அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன் உள்ளே போனான்.
கேப்டன் "வாங்க உட்காருங்க" அந்த இளைஞரும் உட்காருகிறார்.
"நீங்க என்ன மாதிரி கதை சொல்ல போறீங்க?"
"சார் இது ஒரு கிராமத்து காதல் , மற்றும் உணர்வுபூர்வமான கதை சார்"
"ம்ம் சொல்லுங்க"
"சின்ன வயசியிருந்து நீங்க கோவில் தான் வளருறீங்க. கோவில் வேலைகளை எல்லாம் பறந்து பறந்து செய்றீங்க. கோவில விட்டா உங்களுக்கு வேற உலகமே இல்ல.உங்க பேரு "கோவில் கிளி"
"என்னது கிளியா" கோபம் கலந்த ஆச்சர்யத்துடன் கேப்டன்
"ஆமா சார். அப்படி பட்ட உங்க வாழ்க்கையில ஒரு பொண்ணு உள்ள வர்ரா அவ பேரு "வெட்டு கிளி"
"ம்ம்ம்ம் அப்புறம்..." பேப்பர் வெயிட்டை கையில் எடுக்குறார் கேப்டன்.
"ஒரு கட்டத்தில வில்லன் வெட்டுகிளியை கெடுக்க வரும் போது வெட்டுகிளி அருவாமனையால ஒரே வெட்டா வெட்டிடுறா. அப்ப நீங்க வர்ரீங்க. உங்ககிட்ட வில்லன் பொணத்த பார்த்துக்க சொல்லிட்டு போலீஸ்கிட்ட போறேன்னு போறா வெட்டுகிளி. ஆனா போனவ போனவ தான். திரும்பி வரவே இல்ல. இரண்டு நாள் கழிச்சு பொணத்தோட நாத்தம் தாங்க முடியாம போலிஸ் வந்து உங்கபிடிச்சுபோயிடுது. சார் இந்த படத்தோட தலைப்பை கேளுங்களேன்"
கேப்டன் ஒன்றும் சொல்லாமல் நெற்றியில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
"சார் நீங்களாவது கேளுங்களேன்" கேப்டன் மச்சானிடம்....
"சார் நீங்க?" ஆபிஸ் பாயிடம்....
கேப்டன் பொறுமையிழந்து "டேய் சொல்லித்தொலடா..."
"எழவு காத்த கிளி" என்று முடிக்கும் போது...
கேப்டன் அவன் மூக்கில் ஒரு குத்து விட, அவன் இரத்தத்துடன் "சார் இந்த கதை பிடிக்கலன்னா "யானை பசிக்கு சோள பொறி"ன்னு இன்னொரு கதை இருக்கு அதுவேணா கேட்குறீங்களா?" என்ற போது..
வாயில் ஒரு குத்து...வாயில் இரத்தத்துடன் "சார் விடுங்க சார் நீங்க இல்லைன்னா வேற யாருமில்லையா என்ன? நான் சரத் சார்கிட்ட போறேன் "ஓட்டுல சோத்த போட்டா ஆயிரம் காக்கா" என்று முடிக்கும் முன் பேப்பர் வெயிட்டை கேப்டன் தூக்கி அடிக்க....அவனும் வெளியே ஓடி போகிறான்.
நெக்ஸ்ட்ட்ட்ட்ட்ட் என்று குரல் கொடுக்க அடுத்தது ஒருத்தர் வரார்.
"நீங்க??" கேப்டன்
"சார் நான் பேரரசு சாரோட அஸிஸ்டெண்ட் சார்"
"அட பரவாயில்லையே சொல்லுங்க என்ன கதை கொண்டு வந்திருக்கீங்க?"
"சார் சொல்றத அப்படியே இமேஜின் பண்ணி பார்த்துங்க சார்......
