அன்புள்ள தல கைப்புள்ள, போர்வாள் தேவ் மற்றும் விவசாயிஇளா ஆகியோருக்கு சங்கத்து சிங்கங்கள் சார்பா நாமக்கல் சிபியின் மனம் திறந்த மடல்.
வ: மோகன்ராஜ் (எ) கைப்புள்ள,
தல! வருத்தப் படாத வாலிபர் சங்கம் னாலே கைப்புள்ளைதான்! கைப்புள்ள என்றதும் மத்தவங்க மனசுல ஞாபகம் வரது அந்த வருத்தப் படாத வாலிபர் சங்கமும் தல வாங்கும் ஆப்புகளும்தான்! அப்படிப்பட்ட தலக்கு இன்னைக்கு ஒரு நல்ல சேதி சொல்லப் போறோம்னு நினைச்சி மனசுக்குள்ள எவ்ளோ சந்தோஷமா இருக்குது தெரியுமா தல!
அட! ஆணி பிடுங்குற அவஸ்தைல நீ வேணா மறந்திருக்கலாம் தல! சங்கத்த வெச்சி பிழைப்பு ஓட்டுற நாங்க மறங்க முடியுமா? ஆமா தல! சங்கம் ஆரம்பிச்சி ஒத்தோட மூணு வருஷம் முடிஞ்சிடுச்சு தல்!
மூணு வருஷமும் மத்தவங்களுக்கு வந்த ஆப்பைக்கூட தானா வந்து தாங்கிகிட்டு "ரொம்ப நல்லவன்"னு பேரெடுத்தியே தல! உனக்கு இந்த நேரத்துல நன்றி சொல்ல நாங்களெல்லாம் கடமைப்பட்டிருக்கோம் தல!
தல! நீ என்னென்னிக்கும் இதே மாதிரி மத்தவங்களுக்காகவாச்சும் எங்களை எப்பவும் சிரிக்க வைச்சி அழகு பார்க்கவாச்சும் நீ 1000 வருஷம் அதே கெத்தோட வாழணும் தல!
வ: போர்வாள் தேவ்
தேவ், சங்கம் ஆரம்பிச்ச நாளில் இருந்து சங்கத்தைப் பத்தி யாராச்சும் நாக்கு மேல பல்லு போட்டு பேசினா டெரரா ஒரு அறிக்கை விட்டு அறிக்கை விட்ட ஆசாமிகளை டரியலாக்கி நம்ம தலகிட்ட சரண்டர் ஆக வைக்கிற திறமையும், நம்பிக்கையும், கம்பீரமும் உள்ள ஒரு நீதான் தேவ்!
தல! தன் கொள்கைய விட்டுக்கொட்டுக்காம பார்டரைத் தாண்டி உள்ளே போயி கட்டத்துரையோட கை கால வாங்காம இருக்கணும்னு கட்டதுரையைக் காப்பாத்த பார்டர் தாண்டி நீ போன காட்சி இன்னும் எங்க கண்ணுக்குள்ள இருக்குது தேவ்!
இன்னிய தேதிக்கு சங்கத்தோட மூணாவது வருஷத்தை கிராஸ் பண்ணப் போறோம்! பார்டர் கிராஸ் பண்ணி தலயைக் காப்பாத்தின உன்னை இன்னிக்கு ஞாபகப் படுத்தலைன்னா எப்படி தேவ்?
தேவ்! நீயும் இன்று போல என்னிக்கும் நல்லா இருக்கணும் தேவ்!
ச: விவசாயி (எ) இளா
வயல்ல சாகுபடி பாத்திருக்கோம்! வயலும் வாழும்ல கேள்விப்பட்டிருக்கோம்! ஒரு வாழும் கடலை சாகுபடியை சங்கத்துக்கு அறிமுகப் படுத்தினதே நீதானே விவ்ஸ் இளா! நீ இல்லாட்டி சங்கம் புரடக்ஷன்ல விவாஜு தி பாஸ்னு ஒரு படம் எடுத்திருக்க முடியுமா? டெக்னிக்கல் விஷயங்கள் எவ்வளவு எங்களுக்கு கத்து கொடுத்திருக்கே!
அப்படித்தான் பாஸ் ஆப்படிப்பாங்க! அதையெல்லாம் பார்த்தா ஆணி பிடுங்க முடியுமா ன்னு தலக்கு தைரியம் கொடுக்குறது யாரு!
இந்த மூன்றாமாண்டு நிறைவு நாள் வரும்போது உன்னையெல்லாம் பெருமைப்படுத்தி சொல்லாட்ட்டி எங்க கட்ட வேகுமா இளா?
இன்று போல என்றும் வாழணும் இளா!
மற்றும் நம்ம சங்கத்து சிங்கங்கள், புலிகள் அனைவரையும் மனமார நினைவுகூர்ந்து என் மனம் திறம்த மடலை இத்தோட முடிச்சிக்கிறேன்
24 comments:
பதுங்கியிருக்கும் சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள் :))
மூணு சிங்கங்களையும் மனதார வாழ்த்துகிறேன்..
கூடவே இந்தப் பதிவைப் போட்ட கழுதை என்றைக்கு சிங்கமாக அவதாரமெடுக்கும் என்பதை அறிய ஆவலோடு உள்ளேன்..
