"பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்". இப்போ திடீர்னு எதுக்குப் பாரதியார் பாட்டையெல்லாம் சொல்லறேன்னு தானே யோசிக்கிறீங்க? 'நிஜார் எக்ஸ்பிரஸ்'னு ஒரு தொடர் ஒன்னை சிங்கங்கள் எல்லாம் சேர்ந்து ஆரம்பிக்கப் போறோம். அது என்ன நிஜார் எக்ஸ்பிரஸ்? ஆர்குட், ஸ்டாக் மார்க்கெட், தமிழ்மணம் இதுக்கு நடுவாலே பொட்டித் தட்டற வேலைன்னு எந்த ஒரு கவலையும் இல்லாம நாமெல்லாம் சுத்திட்டு இருந்தது ஒரு வயசு. நிஜார் போட்டுக்கிட்டு சந்தோஷம் நெறைய, பொறுப்பு கம்மின்னு சுத்திட்டு இருந்த வயசு அது. அந்த காலத்துல, நடந்த சில சம்பவங்கள், அனுபவங்கள் இதை எல்லாம் சொல்லப் போற தொடர் தான் "நிஜார் எக்ஸ்பிரஸ்". ஒரு ஸ்டேஷன்ல ஒரு சங்கத்து சிங்கத்தின் அனுபவத்தோட தொடங்குற இந்த எக்ஸ்பிரஸ் அடுத்த ஸ்டேஷனுக்கு அடுத்த சிங்கத்தை நோக்கி பயணிக்கும். இப்படியே ஒவ்வொரு பதிவுக்கு ஒவ்வொரு சிங்கம் இந்த எக்ஸ்பிரஸை ஓட்டுவாங்க. நிஜார் சரி, எக்ஸ்பிரஸ் சரி...அதுக்கும் பாரதியார் பாட்டுக்கும் என்ன சம்பந்தம்னு தானே கேக்கறீங்க. பள்ளிக்கூடத்துல படிக்கறப்போ பரீட்சையில ஒரு தலைப்பு குடுத்து தலைப்புல கட்டுரை ஒன்று வரைகன்னு சுத்தமா ஐடியாவே இல்லாத தலைப்பு ஒன்னு குடுக்கறாங்கன்னு வையுங்க. என்ன பண்ணலாம்? ஆங்கில கட்டுரையா இருந்தா "Man is a social animal"னோ தமிழ் கட்டுரையா இருந்தா "பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்"னோ ஒரு வரியை ஆரம்பிச்சு கட்டுரைக்குப் புள்ளையார் சுழி போடலாம், அதுக்கப்புறம் கட்டுரைக்குத் தேவையான மேட்டர் எல்லாம் ஒரு ஃப்ளோல அருவி மாதிரி கொட்டும். இந்த மாதிரி...
முன்னொரு காலத்தில், த.பி.*75ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்திலே சென்னை மாநகரிலே ஒரு பையன் வாழ்ந்து வந்தான். அந்தப் பையன் பேரும் இந்தப் போஸ்ட் எழுதறவரு பேரும் கிட்டத்தட்ட ஒன்னு தான்னு வையுங்களேன். இல்லை வேணாம்...நாமும் கொஞ்சம் பின்நவீனத்துவமா பேரு வச்சிப் பாப்போமே...அந்தப் பையனோட பேரு கில்லிவளவன். கில்லிவளவனுக்கு வளர்ற வயசுல மத்தப் பையனுங்களைப் போல தெருவுல கிரிக்கெட் விளையாட வேனும்னு ஆசை வந்துச்சாம். வெளையாடனும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா? கிரிக்கெட் வெளையாட்டுல மத்தப் பசங்க நம்ம ஹீரோவைச் சேத்துக்கனுமில்ல? அப்படி வெளையாட்டில சேத்துக்கறதுக்கு ஒரு அடிப்படையான தகுதி - ஒரு பேட்டுக்கோ(bat) இல்லை ஒரு பாலுக்கோ(ball) சொந்தக்காரனா இருக்கணுங்கிறது. இது தெரிஞ்சதும் நம்மாளு ராப்பகலா அப்பா அம்மா கிட்ட அழுது அடம்பிடிச்சு ஒரு மட்டை வாங்கிடுறாரு. கூடவே ஆறு ரூபாய் அம்பது காசு பெருமானமுள்ள மிக விலையுயர்ந்த ஒரு ரப்பர் பந்தையும். மட்டைக்கும் பந்துக்கும் சொந்தக்காரரான ஒருவர் விளையாட்டில் சேர விரும்புகிறார் என்பதால், வளவனாருக்கு ரத்தின கம்பளம் விரிக்கப்பட்டு விளையாட அழைப்பு வருகிறது. ஐம்பது காசுகள் பெருமானமுள்ள சிறிய பந்தினையும், பிய்ந்து போன டென்னில் பந்தினையும், கசக்கிச் சுருட்டப்பட்ட காகிதத்தின் மீது சைக்கிள் டியூபினை நறுக்கி நெய்யப்பட்டட 'டியூப் பால்' கொண்டு விளையாடும் பையன்களுக்குத் தொட்டால் பறக்கும் கடினமான ரப்பர் பந்தினைக் கொண்டு வரும் வளவனை விளையாட்டில் சேர்த்து கொள்ள பெரிதாக பிரச்சினை ஒன்றும் இருக்கவில்லை. அதனுடன் புதிய மட்டையைப் பரிசோதித்துப் பார்ப்பதில் கைதேர்ந்த மட்டையாளர்களுக்கு எப்போதும் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
