேரையும் இன்டர்வியூக்கு கூப்பிட்டிருக்கக் கூடாது? ரூம் போட்டு ஃபோட்டோ புடிச்சிருக்கலாம்-ல?
சிபி: அடங்கு ராசா அடங்கு! இப்ப தான் சங்கமே தங்கமா மின்னுது!
தல-யின் இந்தச் சூப்பர் ஐடியாவுக்காக நான் அவருக்கு ஏலக்கா மாலை போடப் போறேன்!
டேய்...அங்க பாரு மக்கா...ஆபீஸ் மொட்டை மாடியில....நம்ம தலயா அது?
தலயின் தலயில் கோல்டன் ஹேர்டை, கூலிங்கிளாஸ், ரிவிர்சிபிள் டீ ஷர்ட், பெர்மூடா, சென்னை வெயிலுக்கு ஏத்தா மாதிரி ஒரு ரேஞ்சான கெட்டப்புல தல!
கூடவே நாலு black cat! புதுசா ஜெயிச்சி வந்த கட்சித் தலைவர் கணக்கா ஒரு கம்பீரம்! மைக்கைப் புடிக்கறாரு தல!
"மக்கள்ஸ் & ஃபிகர்ஸ்...குட் மார்னிங் டு யூ ஆல்!
சங்கத்து சுயம்வரம் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்கப் போவுது! போட்டில ஜெயிக்கப் போற பொண்ணு கழுத்துல...இதோ...இந்தச் சிங்கம் மாலை சூட்டுவாரு!
மங்கையர் மனங்கவர் மணவாளன் இவரு! ஜிடாக்கில் பேஸ் மாட்டாரு! ஒன்லி கவுஜ வாசிப்பாரு! திண்ணை, கீற்று, வார்ப்பு-ன்னு எல்லா எடத்துலயும் கதை கவுஜ கவுஜ மட்டுமே வாசிப்பாரு!
அஜீத், விஜய், சூர்யா, ஆர்யா-ன்னு இவரு போடுற ஃபோட்டோவுல இவரு மட்டும் எங்க இருக்காருன்னு யாருமே கண்டுபுடிக்க முடியாது!
ஓர்க்குட்-ல 30000 ஸ்கிராப்பு வாங்கிய அபூர்வ சிகாமணியே, வாங்கோ, வாங்கோ....."
கையோடு கூட்டி வரப்பட்ட ராயல், மனசுல பல பட்டர்ஃபளைக்கள் பறக்க, ஆசை ஆசையா...அவசரம் அவசரமா...முன்னேற...
ஓ மை காட்! ராயலுக்கும் முன்னாடி வேற யாரோ ஒருவன்! கையில் சுயம்வர மாலையுடன்!
ஹிஹி...
ஜூன் மாத அட்லாஸ் சிங்கமே! காதல் கவிஞரே! இலங்கை மாவனல்லை நகரத்து மேயரே! ரிஷான் ஷெரீப்! வாங்க! வாங்க!!
35 comments:
சுயம்வரத்துக்கு சரியான் தேர்வு ரிஷான்...ஆன இப்பவாது அந்த பையன் போட்டோ போட்டுருக்கலாமே....கண்ணு மட்டும் காட்டி இப்படி பொண்ணுங்க மனச சங்கடப்படுத்தக்கூடாது......
அன்புடன்
நட்சத்திரா
யாருங்க அது சிங்கத்த பாதி போட்டோ போட்டது.இந்த்தாங்க முழு படத்தையும் போடுங்க.
வாழ்த்துக்கள் சிங்கம் ரிஷான்.
அ.உ ரிஷான் ர.ம.உறுப்பினர்
ஈரோடு கிளை.
அட்லாஸ் சிங்கமே! காதல் கவிஞரே! இலங்கை மாவனல்லை நகரத்து மேயரே! ரிஷான் ஷெரீப்! வாங்க! வாங்க!!
/
Natchatra said...
சுயம்வரத்துக்கு சரியான் தேர்வு ரிஷான்...ஆன இப்பவாது அந்த பையன் போட்டோ போட்டுருக்கலாமே....கண்ணு மட்டும் காட்டி இப்படி பொண்ணுங்க மனச சங்கடப்படுத்தக்கூடாது......
