* சங்கத்தின் சிங்கம்,
* மல்லியின் கில்லி,
* தென் மண்டல அமைப்பாளர் (என்னத்த அமைச்சார்?-ன்னு எல்லாம் கேக்கப்பிடாது! அமைக்க வேண்டியதை அமைச்சாருப்பா),
* ஆட்டப்பயல் (அதாங்க ப்ளே பாய்)....
நம்ம ராயல் ராமுக்கு பொறந்த நாளுங்கோ! (Apr-19)
மதுரையில இன்னிக்கி வீட்டுக்கு வீடு பிரியாணி போடறாங்கோ! நெப்போலியன் ஊத்தறாங்கோ! கூச்சப்படாம ஊத்தி வாங்கி...ச்சே கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க மக்கா! :)
என்ன தான் வருசா வருசம், இவரோட ஆர்குட்டை வைச்சி டேமேஜ் பண்ணாலும், அந்த ரொமான்டிக் ஃப்ரொபைலை மட்டும் எக்காரணம் கொண்டும் மாத்த மாட்டேங்குறாரு! - எலே நீ தான்-டா சிங்கம்! :)
அதான் இந்த தபா, நாங்களே ராயலோட ஆர்க்குட் ஃப்ரொபைலை டோட்டலா மாத்த ஒரு முடீவு கட்டிட்டோம்!
என்சாய்! ஹாப்பி பர்த்தேடே ராமேய்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)
relationship status: committed...but single :)
அதாச்சும் அவங்க எனக்கு கமிட் ஆயிட்டாங்க! ஆனா நான் தான் இன்னும் கற்பைக் காப்பாத்திக்கிட்டு இருக்கேன்! :)
birthday: April 19
age: 30-1
languages i speak: English (US), Tamil, Kannada....Recently Malay
மொழிப் பிரச்னையே கிடையாதுங்க! பாக்கவே நேரம் போதுலை! இதுல எதுல பேசினா என்ன? :)
ஆனா இங்கிலீபீஷ் மட்டும், நாம US-Englipeesh தான் பேசுவோம்! ஏன்னா அதுல தான் Grammar-யே கிடையாது! என்ன வேணும்ன்னாலும் பேசலாம்! :)
here for: girl friends, woman friends, auntie friends
இதுக்கு வெளக்கம் சொல்ல, தனியா பொஸ்தகம் தான் போடோணும்!
children: all children are my children
வேற ஒன்னும் இல்ல! ப"ற"ந்த மனசு! :)
ethnicity: asian
பின்ன, உன்னைப் பாத்து ஆப்ரிக்கன்-ன்னா சொல்லுவாங்க? அது என்னடா ஏசியன்? இந்தியன்-தமிழன்-ன்னு சொன்னா கொறைஞ்சி போயிருவியா?
religion: Agnostic
இது புது வரவு! Agnostic-னா என்னான்னு எனக்கு "கடவுள்" சத்தியமா தெரியாதுங்க! :)
சும்மா போட்டுக்கிட்டேன்! ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு எதுவும் இல்லியே? :)
தமிழ்-ல எழுதிப் பார்த்தேன் அக்கா-நாஸ்திக்-ன்னு வருது! எவன்டா அக்காவைப் பத்தி பேசுறது-ன்னு அரிவாளைத் தூக்கிட்டு கெளம்பிருவானுங்க! அதான்...அது இங்கிலீஷ்லயே இருக்கட்டும்!
humor: campy/cheesy, friendly
சத்தியமா இதுவும் என்னான்னு தெரியாதுங்கோ!
Campy = நான் ஃபிரெண்டு ரூம்லயே தான் எப்பவும் டேரா போடுவேன்! அது தான் Campஆ இருக்குமோ?
Cheesy = வெண்ணய் - அப்படிங்கறது எம்புட்டு டீசென்ட்டா இங்கிலீஷ்ல சொல்லுறாங்கப்பு?
fashion: alternative (மாற்று)
அதாச்சும் மாற்றுடையே இல்லாம, தினப்படி போட்ட ட்ரெஸ்ஸே தான் போடுவேன்! அது உள்ளாடையோ, வெளியாடையோ, மனுசனுக்கு ஆடை ரொம்ப முக்கியம்-ங்க! அதை மாத்தவே கூடாது! :)
smoking: no (from yesterday)
drinking: no (from tomorrow)
மொதல்ல இந்தா மாதிரி கேக்குறதைத் தூக்கணும்! சாதிப் பேரைக் கேட்டா எம்புட்டு தப்போ, அது போல இப்படிக் கேக்குறதும்! :)
pets: i love my pet(s)
ஆத்தி...எனக்குத் தெரிஞ்ச பெட்டு, எங்க வூட்டு பல்லி தாங்க!
living: together - with room-mate
ஆனா வாடகை மட்டும் அந்த "ஆன்ட்டியே" கொடுத்துப்பாய்ங்க!
hometown: madurai
என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?
webpage: http://raamcm.blogspot.com
விருது வாங்கிய வலைப்பூ!
sports: ரம்மி, மூணு சீட்டு, மங்காத்தா
இதுக்கெல்லாம் யாரும் 20-20 நடத்த மாட்டாங்களா?
books: இன்னும் படிக்கணும்.