ஆனால் பழம் தின்று கொட்டை போட்ட கிரிக்கெட் விளையாட்டின் பண்டிதர்களின் (நன்றி : கலைஞானி) மத்தியில் வளவன் ஒரு கத்துக்குட்டி என்று வெகு சீக்கிரத்திலேயே நிரூபிக்கப் படுகிறது.
கைக்குள் ஒரு சிறு குச்சியையோ கல்லையோ வைத்துக் கொண்டு "இன் ஆர் அவுட்" என்ற முறையில் டாஸ் போடப்படுகிறது. வளவனின் அணி டாஸ் தோற்கும் அணியாகப் போய்விடுகிறது. கிரிக்கெட் விளையாடுவதற்கு சில பல கோடிகளைத் தொகையாகப் பெற்றுக் கொண்டு விளையாடுபவர்கள் வேண்டும் ஆனால் டாஸ் வென்ற பிறகும் அடுத்தவனை பேட்டிங் செய்ய அழைக்கும் பரந்த மனப்பான்மை கொண்டிருக்கலாம். ஆனால் கணப் பொழுதில், நொடிப் பொழுதில், இமைப் பொழுதில் சூழ்நிலைகள் மாறும் இவ்வீ(வி)தி விளையாட்டில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஆசை தீர மட்டையடி செய்தலே புத்திசாலித்தனம். இவ்வாறான சூழ்நிலைகள் என்னவென்று அறிந்து கொள்ள படிக்கும் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதனையும் நானறிவேன். விளையாட்டு பாதி நடந்து கொண்டிருக்கும் போது "டேய்! ஹோம் ஒர்க் செய்ய டைம் ஆச்சு, நான் கெளம்பறேன்" என்று மட்டையின் சொந்தக்காரன் மட்டையை எடுத்துக் கொண்டுச் சென்று விடுவதும், "வினோத்! விளையாடுனது போதும். சீக்கிரம் வந்து போன்வீட்டா குடிச்சிட்டு கை கால் கழுவிட்டு படிக்க உக்காரு" என்று பந்தின் சொந்தக்காரனை அவன் அன்னையார் அழைப்பதும் அச்சூழ்நிலைகள். ஆகவே எல்லா புத்திசாலி கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களைப் போலவும் வளவனின் எதிரணியும் "பேட்டிங்" செய்ய தீர்மானிக்கிறது. கில்லி வளவனின் எதிர்வீட்டுச் சுவற்றில் செங்கல்லைக் கொண்டு ஸ்டம்புகள் வரையப் படுகின்றன. இரு வீடுகளுக்கும் இடைபட்ட தெரு தான் மைதானம். மைதானத்தின் வலப்புறம் சென்றால் மட்டுமே ஓட்டங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும் என்றும், தொடர்ந்து மூன்று முறை இடப்பக்கம் பந்தினை அடித்தால் அவுட் என்றும், மட்டையாளர் பந்தினை அடிக்கும் போது சுவற்றில் பட்டு எகிறி வரும் போது ஃபீல்டர் பிடித்தால் அவுட்(Wall Catch) என்றும், ஒரு முறை தரையில் பட்டு எகிறி வரும் பந்தைப் பிடித்தாலும் அவுட்(One pitch catch) என்றும், ஃபீல்டர்கள் நிற்கும் இடத்திலோ அதற்கு சற்று அருகாமையிலோ பேட்ஸ்மேன் பந்தை அடித்தால் பரவாயில்லை, ஆனால் கண்காணாத இடத்தில் பந்தை அடித்தால் அதனை அடித்தவனே எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்றும், வேறொருவரின் வீட்டுக்குள் பந்தை அடித்தால் அவுட் என்றும் அதையும் அடித்தவனே மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டு ஆட்டம் தொடங்குகிறது. முதலில் பேட்டிங் செய்யும் பொறுப்பை எதிரணியின் தலைவரும், முதலில் பந்துவீசும் பொறுப்பை வளவன் அணியின் தலைவரும் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள்.