அன்புடன்
நட்சத்திரா
/
ripeateyyyyy
வாழ்த்துக்கள் ரிஷான்.... :))
சூப்பர் வரவேற்பு! :)
யாரோ... அவள் யாரோ... :))
கலக்குங்க ரிஷான்! :)
rishan'ku apadi onum vayasu aagalaye....suyamvarathu'ku...
avan chinna payan pa.....
//ஆன இப்பவாது அந்த பையன் போட்டோ போட்டுருக்கலாமே....//
நட்சத்திரா...
ரிஷான் ஃபோட்டோவா? - அது எங்கிட்டு இருக்கு? எப்பிடி இருக்கு? அவர் தான் இவரா? இவர் தான் அவரா? யாருக்கும் தெரியாது! தேடிக்கிட்டே இருங்க! :-)))
//பொண்ணுங்க மனச சங்கடப்படுத்தக்கூடாது......//
ரிஷான்...கேட்டுக்கோப்பா! எதுக்குப் பாவம் பொண்ணுங்க மனச சங்கடப்படுத்தற? :-))
@கார்த்திக்
பாவம்...காபி அண்ணாச்சி றேடியோஸ்பதில போட்டது 1980 படம்! இப்போதைய படம் ஏதாச்சும் இருந்தாக் கொடுங்க! :-)
@சிவா
//இலங்கை மாவனல்லை நகரத்து மேயரே! ரிஷான் ஷெரீப்! வாங்க! வாங்க!!
//
ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு ஷெரீப் இருப்பாய்ங்க! சென்னைக்குக் கூட இருந்தாய்ங்க!
ஆனாப் பாருங்க இந்த ஷெரீப் மட்டும் மேயர் ஆயிட்டாரு! :-)
@சத்யா
//onum vayasu aagalaye....suyamvarathu'ku...
avan chinna payan pa.....//
ஒங்கள நெனச்சாப் பாவமா இருக்கு சத்யா! :-))
வாங்க சிங்கம் வாழத்துக்கள்...
///கண்ணு மட்டும் காட்டி இப்படி பொண்ணுங்க மனச சங்கடப்படுத்தக்கூடாது......///
ரிஷான் கவனப்பு... உங்க மேல ஒரு கண்ணாத்தன் இருக்குதுங்க...
வாங்க வாங்க! ஆப்புக்களை வாங்க வாங்க!
வாங்க நட்சத்திரா :)
//கண்ணு மட்டும் காட்டி இப்படி பொண்ணுங்க மனச சங்கடப்படுத்தக்கூடாது......//
ஐயோ..இது கத்தாழக் கண்ணா என்ன?
//வாழ்த்துக்கள் சிங்கம் ரிஷான்.
அ.உ ரிஷான் ர.ம.உறுப்பினர்
ஈரோடு கிளை.//
நன்றி கார்த்திக்.
உறுப்பினர் சங்க சந்தாப்பணத்தை மட்டும் எனக்கு ஒழுங்கா அனுப்பிடணும்..ஆமா :)
//அட்லாஸ் சிங்கமே! காதல் கவிஞரே! இலங்கை மாவனல்லை நகரத்து மேயரே! ரிஷான் ஷெரீப்! வாங்க! வாங்க!!//
வாறேன் சிவா :)
ஆமா..இதுல உள்குத்து ஒண்ணுமில்லையே :(
//வாழ்த்துக்கள் ரிஷான்.... :))//
நன்றி நண்பர் மதுரையம்பதி :)
வாங்க கவிநயா,
//சூப்பர் வரவேற்பு! :)
யாரோ... அவள் யாரோ... :))
கலக்குங்க ரிஷான்! :)//
கலக்கிட்டாப் போச்சு :)
வாங்க கவிநயா,
//சூப்பர் வரவேற்பு! :)
யாரோ... அவள் யாரோ... :))
கலக்குங்க ரிஷான்! :)//
கலக்கிட்டாப் போச்சு :)
//rishan'ku apadi onum vayasu aagalaye....suyamvarathu'ku...
avan chinna payan pa.....//
கையைக் கொடுங்க சத்யா..
