Monday, June 30, 2008

கடைசி விருந்து போடுறன்...எல்லோரும் ஓடி வாருங்கோவன்..

என் இனிய வலைப்பதிவு சகாக்களே வாங்கோ...

இண்டைக்கு இந்த சிங்கத்தோட கடைசி தினம்.
தினசரி வந்துட்டுப் போறியள்.
கடைசி நாளண்டாவது ஒரு விருந்து கொடுக்காமல் போகேலுமே?
அப்படிப் போறதும் சரியில்லைத்தானென்ன?
அதனால உங்க எல்லோருக்கும் விருந்தொண்டு ஏற்பாடு செஞ்சிருக்கிறனான்.


விருந்தெண்டு கூப்பிட்டுப் போட்டு சும்மா வந்த உடனே பந்தியில உட்கார வைக்க ஏலுமே ?
அதனால தான் உங்கட அனைவரிண்ட வேண்டுகோளுக்குச் செவி சாய்ச்சு நான் வ.வா.சங்கத்துச் சிங்கமான கதை சொல்லப் போறேன்.
(ஆருடா அவன்? பேசவிடாமல் கூப்பாடு போடுறது? )

அதை நினைக்கேக்க இண்டைக்கும் எனக்கு மண்டை காயுது.இருங்கோ..ஒரு சோடா குடிச்சுக் கொள்றன்.

நான் சும்மா எண்ட பாட்டுக்கு ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கேக்க இந்த கேயாரெஸ் என்று ஒரு வலைப்பதிவர் இருக்காரில்லையோ?
ஒரு நட்ட நடுராத்திரியில, நான் சுகமா நித்திரையில இருக்கேக்க கோல் பண்ணி
" தம்பி உங்கட காதல் கதையைச் சொல்லுங்கோ ..எனக்கு இங்க பொழுது போகேல்ல " என்றார்.
அவருக்குப் பொழுது போகாததுக்கெல்லாம் நான் கதை சொல்லிக் கொண்டிருக்கேலுமே
?

ஆனாலும் வயசுல பெரியவர் ஒருத்தரு,ஆயிரத்தெட்டுக் காதலைப் பார்த்தவரு அமெரிக்காவுலருந்து இப்படி அப்பாவிச் சிறுவன்கிட்டக் கேட்கும் போது
'என்ன அங்கிள் , உங்களுக்கென்ன விசரே ? என்னை மாதிரி அப்பாவிச் சிறுவன்கிட்டப் போய் காதல் கதையெல்லாம் கேக்குறியள் ? நான் ஏதாவது சொல்லப் போய் அதைப் பதிவாப் போட்டு பேர் வாங்குற எண்ணமே ? இப்படித்தானே வழமையாப் பதிவு போட்டு மத்தவங்களுக்கு ஆப்பு வைக்கிறியள் ?'
எண்டெல்லாம் கடுமையாகப் பேச ஏலுமே?.
அதனால ஏதேதோ தூக்கத்துல உளறி வச்சன்.

இதை மனசுல வச்சிக் கொண்டு போன மாசம் அவர் திரும்ப என்கிட்ட
"வார மாசத்து சிங்கம் நீதான் பையா..வந்து தினமும் ஒரு பதிவு எழுது.இல்லையெண்டால் அண்டைக்கு நீ சொன்னதெல்லாம் ரெக்கோர்ட் பண்ணி வச்சிருக்குறன்.அதை ஊரைக் கூட்டிப் போட்டுக் காட்டி இருக்குற மானத்த கத்தார்லிருந்தே கப்பலேத்திடுவேன் " னு கடுமையாக மிரட்டிப் போட்டதால உடனே பதவியேற்றுக் கொண்டு அவசரம் அவசரமா எழுத வேண்டியதாப் போச்சு.
உதுதான் நான் சங்கத்து சிங்கமான கதை.