"பாருங்க சார் முதல்ல சார் சின்ன கவுண்டர் மாதிரி ஒரு ஓபனிங் சார்.... "கண்ணு பட போகுதய்யா"ன்னு எல்லாரும் பாடி ஆரத்தி எடுக்குறாங்க சார்..
அங்கிருந்து அப்படியே கட் பண்ணா சார் நீங்க விமானத்தில போறீங்க சார்
அங்க சார் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு பைட்டு சார். ஆனா வில்லன் Hacksaw ப்ளேடால வில்லன் ப்ளைன்ன அறுத்துடுறான் சார்.. ஆனா சார் நீங்க சார் பைலட் இல்லாம சார் விமானத்தையே ஓட்டுறீங்க சார்.
நீங்க சார் செத்துட்டதா நினைக்கிறாங்க சார் வில்லன் க்ரூப். ஆனா சார் நீங்க பாராசூட்ல ஆக்ரோஷமா தப்பிச்சு வர்ரீங்க சார்..
நீங்க வர்ர ஆக்ரோஷத்தப் பார்த்துட்டு வில்லன் க்ரூப் மட்டும் இல்ல சார் தியேட்டரே பயப்படுது சார். ஆனா சார் விதி வலியது சார். அந்த பாராசூட் நேரா நடு கடல்ல சார் விழுந்திடுது சார்.
அதுல பாருங்க சார் உங்களுக்கு ஒரு லக் சார்... பக்கத்தில டைட்டானிக் கப்பல் சார். நடுகடல்ல நாயர்கடையில சார் பேசஞ்சருக்கு "டீ" வாங்கி கொடுக்க நிக்குது சார். அதுல ஏறி சார் நீங்க தப்பிச்சிறீங்க சார். அங்க சார் உங்க ஹிரோயின் இருக்காங்க சார். அவுங்களோட அப்படியே ரோமான்ஸ் சார்...
அப்படியே கப்பல பொள்ளாச்சிக்கு விடுறோம் சார். ரோஸோட "தந்தன தந்தன தை மாசம்..."ன்னு ஒரு டூயட் சார். ரொம்ப டீசெண்டான பாட்டு சார்.
ஆனா பாருங்க சார் கப்பல் ஒரு பெரிய பனிகட்டியில இடிக்குது சார். எல்லோரும் தண்ணியில விழுந்திறாங்க சார். நீங்க சார் எல்லாரையும் காப்பாத்திறீங்க சார். ஆனா பாருங்க சார். ஒரு பெரிய பார்க்கவே பயமுறுத்துற இராட்சத திமிங்கலம் உங்க கிட்ட வருது சார்.
பக்கத்தில சுவரு வேற இல்ல சார். ஆனா நீங்க விடல சார். தண்ணில போட்றீங்க சார் ஒரு பெரிய பைட்டு.........விடுறீங்க சார் சைடுல ஒரு குத்து. அதுக்கு அப்படியே பொறி கலங்கி போகுது சார்.... அது கண்ணுக்கு அப்படியே மூணு மூணா தெரியிறீங்க சார்...அதுவும் போலீஸ் ட்ரெஸ்ல சார்.
அப்படியே அத மன்னிச்சு விடுறீங்க சார். கரைக்கு போய் எல்லாரும் ட்ரெயினை புடிக்கிறீங்க சார்.
அங்க ஃபுட்போட்ல வர்ர பசங்ககிட்ட சார் "இந்த மாதிரி தொங்கிட்டு வந்தா டிரைவருக்கு சைடி மிரர் மறைக்கும்"ன்னு அட்வைஸ் பண்றீங்க சார். உடனே அவுங்க திருந்தி உங்களுக்கு உதவியா வராங்க சார்.
ஒரு வயசான அம்மா இரயில்ல சார் கஷ்டப்பட்டு சுண்டல் வித்துட்டு வராங்க சார். அத பார்த்துட்டு உங்களுக்கு அப்படியே மனசு இளகி சார் ஐஞ்சு ரூபாய்க்கு சுண்டல் வாங்கி ஒண்டியா திங்கிறீங்க சார்.