(கழுதை அடைமொழி ஏன் எனில், முன்னாடி போனா கடிக்குது.. பின்னால போனா உதைக்குது.. அதனால.)
மூன்றாம் ஆண்டு.. கலக்கிட்டீங்க. குட்
/ஆணி பிடுங்குற அவஸ்தைல நீ வேணா மறந்திருக்கலாம் தல! சங்கத்த வெச்சி பிழைப்பு ஓட்டுற நாங்க மறங்க முடியுமா?
ச்
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
மூணு சிங்கங்களையும் மனதார வாழ்த்துகிறேன்..
கூடவே இந்தப் பதிவைப் போட்ட கழுதை என்றைக்கு சிங்கமாக அவதாரமெடுக்கும் என்பதை அறிய ஆவலோடு உள்ளேன்..
(கழுதை அடைமொழி ஏன் எனில், முன்னாடி போனா கடிக்குது.. பின்னால போனா உதைக்குது.. அதனால.)
//
தள
தள
ஒடியாங்க...!
ஒடியாங்க...!!
பழி தீர்த்துக்கிட்டாரு உ.தமிழன் அண்ணாச்சி
நீங்க யாருன்னு சங்கத்துல காமிங்க
:))))))))))))))
:)))))))
ஹி ஹி
//கூடவே இந்தப் பதிவைப் போட்ட கழுதை என்றைக்கு சிங்கமாக அவதாரமெடுக்கும் என்பதை அறிய ஆவலோடு உள்ளேன்..
//
ஆவலோடிருக்கும் முன்னால் கழுதைக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறது இந்த இளம் கழுதை!
//ஒரு வாழும் கடலை சாகுபடியை சங்கத்துக்கு அறிமுகப் படுத்தினதே நீதானே விவ்ஸ் இளா! //
தெய்வம்ப்பா
தெய்வம் :))))))
//நாமக்கல் சிபி said...
//கூடவே இந்தப் பதிவைப் போட்ட கழுதை என்றைக்கு சிங்கமாக அவதாரமெடுக்கும் என்பதை அறிய ஆவலோடு உள்ளேன்..
//
ஆவலோடிருக்கும் முன்னால் கழுதைக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறது இந்த இளம் கழுதை!
//
ஆஹா!
அப்ப சிங்கமெல்லாம் எங்க போச்சு ????
:))))))))
சிங்கங்களுக்கு வாழ்த்துகள்
3 க்கு வாழ்த்துக்கள் :)
//மற்றும் நம்ம சங்கத்து சிங்கங்கள், புலிகள் அனைவரையும் மனமார நினைவுகூர்ந்து என் மனம் திறம்த மடலை இத்தோட முடிச்சிக்கிறேன்//
தள! புலிகளா நான் ஒருத்தன் தானே... சைட்ல காசு வாங்கிட்டு யாரையும் உள்ள விட்டுட்டீங்களா ??? ;)))
//
ஆவலோடிருக்கும் முன்னால் கழுதைக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறது இந்த இளம் கழுதை!//
இளம்???
இங்க பாருடா கேப்ல கிடா வெட்டுவதை :)
முதல்ல சங்கத்து சிங்களுக்கு வாழ்த்துகள்!!!
அடுத்து
தொடர் ஆதரவிற்கு, தமிழ் படிக்க தெரிந்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!!!
உ,த அண்ணே,
இது கலவர பூமி.. சும்மா காத்து வாங்க எல்லாம் இங்க வரப்பிடாது ;)
\\சங்கம் ஆரம்பிச்சி ஒத்தோட மூணு வருஷம் முடிஞ்சிடுச்சு தல்!\\
வாழ்த்துக்கள் ;))
மூன்றாண்டுகள் கழிந்து விழா எடுக்கும் நேரத்தில் வ்ருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்திற்கும் - அதன் சிங்கங்களுக்கும் - சிங்கங்களாக மாறத் துடிக்கும் - விரும்பும் - கழுதைகளுக்கும் நல்வாழ்த்துகள்
சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவிற்கு
நயந்தாராவை அழைக்காத காரணத்தை முன்னிட்டு வெளி நடப்பு செய்கிறேன்.
கூட யாரும் வராத காரணத்தால் உள்ளயே உக்காந்துக்கிறேன்.
சிங்கங்களுக்கும்,இளஞ்சிங்கங்களுக்கும், புலிகளுக்கும்,இளம்புலிகளுக்கும்,கழுதைப்புலிகளுக்கும்,இளம்கழுதைகளுக்கும்,கெழ்ட்டுக்கழுதைகளுக்கும் வாள்!வாள்த்தை தெரிவித்துக் கொல்கிறேன்.
முப்பெரும் சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்!
சிபி சிங்கத்துக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்!
சிபி சிங்கம் புறாவுக்காக சதையே கொடுக்கும் போதும், சிங்கத்துக்காக என்ன தான் கொடுக்காது? :))
//நாமக்கல் சிபி said...
ச்
//
சிபி அண்ணே
இது யாருக்குக் கொடுத்த முத்தம்? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்! :))
3 ஆம் ஆண்டா? வாழ்த்துக்கள்... இளம் கழுதையா? ஹா ஹா ஹா...
:)))
//சிபி அண்ணே
இது யாருக்குக் கொடுத்த முத்தம்? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்! :))//
தல கைப்புள்ளைக்குதான்!
Post a Comment