அதனால சிங்கமாக்கி எழுத வாய்ப்புத் தந்த கேயாரெஸ் அங்கிளுக்கு நன்றி தெரிவிச்சுக் கொள்றதோட,

நானேதோ சும்மா மொக்கையாப் போட்ட பதிவெல்லாத்துக்கும் கூட தங்கட கூட்டம் பரிவாரத்தோட வந்து இதுவரைக்கும் 1078 பின்னூட்டம் போட்ட
கோகுலன்,ஈரோடு கார்த்திக்,மங்களூர் சிவா,மதுரையம்பதி,கவிநயா,கேயாரெஸ்,தமிழன்,இளா,ஜி.இராகவன்,சீனா ஐயா,கானா பிரபா,ஆயில்யன்,தமிழ்ப் பிரியன்,நட்சத்திரா,இலவசக் கொத்தனார்,தூயா,வெட்டிப் பயல்,ச்சின்னப் பையன்,மீறான் அன்வர், ஸ்யாம்,ராமலக்ஷ்மி,கேயார்பி,குமரன்,இரா.வசந்தகுமார்,தமிழன்,சத்யா,துளசி கோபால்,சென்22,சஞ்சய்,டீ.வி.ராதாகிருஷ்ணன்,லொட்டோ 649,ரைஹானா,கிரி.கோவி.கண்ணன்,திவ்யா,ஸ்ரீதர் நாராயணன்,வடகரை வேலன்,நாகூர் இஸ்மாயில்,சின்ன அம்மிணி,கானகம் ஜெயக்குமார்,ஷைலஜா,டெல்பின்,அறுவை பாஸ்கர்,பஹீமாஜஹான்,சக்தி,கயல்விழி முத்துலெட்சுமி,அஸ்பர்,மாணவன்,அம்பி,புரட்சித் தமிழன்,ஜாக்கி சேகர்,பிரேம் ஜி,இராம்,தமிழ் மாங்கனி,தமிழ்ப்பறவை,ஜே.ஜே.ரீகன்,நிஜமா நல்லவன்,புதுவை சிவா,வயசுப் பொண்ணு,வால்பையன்,கார்த்திக்,நாதாஸ்,மஹாராஜா,மல்லிகை,புதுகை எம்.எம்.அப்துல்லாஹ்,கோவை விஜய்,நமீதா,ராப்,விஜயகோபால் ஸ்வாமி,லதானந்த்,முரளி கண்ணன்,புதுகைத் தென்றல்,வெயிலான்,சென்ஷி,போக்கிரி பையன்,நாமக்கல் சிபி,சீவியார்,ராஜ நடராஜன்,சீமாச்சு,சித்ரா மற்றும் அனானி அண்ணாக்கள்,அனானி அக்காக்கள்
அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்றன்.

அவ்வளவு பேரும் இனிப் பந்தியில உட்காருங்கோ.
இது எல்லாம் இலங்கைச் சாப்பாடுகள் தான்.
'எங்கேயடா சோறு ?' எண்டு தேடாதேயுங்கோ.
அதை இன்னும் கன காலம் கழிச்சு இந்தச் சிறுவன் நல்லா வளர்ந்ததுக்குப் பிறகு கல்யாணச் சாப்பாடாப் போடுறன்..என்ன சரியே? இனிச் சாப்பிடுங்கோ..

சாப்பிட்டு முடிச்சிட்டீங்களே..?

மீண்டும் வாங்கோ..உங்களிட்ட இன்னொண்ணும் சொல்ல வேண்டிக் கிடக்கு...
உங்களில நான் பெயர் சொல்றவை மேடைக்கு வாங்கோ பார்ப்பம்.


தமிழ்ப் பிரியன்,த்ரிஷா,ஜி.இராகவன்,சுவலக்ஷ்மி,மங்களூர் சிவா,நமீதா,தமிழ்ப்பறவை,சதா,மீறான் அன்வர்,சுஷ்மிதா சென்,கேயாரெஸ்,ஐஸ்வர்யா ராய்,லதானந்த்,மீரா ஜாஸ்மின்,சிம்பு,கோபிகா,புரட்சித் தமிழன்,நயண்தாரா,ஜாக்கி சேகர்,சரண்யா,அம்பி,அசின்,வால் பையன்,கோபிகா,இளைய கவி,விஜயலக்ஷ்மி,கானாபிரபா,பாவனா,சஞ்சய்,பூஜா,சீவியார்,லைலா,கோகுலன்,இலியானா

இப்போது மேடையில வந்து நின்றிருக்கும் இவங்க எல்லோரும் தான் என்ரை பதிவுகள்ல சமயத்துல வந்து நடிச்சுக் கொடுத்தவங்கள்.இவையளுக்கும் எனது நன்றிகள்.எல்லோரும் இவையளுக்குக் கும்மியடிங்கோ இனி..
என்ன குழம்பிட்டியளே?
கை தட்டுங்கோ என்று சொன்னனான்.