அந்த வயசான அம்மா சார் உங்கள கட்டி பிடிச்சு சார் "எம்.ஜி.ஆருக்கு அப்புறம் நீ தான்ய்யா"ன்றாங்க சார், அங்க வைக்குறோம் சார் ஒரு பாட்டு. இரெயிலே ஆடுது சார் உங்க பாட்டுக்கு.
ஆனா சார் பாட்டு முடிஞ்சுதுக்கப்பறம் தான் சார் தெரியுது வில்லன் க்ரூப் ஒரு சைடு தண்ட வாளத்தை உடைச்சுடாங்கன்னு.
இரயில் மேல ஏறி தாவுறீங்க சார் ஒரு தாவு...போறீங்க சார் அப்படியே டிரைவர் சீட்டுக்கு.... போய் தூக்குறீங்க சார் உங்க ஒரு கால.. நிக்கிறீங்க சார் ஒரு சைடு முட்டு கொடுத்து....உங்க வெயிட்டுக்கு சார் இரயிலே ஒரு சைடு சாயுது சார்.
டிரெயின் முன்ன மாதிரி நேரா ஓடிடுது சார். அங்க வைக்குறோம் சார்ர்ர்ர்......
"போதும் தம்பி போதும்...நீங்க இது வரைக்கும் சொன்ன கதையிலேயே எனக்கு பிடிச்சு போச்சு இனிமே நேரா சூட்டிங் சார்...." கேப்டன் அந்தர்பல்டி அடிக்கிறார்.
"இல்ல சார் இப்ப இண்டர்வெல் வரைக்கும் தான் சார் வந்திருக்கோம் இன்னும் பாதி கதை இருக்கு சார்" என்றவுடன்
கேப்டன் "என்னது இன்னும் பாதி கதை இருக்காஆஆஆஆஅ" என்றபடி கேப்டன் மூர்ச்சையாகிறார்.....
டிஸ்கி1: இது காமெடிக்காக போட்ட பதிவென்பதால் அனிமேஷனில்(?) குத்தம் குறை இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்
டிஸ்கி2: பதிவுக்கான கரு ஜெயா டிவின் "உங்க ஏரியா உள்ள வாங்க"
66 comments:
டேய் மாப்ள.. சான்ஸே இல்ல அசத்திட்ட.. ஹைய்யோ கலக்கல் அனிமேசன்ஸ் வித் டயலாக்ஸ்..
சூப்பர் :-)
//
"எழவு காத்த கிளி" என்று முடிக்கும் போது...//
ROTFL :)))
//"எழவு காத்த கிளி" என்று முடிக்கும் போது...
//
ஹைய்யோ ஹய்யோ அலுவலகத்தில் இருப்பதால் சத்தமாக சிரிக்க முடியலையே
:)
வெல்டன் ஆதவன் !
ரொம்ப அருமை ஆதவா.. படங்களுக்கு ரொம்பவே மெனெக்கெட்டிருக்கிங்க போல.. அபாரமா இருக்கு.. கலக்கல் பதிவு.. பாராட்டுகள். :)
நண்பா.. இது எல்லாமே காலேஜ் கலக்கல்ஸ்.. எல்லா கலை நிகழ்ச்சியிலையும் பசங்களோட டார்கெட் விஜயகாந்த் தான்.. ஆனா உங்க அனிமேஷன் எல்லாமே சூப்பரப்பு..
கலக்கல்
கிராபிக்ஸ் சாரி அனிமேசன் கலக்கல் :))))
//அங்க சார் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு பைட்டு சார். ஆனா வில்லன் Hacksaw ப்ளேடால வில்லன் ப்ளைன்ன அறுத்துடுறான் சார்.//
:)))))))))))))))))
செம கலக்கல் ஆதவன்!