மைதானத்தின் தன்மையினைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு வீசப்படும் முதல் பந்தான 'ட்ரையல்ஸை'த் தொடர்ந்து, கணக்கில் கொள்ளப்படும் பந்துகளான "ஆல் ட்ரையல்ஸ்" வீசப்படுகின்றது. விளையாட்டின் ஸ்பான்சர் கில்லிவளவனுக்கு மைதானத்தின் இடப்பக்கம் பந்து வந்தால் அதை பாதுகாக்கும் பணி வழங்கப்படுகிறது. தன் மட்டையினைக் கொண்டு எதிரணி தலைவன், தன் அணியின் தலைவன் வீசும் பந்துகளை நயப்புடைப்பதை கில்லிவளவன் பார்த்துக் கொண்டு நிற்கின்றான். அணித் தலைவனைத் தொடர்ந்து இன்னும் இரு பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சைத் தொடர, தனக்கு வாய்ப்பு எப்போது வரும் என்று காத்துக் கொண்டு நிற்கின்றான் வளவன். வளவனை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள காரணமாயிருந்த எதிரணி பாபு, "டேய்! அவனுக்கு போலிங் போட சான்ஸ் குடுங்கடா" என்று பரிந்துரைக்கிறான். "ரன் ரொம்ப அதிகமாப் போயிட்டிருக்கு. கொஞ்சம் டைட்டாயிருக்கு, நீ பேபி ஓவர் போட்டுக்கம்மா என்ன?" என்று அணி கேப்டன் வளவனிடம் கேட்க எதோ மிகவும் பொறுப்பான பணியைத் தான் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறான் என்று எண்ணி தலையசைக்கிறான். பிறகு தான் தெரிகிறது, ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள் வீச வேண்டிய இடத்தில், மூன்று பந்துகள் மட்டுமே வீசப்படும் ஓவரினைத் தான் பேபி ஓவர் என அழைப்பார்கள் என்று. புதிதாகப் பந்து வீசப் பழகுபவனுக்கோ அல்லது சரியாகப் பந்து வீச்சு செய்யாதவனுக்கோ இந்த 'பேபி ஓவர்' தரப்படுவது வழக்கம்.
ஒருவாறாக எதிரணியின் இன்னிங்ஸ் முடிந்து வளவனின் அணி பேட்டிங் செய்யும் தருணம் வருகிறது. எதிரணி கேப்டன் செய்தது போலவே, வளவனின் கேப்டனும் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறான். வளவன் இப்போது அம்பயர் ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றான். பேட்டிங் செய்யும் அணியிலிருந்து ஒருவர் அம்பயராக இருப்பது தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் ஒன்று தான். அச்சமயத்தில் வளவனின் பந்தினை அணித்தலைவன் அருகில் இருக்கும் ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டுக்குள் அடித்து விடுகிறான். ஒரு பழைய முருங்கை மரத்தையும், சுவற்றிலிருந்து முளைத்திருக்கும் அரச மரத்தையும் காணும் போது அவ்வீட்டின் அருகாமையில் செல்லவே யாரும் பயப்படுவர். பந்தை வீட்டுக்குள் அடித்தவனும் "நான் டெஸ்டுக்குப் படிக்கனும், கோயிலுக்குப் போகனும்னு, அம்மா தேடுவாங்க" என்று எதேதோ காரணம் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிடுகிறான். ஆறு ரூபாய் அம்பது பைசா பந்து தொலைந்து போனது ஒருபுறமிருக்க, தனக்கு