Friday, June 27, 2008

கொஞ்சம் வில்லங்கமான கதை !




"ஹலோ"

"டாடி பேசுறேண்டா செல்லம்.என்ன பண்ணிட்டிருக்கே".

"ஹாய் டாடி.பாபி டால் கூட விளையாடிட்டிருக்கேன்".

"அம்மா இருக்காங்களா?"

"இருக்காங்க டாடி"

"போனை அவங்கக்கிட்ட கொடுடா செல்லம்"

"அம்மா,மேல் மாடி பெட்ரூம்ல செல்வா அங்கிள் கூட இருக்காங்க டாடி"

ஒரு நீண்ட மௌனம் அப்பாக்கிட்டிருந்து...

"ஆனா..உனக்குத்தான் செல்வான்னு அங்கிள்ஸ் யாருமே இல்லையே செல்லம்?"

"தெரியல டாடி..அம்மா அப்படித்தான் சொன்னாங்க..இப்ப மாடி பெட்ரூம்லதான் இருக்காரு..பேசுறீங்களா?"

மீண்டும் ஒரு நீண்ட மௌனம்...

"சரி செல்லம்..இப்போ நீ என்ன பண்ணனும்னா போனை அப்படியே லைன் கட் பண்ணாம மேசையில வச்சிட்டு மேல் மாடிக்குப் போய் பெட்ரூம் கதவைத் தட்டி 'டாடியோட கார் வீட்டு வாசலால வந்துட்டிருக்கு'ன்னு கத்தணும்..செய்றியா?"

"சரி டாடி..இருங்க ஒரு நிமிஷத்துல வந்துடறேன்"

கொஞ்ச நேரம் கழித்து..

"செஞ்சிட்டேன் டாடி"

"ஓகே...நீ அப்படிக் கத்தியதும் என்ன நடந்திச்சு செல்லம்?"

"அம்மா அலறிக்கிட்டே பெட்லிருந்து குதிச்சாங்க..ரூம் பூரா அலறிக்கிட்டே ஓடினாங்க.அப்படியே கீழ இருந்த கார்பட் ல வழுக்கிக் கீழ விழுந்தாங்க..இதுவரைக்கும் எழும்பல."

"கடவுளே...! சரி செல்வா அங்கிள் என்ன பண்றார் இப்ப?"

"அவரும் அலறிக்கிட்டே எழும்பி ரூம் ஜன்னலிலிருந்து அப்படியே கீழ இருக்குற ஸ்விம்மிங் பூலுக்குக் குதிச்சிட்டாரு.நேத்துத்தானே நாங்க அதை சுத்தப்படுத்துறதுக்காக தண்ணியெல்லாம் இல்லாம வச்சிருந்தோம்.அது அவருக்குத் தெரியலன்னு நினைக்கிறேன்..அப்படியே தலையடிபட்டு..ரத்தமெல்லாம் வந்து..அவர் இப்போ செத்துட்டாருன்னு நினைக்கிறேன்."

மௌனம்..

நீண்ட மௌனம்

மீண்டும் ஒரு நீண்ட மௌனம்.

"ஹலோ டாடி?"

"ஸ்விம்மிங் பூல்?...நம்ம வீட்ல?..இது 456143921 இல்லையா? ஸாரி..ரோங் நம்பர்"




இந்தக் கதையை எதுக்கு இப்போ நான் சொல்றேன்னா இப்போ நீங்க யாருக்காச்சும் கோல் பண்ணும் போது ('நானு எங்கே பண்றேன்..ஒரு மிஸ்டு கோலு கொடுத்தா அந்தப்பக்கத்துல இருக்குற இளிச்சவாயன் கோல் எடுத்துடப்போறான்'ங்கிறீங்களா..சரிதான் ) ,இல்லேன்னா உங்களுக்கு ஒரு கோல் வந்துச்சின்னா அது தவறான நம்பருக்குப் போகவோ இல்லாட்டி ரோங்க் நம்பரா அமையவோ சான்ஸ் இருக்கில்லையா? அப்படி ஏதாச்சும் நடந்துச்சின்னா 'ஸாரி ..ரோங்க் நம்பர்னு சொல்லி போனைக் கட் பண்ணிடுங்க.. (ஐயோ..கட் பண்ணச் சொன்னா போனை வெட்டச் சொல்லலீங்க..போனை வைங்கன்னு அர்த்தம்)..

8 comments:

M.Rishan Shareef said...

:P

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:P

Anonymous said...

வில்லங்கத்துலயும், வில்லங்கமான கதை ரிஷான்.

சென்ஷி said...

:P

G.Ragavan said...

ஹா ஹா ஹா இது முந்தி மெயில்ல வந்துச்சு... அதையே மாத்தி சொல்லீருக்கீங்க. நல்லாருக்கு. :-)

லதானந்த் said...

ரி மிக்ஸ் அருமை

மங்களூர் சிவா said...

/
நானு எங்கே பண்றேன்..ஒரு மிஸ்டு கோலு கொடுத்தா அந்தப்பக்கத்துல இருக்குற இளிச்சவாயன் கோல் எடுத்துடப்போறான்'ங்கிறீங்களா..சரிதான்
/

பொண்ணுங்களுக்கு க்ளாஸ் எடுக்கறேப் அது இதுன்னு சொல்லிகிட்டே ஆப்பு எவ்ளோ அலங்காரமா வைக்கிறய்யா!!

:)))))

M.Rishan Shareef said...

இங்கே பின்னூட்டமிட்டவங்க எல்லோரும் இங்கேயும் வாங்க