மோனோ ஆக்டிங்கில் இதுபோல் ஒரு ஸ்டோரி சொன்னாங்க ஒரு குரூப் செம கலக்கலா இருந்துச்சு அதுபோல் இதுவும் செம கலக்கல்!
//னசு இளகி சார் ஐஞ்சு ரூபாய்க்கு சுண்டல் வாங்கி ஒண்டியா திங்கிறீங்க சார்.//
பத்துமாய்யா ???
:)))
சூப்பர் ஆதவன். நான் கூட விஜயகாந்த் கிட்ட சொல்லலாம்னு ரெண்டு கதை எழுதி வச்சிருக்கேன் பாஸு. ஆனா இது அசத்தல். ஆஸ்கர் என்னய்யா அதுக்குமேல கூட கிடைக்கும் இதுக்கு.
அட்டகாசம் :-))
அனிமேசன் லாம் சூப்பர்..
யாருகிட்டயும் அஸிஸ்டெண்ட்டா இல்லாமலே உங்களை டைரடக்கரா போட்டு படமெடுக்க விஜய்காந்த் தயாரா இருக்காராம்.. டேமேஜர் கத்தினா கிளம்பி இண்டியா வந்துடுங்க..
படம் செம ஹிட்டாக சான்ஸ் இருக்கு..
நடுக்கடை நாயரும் ஹீரோயினா ரோஸும் தான் கொஞ்சம் கஷ்டம்:)
ஹைய்யோ:-)))))
சூப்பர். இந்தக் கதையைப் படம் பண்ணாலும் பண்ணிருவாங்க. எதுக்கும் காப்பிரைட் எடுத்துருங்க.
கலக்கல்
வருங்கால பிரதமரை பகைச்சுக்காதீங்க!
அம்புட்டுத்தான் சொல்லுவேன்..!
எனக்கு ரொம்ப பயமா இருக்கு... :(( நிஜமாவே அவர் இந்த கதைக்கு நடிச்சாலும் நடிப்பார் அப்படி மட்டும் ஏதாவது நடந்தது அண்ணா நீங்க தான் பொறுப்பு... :)))
ரொம்ப சூப்பர் அண்ணா :))) வழக்கம் போல எனக்கு மட்டும் படம் தெரியல... :(((
சூப்பரா இருக்குங்க ஆதவன்.. 'எழவு காத்த கிளி' க்கு என்னையறியாம சத்தம் போட்டு சிரிச்சிட்டேன். கலக்கல்ஸ்! :)
கலக்கல் ஆதவன்..பின்னி பெடல்எடுத்துட்ட
பாவம்யா விசயகாந்து
லியோ சுரேஷ்
நல்லா இருக்கு பாஸ்...
பஞ்ச பூதத்தையும் ஒரே கையில் அடக்கும் எங்கள் சிங்கத்துகு ஏத்த மாதிரி ஆகாயம், நிலம், தண்ணி, தண்டவாளம்னு சீன் வச்சி பின்னிட்டீங்க தல, சான்ஸே இல்ல :))))
ROTFL-o-ROTFL
@சென்ஷி
நன்றி தல..
----------------------------------
// கோவி.கண்ணன் said...
ஹைய்யோ ஹய்யோ அலுவலகத்தில் இருப்பதால் சத்தமாக சிரிக்க முடியலையே
:)
வெல்டன் ஆதவன் !//
நன்றி கோவி கண்ணன்
-----------------------------------
//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
ரொம்ப அருமை ஆதவா.. படங்களுக்கு ரொம்பவே மெனெக்கெட்டிருக்கிங்க போல.. அபாரமா இருக்கு.. கலக்கல் பதிவு.. பாராட்டுகள். :)//
நன்றி சஞ்சய். கேப்டனுக்காக இது கூட செய்யலன்னா எப்படி சஞ்சய் :)
//கார்த்திகைப் பாண்டியன் said...