விளையாடுவதற்கு வாய்ப்பும் கிடைக்காததை எண்ணி வளவன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான். அப்போது வானம் இருட்டுகிறது, இடி இடிக்கிறது, மின்னல் மின்னுகிறது ஒரு அசரீரி ஒலிக்கிறது - "வளவா! நீ இவ்வாறெல்லாம் விளையாடினால் கில்லி வளவன் அல்ல சொத்தை வளவன் என்று அழைக்கப்படுவாய். உனக்கு நான் ஞானத்தைப் போதிக்கிறேன் கேள்" என்று கூறுகிறது. "பந்தையோ, பேட்டையோ வைத்திருப்பவன் தான் எப்போதும் கேப்டனாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் சொந்தக் காரனாக இருந்தும் பந்து பொறுக்கிப் போட்டுக் கொண்டிருந்த நீ ஒரு ஏமாளி." மேலும் "காஜி மந்திரத்தை அறியாமல் எப்படி நீ கிரிக்கெட் விளையாட வந்தாய்?" என்று அசரீரி கர்ஜித்தது. பயந்து போன வளவன் "காஜின்னா என்னங்க?" என்று நடுங்கிக் கொண்டே கேட்டான். "காஜின்னா என்னாவா? உன் பந்தையும் உன் பேட்டையும் வைத்துக் கொண்டு உன்னை பந்து பொறுக்கிப் போட வைத்துக் கொண்டு அடுத்தவர்கள் எல்லாம் அடித்தார்களே அதுக்குப் பேரு தான் காஜி"என உறுமியது அசரீரி. அதற்கு மேல் அசரீரி போதித்ததை எல்லாம் வெகு கவனமாகக் கேட்டு குறித்து வைத்துக் கொண்டான் வளவன். அசரீரியால் ஞானம் பெற்ற வளவன் கில்லி வளவனிலிருந்து "காஜி வளவன்" ஆக மாறினான்.
அசரீரியிடமிருந்து வளவன் தெரிந்து கொண்டதை எல்லாம் பயன் கருதி உங்கள் வீட்டு குழந்தைகள் பயனடைய தொகுத்து வழங்கியிருக்கிறார் இப்பதிவாசிரியர். சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடன் என்றாலும் சேம்பியன் ஆக்குவது ஒரு வருத்தப்படாத வாலிபனின் கடனல்லவா?
லா பால்(La Ball) - இது பந்து வீச்சாளர்களோ அல்லது அம்பயர்களோ சொல்வது. ஒரு ஓவரின் கடைசி பந்து இது என்பதைத் தெரிவிக்க 'லா பால்' என்று சொல்வார்கள்.
வெயிட்டீஸ்(Waitees) - எனக்குச் சிறிது வேலை இருக்கிறது, அது வரை ஆட்டத்தைத் தொடராமல் நிறுத்தி வையுங்கள் என்று தெரிவிக்க ஃபீல்டரோ, பந்து வீச்சாளரோ சொல்வது 'வெயிட்டீஸ்'. வெயிட்டீஸ் என்று ஒருவர் சொல்லிவிட்டுச் சென்றாலும் ஆட்டம் நிறுத்தப்பட மாட்டாது.
வெயிட்ஸ் ஃபார் தி க்ரீஸ்(Waits for the Crease) - "வெயிட்டீஸ்" என்பதை மட்டையாளர் தெரிவிக்கப் பயன்படுத்தப் பெறும் சிறப்பு சொல் "வெயிட்ஸ் ஃபார் தி க்ரீஸ்"
2ஜி/3ஜி(2G/3G) - மட்டையாளர் பந்தினை அடிக்கும் போது குறுக்கில் எருமை மாடோ அல்லது எதாவது வாகனமோ வரும் போது ஃபீல்டரால் உடனே பந்தினைப் பொறுக்கி வீச முடியாது. அந்த சமயத்தில் மட்டையாளர் அதிகப் படியான ஓட்டங்களை ஓடிக் குவிக்கிறார் என்றால் பந்துவீசும் அணியினரால் சொல்லப்படுவது "2ஜி/3ஜி" அதாவது இரண்டு அல்லது மூன்று ரன்கள் Granted. இது நியாயமாகப் படும் பட்சத்தில் அம்பயரும் இதனை வழிமொழிவார்.