நான் படிக்கறா மாதிரி இன்னும் எவனுமே எழுதலை! என்னைத் தவிர! :)
music: A.R.Rahman
அவரு ஆஸ்கர் விருது வாங்கன பொறவு, இதைச் சேர்த்துக்கிட்டேன்! அவரு வாங்கினா என்ன, நான் வாங்கினா என்ன?
cuisines: "Amma" senchu kodukkira ethuvum..
அம்மா எலெக்சென்யும், கலெக்சென்லயும் பிசியோ பிசி! செஞ்சி எல்லாம் கொடுக்க மாட்டாங்க! வேணும்னா சின்னம்மாவைப் போயிக் கேளு! :)
email: raam.tamil@gmail.com, raam.kannada@gmail.com, raam.malay@gmail.com
ஹிஹி! பிகருக்கு ஏத்த மாதிரி இ-மெயிலு!
ஹே ராம்! ஹேய்...ராம்!!!
27 comments:
மீ த ஃபர்ஸ்ட்டேய் :))
ராயல் ராமுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))))
//age: 30-1//
3-வது டிஜிட்ட நாங்களே ஃபில் பண்ணிக்கனுமா??
3091 ஒகேவா :)))
//here for: girl friends, woman friends, auntie friends//
ROTFL :))))
//Cheesy = வெண்ணய் - அப்படிங்கறது எம்புட்டு டீசென்ட்டா இங்கிலீஷ்ல சொல்லுறாங்கப்பு?//
:))))))))))) ராமு டோட்டல் டேமேஜ் :D
வாழ்த்துக்கள் ராம்! வாழ்த்துக்கள்!
ஹே ராம் !!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
இரண்டாவது போட்டோ சூப்பர்.. !! :)) டிடெய்லு.. அவ்வ்வ்வ்!!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணாஆஆஆஆஆஆஆஆ :)))
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம் :)
//
மதுரையில இன்னிக்கி வீட்டுக்கு வீடு பிரியாணி போடறாங்கோ! நெப்போலியன் ஊத்தறாங்கோ! கூச்சப்படாம ஊத்தி வாங்கி...ச்சே கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க மக்கா! :)
//
ஏரியா பேர சொல்லுஙக் வந்துடுறேன் :)
ராயல் ராமுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Royal Chellengeக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் ராம்! வாழ்த்துகள்!
என் இனிய நண்பர் இராம் ஐயருக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்.
ஸ்ரீ ல ஸ்ரீ யூசுப் பால்ராஜ் ஐயங்கார்.
Happy Birthday Ram babu.
மாப்பிக்கு இங்கையும ஒரு வாழ்த்து ;))
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராம்
ராயல் அண்ணாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
ராயல் அண்ணா,
டோட்டல் டேமேஜ் :-)
பாவிகளா..... இப்பிடிதான் வாழ்த்துக்கள் சொல்லுவாங்களா???? :)
சொர்ணாக்கா,
தொல்ஸ்'ண்ணே,
கவிதா'க்கா,
ஆயில்யன்'ண்ணே,
அழகர்,
விவாஜி,
ஜெகதிசன்,
யூசூப் ஐயங்கார்வாள்,
குமரன் ததா,
வேலன் அண்ணாச்சி,
கோபி,
வெட்டிக்காரு,
அனைவருக்கும் மிக்க நன்றி
:-)) சூப்பரப்பு.. ;-)
ராமண்ணே, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. ;-)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பொறந்த நாளா ?
நேற்று கூடத்தானே இருந்தேன் சொல்லவே இலலையே அவன்.
தம்பி வாழ்க !
அடடா...மிஸ் செஞ்சிட்டேனேப்பா ராயல். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 2010ஆம் ஆண்டுக்கு வாழ்த்து சொன்ன முதல் ஆள் நான் தான்...மீ த ஃபர்ஸ்டு...ஆமா.
:))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
HEY RAM
MM2,
தருமி ஐயா,
கோவி'ண்ணே,
தல,
புலி,
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி... :)
கோச்சுக்காதிங்க ராமண்ணே.. தாமதமான ஆனா மனசு நிறைஞ்ச பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
:)
Post a Comment