Wednesday, July 16, 2008

சங்கத்தின் இரண்டாமாண்டு விழா போட்டி - முடிவுகள்

சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா'வை முன்னிட்டு இரண்டு போட்டிகளை அறிவித்து இருந்தோம். முதல் போட்டிக்கான முடிவுகளை முன்னமே அறிவித்தாயிற்று, ரெண்டு போட்டிக்கான முடிவுகளை அறிவிக்க கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது. அதற்கான காரணம் போட்டி விதிமுறைகளில் சொல்லியப்படி மக்கள் தீர்ப்பு + சக போட்டியாளர்களின் தீர்ப்பு + சங்கத்து சிங்கங்களின் தீர்ப்பு என தீர்ப்பு சொல்லும் நாட்டாமைகளின் வேலை பளுவினால் எடுத்துக்கொண்ட நேரம் மிக மிக அதிகம்.



இதோ ரெண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்:-

முதல் பரிசு:- காதல் முரசு அருட்பெருங்கோ'வின் தண்டவாளப்பயணம்

இரண்டாம் பரிசு: இந்த இடத்தில் இரண்டு நபர்களின் பதிவுகள் வந்துள்ளது, ரெண்டுக்கு ரெண்டு

லக்கிலுக்'வின் திரும்பிபாரடி
பினாத்தல் சுரேஷ்'வின் இதென்ன கலாட்டா?

முதல் போட்டியான பிரம்மரசத்தை ஓட விட்டு வெற்றி பெற்ற இரண்டு வெற்றியாளர்கள்:

முதல் பரிசு :- இம்சை வெங்கியின் Timing post

இரண்டாம் பரிசு :- அடிவாங்கும் ரங்கமணி முன்னேற்ற கழக (அரமுக) கர்நாடக துணை தலைவர் அம்பி'யின் உண்மை முகம் சொல்லும் பதிவு

சென்ற வருடம் போலவே இந்த வருடமும் மொத்த பரிசு தொகையான Rs.10,000/- ஏதேனும் தொண்டு நிறுவனத்துக்கு வெற்றியாளர்களின் பெயரில் அளிக்கப்படும்.

வெற்றிப்பெற்ற அனைவருக்கும், போட்டியில் பங்குகொண்ட அனைத்து மக்களுக்கும் சங்கத்து சிங்கங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.

20 comments:

cheena (சீனா) said...

வெற்றி பெற்ற அனைவருக்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரெண்டாம் ஆண்டு
(இ)ரெண்டு போட்டிகள்
ரெண்டாம் போட்டி-"ரெண்டு" போட்டி!
...ன்னு அனைத்துப் போட்டிகளிலும் கலக்கிய பதிவர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்!

அருள், லக்கி அண்ணாச்சி, பெனாத்தலாரே - சிறப்பு வாழ்த்துக்கள்!

இம்சை வெங்கி, அரமுக துணைத் தலீவா அம்பி - சிறப்பு வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அடிவாங்கும் ரங்கமணி முன்னேற்ற கழக (அரமுக) கர்நாடக துணை தலைவர்//

அப்போ தலைவர் யாரு?
அதுக்கு இன்னோரு போட்டி வைக்கலாமா?

மதுரையை மீட்ட ராயல் ராமா - பரிசுத் தொகை ஆயிரம் பொன் என்று முரசு அறையச் சொல்லிறலாமா?

ILA (a) இளா said...

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் :)

Thamiz Priyan said...

வெற்றி பெற்ற அனைவருக்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

Anonymous said...

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

//அடிவாங்கும் ரங்கமணி முன்னேற்ற கழக (அரமுக) கர்நாடக துணை தலைவர்//

:)))

இராம்/Raam said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அடிவாங்கும் ரங்கமணி முன்னேற்ற கழக (அரமுக) கர்நாடக துணை தலைவர்//

அப்போ தலைவர் யாரு?
அதுக்கு இன்னோரு போட்டி வைக்கலாமா?//


கண்ணகி கூரை'க்கு எதிர் பந்தல் போட்டு இருப்பவரே..... நீங்க யாருக்கு உளுந்து அரைக்கிற பக்குவம் சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா???? :)

வெட்டிப்பயல் said...

அனைவருக்கு வாழ்த்துகள்...

முதல் இருபது போட்டியாளர்களுக்கு சங்கத்தில் லிங் கொடுக்கப்படும்.

கப்பி | Kappi said...

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!! வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

M.Rishan Shareef said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் :)

தமிழன்-கறுப்பி... said...

வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

Anonymous said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Anbudan
K R P

லக்கிலுக் said...

பரிசுக்கு நன்றி :-)

சக வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

அப்பப்போ ஏதாவது போட்டி, கீட்டின்னு ரெகுலரா நடத்திக்கிட்டிருங்கப்பா....

Syam said...

//ரெண்டாம் ஆண்டு
(இ)ரெண்டு போட்டிகள்
ரெண்டாம் போட்டி-"ரெண்டு" போட்டி!
...ன்னு அனைத்துப் போட்டிகளிலும் கலக்கிய பதிவர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்!

அருள், லக்கி அண்ணாச்சி, பெனாத்தலாரே - சிறப்பு வாழ்த்துக்கள்!

இம்சை வெங்கி, அரமுக துணைத் தலீவா அம்பி - சிறப்பு வாழ்த்துக்கள்//

ரிபீட்ஸ் :-)

Syam said...

//இராம்/Raam said...
நீங்க யாருக்கு உளுந்து அரைக்கிற பக்குவம் சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா???? :)//

நம்ம தல அப்படின்னு சொல்லிட்டு போக வேண்டியது தான, எதுக்கு தலைய சுத்தி மூக்க தொடுறீங்க ராயல் :-)

Anonymous said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும், வாழ்த்தியவர்களுக்கு நன்றிகளும் :)

NewBee said...

வெற்றியாளர்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

போட்டியாளர்கள் அனைவருக்குமே வாழ்த்துகள்! :)))

(ரொம்ப, சீக்கிரமா வந்துட்டோமோ?
:D :P .இப்பத்தான் பார்த்தேன்)

Anonymous said...

I apologise, but, in my opinion, you are not right. I am assured. I can defend the position. Write to me in PM, we will communicate. gernic ciallis buyon line Do you want a fresh joke from net? How do you clean ice off tall buildings? With sky scrapers.