நண்பா.. இது எல்லாமே காலேஜ் கலக்கல்ஸ்.. எல்லா கலை நிகழ்ச்சியிலையும் பசங்களோட டார்கெட் விஜயகாந்த் தான்.. ஆனா உங்க அனிமேஷன் எல்லாமே சூப்பரப்பு..//
நன்றி நண்பா
-----------------------------------
நன்றி பூங்குழலி
-----------------------------------
//ஆயில்யன் said...
கிராபிக்ஸ் சாரி அனிமேசன் கலக்கல் :))))//
ஹென்றி ஸாரி நன்றி ஆயில்யன் :)
// குசும்பன் said...
செம கலக்கல் ஆதவன்!//
நன்றி குசும்பரே
------------------------------------
// வித்யா said...
சூப்பர் ஆதவன். நான் கூட விஜயகாந்த் கிட்ட சொல்லலாம்னு ரெண்டு கதை எழுதி வச்சிருக்கேன் பாஸு. ஆனா இது அசத்தல். ஆஸ்கர் என்னய்யா அதுக்குமேல கூட கிடைக்கும் இதுக்கு//
அவர விடுறமாதிரி இல்ல போல..ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க வித்யா
--------------------------------------
//கார்த்திக் said...
அட்டகாசம் :-))//
நன்றி கார்த்திக்
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
அனிமேசன் லாம் சூப்பர்..
யாருகிட்டயும் அஸிஸ்டெண்ட்டா இல்லாமலே உங்களை டைரடக்கரா போட்டு படமெடுக்க விஜய்காந்த் தயாரா இருக்காராம்.. டேமேஜர் கத்தினா கிளம்பி இண்டியா வந்துடுங்க..
படம் செம ஹிட்டாக சான்ஸ் இருக்கு..
நடுக்கடை நாயரும் ஹீரோயினா ரோஸும் தான் கொஞ்சம் கஷ்டம்:)//
மேடம் ஏன் இந்த கொலவெறி...நான் சுயமரியாதையோட வாழுறது புடிக்கலையா??
-------------------------------
// துளசி கோபால் said...
ஹைய்யோ:-)))))
சூப்பர். இந்தக் கதையைப் படம் பண்ணாலும் பண்ணிருவாங்க. எதுக்கும் காப்பிரைட் எடுத்துருங்க//
ஆஹா இது எனக்கு தோணாம போச்சே டீச்சர்
// Satheesh said...
கலக்கல்//
நன்றி சதீஷ்
------------------------------------------
//டக்ளஸ்....... said...
வருங்கால பிரதமரை பகைச்சுக்காதீங்க!
அம்புட்டுத்தான் சொல்லுவேன்..!//
என்ன சூப்பரா ஒரு கதை ரெடி பண்ணியிருக்கேன்...அவரு படிச்சா நிச்சயமா சந்தோஷப்படுவாரு டக்ளஸ்
-----------------------------------------
//ஸ்ரீமதி said...
எனக்கு ரொம்ப பயமா இருக்கு... :(( நிஜமாவே அவர் இந்த கதைக்கு நடிச்சாலும் நடிப்பார் அப்படி மட்டும் ஏதாவது நடந்தது அண்ணா நீங்க தான் பொறுப்பு... :)))
ரொம்ப சூப்பர் அண்ணா :))) வழக்கம் போல எனக்கு மட்டும் படம் தெரியல... :(((//
நான் உனக்காக ஒரு டிஸ்கியே போடலாம் நினைச்சேன்.
படத்தோட படிச்சா தான் ஒரு பீலிங்கே கிடைக்கும் ஸ்ரீமதி :)
//காயத்ரி said...
சூப்பரா இருக்குங்க ஆதவன்.. 'எழவு காத்த கிளி' க்கு என்னையறியாம சத்தம் போட்டு சிரிச்சிட்டேன். கலக்கல்ஸ்! :)//
என்னோட பதிவுக்கு உங்க முதல் கமெண்ட்...ரொம்ப நன்றிங்க
--------------------------------------------
// Leo Suresh said...