என்னை இப்போ தமன்னா ஓரமாக் கூப்பிடுறா..இருங்கோ ..என்னெண்டு கேட்டுப் போட்டு வாறன்.அது வரையில நீங்க இந்த ஐஸ்கிறீம்களைச் சாப்பிடுங்கோ.


ஒண்டுமில்ல..அவவுக்கு என்னோட மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டவ..
என்ரை சின்ன வயசுக் காதல் கதையைக் கேட்டவ.அவ கேட்டாப்பிறகு மறுக்க ஏலுமே?சரி..இங்கேயே போட்டுக் காட்டுறனெண்டு சொன்னனான்.நீங்களும் பாருங்கோ...!


விருந்துக்கு வந்த அவ்வளவு பேருக்கும் என்னுடைய நன்றிகள்...!

இனிச் சிங்கம் போகப் போகுது.
அழாதேயுங்கோ..தயவுசெய்து ஒருத்தரும் அழாதேயுங்கோ.
சிங்கம் வேறு எங்கேயும் போகாது.

இங்கெங்கோ தான் உலாத்திக் கொண்டிருக்கும்.
உங்களையெல்லாம் பார்த்துக்கொண்டுதானிருக்கும்.
மீண்டும் சந்திப்பம்..அதுவரையில்..

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

இந்த இஞ்சினியர் மட்டும் இல்லேன்னா...

ஏனுங், இப்ப நான் என்ன சொல்ல வர்றேனுங்கன்னா...

ஆதிகாலம் தொட்டு ரொம்பத் திட்டு வாங்குற அப்பாவிப்பசங்க நம்ம இஞ்சினியர் பசங்க தானுங். இந்த
பேப்பர், டீவி, இண்டர்நெட், தமிழ் சினிமா.. இப்பிடி அம்புட்டுப் பேருக்கும் கும்மியடிச்சி விளையாட வாய்ச்ச பசங்க நம்ம இஞ்சினியர் பசங்க தானுங்..

இஞ்சினியர் பசங்க மட்டும் இந்த உலகத்துல இல்லேன்னா இந்த உலகம் இந்தக் காலத்துல எப்படி இருந்திருக்குமுங்?

சும்மா ஒரு கற்பனை தானுங்..வந்து ஒரு பார்வை எட்டிப்பாத்துபோட்டு போங்..


Aeronautical Engineers

Electronics Engineers


Mechanical Engineers

Civil Engineers


Communication Engineers

Computer Engineersஇப்படிப் பக்கத்துல நின்னு சிரிச்சிட்டிருக்குற இந்த ஹீரோ யாருன்னு தெரியுமுங்ளா? அட..சத்தியமா நானில்லீங்..இவுரும் ஒரு இஞ்சினியர் தானுங்..அமெரிக்காவுல ஒரு பெரிய பல்கலைக்கழகத்துல பெரிய இஞ்சினியரா பொட்டி தட்றவரு..அவரு பேரு கோகுலன்.வலைப்பக்கமெல்லாம் வச்சிருக்காருங்..

அவரு என்ன சொல்றாருங்னா...கொஞ்ச காலத்துக்கு முன்னாடி கார்,பைக் ன்னு பந்தா காட்டிட்டு காதுல புகை வர வச்ச பசங்க எல்லாம் இப்ப பஸ்லயும், ரயில்லயும் தொங்கிட்டே போயிட்டிருக்காணுங்ளாம்.. காரணம் என்னான்னு கேட்டீங்கன்னா பெட்ரோல், டீசல் விலை ரொம்ப ஜாஸ்தியாகி போயிடிச்சில்லீங்ளா?