உண்மையைச் சொல்லி என் மனசுல பாலை வார்த்துட்டீங்க :)
//ரிஷான் ஃபோட்டோவா? - அது எங்கிட்டு இருக்கு? எப்பிடி இருக்கு? அவர் தான் இவரா? இவர் தான் அவரா? யாருக்கும் தெரியாது! தேடிக்கிட்டே இருங்க! :-)))//
கேயாரெஸ் அண்ணாச்சி..
உங்களுக்காக நான் நமீதா கூட நாலு படம் பண்ணவா முடியும்?
முடிஞ்சாத் தேடிக் கண்டுபிடிங்க :P
//பாவம்...காபி அண்ணாச்சி றேடியோஸ்பதில போட்டது 1980 படம்! இப்போதைய படம் ஏதாச்சும் இருந்தாக் கொடுங்க! :-)//
அடப்பாவி..1980ல நான் எங்கே இருந்தேன்னு எனக்கேத் தெரியலையே.. :(
//ரிஷான் கவனப்பு... உங்க மேல ஒரு கண்ணாத்தன் இருக்குதுங்க..//
வாங்க தமிழன்..எதுக்கும் நீங்களும் வந்து என் பக்கத்துல நின்னுக்குங்க ஒரு சப்போர்ட்டுக்கு..
கண்ணு மேல கன்னு வச்சிடப் போறாங்க :)
//வாங்க வாங்க! ஆப்புக்களை வாங்க வாங்க!//
இளா..இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம் ல :(
//கண்ணு மேல கன்னு வச்சிடப் போறாங்க :) //
கண்ணு மேல பொண்ணுகள் எப்ப்பவோ கண்ணுகள் வச்சாச்சு! தெரியாத மாதிரி பேசறீங்களே, தம்பி... :)))
ஆணழகர் ரிஷானே.... மானவல்லைச் சிங்கமே... நங்கையர் உள்ளத்தை மொத்தக் குத்தகை கொண்ட கதாநாயகனே... வருக வருக. வருத்தப்படாத வாலிபர்(இல்லாத) இந்தச் சங்க்கத்தில் உங்கள் கொடி பறக்கட்டும். வாழ்த்துகள்.
வாழ்த்துகள் நண்பா - ரிஷான் ஷெரீப்
//கண்ணு மேல பொண்ணுகள் எப்ப்பவோ கண்ணுகள் வச்சாச்சு! தெரியாத மாதிரி பேசறீங்களே, தம்பி... :)))//
கவிநயா,கண்ணு மேல கண்ணு வச்சாக்கூடப் பரவாயில்லையே..சிலதுங்க GUNனு வைக்குதுங்க..அதுக்கு என்னங்க பண்றது? :(
//ஆணழகர் ரிஷானே.... மானவல்லைச் சிங்கமே... நங்கையர் உள்ளத்தை மொத்தக் குத்தகை கொண்ட கதாநாயகனே... வருக வருக. வருத்தப்படாத வாலிபர்(இல்லாத) இந்தச் சங்க்கத்தில் உங்கள் கொடி பறக்கட்டும். வாழ்த்துகள்.//
குட்டி மாதவா ஜிரா அண்ணாச்சி :)
இம்புட்டு ஜால்ரா அடிக்கிறீங்களே..இதுக்கு முன்னாடி அரசியல் கூட்டங்கள்ல மைக் பிடிச்சுட்டு..ம்ம்? :P
வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணாச்சி:)))
//வாழ்த்துகள் நண்பா - ரிஷான் ஷெரீப்//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர் சீனா :)
kalakkunga singam ;-)
வாங்க கானா பிரபா :)
//kalakkunga singam ;-)//
கண்டிப்பா :)
நன்றிங்க.. :)
பேக்ரவுண்ட் மியூசிக் உங்க பொறுப்பு..
இங்கே பின்னூட்டமிட்டவங்க எல்லோரும் இங்கேயும் வாங்க
Bravo, what necessary phrase..., a brilliant idea
Post a Comment