கலக்கல் ஆதவன்..பின்னி பெடல்எடுத்துட்ட
பாவம்யா விசயகாந்து
லியோ சுரேஷ்//
வாங்க லியோ சுரேஷ். நன்றி
// VIKNESHWARAN said...
நல்லா இருக்கு பாஸ்.../
நன்றி விக்கி...
-----------------------------------
//Bleachingpowder said...
பஞ்ச பூதத்தையும் ஒரே கையில் அடக்கும் எங்கள் சிங்கத்துகு ஏத்த மாதிரி ஆகாயம், நிலம், தண்ணி, தண்டவாளம்னு சீன் வச்சி பின்னிட்டீங்க தல, சான்ஸே இல்ல :))))//
கதையோட கரெக்ட்டான கன்செப்ட் நீங்க ஒருத்தர் தான் புரிஞ்சிருக்கீங்க ப்ளீச்சிங். ரசிகர் மன்றத்தில முக்கிய பொறுப்பு உங்களுக்காக காத்திருக்கிறது தல...
--------------------------------------
//இராம்/Raam said...
ROTFL-o-ROTFL//
வாங்க இராம்..நன்றி
கலகீட்டீங்க பாஸ். பேசாம கேப்டன் கிட்ட போய் இந்த கதைய சொல்லி அடுத்த பேரரசு ஆகுங்க.
dea machi super o super da
ehta ellam un kitta ethierpakkla da
//நான் உனக்காக ஒரு டிஸ்கியே போடலாம் நினைச்சேன்//
டிஸ்கி போடறதெல்லாம் இருக்கட்டும் முதல்ல படத்த எல்லாம் (முடிஞ்சா) மெயில் பண்ணுங்க.. me the waiting... :))
//
"எழவு காத்த கிளி" என்று முடிக்கும் போது...
//
சிரிச்சி சிரிச்சி ஒண்ணுமே முடியலைப்பா
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ஆதவா!!
தனித் தனியா ஒண்ணுமே பாராட்டமுடியாது இந்த பதிவுலே
கதை, அனிமேஷன் வேறே எதை சொல்ல எல்லாமே சூப்பர் :-)
அலுவலகம் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டியதாப் போச்சு
கலக்கல் காமெடி :))
இத.. இத... இதத்தான் எதிர்பார்த்தேன்.
கலக்கல். சான்சே இல்ல.
இன்டெர்வல்லுக்கு அப்புறம் கதைக்காக வெயிட்டீஸ்.
கேப்டன் நடிக்கலைன்னா பரவாயில்ல அப்படியே ஜெ.கெ.ரித்தீஷுக்கும் செட்டாகும்.
இல்லைன்னா நான் இருக்கவே இருக்கேன். ஆனா ஒண்ணு கேட் வின்ஸ்லெட் கெடைக்கலன்னா அஞ்சலினா ஜொலியையாவது புக் பண்ணிடுங்க போதும். அப்பதான் ஆஸ்கர்ல பாப்பாய்ங்க.
அப்போ பம்பரம் விடுவது இன்ரவலுக்குப் பிறகா??
நல்லா இருக்குது...
பின்னிட்டிங்க போங்க தல.
அருமை.
அப்புறம் சார் விஜய்காந்த் சாருக்கு நீங்கதான் சார் அடுத்த கொ.ப.செ. சார் சார்...!
ஸ்கிரிப்ட்லே மாத்தம் செய்யணும்.
இப்பத்தான் 'வில்லு' பார்த்து முடிச்சேன்.
ப்ளேனை யெல்லாம் கத்தியில் அறுக்கும் சீன், கதாநாயகன் வானத்துலே இருந்து பாராசூட்லே வர்றது எல்லாம் அதுலே வந்துச்சு.