இந்தப் பெட்ரோல் விலை ஜாஸ்தியாகிடுச்சுங்றதால நம்ம பசங்க ரொம்ப நொந்துட்டாங்..
இதுல கொடுமை என்னன்னா 'பெட்ரோல்' னு பெயரிருக்குற பசங்கள கல்யாணம் பண்றப்போ சீதனம் கூட ஜாஸ்தியாக் கொடுக்க வேண்டியிருக்குன்னா பார்த்துக்குங்..

இன்னும் 20 வருஷம் போச்சுன்னா வாகனத்துக்கு பெட்ரோல் தேவையே இருக்காதுங்.இந்த வீடியோ என்னன்னா, அப்போ பெட்ரோல் இல்லாமலேயே எப்படி வாகனம் போவுது ?
அதுல எப்படி பயணம் போறதுன்னுதாணுங்..அட, சும்மா பார்த்துட்டு போகலாமுங்....


இந்த அக்யூஸ்டு மக்களின் Mail-ID-க்களை யாராச்சும் போட்டுக் குடுக்கறீங்களா?

வ.வா.ச வானொலி நிலையம்! முக்கிய அறிவிப்பு!

கீழ்க்கண்ட அக்யூஸ்டு மக்களின் Mail-ID-க்களை யாராச்சும் போட்டுக் குடுக்கறீங்களா மக்கா?

Self, சொந்த பந்தம், நட்பு வட்டம் - யார் வேணும்னாலும் போட்டுக் கொடுக்கலாம்! ரகசியங்கள் காப்பாற்றப்படும்!
ஸோ, பின்னூட்டம் போடும் போது, கும்மிக்குத் தனியாப் பின்னூட்டம் போடுங்க!மின்னஞ்சல் முகவரிக்குத் தனியாப் பின்னூட்டம் போடுங்க! :-)

Accused:
1.தமிழ் Vs உதித் நாராயண் - அம்பி
2.இரண்டில் ஒன்று......!!!!!!!!!!!!!!! - TBCD
3.தண்டவாளப்பயணம் – அருட்பெருங்கோ
4.நிலாவுக்கு இன்று இரண்டு - நிலா
5.திரும்பிப் பாருடி! - லக்கி லுக்
6.ரெட்டை ஜடை வயசு - அம்பி
7.தமிழ் பிரியனின் 'தமிழ் இலக்கியத்தில் 'இரண்டு'' - தமிழ் பிரியன்
8.கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம் - KRP
9.ஒரே ஒரு கதை - NewBee
10.இரண்டடியில் இன்பம் - செல்விஷங்கர்
11.இதென்ன கலாட்டா? - பினாத்தல் சுரேஷ்

எதுக்கு அக்யூஸ்டு?
இவங்க எல்லாரும் சேர்ந்து, கூட்டுக் களவாணித்தனம் பண்ணனும்! ரெண்டாங் கட்ட ரெண்டுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் மார்க் போடணும்?
எதுக்கா?
ஆனாலும் இம்புட்டு மறதி கூடாது! நாங்க மறந்தாலும் நீங்க மறக்கலாமா???
சாரி மக்கா! நம்ம ரெண்டு போட்டி, ரெண்டு மாசமா லேட்டானதுக்கு!

போட்டி போட்டது இங்க! போட்டி ரூல்ஸூ இங்க!

* முதல் கட்ட ரெண்டில், ரவுண்டு வந்த 11 பேருக்கும் பாராட்டுக்கள்!
** ரெண்டாம் கட்ட ரெண்டில், ரவுண்டு வர வாழ்த்துக்கள்!!

*** ரெண்டாங் கட்ட ரவுண்டில் ரெண்டாங் கெட்டானா மார்க் போடவும் வாழ்த்துக்கள்!!! :-)

Sunday, June 29, 2008

ஆபிஸில் அதிகம் ஆணி பிடுங்குபவர்களுக்கு...!

ஆப்பிஸர்களுக்கு வணக்கம்..!

வாங்க ஆப்பிஸர்களே..!