ஜஸ்ட்ல மிஸ்(Justla miss) - பந்தினை மட்டையாளர் ஓங்கி அடிக்க முயலும் போது, பந்து மட்டையில் படாமல் விலகிச் செல்லும் போது மட்டையாளர் சொல்வது "ஜஸ்ட்ல மிஸ்". பந்துக்கும் மட்டைக்கும் கணிசமான தூரம் இருக்கும் போதும் இதை சொல்வதில் இருந்து மட்டையாளர் தவறமாட்டார் என்பது வேறு விஷயம்.
பை ரன்னர்(by runner) - ஒரு மட்டையாளரால் விக்கெட்களுக்கு இடையில் ஓட முடியாது போகும் போது, வேறு ஒருவர் அவருக்குப் பதிலாக ஓடுவார். இவருக்கு பை ரன்னர் என்று பெயர்.
அடிட்டெயில்(Atitail) - மட்டையாளர் சரியாக ஆட முடியாது போனாலோ அல்லது அவருக்கு வேறு வேலையிருந்து வேறு ஒருவருக்குத் தனது வாய்ப்பை வழங்க வேண்டும் போதோ சொல்லப்படும் சொல் 'அடிட்டெயில்'. இதை சந்தர்ப்பத்தைப் பொறுத்து மட்டையாளரோ அல்லது அவர்கள் அணித் தலைவரோ சொல்வார்.
கரெண்ட்(Current) - ஒரு மட்டையாளரை ரன் அவுட் ஆக்கப் பயன்படும் ஒரு உத்தி. பந்து வீசப்படும் தரப்பில் ஸ்டம்புகளுக்குப் பதிலாக ஒரு செங்கல்லோ அல்லது ஒரு கற்குவியலோ இருக்கும். மட்டையாளர் ஓட்டம் எடுப்பதற்காக ஓடி வருவதற்கு முன், ஃபீல்டரால் பொறுக்கி வீசப்படும் பந்தை பந்து வீச்சாளர் கையால் பிடித்துக் கொண்டு இச்செங்கல்லைக் காலால் மிதித்தால் கை வழியாகக் கரெண்ட் பாய்ந்து மட்டையாளர் அவுட் ஆகிவிட்டதாகப் பொருள்.
டபுள் சைட் அவுட்(Double Side Out) - மட்டையாளர் ஓட்டம் எடுப்பதற்காக ஓடும் போது ஃபீல்டர் எந்தப் பக்கம் இருக்கும் ஸ்டம்பில் அடித்தாலும் மட்டையாளர் அவுட் ஆகிவிட்டார் என்கிற விதி.
டபுள் சைட் பேட்ஸ்மேன்(Double Side batsman) - விளையாடுபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது இரண்டணிக்காகவும் பேட்டிங் செய்பவரை டபுள் சைட் பேட்ஸ்மேன் என்றழைப்பார்கள்.
ஃபுல் கவர்(Full cover) - மட்டையாளர் ஸ்டம்புகள் அனைத்தையும் மறைத்துக் கொண்டு விளையாடும் போது அவர் போல்ட் ஆவதற்கு வாய்ப்புகள் குறைவு. அத்தகைய சமயத்தில் மட்டையாளர் ஸ்டம்புகளைச் சிறிது காட்டி விளையாடுவதற்காக பந்து வீச்சாளர்களால் சொல்லப்படும் சொல்.
ஃபுல் ஃபாஸ்ட்(Full fast) - அடிக்க முடியாதபடி அதிவேகத்துடன் பந்து வீச்சாளர் பந்தினை வீசும் போது மட்டையாளரால் சொல்லப் படும் சொல்.
லொட்டு/டொக்கு/கட்டை போடுதல் - தன்னை நோக்கி வீசப்படும் பந்தினை அடித்து ஆடாமல் பந்தினை வீணடிக்கும் போது மட்டையாளரைக் கடிந்து கொள்வதற்காகச் சொல்லப்படும் சொற்கள்.
ஓசி காஜி(Osi Gaaji) - விளையாட்டுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒருவர் சில பந்துகளைச் சும்மா அடித்து விளையாடிவிட்டு தன் வேலையைப் பார்க்க கிளம்பிவிடுவதை ஓசி காஜி என்பார்கள்.