பேசாம ராக்கெட்லே போறமாதிரி மாத்துப்பா.
:))))
கலக்கல்
கலக்கல்
கலக்கிட்டீங்க.. இண்டர்வெல்க்கு பின்பு வரும் கதையையும் அனிமேஷனோடு அடுத்த பதிவில் பதியவும்.. :)
// விஷ்ணு. said...
கலகீட்டீங்க பாஸ். பேசாம கேப்டன் கிட்ட போய் இந்த கதைய சொல்லி அடுத்த பேரரசு ஆகுங்க.//
அட வாங்க விஷ்ணு. இந்த தடவை டயலாக் எதுவும் விடாம போறீங்க?
--------------------------------------
//dinesh said...
dea machi super o super da
ehta ellam un kitta ethierpakkla da//
டாங்ஸ் தினேஷ்
---------------------------------------
//RAMYA said...
தனித் தனியா ஒண்ணுமே பாராட்டமுடியாது இந்த பதிவுலே
கதை, அனிமேஷன் வேறே எதை சொல்ல எல்லாமே சூப்பர் :-)
அலுவலகம் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டியதாப் போச்சு
கலக்கல் காமெடி :))//
நன்றி ரம்யா. சிரிப்பு வந்தா உடனே சிரிச்சிருங்க ரம்யா. அடக்கி வச்சிராதீங்க சரியா :)
//இளைய பல்லவன் said...
இத.. இத... இதத்தான் எதிர்பார்த்தேன்.
கலக்கல். சான்சே இல்ல.//
அவர கலாய்ச்சு பதிவு போட்டா உங்களுக்கு அம்புட்டு சந்தோஷமா...இருங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப சொல்றேன்.
//இன்டெர்வல்லுக்கு அப்புறம் கதைக்காக வெயிட்டீஸ்.//
இன்னுமா??? அவ்வ்வ்வ்வ்
// இல்லைன்னா நான் இருக்கவே இருக்கேன்.//
நீங்க ஒரு மொக்கைச்சாமின்னு தான் தெரியுமே. கண்டிப்பா நீங்க தான் அடுத்த ஹீரோ
---------------------------------------
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அப்போ பம்பரம் விடுவது இன்ரவலுக்குப் பிறகா??
நல்லா இருக்குது...//
ஆஹா இத மிஸ் பண்ணிட்டேனே!!!
-----------------------------------------
//மதிபாலா said...
அப்புறம் சார் விஜய்காந்த் சாருக்கு நீங்கதான் சார் அடுத்த கொ.ப.செ. சார் சார்...!//
ஏன் தலைவா இந்த கொலவெறி????
// துளசி கோபால் said...
ஸ்கிரிப்ட்லே மாத்தம் செய்யணும்.//
ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
// இப்பத்தான் 'வில்லு' பார்த்து முடிச்சேன்.//
என்னா தகிரியம்????
// ப்ளேனை யெல்லாம் கத்தியில் அறுக்கும் சீன், கதாநாயகன் வானத்துலே இருந்து பாராசூட்லே வர்றது எல்லாம் அதுலே வந்துச்சு.
பேசாம ராக்கெட்லே போறமாதிரி மாத்துப்பா.//
டீச்சர் இதெல்லாம் தற்செயலா நடந்த ஒன்று. அதுவுமில்லாம நான் இதுவரைக்கும் வில்லே பார்க்கல. அப்புறம் என் கதைய வில்லோடு ஒப்பீடு செய்யிறதயே நான் வன்மையாக கண்டிக்கிறேன் :)
------------------------------------------
நன்றி பட்டாம்பூச்சி
---------------------------------------
நன்றி ச்சின்னபையன்
-------------------------------------
நன்றி பார்சா குமாரன்
-----------------------------------------
சதீஷ்குமார் எதையும் தாங்கும் ஆள் நீங்க தான். எவ்வளவு தைரியமா முழு கதையும் கேட்கிறீங்க.....