இன்னிக்கு வ.வா.சிங்க வாத்தியார் என்ன சொல்லித்தரப் போறேன்னா ஆபிஸ்ல புடுங்குற ஆணிகளால ஏற்படுற மன அழுத்த நோய்களுக்கு என்ன பண்ணலாம்? அதையெப்படி தவிர்க்கலாம்னு பார்க்கலாம்,வாங்க !

ஞாயித்துக்கிழமையான இன்னிக்கு ரொம்ப ஜாலியா உக்காந்து இதைப் படிச்சிட்டிருக்கீங்க.
ஆனா நாளைக்கு வேலைக்குப் போகணும்னு நெனச்சாலே சும்மா அதிருதுல்ல..
அப்படி அதிர்ந்தா உங்களுக்கும் ஆபிஸ்ல பிடுங்குற ஆணிகள் காரணமாக லேசா மன அழுத்தம் ஏற்பட்டிருக்குன்னு புரிஞ்சுக்கலாம்.

பொதுவாகவே ஆபிஸ்கள்ல அதிகமதிகமா ஆணி பிடுங்குறவங்களும்,ஆணியே பிடுங்காம சும்மா தூங்கி,சாப்பிட்டு சம்பளம் வாங்குறவங்களுக்கும் இந்த மன அழுத்தம்குற நோய் பாதிப்பு கட்டாயம் ஏற்படுமாம்.

சரி..இந்த நோய் பாதிச்சா என்ன ஆகும்குறதை முதல்ல இந்த 10 செக்கண்ட் வீடியோக்கள்ல பாருங்க.
பார்த்துட்டீங்களா?

இது மாதிரி சண்டை போடுற,கோபப்படுற மனநிலை எதனால ஏற்படும்னா ஒரே மாதிரியான வேலையை தொடர்ந்து செய்யுறதாலயோ,இல்லேன்னா விருப்பமில்லாத வேலையை தொடர்ந்து செய்யுறதாலயோ அதுவும் இல்லேன்னா தெரியாத வேலையை தொடர்ந்து செய்யுறதாலயோ ஏற்படுமாம்.

இதை புரிஞ்சுக்கிட்ட சில ஆபிஸ்கள், வேலை செய்றவங்க நலனுக்காக பல நல்ல நடவடிக்கைகளை எடுத்திருக்காங்க.

ஆபிஸுக்குள்ளேயே சின்னச் சின்ன விளையாட்டுக்கள்,மசாஜிங்க் செண்டர்கள்,கொஞ்ச நேரம் தூங்கியெழும்புறதுக்கான ஓய்வறைகள் னு சில விஷயங்களை ஆபிஸுக்குள்ளேயே வைக்கிறாங்க.இதனால என்ன பயனுன்னு கேட்டீங்கன்னா வேலை பார்க்குறவங்களுக்கு வேலையில சலிப்போ,களைப்போ ஏற்படும் போது இதுல ஏதாவது ஒண்ணுல போய் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும்.
இது சுவிட்சர்லாந்துல உள்ள கூகுள் நிறுவனத்தில பண்ணியிருக்கிற ஏற்பாடுகள் சில.

அடுத்து இந்த மன அழுத்தத்தை குறைக்க ப்ரீத்தி ஸிந்தா அக்கா என்ன சொல்றாங்கன்னா உங்க மேனேஜரோ இல்லைன்னா உங்கக்கிட்ட வேலை பார்க்குறவங்களையோ அடிக்கடி இப்படி அன்பா அரவணைச்சிக்கிட்டா யாருக்கு மன அழுத்தம் இருக்கோ அது அப்படியே காணாமப் போயிடுமாம்.
இப்போ நம்ம காதல் மன்னன்,சீனியர் சிங்கம்,சீனியர் ஆப்பிஸர்,சீனியர் பதிவர்,கேமராக் கவிஞர் சீவியார் அண்ணாச்சி இருக்காரில்லையா?
( இப்படியெல்லாம் சொல்லலேன்னா என்னோட கல்யாணத்துல fப்ரீயா போட்டோ எடுத்துக் கொடுக்க மாட்டேன்னுட்டார்.அதான்..)