காஜி மன்னன் - "அறுபது ஓவர்கள் விளையாடி அவுட் ஆகாமல் முப்பது ரன்களை மட்டுமே அடிக்கும் சுனில் கவாஸ்கரும், பதினைந்து பந்துகளில் இருபத்தைந்து ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கு இருக்கும் போதும் கட்டை போடும் ரவி சாஸ்திரியும் கமெண்டரி பொட்டியில் உக்கார்ந்து கொண்டு அடுத்தவர்கள் ஆட்டத்தைக் குறை கூறும் போது 'காஜி மன்னா, வாயைப் பொத்துடா"னு எனக்கே கத்தனும் போல இருக்கும் என அசரீரி ஒரு உதாரணத்துடன் இதை விளக்கியது.
பி.கு:
1. த.பி* - தலைவிக்குப் பின் :)
2. கிரிக்கெட் விளையாட்டினைக் குறித்து ஆங்கிலத்தில் மேலதிக ஞானம் பெற இந்த விக்கிபீடியா சுட்டியைப் பாருங்கள்.
நிஜார் எக்ஸ்பிரஸ்

23 comments:
//நாமும் கொஞ்சம் பின்நவீனத்துவமா பேரு வச்சிப் பாப்போமே...அந்தப் பையனோட பேரு கில்லிவளவன்.//
:))))
தல, டிரயல்ஸ்க்கு அப்புறம் போடறதுக்கு பேரு ஆல் ரியல்ஸ். கரக்ட் பண்ணுங்க.
ஆரம்பமே அசத்தல், ஆவலா இருக்கோம் கும்மி அடிக்க. :)
//:))))
தல, டிரயல்ஸ்க்கு அப்புறம் போடறதுக்கு பேரு ஆல் ரியல்ஸ். கரக்ட் பண்ணுங்க//
சரி தான். விக்கிபீடியால கூட ஆல் ரியல்ஸ்னு தான் போட்டுருக்காங்க. ஆனா உண்மையிலேயே காட் ப்ராமிஸா, ஏரியா பசங்க 'ஆல் டிரையல்ஸ்'னு சொல்லறதை தான் கில்லிவளவன் கேட்டிருக்கானாம்.
:)
//ஆரம்பமே அசத்தல், ஆவலா இருக்கோம் கும்மி அடிக்க. :)//
ஜூப்பரு...ஸ்டார்ட் மீஜிக்
:)
//ஆனா உண்மையிலேயே காட் ப்ராமிஸா, ஏரியா பசங்க 'ஆல் டிரையல்ஸ்'னு சொல்லறதை தான் கில்லிவளவன் கேட்டிருக்கானாம்.
//
இதுவும் அந்த ஏரியா பசங்க கிள்ளிவளவனுக்கு கிண்டிக் குடுத்த அல்வா போலிருக்கு. :))
அவ்ளோ அப்பாவியா அந்த கில்லி, சாரி, கிள்ளி? :p
நிஜார் எக்ஸ்பிரஸ் கிளம்பி விட்டதே!
ஒரம் போ!
ஒரம் போ!
கைப்ஸ் வண்டி வருதே!
ஆரம்பமே கலக்கல்ஸ் அண்ணாச்சி!
//ஆனா உண்மையிலேயே காட் ப்ராமிஸா, ஏரியா பசங்க 'ஆல் டிரையல்ஸ்'னு சொல்லறதை தான் கில்லிவளவன் கேட்டிருக்கானாம்.
//
ஓ...
ஏரியா பசங்க இப்படியெல்லாம் கிள்ளி, கிள்ளி வளர்ந்தவனா "கிள்ளி" வளவன்?
எனக்கென்னமோ, "கைப்பி"வளவனாத் தான் கண்ணுக்குத் தெரியறான்! :-)
சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு எக்ஸ்ப்ரஸ் கெளம்பிடுச்சேய்.... டொட்டொட்டொய்ங்ங்ங்ங்.........
:)))))
அட தல பேபி ஓவர் பார்ட்டியா நீங்க..?? ஹெஹெஹெஹெஹெ.... :))
[ நாங்க எல்லாம் பவுலிங்க் போடுறமோ இல்லியோ ச்ச்சும்மா ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் கணக்கா பவுலிங்க் போட ஓடி வர்றத வச்சே பேட்ஸ்மேனுக்கு டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு கெளப்புவோம்ல... :))))) ஆனா பந்து என்னவோ சிக்ஸ்ருக்குத்தான் போவும்.... :))))))) ]
சூப்பரா வண்டியக்கெளப்பி இருக்கீய தல...!!!!!!!!!!