Excellent.
விழுந்து விழுந்து சிரித்தேன்.
பாராட்ட வார்த்தைகளே இல்லை தல....
உங்கல் திறமைக்கு........
எதிர்கால பதிவுலகம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடிய முயற்சி............
இனிமேல் வெறுமனே எழுதுவது என்பதை மாற்றவேண்டும்....
இதுமேல் கூடுதல் பணிகளுடன் வரும் எழுத்துக்கள் மட்டுமே ரசிக்கப் படும்....
இனிமேல் நடிகர்களுக்கு கதை சொல்பவர்கள் இப்படித்தான் போய் சொல்லவேண்டிய சூழல் ஏற்படலாம்..
ஆனால் கதை விஜயகாந்துக்கு மட்டும் இல்லாமல் அவரது பாதையில் பயணித்து வரும் சரத்குமாருக்கும்
எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் விஜய் அஜித் தனுஷ் சிம்பு ஆகியோருக்கு கூடப் பொருந்துகிறதே...
என்ன ஐந்து ரூபாய்க்கு சுண்டல் விற்கும் பாட்டியின் வசனத்தை மட்டும் மாற்றி அவரவர்க்கு தகுந்தமாதிரி எழுத வேண்டும்
இதை நீங்கள் நேரடியாக ஒருமுறை திரை நட்சத்திரங்களுக்கு போட்டுக் காட்டி வாய்ப்பு பெற்றிருக்கலாம்.
பல சூப்பர் ஹிட் திரைப்படங்களைவிட நன்றாக இருக்கிறது.
செம கலக்கல் ஆதவன் !!
// ஒரு பெரிய பார்க்கவே பயமுறுத்துற இராட்சத திமிங்கலம் உங்க கிட்ட வருது சார்.பக்கத்தில சுவரு வேற இல்ல சார். ஆனா நீங்க விடல சார். தண்ணில போட்றீங்க சார் ஒரு பெரிய பைட்டு.........//
:-))))
நல்லாயிருக்குய்யா ;-))
சூப்பர் அனிமேசன் - சூப்பர் கத - தூள் கெளபீட்டீங்க
நல்லாருக்குப்ப்பா - படம் பாத்த திருப்தி இப்பவே வந்திருச்சி
அட்டகாசம்...
Dear sir
I immensely enjoyed the write up,laced with abundant sense of humour!
Rajagopalan,Dubai
பயங்கரம்! அனிமேஷனும் அமர்க்களம்! இந்த மாதிரி ஒரு இடுகையைப் படித்து வருடக்கணக்காகிவிட்டது!
கலக்கல்ஸ் :)
:))
பாவம்யா கேப்படன் அந்தாளைப்போட்டு அறுக்கறிங்க..
கதை கலக்கலப்பு !
சார் முடியல சார் :)) :))
ஆதவன்... எப்படிப்பா இதெல்லாம்? அலுவலகத்தில் இருந்தும் கூட வாய் விட்டு சிரித்து விட்டேன் "எழவு காத்த கிளி"ங்கற டைட்டில் பாத்து...ஆமா? கேப்டனுக்கு மட்டும் ஏன் கோவம் வருது? அனிமேஷன் படங்கள் சூப்பர். ஒருத்தரை கலாய்க்கணும்னா எவ்வளவு வேணாலும் கஷ்டப்படலாம் போல? வாழ்த்துக்கள்:))))
Super hit story... LOL.. chanceyae illa..
chance ila adhavan... cha really superg... i enjoyed a lot.. ena, office la irunthanala sathama enjoy pana mudiyala........
Superoooo super.....
waiting for next action story....
யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.
யாருடைய பின்னூட்டமும் தேவையில்லை.
படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்
“வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)
வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!
anna kathaiya ennaku thanga vijaykanth kita pesi nan epadium director aagduren
Post a Comment