அவர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 15 மணித்தியாலம் ஆபிஸ்ல ஆணி புடுங்குறவரு. 'தசாவதாரத்தையே' மிட் நைட் ஷோ வாகத்தான் பார்த்து மிரண்டிருக்கார்னா பார்த்துக்குங்களேன்..!

அப்படிப்பட்டவர்க்கிட்ட ஆபிஸ் பத்தி, மன அழுத்தம் பத்தியெல்லாம் கேட்காம இருக்க முடியுமா?

அதனால அவர்க்கிட்ட 'ஆபிஸ்ல ரொம்ப ஆணிக்கு மத்தியில இருக்கீங்க..மன அழுத்தம் ஏற்பட்டா என்ன செய்வீங்க ?'ன்னு கேட்டேன்.
(அவர் போட்டோ பார்த்துட்டு 'முற்றத்துல சேர்ந்திருக்கிற சருகுகள் மேல போய் ஆனந்தமா படுத்துக்குவேன்'னு சொல்லியிருப்பார்னு நீங்க நெனச்சிட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லப்பா )

அவர் என்ன சொல்றார்னா ,

* மன அழுத்தம் இருக்குற மாதிரி உணர்றவங்க முதல்ல போய் நல்ல ஒரு கேமரா வாங்கிக்கணுமாம்.
அதுல கண்டதையும் போட்டோ எடுத்து ஆபிஸ்ல இருக்கும் போதே பிக்காஸாலயோ,இல்லேன்னா ஜிம்ப் லயோ போய் ஏதாவது செஞ்சு அழகுபடுத்தி அதையே பார்த்துட்டிருந்தா மன அழுத்தம் காணாமப் போயிடுமாம். இந்த நேரத்துல டீ யோ, காப்பியோ குடிச்சுக்கலாம்.

* அப்புறம் தமிழ்மணம், தேன்கூடு இருக்கில்ல..அதுல போய் முதல்ல இருந்து கடைசி வரைக்கும் இருக்குற ஒவ்வொரு பதிவா பார்த்துட்டிருக்கணுமாம்.இப்படியே பார்த்துட்டிருக்கும் போது சாப்பாட்டு நேரம் வருமாம்.அப்போ நல்லா சாப்பிட்டா மன அழுத்தம் காணாமலே போயிடுமாம்.

* இப்போ சாப்பிட்டுட்டு வந்துட்டீங்களா ? உடனே லேசா ஆபிஸுக்குள்ளயே சின்னக் குட்டித் தூக்கம் ஒண்ணு போட்டுட சொல்றார்.
குட்டித் தூக்கம்னா என்னன்னு தெரியாதவங்களுக்காக இந்தப் படங்கள்.
(ஏர் போர்ட்ல எடுத்தது - கடைகளைத் திறந்து வச்சிட்டு என்னமாத் தூங்குறாங்க..ஹ்ம்ம் )
* தூங்கி எழுந்ததுக்கப்புறம் ஏதாவது பதிவு எழுதணுமாம்.பதிவு என்ன சம்பந்தமா வேணும்னாலும் இருக்கட்டும்னு சொல்றாரு.அவர் கூட அமெரிக்கால கார் ஓட்டி போலிஸ்ல மாட்டிக்கிட்ட கதையை அப்படித்தான் எழுதினாராம்ல..

* இப்போ பதிவெழுதி முடிச்சதுக்கப்புறம் உங்க ஆபிஸ் வேலை நேரம் முடிஞ்சிடுமாம். உடனே கேமராவையும் எடுத்துட்டு வெளிய வந்து பஸ் புடிச்சி,ட்ரையின் புடிச்சி அப்புறம் பைக் ல அப்பப்ப போட்டோ எடுத்துக்கிட்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தா மன அழுத்தம் காணாமலே போயிடுமாம்.

இதுல இருந்து அவர் ஆபிஸ்ல வேலையே பார்க்கலைன்னு நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல ஆப்பிஸர்களே... !

அதனால இனிமேல எல்லோரும் நம்ம சீனியர் சீவியார் சொல்ற வழிமுறையை பின்பற்றுவோமா ஆப்பிஸர்களே ?