//இதுவும் அந்த ஏரியா பசங்க கிள்ளிவளவனுக்கு கிண்டிக் குடுத்த அல்வா போலிருக்கு. :))//
திருத்தம்...கில்லிவளவன் :)
//அவ்ளோ அப்பாவியா அந்த கில்லி, சாரி, கிள்ளி? :p//
நீங்க சொல்றது கடந்தகாலம்
:)
//ஆரம்பமே கலக்கல்ஸ் அண்ணாச்சி!//
மிக்க நன்னி டாக்டர்.மாதவி சிங்
:)
//எனக்கென்னமோ, "கைப்பி"வளவனாத் தான் கண்ணுக்குத் தெரியறான்! :-)//
தனிமனிதத் தாக்குதலை எப்போ தான் நிறுத்தப் போறீங்களோ?
:)
//சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு எக்ஸ்ப்ரஸ் கெளம்பிடுச்சேய்.... டொட்டொட்டொய்ங்ங்ங்ங்.........
:)))))//
ஆமா...உன் ஸ்டேஷன்லயும் எக்ஸ்பிரஸ் நிக்குமில்ல பாண்டி...அப்ப கலாசனும் சரியா?
:)
//அட தல பேபி ஓவர் பார்ட்டியா நீங்க..?? ஹெஹெஹெஹெஹெ.... :))//
அது நான் பேபியா இருக்கறச்சே...:)
///[ நாங்க எல்லாம் பவுலிங்க் போடுறமோ இல்லியோ ச்ச்சும்மா ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் கணக்கா பவுலிங்க் போட ஓடி வர்றத வச்சே பேட்ஸ்மேனுக்கு டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு கெளப்புவோம்ல... :))))) ஆனா பந்து என்னவோ சிக்ஸ்ருக்குத்தான் போவும்.... :))))))) ]//
நாம அடிக்கற அளவுக்காவது ரன்னு குடுக்கனும்ங்கிற நல்ல எண்ணத்துல ரன் குடுத்துருப்பே :)
:)))
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தல :)))
வெயிட் பார் தி கிரீஸ்..கேட்டு எம்புட்டு நாளாச்சு :))
//வெயிட் பார் தி கிரீஸ்..கேட்டு எம்புட்டு நாளாச்சு :))//
ஆமாப்பா...டேங்கீஸ்
:)
கைப்புள்ள... நீ எவ்ளோ அடிச்சாலும் தாங்குவ.. ஆனா.. எங்களால தாங்க முடியல... எப்படிப்பா... இப்படி....
உட்கார்ந்து உட்கார்ந்து யோசிப்பீங்க போலிருக்கு...
எங்களுக்கும் அத கொஞ்சம் சொல்லுங்க...
சூப்பரப்பு கைப்ஸ்...கலக்கலா ஸ்டார்ட் ஆகி இருக்கு நிஜார் எக்ஸ்பிரஸ்..அடுத்தது சின்ன தலையா :-)
Waits for the Crease - இது நான் இதுவரை கேட்டிராத term. அருமையான பதிவு.
மரத்துல பட்டு கேட்ச் புடிச்சா அவுட்டா / இல்லையா, வீட்டுக்கு உள்ளார நேரா அடிச்சா அவுட்டா, பிட்ச் ஆகி போனாலும் அவுட்டா போன்ற விதிகளும் இன்றி அமையாத ஒன்று. நிர்ணயிக்காமல் விளையாடும் பட்சத்தில் ஆட்டம் சண்டையுடன் பாதியிலயே நிற்கும் வாய்ப்புக்கள் அதிகம்.
தல,
ஸ்டார்ட்டிங் ஸ்டேசனிலே எல்லாத்தையும் பிரிச்சு மேய்ஞ்சிட்டிங்க.... :) அடுத்த ஸ்டேசனிலே நிக்கிற நான் என்னத்தை எழுத போறேன்னு தெரியல... :)
இதை ஆங்கிலத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன். தமிழில் படிக்க மிக அருமையாக இருக்கிறது.
கலக்கல்!
/
ambi said...
தல, டிரயல்ஸ்க்கு அப்புறம் போடறதுக்கு பேரு ஆல் ரியல்ஸ். கரக்ட் பண்ணுங்க.
/
ரிப்பீட்டு
Post a Comment