Thursday, July 31, 2008

கப்பி எத்தனை கப்பியடி!

நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்துலேயே ஒருத்தருக்கு அதிகப்படியான பட்டப்பெயர்கள் இருக்குன்னா அது ஒருத்தருக்குத் தாங்க - இன்னிக்குப் பிறந்தநாள் கொண்டாடற சங்கத்தோட கடைக்குட்டி செல்லக்குட்டியான கப்பிக்குத் தாங்க. கப்பிபயங்குற பேரே ஷார்ட்டா ஸ்வீட்டா சுண்டியிழுக்கற மாதிரி தானே இருக்குதுன்னு நீங்கள்லாம் கேக்கறது புரியுது. ஆனாலும் ரொம்ப பாசக்கார பையங்குறதுனாலே ஆளாளுக்கு ஒவ்வொரு பேரு வச்சி கூப்பிடுவோம்.

ஆரம்பக் காலங்கள்ல ஜாவா மொழியிலேயே EJB, செர்வ்லெட்ஸ் இதையெல்லாம் வச்சி கவி புனையற அவரோட திறமையைப் பாத்து வியந்து ஜாவா பாவலர் கவிஞ்சர் கப்பிநிலவன்னு செல்ல்லமா விளிச்சோம்.

மூர்த்தி சிறிதா இருந்தாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்லுவாங்க இல்லையா...அது மாதிரி இந்த சின்ன வயசுலேயே இம்புட்டு ஞானமான்னு வியக்கற மாதிரி ஸ்பானிஷ் மொழி படங்களைக் கூட பாத்து விமர்சனம் பண்ணற அதீத திறமையைப் பாத்து "ஞானக் குழந்தை"ஆக்குனோம். இதுல ஒவ்வொருத்தருக்கும் அப்பப்போ என்ன மூட் வருதோ அதை பொருத்து ஞானக்குழந்தை ஞானப்பழம் ஞானப்பண்டிதர் இப்படின்னு பல வடிவங்களைப் பெறுவாரு.

அதுக்கப்புறம் தன்னோட ஒரு போஸ்ட்னால குருவி படத்தை சென்னை சிட்டி மட்டும் இல்லாம டோட்டல் தமிழ்நாட்டுல இருக்கற ஏ,பி,சி...இசட் தியேட்டருன்னு எல்லா இடத்துலேருந்தும் தூக்க வச்ச பெருமையைப் பாத்து "குருவி"ராவணன்னு பேரு வச்சோம்.

இதை தவிர்த்து காஞ்சித் தலைவன், கப்பி குருபரன், புன்னகை இளவரசன், கப்பி குப்தா, கப்பி கவுடா, கப்பியூரப்பா, கப்பி பிரகாஷ், கப்பி ஆண்டர்சன் இப்படின்னு செல்லத்துக்குப் பல பேருங்க.

நாங்க எதோ சாதாரணமானவங்க. எங்க லெவலுக்கு எங்களால பேரு தான் வக்க முடியும். ஆனா கவிஞர் கண்ணதாசன் கப்பி பயலைப் புகழ்ந்து ஒரு பாட்டே எழுதிருக்காருன்னா பாத்துக்கங்களேன். நீங்களும் இந்தப் பாட்டைப் பாருங்களேன்.

"கப்பி எத்தனை கப்பியடி
கப்பி எத்தனை கப்பியடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
(கப்பி எத்தனை கப்பியடி)

கல்யாண கோலம் கொண்ட - கல்யாணகப்பி
காதலிக்கு தெய்வம் அந்த - சீதாகப்பி
அரசாள வந்த மன்னன் - ராஜாகப்பி
அலங்கார ரூபம் அந்த - சுந்தரகப்பி
(கப்பி எத்தனை கப்பியடி)

தாயே என் தெய்வம் என்ற - கோசலகப்பி
தந்தை மீது பாசம் கொண்ட - தசரதகப்பி
வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டகப்பி
வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயகப்பி
(கப்பி எத்தனை கப்பியடி)

வம்சத்திற்கொருவன் - ரகுகப்பி
மதங்களை இணைப்பவன் - சிவகப்பி
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீகப்பி
முடிவில்லாதவன் - அனந்தகப்பி

கப்பிஜெயம் ஸ்ரீகப்பிஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
கப்பிஜெயம் ஸ்ரீகப்பிஜெயம்
கப்பியின் கைகளில் நான் அபயம்!!!"

உங்களுக்குப் பிடிச்ச கப்பியை நீங்களும் தேர்ந்தெடுத்து உங்களுக்குப் பிடிச்ச மாதிரி பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டுப் போங்க.

15 comments:

விஜய் ஆனந்த் said...

ஓம் கப்பியாய நமஹ !!!!

உருப்புடாதது_அணிமா said...

///மூர்த்தி சிறிதா இருந்தாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்லுவாங்க இல்லையா..///

இதுக்கு அர்த்தம் என்ன??
எனக்கு மட்டும் ஜொள்ளுங்க

ஆயில்யன் said...

//பிறந்தநாள் கொண்டாடற சங்கத்தோட கடைக்குட்டி செல்லக்குட்டியான கப்பிக்குத் தாங்க. //

வாழ்த்துக்கள் கப்பி :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கப்பி ஜெயம்!
ஸ்ரீ கப்பி ஜெயம்!

கைப்ஸ் அண்ணாச்சி...
ஐ ஜஸ்ட் லைக் திஸ் போஸ்ட்!
ஸோ நைஸ்! :)

ஆனா, இந்த ஆன்மீகப் பதிவை நீங்க மாதவிப் பந்தல்-ல போட்டிருக்கணும்?
:)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கல்யாண கோலம் கொண்ட - கல்யாணகப்பி//

அப்படியே ஆகட்டும்
ததாஸ்து
ஆமென்
அஷ்டே!

வெட்டிப்பயல் said...

கப்பி நிலவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

வெட்டிப்பயல் said...

தல,
பதிவு சூப்பர்...

உலகம் சுற்றும் வாலிபன் கப்பிக்கு மீண்டும் என் பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கல்யாண கோலம் கொண்ட - கல்யாணகப்பி//

அப்படியே ஆகட்டும்
ததாஸ்து
ஆமென்
அஷ்டே!//

ரிப்பீட்டே :-)

நாமக்கல் சிபி said...

தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்
தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி

நம்மைப் போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை எண்ணும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மேன்மேலும்
என்னாசைகள் கை கூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென் மதுரை வைகை நதி

பிறந்த நாள் வாத்துக்கள் கப்பி

Anonymous said...

தள,
பாட்டாவே பாடிட்டீங்களா.
அபிராமி அபிராமி :-)

வெட்டிப்பயல் said...

சந்திரமுகில தலைவர் சொன்னது தொப்பி தொப்பி
தமிழ்நாடே இன்னைக்கு சொல்ற பேர்
கப்பி கப்பி :-)

G.Ragavan said...

கப்பிக்குப் பிறந்த விழா
பல பெண்களுக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இனிய பலா
பார்வையில் இன்ப புலா
கப்பிக்குப் பிறந்த விழா

கப்பி நாமம் வாழ்க
மன்மதாயாணம் வாழ்க

Anonymous said...

Fraud Selvam swamiaar in America..

read on..
FOX MEDIA STORY

Youtube

MyFriend said...

தல,

அறிவுஜீவி பெயரை மிஸ் பண்ணிட்டீங்களே. ;-)

CVR said...

ஹா ஹா ஹா!!!!!
கப்பி ஆண்டர்சன்!!!!!
இந்த பேரு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது!!!! :-D

கப்பிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! :-)